15.12.07

ரஜினி - வேண்டாம் அரசியல்..!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் 57ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது ரஜினி ரசிகர்கள் வைத்திருந்த பேனர்களில் அவர் எதிர்கால முதல்வராக வரவேண்டும் என்ற ஆசை அதிகரித்திருந்தது. ஆனால் ரஜினிகாந்த் ரசிகர்மன்றத் தலைவர் சத்யநாராயணா அவருக்கு அரசியலுக்கு வரும் எண்ணமோ விருப்பமோ இல்லை, அரசியலுக்கு வரமாட்டார், எனவே இரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாற்றமடைய வேண்டாம் எனக் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ரசிகர் மன்றத்தின் வளர்ச்சியிலும், ரஜினியின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு தீவிரமாக செயல்பட்டு வரும் ரசிகர்களின் உணர்வுகளை ரஜினி நன்றாகவே புரிந்து வைத்துள்ளார், மதிப்பு வைத்திருக்கிறார்.

ஆனால் நமது சூப்பர் ஸ்டாரின் விருப்பம் அரசியல் அல்ல. நமது எண்ணங்களை அவர் மீது திணிக்க முடியாது.

பிற நடிகர்களின் அரசியல் கட்சிகளையும், வளர்ச்சியையும், சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். பிற நடிகர்களின் வளர்ச்சியைப் பார்த்து நாம் பொறாமைப்படுவதில் அர்த்தம் இல்லை.

நமது சூப்பர் ஸ்டாரிடம் அரசியல் எண்ணம் இல்லை. எனவே சூப்பர் ஸ்டார் அரசியலில் ஈடுபடுவார் என ரசிகர்கள் எதிர்பாரப்பது சரியாக இருக்காது.

மேலும் அரசியலில் நுழைந்தால் தேவையில்லாத மன அழுத்தங்களையும் சந்திக்க வேண்டி வரும், இதையல்லாம் கருத்தில் கொண்டே இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்ற கருத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார் சத்யநாராயணன்.

நன்றி! http://www.indiaglitz.com/channels/tamil/article/35303.html

12.12.07

விண்ணைத்தொடுங்கள்..!



நேர்மை அது மாறாமல்;
தர்மம் அதை மீறாமல்;

சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்;
சத்தியம் உங்களை காத்திருக்கும்.

பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை;
ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை.

வெள்ளை இளஞ்சிட்டுக்கள்;
வெற்றிக்கொடி கட்டுங்கள்;
விண்ணைத்தொடுங்கள்..!

வளமுடன் நலம் வாழ...!


வாழ்க்கையில் நேர்மையுடன்;

போகும் பாதையில் தைரியமுடன்;

செய்யும் செயலில் தூய்மையுடன்;

நட்பில் அன்புடனும்;

குடும்பத்தில் பாசத்துடனும்;

சமூகத்தில் நல் சிந்தனையுடனும்;

மனதால் மகிழ்ச்சியுடனும்;

நீ இருக்கிறாய்.!

எங்களையும் இருக்க செய்திருக்கிறாய்.!

உன் புன்சிரிப்பில் எம் மகிழ்ச்சியை கண்டோம்

வாழ்த்துக்கிறோம் வளமுடன் நலம் வாழ...!

உழைப்பாளி


நடிப்பில் வாழ்பவர், வாழ்வில் இல்லையே நடிப்பு!

உழைப்பால் உயர்ந்து உயரத்திற்கு சென்றவர்!

புகழ்பவர்களை சிரிப்பினில் தவிர்த்தவர்!

தம் கொண்ட மனச்சிறப்பில் புகழ் பெற்றவர்!

ஒரு துளி வியர்வையில் ஒரு பவுன் தங்க காசு பெற்றாலும்

எம் மொழியை பொன்மொழியாய் தமிழர் அல்லாத பலர் அறிய வைத்தவர்!

ஜாதி மதம் கேட்டு யாரும் வந்ததில்லை, யாரும் சேர்ந்ததில்லை எம்முடன்!

உன் மனம் பிடித்து வந்தவர்களால் நிறைந்ததுதான் எங்கள் கூட்டம்!

உம் பிறந்த நாளில் மகிழ்ச்சியுடன் நாங்கள் வாழ்த்துகிறோம்

வாழ்க வளமுடன்!

வாழ்க நலமுடன் !

உயர்ந்த மனிதனாய்...!



‘‘மனசிலிருந்து நான் போன பின்பு, ஆண்டவனிடத்தில் சரண் அடைகிறப்போ பக்தி உண்டாகும்.

உடல் ஒழுக்கம், அற ஒழுக்கம், ஆன்மிக ஒழுக்கம்! இது மூணும்தான் அடிப்படை. மற்றபடி, இந்துவா இருந்தாலும் சரி, முஸ்லிமா இருந்தாலும் சரி, கிறிஸ்தவரா இருந்தாலும் சரி... அவரவர் சமய ஒழுக்கங்களை முறையாக, சத்தியமாகக் கடைப்பிடித்தால்
போதும்!


ஒரு நடிகன்

ஒரு ரசிகன்

இவ்விருவரில்

பின்னவர்தான்

முன்னவரின்

நுரையீரலில்

நுழைந்து புறப்படும் காற்று

நாளங்களில் நாளும் ஒடும் நிணநீர் ஊற்று!



அன்று சிவாஜி

உயர்ந்த மனிதனாக

இன்று

உயர்ந்தான் மனிதன்

'சிவாஜி'யாக


நன்றி:-வாலி

இது ஆண்டவன் கட்டளை...!

ரஜினி, நீங்க ரொம்ப பெரிசா ஜெயிச்சிருக்கீங்க, இப்போ திரும்பிப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோணுது? உங்க வெற்றிக்கு என்ன காரணம்? ஆண்டவன் அருளா, திறமையா, அதிர்ஷ்டமா, இல்லே உழைப்பா?'னு கேட்ட பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் கேள்விக்கான தலைவரின் பதிலில்,

சத்தியமா ஆண்டவன் அனுக்கிரகம்தான்! அவன் கருணை இல்லாமல் நான் வளர்ந்திருக்க முடியாது. ஆனா, எங்கேயோ பெங்களூரில் ஒரு பஸ் கண்டக்டரா இருந்த சிவாஜிராவ், இங்கே மெட்ராஸில் ஒவ்வொரு ஸ்டுடியோவா ஏறி வாசல் கதவைத் தட்டினான் பாருங்க, அது அவனோட முயற்சி!

அப்படிக் கிடைச்ச வாய்ப்பை நிரூபிக்கணும்னு முடிஞ்சதெல்லாம் செஞ்சு போராடினான் பாருங்க, அது அவனோட உழைப்பு. நாம நிச்சயம் ஒரு நாள் ஜெயிப்போம்னு கனவு கண்டானே... அது அவனோட நம்பிக்கை. அதோட, ஜனங்களைத் தன்னாலயும் என்டர்டெயின் பண்ண முடியும்னு கெடந்து பல்டி அடிச்சான் பாருங்க, அது அவனோட திறமை. அதுக்கு இந்த மக்களோட அன்பு கிடைச்சதே, அது அவன் செஞ்ச பாக்யம்!'னு சொன்னேன். அதானே உண்மை!

ஒரு விதை வளர்ந்து செடியாக நல்ல மண்ணு, தண்ணி, காத்து, வெளிச்சம் இப்பிடி என்னென்னவோ வேணும். எல்லாமே கிடைச்சாலும்கூட, முக்கியமா அந்த விதைக்குள்ள இருக்குமே ஒரு உயிர்... அந்த உயிருக்கு தன்னால் முட்டி மோதி முளைக்க முடியும்கிற நம்பிக்கை வேணும். நம்பிக்கை தானேப்பா எல்லாம்!''

11.12.07

கலக்கப்போகும் மன்றத்து ராஜாக்கள்..!


கதிரவன் எழும்பும் நேரம் தொடங்கி ;

கதிரவன் இறங்கும் நேரம் முடிய;

நடக்கப்போகும்,

நற்பணி மன்ற நிகழ்ச்சிகளுக்கும்;

நற்பணிகளுக்கும்,

அதில் கலக்கப்போகும் மன்றத்து ராஜாக்களுக்கும்

வாழ்த்துக்களை சொல்லி ஆரம்பிக்கின்றோம்....!

HAPPY BIRTHDAY SUPER STAR


ஆண்டிப்பட்டி முதல் அட்லாண்டா வரை
சென்னை முதல் சுவிட்சர்லாந்து வரை


உலகத் தமிழர்களின் உற்சாகமே !!!
உழைப்பில் உச்சம் தொட்ட நட்சத்திரமே !!!


இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
ரஜினி ரசிகர்கள் - தமிழ் வலைப் பதிவாளர்கள் வட்டம்.

உன்னடிமையல்லவோ..!


அரும்பொனே மணியேஎன் அன்பே

என் அன்பான அறிவேஎன் அறிவிலூறும்

ஆனந்த வெள்ளமே என்றென்று பாடினேன்

ஆடினேன் நாடி நாடி

விரும்பியே கூவினேன்;

உலறினேன்.!

அலறினேன்.!

விண்மாரி எனஎனிரு கண்மாரி பெய்யவே

வேசற றயர்ந்தேனியான்

இரும்புநேர் நெஞ்சகக் கள்வனா னாலும்உனை

இடைவிட்டு நின்றதுண்டோ

என்றுநீ யன்றுயான் உன்னடிமை யல்லவோ..!

-தாயுமானவர் சுவாமிகள்


பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்.....!

வணங்கி மகிழ்கிறோம்….!!!

6.12.07

நித்தம் 25 இன்று 175

என்னிக்குமே நீ 25........

 


இன்னிக்கு சிவாஜி 175.....

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படத்தின் வெள்ளி விழா நாள் இது....

175-Days.jpg picture by rajinifans
வெற்றி பயணத்தைத் தொடரும் சிவாஜி, தமிழகமெங்கும் தீபாவளி ஒட்டிய மறு வெளியீட்டில் 256 அரங்குகளில் இன்னும் சக்கைப்போடுகிறார்

சிவாஜி படக்குழுவினர்க்கும் மற்றும் தலைவர் ரஜினிகாந்த அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறோம்.

ரஜினி ரசிகர்கள்

17.10.07

சேது தீர்வு கலைஞர் கையில் - ரஜினி

Photo Sharing and Video Hosting at Photobucket



2005 மற்றும் 2006ம் ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. நான் இன்று பகல் 12 மணிவரை வெள்ளை தாடி&வெள்ளை தலைமுடியுடன்தான் இருந்தேன். என் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா இரண்டு பேரும், நீங்கள் வெள்ளை தாடி&மீசையை எடுத்துவிட்டு, தலைக்கு டை அடித்துக்கொண்டால்தான் விழாவுக்கு வருவோம் என்று கூறினார்கள். இப்படியே நீங்கள் விழாவுக்கு வந்தால், வீட்டில் ஏதோ பெரிய பிரச்சினை இருக்கும் போல் தெரிகிறது. அதனால்தான் ரஜினி இப்படி வெள்ளை தாடி&மீசையுடன் இருக்கிறார் என்று பேசுவார்கள். அதனால் தாடி&மீசையை எடுத்துவிட்டு, தலைக்கு டை அடித்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.சரி, இது எங்கிருந்து வந்திருக்கும் என்பதை நான் புரிந்துகொண்டு, என் மகள்கள் கேட்டுக்கொண்டபடி வெள்ளை தாடி&மீசையை எடுத்துவிட்டு, தலைக்கு டை அடித்துக்கொண்டேன்.நல்ல பெயர் சம்பாதிக்க வேண்டுமானால், ஜனங்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் இருக்க வேண்டும் என்றால், நல்ல படங்கள் எடுக்கணும். அந்த படங்கள் நன்றாக ஓடணும். படங்கள் ஓடினால்தான் மதிப்பும், மரியாதையும் இருக்கும். அந்த மாதிரி நல்ல படங்கள் எடுத்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், அதில் நடித்த நடிகர்&நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மரியாதை செய்ய தமிழ்நாடு அரசும், கலைஞரும் விருது கொடுக்க முன்வந்து இருக்கிறார்கள்.இவர்களுடன் எனக்கும் சிறந்த நடிகருக்கான விருது கிடைப்பது, சந்தோஷமாக இருக்கிறது. குறிப்பாக, 32 ஆண்டுகளுக்கு அப்புறமும் எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைப்பதில், சந்தோஷம்.சில பேர் நினைக்கலாம்... சந்திரமுகி படத்தில் ஜோதிகா நன்றாக நடித்தார், வடிவேல் நன்றாக நடித்தார். ரஜினிக்கு ஏன் விருது கொடுக்கிறார்கள்? என்று. சந்திரமுகியில் சரவணனாக நடித்த ரஜினிக்கு இந்த விருது கொடுக்கவில்லை. வேட்டையனாக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இது, கலைஞருக்கு தெரியும்.25 அல்லது 26 ஆண்டுகளுக்குப்பின், நடிப்பு பற்றி நான் கொஞ்சம் சிந்தித்து நடித்தபடம், சந்திரமுகிதான். நடிப்புக்காக கொஞ்சம் நேரம் எடுத்து நடித்த படம். அந்த படத்தில் நடித்தபோது, உடன் நடித்த விஜயகுமார், வடிவேல் ஆகியோர் கேட்டார்கள். கிளைமாக்சில் சண்டை கூட இல்லை. என்ன செய்யப்போகிறீர்கள்? என்று கேட்டார்கள்.3 நிமிடம்தான் அந்த காட்சி. அதில், நான் நடித்து பெயர் தட்டிட்டு போயிடணும். பதினைந்து, பதினாறு ஷாட். ஒவ்வொரு ஷாட்டிலும் வேறு வேறு மாதிரி உணர்ச்சிகளை வெளிப்படுத்தணும். எப்படி நடிக்கலாம்? என்று யோசித்தேன். அவுரங்கசீப்பின் வரலாறை படித்தபோது, கிடைத்தது. அவுரங்கசீப் காலத்தில், அரவாணிகள் மாதிரி மிகப்பெரிய வீரர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் இன்ஸ்ப்ரேஷன்தான், சந்திரமுகியில் நான் நடித்த வேட்டையன் பாத்திரம். எல்லோருக்கும் பிடித்து இருந்தது.அந்த கதாபாத்திரத்தின் நடிப்புக்காக விருது கிடைப்பதில், மிக்க மகிழ்ச்சி. சந்தோஷப்படுகிறேன். பருத்தி வீரன் படத்தில் கார்த்தி&ப்ரியாமணி நடிப்பு பற்றி நான் இங்கே பேசவேண்டும். நூறு, இருநூறு படங்களில் நடித்தபின் கிடைக்கும் அனுபவமும், முதிர்ச்சியும் கார்த்தி நடிப்பில் தெரிந்தது. சூப்பர். குறிப்பாக, கடைசி காட்சியில் ப்ரியாமணியின் பிணத்தை பார்த்து கதறி அழுதபோது, ஹாட்ஸ் ஆப்.அதேபோல் ப்ரியாமணியும் மிக சிறப்பாக நடித்து இருந்தார். அமீர் டைரக்ஷன் அருமையாக இருந்தது.பொதுவாக, வாய்ப்பு கிடைப்பது ரொம்ப கஷ்டம். வாய்ப்பு என்பது, தவம் மாதிரி. சில நேரங்களில் வாய்ப்பு அதுவாக நம்மை தேடி வரும். சில நேரங்களில் வாய்ப்பை தேடி நாம் போகவேண்டும். அல்லது வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.விஜய்க்கு காதலுக்கு மரியாதை, குஷி. அஜீத்துக்கு காதல் கோட்டை, வாலி. விக்ரமுக்கு சேது, அந்நியன். இத்தனை சாதனைகள் புரிந்த ஜாம்பவான்கள் இங்கே இருக்கிறார்கள்.பெரியார் படம் பார்த்தபின்தான், சில தெரியாத விஷயங்களை நான் தெரிந்துகொண்டேன். உடனே கி.வீரமணிக்கு ஒரு கடிதம் எழுதினேன். இங்கே நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. சிலர் என்னிடம், பெரியார் படத்தை நீங்கள் வரவேற்கலாமா, இப்படி பேசலாமா? என்று கேட்டார்கள்.பெரியார் ஒரு விருந்து மாதிரி. அந்த விருந்தில் பத்துவிதமான பண்டங்கள் உள்ளன. அவரிடம் கடவுள் எதிர்ப்பு கொள்கை மட்டுமா இருக்கிறது? தீண்டாமை, சாதி ஒழிப்பு என பல நல்ல கொள்கைகள் இருக்கிறதே...நான் கடவுள் எதிர்ப்பு கொள்கையை எடுக்காமல், நல்ல கொள்கைகளை எடுத்துக்கொண்டேன். பத்துவிதமான பண்டங்களில், எனக்கு பிடித்த பண்டங்களை எடுத்துக்கொண்டேன்.கலைஞர் எழுதிய மந்திரி குமாரி திரைக்கதையை படிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அந்த திரைக்கதையை வைத்துக்கொண்டு, நான் கூட டைரக்டு செய்து விடலாம். அத்தனை தெளிவாக இருந்தது. ஒவ்வொரு ஷாட்டிலும் நடிப்பு, உடையலங்காரம், செட் ஆகிய அம்சங்கள் ஒரு அடித்தல்&திருத்தல் இல்லாமல் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது, இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற குறிப்பு எழுதப்பட்டு இருந்தது.அந்த படத்தை பார்த்தபோது, கலைஞரின் திரைக்கதை அப்படியே இருந்தது.பல வருடங்களுக்கு முன்பு டி.ராஜேந்தர் என்னை வந்து சந்தித்தார். இலங்கேஸ்வரன் படம் எடுக்கப்போவதாகவும், அதில் ராவணனாக நடிக்க வேண்டும் என்றும் என்னை கேட்டார். இதற்கு கலைஞர் வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என்றார்.நாம் ஏதோ இது எப்படி இருக்கு? அதிருது, உதறுது என்று பேசி நடிக்கிறோம். கலைஞர் வசனத்தை பேச முடியுமா? என்று தயங்கினேன். இதை நான் கலைஞரிடமே சொல்லியிருக்கிறேன். அவர் என்னிடம், மலைக்கள்ளன்படம் பார்த்தீர்களா? என்று கேட்டார். பார்த்தேன் என்றேன். அதே படத்தை சிவாஜி பேசி நடித்தால் எப்படி இருந்திருக்கும்? என்று கேட்டார்.ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் நான் இங்கே ஒரு விஷயத்தை பேச விரும்புகிறேன். யாரும் தப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சேது சமுத்திர திட்டம் பற்றி பலவிதமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதனால் லாபமாக இருக்குமா, ஆழம் இருக்குமா? என்றெல்லாம் கேட்கிறார்கள். செண்டிமெண்ட் ஆக ஒரு விஷயம் பூதாகரமாக பேசப்படுகிறது. அதன் சீரியஸ்னஸ் இன்னும் தமிழ்நாட்டுக்கு தெரியவில்லை. வட மாநிலங்களில் உள்ளவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.இந்த விஷயத்தை ஊதி, நெருப்பு மூட்டி, குளிர்காயப்பார்க்கிறார்கள். நமக்கு காரியம் நடக்கணும். வட இந்தியாவில் உள்ள தலைவர்கள் எல்லோரும் கலைஞரின் நண்பர்கள்தான். அவர்களிடம் பேசி, கலைஞர் இதற்கு ஒரு நல்ல தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

22.9.07

சிவாஜி – நூறாவது நாள்!

Photo Sharing and Video Hosting at Photobucket



111 தியேட்டர்களில் நூறாவது நாள் கொண்டாட்டங்கள்

வெளிநாடுகளிலும் நூறாவது நாள் கொண்டாட்டங்கள்

சிவாஜி எதிர்த்தவர்களின் கூச்சல்கள் அடங்கின எந்த எதிர்ப்புமின்றி!

மற்ற நாட்டு மொழிகளிலும் செல்ல தயாராய் சிவாஜி,

மற்ற நாட்டு மக்களையும் வரவேற்க காத்திருக்கிறோம் இன்முகத்தோடு..!

உலகம் முழுவது இனிய செய்தியாக கொண்டு சென்றாய்! இந்தியாவை!

படம் வெளியான அன்று நடந்த அத்தனை நிகழ்ச்சிகளுக்கும்,

ஏன் இந்த ஆர்ப்பாட்டம் இன்று? என்று கேட்டனர் நண்பர்கள்,

நூறு நாட்களை தாண்டி எவ்வளவோ விழாக்களை காணப்போகும் படம்

என்று ‘நண்பர்கள்’ நன்கு அறிந்திருந்தனர்!

நன்றி!

மீண்டும் இருநூறாவது நாளில் சந்திப்போம்!


21.9.07

சிவாஜி - நூத்துக்கு நூறு



உலக சினிமா ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில்


நாளை


தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜியின் முதல் நூறு

அடுத்தவனைக் கெடுத்ததில்லை...

வயித்துல்ல தான் அடிச்சதுல்ல...

உழைப்பி நம்பி பொழைச்சிருக்கிறேன்...

உண்மையாக ஊருக்குள்ளே....


உழைப்பாளியின் உழைப்பின் வெற்றியை வாழ்த்தி மகிழ்கிறோம்.

ரஜினி ரசிகர்கள்
பதிவர் வட்டம்

10.9.07

ரஜினியிடம் பாடம் கற்க வேண்டிய அமிதாப்!

'ஆக்' தந்த அவஸ்தைகளை நேரடியாக அனுபவித்த ஒரு கோபக்கார இளைஞனின் கடிதம்.

அமிதாப்ஜி அவர்களுக்கு,

உங்களின் எத்தனையோ படங்களை தமிழில் நடித்த ரஜினிகாந்த் இன்று இந்தியாவின் சூப்பர் ஸ்டார். ரஜினி நடித்த படங்களில் 90 சதவீதம் வெற்றிப்படங்கள். தன்னை நம்பி வரும் ரசிகர்களை அவர் ஏமாற்றியதே இல்லை. அவரிடமிருந்தும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதற்காகத்தான் இந்த கடிதம். (Appreciate if somebody could translate to Big B!)

1. பணம் கொட்டி படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் காத்திருந்தாலும் இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறைதான் ரஜினியின் படம். ரஜினி மாதத்திற்குகொரு படம் நடித்து பாங்க் பேலன்ஸை ஏற்றி, ரசிகர்களை இம்சிப்பதில்லை.

2. தான் நடித்த படத்திலிருந்து ஒரு சின்ன காட்சியைக்கூட ரஜினி இமிடேட் செய்ததில்லை. அடுத்தவர்கள் யாராவது செய்தால் கோபப்பட்டதுமில்லை.

3. ஏதாவது ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டுமென்பதற்காக முக்கியத்துவம் இல்லாத கேரக்டரில் நடித்ததில்லை. கூட்டத்தோடு கூட்டமாக வந்து நடிப்பதற்கென்றே நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள்.

4. அடுத்தடுத்து ஒரே மாதிரியான கதையில் ரஜினி நடித்ததில்லை. ஏ கிளாஸ், பி கிளாஸ், சி கிளாஸ் என்றெல்லாம் ரசிகர்களை தரம் பிரித்து வைத்து அதற்கேற்றபடி படம் நடித்ததில்லை.

Fore more suggestions... http://rajinifans.com/news/detailView.asp?title=414

7.9.07

ரஜினிக்கு ரசிகனின் முதல் வாழ்த்து

விருதுகளும் வாழ்த்துரைகளும் உனக்குப் புதிதல்ல தலைவா...

இன்னும் விருதுகள் ஆயிரம் உன்னால் கவுரவம் பெற காத்திருக்க ...
இன்று வேட்டையனைத் தேடி வந்த விருதுக்கு...

உள்ளமெல்லாம் உற்சாகம் பொங்க...
உனது ரசிகர்களின் குரலில் ஒலிப்பதே உனக்கு முதல் வாழ்த்து...


















2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருது பெற்றிருக்கும் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்களை வாழ்த்துகிறோம்.

தலைவரோடு விருதுகள் பெறும் மற்ற திரைக்கலைஞர்களுக்கும் ரஜினி ரசிகர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

6.9.07

பூமி பந்தை புரட்டி போட்ட தமிழ் சினிமா - சிவாஜி

Photo Sharing and Video Hosting at Photobucket



75-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது தமிழ் சினிமா. இது நமக்கெல்லாம் பெருமிதம் அளிக்கின்ற அம்சம். இந்த முக்கால் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்கதொரு மாற்றத்தையும், மதிப்பிடத்தக்க வளர்ச்சியையும் நமது தமிழ் சினிமா பதிவு செய்திருக்கிறது.

இதை நிறுவ ஏராளமான உதாரணங்களை மகிழ்வோடும், பெருமையோடும் முன் வைக்கலாம். வரலாற்று நாயகர்களையும், நாயகிகளையும், ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்டிப் படைக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஒரு சேர உருவாக்கித் தந்துள்ளது தமிழ் சினிமா.

அது மட்டுமின்றி தனது மாநிலத்திற்கான நான்கு முதல்வர்களைத் தந்த உலகின் ஒரே திரையுலகம் என்ற பெருமையையும், உலக சினிமா வரலாற்றுக் குறிப்பேட்டில் தனித்துவமிக்கப் பக்கத்தில் தமிழ் சினிமா பொறித்திருக்கிறது.

தமிழ் சினிமா அந்தளவுக்குத் தமிழ் சமூகத்தின் நாடி, நரம்புகளோடும், ஊன், உள்ளம், உதிரத்தோடும் உறவாடிக் கொண்டிருக்கிறது. அதன் சமீபத்திய விஸ்வரூப வளர்ச்சியையும், எல்லைகள் கடந்து ஜொலிக்கும் பெருமையையும், ஒவ்வொரு தமிழனும் நினைத்துப் பெருமைப்படும் வகையில் விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

ஒரு முக்கியக் குறிப்பு... இந்தக் கட்டுரை, எம்.கே.தியாகராஜ பாகவதரின் காலத்திலிருந்து ஆரம்பித்து படிப்படியாக ஏற்பட்ட வளர்ச்சியை வியப்பதல்ல! மாறாக "சிவாஜி'யுடன் ஆரம்பித்து "அதிருகிற' ரகம்! எல்லாமே லேட்டஸ்ட்!

இமயங்கள் இணைந்த "சிவாஜி' திரைப்படம் தான் இன்று தமிழ் சினிமாவை குன்றின் மேல் வைத்த ஒளி விளக்காய் புகழ் சிகரத்தில் ஏற்றியிருக்கிறது. "சிவாஜி' தொடங்கப்பட்ட நாளிலிருந்து, படத்தைப் பற்றிய எல்லையற்ற எதிர்பார்ப்புகள் இந்திய தேசத்தின் எல்லைகள் வரை எதிரொலித்தன.

அட்டகாச "சிவாஜி'

90 கோடிகளில், சர்வதேசத் தரம் வாய்ந்த கலைஞர்களின் 2 வருட கடினமானக் களப் பணியில் உருவான "சிவாஜி', இந்திய சினிமா வரலாற்றிலேயே இல்லாத அதிசயமாக, எடுத்த எடுப்பிலேயே 800 பிரிண்டுகள் போடப்பட்டு, சுமார் 70 கோடிகளுக்கு விலை போனது. வெளிநாடுகளுக்கு மட்டும் 151 பிரிண்டுகள் அனுப்பப்ட்டது இன்னொரு சாதனை.

தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், அதைவிட அதிகமாக ஆந்திராவில் 250 தியேட்டர்களிலும் (டப் செய்யப்பட்டு) திரையிடப்பட்டது "சிவாஜி'.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில், ஹாலிவுட் படங்களுக்கு அடுத்து, பாலிவுட் படங்கள்தான் அதிகம் ரசிக்கப்படும்.

ஆனால், அதே பாலிவுட்டைத் தன் தயாரிப்புச் செலவிலும், வியாபாரத்திலும் அநாயசமாக மிஞ்சி சாதனை படைத்த கோலிவுட் "சிவாஜி' அமெரிக்காவிலும், கனடாவிலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதுமட்டுமில்லை, "சிவாஜி'க்கு கிடைத்த வரவேற்பைக் கண்ட "லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ்' எனும் அமெரிக்க நாளிதழ் படத்தைப் பற்றி முழுக் கட்டுரை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் பாலிவுட் மட்டுமின்றி, தெற்கில் கோலிவுட் எனும் திரையுலகம் இருப்பதையும், தமிழ் என்ற மொழி 7 கோடி மக்களால் பேசப்படுவதையும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது அந்நாளிதழ்.

அமெரிக்காவில் இப்படியென்றால், பிரிட்டனிலோ தமிழ்ப் படங்கள் பொதுவாகத் திரையிடப்படாதாம். அப்படியே திரையிடப்பட்டாலும், ஒன்றிரண்டு தியேட்டர்களில் மூன்று நாட்களுக்கு மேல் ஓடாதாம். ஆனால், "சிவாஜி' சிங்கம் பிரிட்டனையும் விட்டு வைக்காமல், 20 தியேட்டர்களில் திரையிடப்பட்டு, 15க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் நான்கு வாரங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

அந்நாட்டின் பிரசித்தி பெற்ற பி.பி.சி. நிறுவனம் எடுக்கும், உலகப் புகழ்பெற்ற யு. கே டாப்-டென்னில், இதுவரை எந்தத் தமிழ் படமும் நுழைந்ததில்லை. ஆனால் "சிவாஜி' அதில் எடுத்த எடுப்பிலேயே 7வது இடத்தைப் பிடித்து விட்டாரென்றால் நம்மால் நம்ப முடிகிறதா? ஆனால்... அதுதான் உண்மை.

மலேசியாவில் மட்டும் 60 தியேட்டர்களில் ரிலீஸ். ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா என்று பல நாடுகளிலும் அட்டகாசம் செய்துவரும் "சிவாஜி' அடுத்து ரஷ்யாவிலும், ஜப்பானிலும் வெளியாகிறது. ஜப்பான் ரஜினியின் கோட்டை. அங்கே "சிவாஜி'யின் கொடி நிச்சயம் பறக்கும்.

ஆனால், ரஷ்யர்களுக்கோ இந்தியா என்றால் பாலிவுட்டைத்தான் தெரியும். பாலிவுட்டின் "நடிகர் திலகம்' ராஜ்கபூருக்கு ரஷ்யாவில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவரது படங்கள் அங்கு "ஒஹோ'வென்று ஓடிய காலங்கள் உண்டு.

அதே ரஷ்யர்கள், அதே இந்தியாவில் பாலிவுட்டுக்கு இணையாக இன்னொரு பிரமாண்டமானத் திரையுலகமும் செயல்படுகிறது என்பதையறிந்து ஆச்சரியப்பட்டார்கள். விளைவு, சமீபத்தில் தான் ரஷ்ய அரசுக்கும், நம் ஃபிலிம் சேம்பருக்கும் இடையில் தமிழ்ப் படங்களை ரஷ்யாவில் வெளியிடுவது குறித்து ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது.

"நடிகர் திலகம்' சிவாஜியின் "தில்லானா மோகனாம்பாள்' தமிழ்ப் படத்தை மட்டுமே இதுவரை பார்த்துள்ள ரஷ்யர்களின் தேசத்துக்கு செல்லும் சிவாஜி, அவர்களுடனான ஒப்பந்தத்துக்கு உரையெழுதி, அங்கும் தமிழ் சினிமாவுக்கு ஒரு வியாபாரக் கிளையைத் திறந்துவிட்டு வருவார் என்று நம்பலாம்.

"அமிதாப்பை விட, ரஜினி தான் அதிக செல்வாக்குடையவர்' என்பதை உலகுக்கு உணர்த்தியது ஓர் கருத்துக் கணிப்பு. அதில் ரஜினிக்கு அதிக வாக்குகள் விழுந்தது, தென்னிந்தியாவில் கூட இல்லை. "பிக்-பி' என பாலிவுட்காரர்களால், ஒருவித மரியாதையோடு அழைக்கப்படும் அமிதாப், "ஜாம்பவானாக' இருக்கும் வட இந்தியாவில்தான்.

ரஜினி ஏற்கனவே பாலிவுட்டில் எல்லோருக்கும் அறிமுகமானவர்தான். "அந்தாகானூன்' உட்பட பல ஹிந்திப் படங்களில் நடித்தவர். மேலும், ரஜினி நடித்து வெற்றி பெற்ற "பில்லா', "தீ', "போக்கிரிராஜா', "மாவீரன்' உள்ளிட்டப் பல படங்கள் ஹிந்தியில் அமிதாப் நடித்து வெற்றி பெற்றவை. ஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது.

ரஜினி நடித்த சாதனைப் படமான "சந்திரமுகி'யின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார் அமிதாப். "ரஜினி இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டார் ஆயிட்டார்லே' என்று ஒரு பேட்டியில் மகிழ்வோடு வரவேற்றிருக்கிறார் ஆமிர்கான்.

சூப்பர் ஸ்டாரின் "சூப்பர்' பாய்ச்சல்

ரஜினியைப் பொறுத்தவரை இந்திய சினிமா, புருவத்தைச் சுருக்கி அவரைத் திரும்பிப் பார்த்தது, "முத்து' திரைப்படம் ஜப்பானில் "டான்சிங் மகாராஜா' என்ற பெயரில் ஒரு வருடத்திற்கும் மேல் ஓடி வசூலைக் குவித்தபோதுதான்.

அங்கே அவருக்கு ரசிகர் மன்றங்கள் முளைத்ததும், ஜப்பானியர்கள் ரஜினியை மகாராஜாவாகக் கொண்டாடுவதையும் கண்டு மூக்கின் மேல் விரல் வைத்தது ஒட்டுமொத்த இந்தியாவும். அன்று இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த ரஜினி, இன்று "சந்திரமுகி', "சிவாஜி' படங்களின் மூலம் உலகையே தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

மயக்கும் தொழில் நுட்பத்தால் ஹாலிவுட் படங்களும், நட்சத்திரங்களின் ஜொலிஜொலிப்பால் பாலிவுட் படங்களும் வசூலைக் குவிக்கின்றன. ஆனால், ஒருசாண் முகத்துக்காக கோடிக்கணக்கானோர் தியேட்டர்களில் திரள்வதும், கோடிகள் குவிவதும் ரஜினி என்ற மந்திர சொல்லுக்கு மட்டும்தான் என்றால் அது மிகையில்லை!
நன்றி - சினிமா எக்ஸ்பிரஸ்

3.9.07

இணைவார்களா?


Total 1129 votes cast.

Very much delighted and sure to over take Sivaji
437 ( 38.71%)

It should be better than Thalapathy
180 ( 15.94%)

Present Mani style will not suit Rajini.
171 ( 15.15%)

Hope Rajini will get National Award!
151 ( 13.37%)

Rajini and Mani shall compromise to attract all
61 ( 5.40%)

It should be purely Mani film. No compromise pls!
56 ( 4.96%)

Should maintain Thalapthy standard
51 ( 4.52%)

No Comments
22 ( 1.95%)




இணையவேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம்.

14.8.07

இந்தியா டுடே..!


Photo Sharing and Video Hosting at Photobucket

உங்கள் படத்தால்,

உலகமே பார்க்கிறது ஆர்வமுடன் நம் தமிழை..!

நமது அறுபதாவது சுதந்திர ஆண்டில்,

அகிலமே வியக்க வைத்த நீங்கள்

ஸ்பெஷல் இந்தியா டுடேவாய்...!

அட...! உண்மைதானே...!

8.8.07

பாராட்டுகிறோம்

சூப்பர் ஸ்டாரால் பாராட்டப்பட்ட 'பெரியார்' தமிழ் சினிமா நாளை நூறாவது நாள் விழாவை கொண்டாடுகிறது. பத்து நாள் கூட ஓடாது என்று படத்தின் வெளியீட்டிற்கு முன்பே கேலி செய்தவர்களையெல்லாம் தமிழக அரசின் உதவியோடு தவிடு பொடியாக்கி வெற்றி நடைபோடுகிறார் பெரியார். நாளை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை பாராட்டி பலர் பேசவிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் தவிர வேறு எந்த நடிகரும் பெரியார் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

27.7.07

அடுத்து என்ன?

சிங்க நடைப் போட்டு சிகரத்தில் ஏறு...

சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு..













1999ல் படையப்பா படத்துல்ல கேட்ட வரிகள்


இப்போ சிங்க நடைப் போட்டாச்சி





















சிகரத்தில்லயும் ஏறியாச்சி






















வானத்தையும் தொட்டாச்சு...
















அடுத்து என்னத் தலைவா?

24.7.07

நிமிர்ந்த ஏணிகள் நிறைந்த வாழ்க்கைப் பாதை.!

Photo Sharing and Video Hosting at Photobucket

"ரஜினி" என்ற ஒரு மனிதன் கடந்துவந்த பாதையில் பின்நோக்கிப் பயணித்து, அந்த மனிதன் இன்று இங்கு நிற்க, அன்று அவருக்கு உதவியவர்கள் முதலாக அவரது முழு முயற்சிகள் வரை புள்ளி விபரமாக ஜெ.ராம்கி தொகுத்தெழுதி கிழக்கு பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது ‘ரஜினி: சப்தமா? சகாப்தமா?’ எனும் புத்தகம்.


பொதுவாக சுயசரிதை புத்தகங்கள், பிறர்சரிதை புத்தகங்கள் எல்லாம் வாழ்ந்து முடித்தவர்களின் அல்லது வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் இருப்பவர்களின் வாழ்க்கைப் பாதை பிறருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், சம்பந்தப் பட்டவர்களைப் பற்றிப் பிறர் உயர்வாக நினைக்க வேண்டும் என்ற சிந்தனையிலும் சரிதையில் பல இடங்களில் ‘வார்த்தைகளால் வாசகனை நெக்குருகச் செய்யும்’ வித்தையைக் கையாண்டிருப்பதையும், குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளுக்காக எண்ணற்ற பக்கங்களைச் செலவு செய்திருப்பதையும் காணமுடியும். மகாத்மா காந்தியின் ‘சத்தியசோதனை’ நூலும் இதற்கு விதிவிலக்கு அல்ல.


இந்நூலின் சிறப்புகளாக மூன்று விஷயங்களைக் கூறலாம். ஒன்று: ரஜினியின் வாழ்க்கையை நடிப்பு-ஆன்மீகம்-அரசியல் என்ற முப்பெரும் பிரிவுகளாகப் பிரித்து அவற்றில் ரஜினியின் இடம் பற்றியும், அந்த மூன்றையும் ரஜினி தனக்குள் வைத்திருந்த இடம் பற்றியும் விளக்கிக் கூறுவது. இரண்டு: ரஜினியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் 10 அத்தியாயங்களாகப் பிரித்து, அவற்றிற்குத் தலைப்பாக ரஜினி நடித்த திரைப்படங்களின் தலைப்புகளைப் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்துச் சூட்டியுள்ளமை. மூன்று: தன்னைப் பற்றி ரஜினி கூறிய கருத்துக்களும், ரஜினியைப் பற்றிப் பிறர் கூறிய கருத்துக்களும் சுருக்கமாகவும், நூலின் தேவைக்கேற்ப சரியான இடத்திலும் கொடுத்திருப்பது.


எதிர்பாராமல் தனக்குக் கிடைக்கும் பெரும் புகழையும், பெருஞ்செல்வத்தையும் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் ஓர் எளிய மனிதனின் மனநிலைத் தடுமாற்றத்திற்கு ‘ரஜினியின் வாழ்க்கை’ ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது. மனத்தடுமாற்றத்திலிருந்து தன்னை மீட்டுக்கொள்ளவே ரஜினி ஆன்மீகத்தைப் பற்றிக் கொண்டார். குழப்பமான மனநிலையில் ரஜினி எடுத்த ஒரு தெளிவான முடிவு அது. ‘தமிழக அரசியல் எனும் ஒரு பெரும் விபத்திலிருந்து’ அவரைக் காப்பாற்றியதும் அதுவே தான்.


ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எவ்விதமான மறைவுகளுமின்றி வெளிப் படையாகவே இந்நூலில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றன. ரஜினி, ‘தனது இமேஜை தானே முறியடிப்பவர்’ என்பதால், அவரைப் பற்றிய இத்தகவல்கள் அவரது இமேஜை ஒரு போதும் பாதித்துவிடாது. ரஜினியின் அரசியல் ஈடுபாடுபற்றிக் கூறும்போது காங்கிரஸ் கட்சியினரின் வழக்கமான சோம்பேறித் தனத்தைச் சுட்டிக்காட்டுவதிலும், ரஜினி சந்தித்துவந்த ஆன்மிகப் பெரியோர்களை வரிசைப்படுத்துவதிலும் நூலாசிரியரின் துணிவும், திறமையும் மிளிர்கின்றன.


இப்புத்தகத்தில் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளும், ஊடுபாவாக ரஜினியைப் பற்றிக் கூர்மையான விமர்சனங்களும் கலந்திருப்பதனால் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பொது வாசகர்களும் உற்சாகமாகப் படிக்கக் கூடியவகையில் உள்ளது. ‘சந்திரமுகி’ திரைப்படத்தினைப் பார்த்த பிறகும், இந்நூலைப் படித்த பிறகும் ரஜினி என்ற மனிதர் கடந்து வந்த பாதைகளில் அவருக்காக எண்ணற்ற ஏணிகள் நிமிர்ந்தபடியே இருந்துள்ளன என்பதனைப் புரிந்துகொள்ள முடிகின்றது. நடுநிலையோடு ஒரு நடிகரைப் பற்றித் தமிழில் எழுதப்பட்ட நூல் இது.

நன்றி!

http://www.keetru.com/puthiyakaatru/aug05/rajini.html

http://tamil.cinesouth.com/specials/cslibrary/rajini.shtml

22.7.07

பெரியார் - ரஜினி - ரசிகர்கள்..?!

Photo Sharing and Video Hosting at Photobucket


தலைவர் கண்டு ரசித்தது பெரியார்!

கிடைத்தது, தமிழினத்தலைவரின் நன்றி நவிலல் கவிதை..!

ஆனால் ரசிகர்களுக்கோ ஏமாற்றம் .!?

திரையரங்கை விட்டுச்சென்ற திரைப்படத்தை

திரும்ப பார்ப்பது எப்படி என்று..?!

18.7.07

ரஜினி ரசிகர்களின் கண் தானம்

சிவாஜி படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கண் தான நிகழ்ச்சிக்கு ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
ரஜினிகாந்த் ரசிகர்களுக்கான, விசேஷ இணையதளமான

http://www.rajinifans.com/

இந்த கண்தான முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

மும்பை, வடாலா பகுதியில் உள்ள ஜ்யோத் கண் மருத்துவமனை மற்றும் கண் பாதுகாப்பு மருத்துவமனையுடன் இணைந்து இணையதள கண்தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண் தானம் செய்ய விரும்பும் ரஜினி ரசிகர்கள் மற்றும் பிறர் பின்வரும் இணைய தளத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். கண்தானம் செய்ய விரும்புவோர் செல்ல வேண்டிய இணையதளம்.

http://www.rajinifans.com/

http://thatstamil.oneindia.in/specials/cinema/heroes/rajini_070718.html?err=2

17.7.07

ஆபிஸ் ரூம் - தி பாலிடிக்ஸ்




எங்க வேலையை நாங்க பாத்துக்குறோம்

மக்கள் உங்களை நம்பி கொடுத்த 'ஆபிஸ் ரூம்' ல்ல உக்காந்து ஒழுங்கா மக்களுக்கு நல்லது செய்ங்க....

இல்லன்னா வாங்க நம்ம 'ஆபிஸ் ரூம்' போலாம்...

15.7.07

வரவேற்க புன்னகையுடன்...!

Photo Sharing and Video Hosting at Photobucket

முப்பதாவது நாளில் தமிழ் மக்கள் வெள்ளத்தில் முழ்கிக்கிடக்கும் திரையரங்குகள்.!

ரஜினியின் சிவாஜி - இந்த பெயரை கேட்டநாள் முதல் தூக்கம் கெட்டவர்கள் பலர்...!
துக்கம் அடைந்த சிலரும் கதறினார்கள் ஆரம்பத்தில் புறக்கணியுங்கள் என்று, ஆனால் கணிக்க தவறினார்கள்
தமிழ் மக்கள் மனத்தை..!
வரும் முன்பே விமரிசித்தவர்கள், சிவாஜியை காண வந்து, காத்திருக்கிறார்கள் திரையரங்குகளிலும், இணையத்திலும்..!
திருட்டுத்தனமாக, பார்க்க வேண்டாம்! எங்கள் தலைவனை!
வாருங்கள், திரையரங்கிற்கு, எங்கள் நண்பர்கள் காத்திருப்பார்கள் உங்களை வரவேற்க புன்னகையுடன்...!

Photo Sharing and Video Hosting at Photobucket


இதுதான் நாங்கள் கற்ற வேதம் எம் தலைவனிடமிருந்து -

அமைதி காப்பது.!

அன்பால் அரவணைப்பது..!!

12.7.07

மறுபடியும்...!

Photo Sharing and Video Hosting at Photobucket

படம் வெளியாகும் முன்பே பலரின் விமர்சன பார்வையில் காண(கண்)பட்ட உங்களின் முதல் படம்!

அமைதி வழி என்றுமே அன்பின் வழி என்பதை ரசிகர்களுக்கு சொல்லிக்கொடுத்த உங்களின் படத்திற்கோ எவ்வளவோ கடுமையான விமர்சனங்கள் -அமைதியாக நீங்கள் - அது போலவே உங்களின் ரசிகர்கள்!

விமரிசித்து விமரிசித்து போராடி தோற்றார்கள் எதிராளிகள் - ரசிகர்கள் காத்த அமைதியால்..!

நீங்கள் சொன்னபின்னர்தான் தமிழ் வார்த்தைக்கே வலிமை கூடியது, அனைவரும் "அதிர"செய்தார்கள் - சொன்னார்கள்.

வெவ்வேறு இடங்களுக்கு பிரிந்தவர்கள் ஒன்று கூடினார்கள் - ஐரோப்பிய நாடுகளில்..

வெவ்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள் ஒன்று கூடினார்கள் - வளைகுடா நாடுகளில்..

வெவ்வேறு தலைமுறைகள் மகிழ்ச்சி பரிமாறின,அனைத்து இடங்களிலும்..!

உள்ளங்களை பிணைத்த,

உலக தமிழர்களை இணைத்து,

தமிழ் உள்ளங்களை இணைக்கும் சக்தி கொண்டவன் நீ என்பதை உணர்த்தினாய், உலகுக்கு மறுபடியும்...!
Photo Sharing and Video Hosting at Photobucket

10.7.07

பத்த வச்சிட்டீயே பரட்டை



SIVAJI SETS BOX OFFICE ON FIRE !!!!!
-With sincere thanks to media reports on Sivaji BO collections

23.6.07

தமிழ் மணத்துக்கு நன்றி


சமீப நாட்களாக தமிழ்மணம் திரட்டி தரும் பதிவுகளும் அவற்றில் வெளியாகியிருந்த பின்னூட்டங்களும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. குறைந்த பட்ச நாகரீகத்தைக் கூட மறந்து இன்று உலகமே புகழும் சூப்பர் ஸ்டாரையும் அவரை நெஞ்சில் வைத்து ரசிக்கும் ரசிகர்களையும் ஒருமையில் வசை பாடி வந்த பதிவுகளால் மனதளவில் காயப்பட்டிருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

எந்தவொரு காலகட்டத்திலும், எந்தவொரு நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் எத்தகைய விமர்சனத்தையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் நாங்கள் படித்திருக்கும் பாடம். ரஜினியும் சரி ரசிகர்களும் சரி வீண் வம்புக்கும் சண்டைக்கும் அலைந்ததில்லை. அவசியமான நேரத்தில் கூட வார்த்தை அம்புகளை எய்து யாரையும் காயப்படுத்தியதாக சரித்திரமில்லை. புயலுக்கு பின்னர் அமைதி வரும் என்று காத்திருந்து வெறுத்துப் போனதால் எங்களுக்கும் வேறு வழியில்லை. பழிக்குப் பழி என்று தமிழ் மணத்தை மேலும் சாக்கடையாக்கிவிடவும் விருப்பமில்லை.


ரஜினி என்னும் தனிநபர் மீதான வெறுப்பினால் வந்த அரிப்பை தமிழ் மணம் போன்ற பொதுவிடங்களில் அநாகரீகமான முறைகளில் தேய்த்து சுகித்துக்கொள்ள நினைக்கும் ஈனப்பிறவிகளையும், சர்ச்சைக்குரிய பதிவுகளை கையாள முடியாத தமிழ்மணத்தின் இயலாமை¨யும் கண்டித்து இன்றிலிருந்து தமிழ்மண திரட்டியிலிருந்து எங்களை விடுவித்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறோம்.


கடந்த நான்கு ஆண்டுகளாக எங்களது பதிவிற்கு வந்த ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் வழங்கிய அனைத்து இணைய நண்பர்களுக்கும், உதவியாக இருந்த தமிழ் மணம் குடும்பத்தாருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.


பிரிவோம்! என்றாவது சந்திப்போம்!

19.6.07

அதிரும் இலங்கை!

அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா, அரபு நாடுகளைத் தொடரந்து இலங்கையிலும் சிவாஜி மாபெரும் வெற்றி அடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறன. மேலும்
டென்மார்க், நார்வே ,சுவிஸ்,இத்தாலி,ஹாலந்து,பிரான்சு,ஆஸ்திரேலியாவில் சிவாஜியை உற்சாகமுடன் வரவேற்று கண்டு மகிழ்ந்துஇனம், மொழி வித்தியாசம் பாராமல் வெற்றியை அள்ளிக்கொடுத்த ஈழத்தமிழர்களுக்கும் நன்றி.!

அண்ணன் வந்தா எல்லா நாடும் தமிழ்நாடே...!


நன்றி!



17.6.07

இன்று முதல்


தாய்க்குலங்களின் கூட்டத்தினால் தியேட்டர் அதிர்கிறது. இந்திய சூப்பர் ஸ்டாரை ரசிப்பதில் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடு இல்லை என்பதை சிவாஜி நிரூபித்திருக்கிறது. வாழ்த்துக்கள் வாத்யாரே!


16.6.07

கத்தாரில் சிவாஜி

Photobucket - Video and Image Hosting


பல நாடுகளிலும் சிவாஜி வெளியிடபோவது பற்றி முன்னமே பல அறிவிப்புகள் வெளியான நிலையில் கத்தார் பற்றிய ஒரு செய்தியும் இல்லாத காரணத்தில் ரசிகர்கள் மனதில் ஒரு சோர்வு வியாழன்
வரைக்கும் இருந்தது ஆனாலும் பல ரசிகர்கள் ஒரு நம்பிக்கையுடன் இருநதனர் அதற்கு காரணம் சென்ற முறை சந்திரமுகி வெளியிடப்பட்டதுதான்.

அந்த நம்பிக்கை பொய்க்காதவகையில் வியாழன் அன்று மாலை திரை அரங்கத்தில் போஸ்டர் ஒட்டி முடிக்கும் போது ஃபார்மாகியிருந்த பெரிய கியூவினை கண்டு அனைவருக்கும் அதிசயமாகத்தான் தெரிந்திருக்கும்.

வெள்ளிக்கிழமை காலை எட்டு மணி முதல் ரசிகர் குவிய ஆரம்பித்தனர் இத்தனைக்கும் இன்று வெள்ளிகிழமையாதலால் மதியம்தான் முதல் காட்சி ஆரம்பிக்கப்பட்டது வியாழன் இரவு பாதி டிக்கெட் விற்பனை முடிந்ததால் காலையிலேயே குவிந்த தமிழ்நாட்டு ரசிகர்களின் கூட்டத்தினை கட்டுப்படுத்த முடியாமல் திரை அரங்கினர் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்
எது எப்படியோ முதல் காட்சி முடிந்து வெளிவந்த ரசிகர்களிடமிருந்து வந்த கோரஸ் கமெண்ட்


கூல்....! (தனனனணா...தனனணா...!)

15.6.07

எங்கேயோ கேட்ட குரல் - 4

"உழைப்பாளிகள், ஏகாதிபத்திய சோமாறி, டாட்டாயிஸ்ட், தனியார்மயம் நக்சல்பாரி, பெரியார் புரா, ரசியப் புரட்சி, லெனின்.....'பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி விவாதங்களை ஆரம்பித்து வைக்கிறோம் என்று ல்ல கடமைப்பட்டிருக்கிறோம்"

'போங்கப்பு.. போங்க.... நாலு எலுமிச்சைப் பழம் வாங்கி தேய்ச்சு குளிங்க... உங்களுக்கெல்லாம் வேலையே இல்லையாடா?'

14.6.07

நாளை இந்த வேளை பார்த்து...!


நம்ம தலைவரும் ஷங்கரும் சேர்ந்து எப்ப படம் பண்ணுவாங்க..? எப்ப படம் பண்ணுவாங்க அப்படின்னு கடந்த பத்து வருடங்களாக் நாம எதிர் பார்த்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு கூட்டணி - சூப்பர் கூட்டணி (ரஜினி,ஷங்கர்,ஏ.ஆர்.ரகுமான் & ஏ.வி.எம் - உருவாகி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, பெரும்பாலான இந்திய நகரங்கள் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் சிவாஜியின்
நாளைய தி(தரிசனத்)னத்திற்காக காத்திருக்கின்ற ரசிகர்கள்
இவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்ற எங்களின் தங்கத்தலைவன் தரிசன நாளை முதல் வெள்ளிதிரைகளில்

சும்மா அதிர போகுதுல்ல..!

அமெரிக்காவில் ரஜினி

அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா அல்ல

அண்ணன் வந்தா அமெரிக்கா தமிழ்நாடு!

தலைவர் தரிசனம்

சிவாஜி வருஷம் நாளை பிறக்கிறது!

ஒட்டுமொத்த தமிழர்களின் ஒருமித்த வரவேற்போடு வருகிறார்....

உங்கள் நெஞ்சங்களில் எப்போதும் நிலைத்து நிற்க.


சிவாஜி கொண்டாட்டங்கள்,
ரசிகர்களின் சந்தோஷக் கூச்சல்கள், ஒரு நேரடி விமர்சனம். www.rajinifans.com

தலைவர் தரிசனம்

சிவாஜி வருஷம் நாளை பிறக்கிறது!

ஒட்டுமொத்த தமிழர்களின் ஒருமித்த வரவேற்போடு வருகிறார்....

உங்கள் நெஞ்சங்களில் எப்போதும் நிலைத்து நிற்க.


சிவாஜி கொண்டாட்டங்கள்,
ரசிகர்களின் சந்தோஷக் கூச்சல்கள், ஒரு நேரடி விமர்சனம். www.rajinifans.com

12.6.07

Chandramukhi Vs Haridass

சந்திரமுகியின் 800வது நாள் விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடக்கிறது.

தமிழ்த் திரையுலகில் இதுவரை தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம்தான் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்தது. 1944ல் வெளியான 770 நாட்கள் ஓடிய ஹரிதாஸ் படத்தின் சாதனை, சந்திரமுகியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஹரிதாஸ் 3 காட்சிகள் ஓடியது; சந்திரமுகியோ ஒரே ஒரு காட்சிதானே ஓடியது என்று குறை சொல்பவர்களும் இருக்கிறார்கள். 150 நாட்கள் வரை சந்திரமுகி ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடியிருந்தது. சந்திரமுகி, முதல் 200 நாட்கள் நான்கு காட்சிகளாகவும் அடுத்து வந்த 600 நாட்கள் பகல் காட்சியாகவும் ஓடியது.

சந்திரமுகி, சிவாஜி பிலிம்ஸ் கம்பெனிக்கு சொந்தமாக சாந்தி தியேட்டரில் ஓடியது. ஹரிதாஸ், திருச்சி ராயல் டாக்கீஸார் கம்பெனிக்கு சொந்தமான ராயல் டாக்கீஸில் ஓடியது.

எத்தனை வாரங்கள் ஓடியது என்பதில் மட்டுமே சந்திரமுகியுடன் ஹரிதாஸை ஒப்பிட முடியுமே தவிர படத்தில் தரம் போன்ற விஷயங்களில் சந்திரமுகியோடு ஹரிதாஸை ஒப்பிடவே முடியாது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

ஹரிதாஸ் வெளியான அறுபதாவது நாளே லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர் கைது செய்யப்பட்டார். பாகதவர் நடித்த கடைசிப்படம் இதுதான் என்று தொடர்ந்து ராயல் டாக்கீஸார் விளம்பரப்படுத்தியதன் விளைவாக ஹரிதாஸ் 3 தீபாவளிகளைக் கண்டது. சிறையிலிருந்து மீண்டு வந்த பின்னர் பாகவதர் நடித்த படங்கள் ஒரு மாதம் ஓடவில்லை என்பது வெளிப்படை.



சந்திரமுகி, 800 நாட்களைத் தொட்டுள்ளது. இது தமிழில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் புதிய சாதனை ஆகும். சந்திரமுகியின் சாதனையை பாராட்டி விழா எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனமும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து இந்த விழாவை வருகிற 25ம் தேதி நடத்தவுள்ளன. விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.

பெரிய ஹீரோக்கள் நடித்த படங்கள் இரண்டு வாரங்கள் ஓடினாலே போஸ்டர் அடித்து, ஆரத்தி எடுத்துஅமர்க்களப்படுத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் சந்திரமுகியின் சாதனையை சத்தமில்லாமல் கொண்டாடும் ரஜினியின் ரசிகர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

29.4.07

இன்னுமொரு முறை...ரிப்பீட்டே...


என்றும் "சிங்கம்" நீ ஒருவன் தான்...




உன்னிடத்தை நிரப்ப இன்னும் ஒருவன்
பிறக்கவில்லை, இவ்வுலகத்தில்...

18.4.07

எங்கேயோ கேட்ட குரல் - 3

"எனவேதான் சிவாஜி போன்ற அதிக பரப்பரப்பை ஏற்படுத்துகிற வணிக நோக்கமுடைய படங்களை தொடர்ந்து நாம் தோல்வியடைய வைப்பதன் மூலம், திரையுலகினரை சிந்திக்க வைத்து தரமான படங்கள் வெளிவர நாமும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்...."

"நீ எந்த பக்கம் அப்படின்னே தெரிலை :)) பங்களிப்பா? அப்படீன்னா? எட்டாங்கிளாஸ் பையன் மாதிரி கட்டுரை எழுதாதே மாமூ... படம் கிடக்குது கழுத...கத்திரிக்கா நல்லதா, முத்தினதானு பாத்து வாங்க தெரியுமா உமக்கு?"

எங்கேயோ கேட்ட குரல் - 2

"தமிழ் திரையுலகத்தை - உலகத்தரம் விடுங்கள் - அடுத்த கட்டத்திற்குக் கூட அரை சதவீதம் நகர்த்தத் தய்ங்காத ஒரு நடிகனிடம் நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஆரம்பக் காட்சியில் (நாய் விளக்குக் கம்பத்தில் ஒன்றுக்கடிப்பது போல) காலைத் தூக்கி முகத்தில் காட்டுவதைக்கூட பெருமையாகக் கருதும் ஒரு குமுகாயம் இருக்கும்வரை..."

"ஏலேய்.. நிறுத்துலேய்... நீ கவிதைங்கிற பேருல டமிள் மம்மி மேல அடிக்காத ஒண்ணுக்காலே? சாத்தான் ஓத வந்துடுச்சாம் வேதம்..."

17.4.07

எங்கேயோ கேட்ட குரல் - 1

"அது என்ன பாட்டுக்கு நடுவுல... வரேன்னா வர வேண்டியது தானே? படத்துல ஏன் இது மாதிரியான உசுப்பி விடும் வசனங்கள், பாடல்கள்.... படத்துக்கு பரபரப்பு ஊட்ட எது வேண்டுமானாலும் செய்யலாமா? படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று தெரிந்தும் ஏன் இது மாதிரியான செய்கைகள். கொஞ்சமாவது அக்கரை வேண்டாம்? எத்தனை பேர் தெய்வமா நினைக்கிறாங்க அவங்களை மனுசனா நினைக்காட்டியும் கிள்ளுக்கீரையா நினைத்து பயன்படுத்தி தூக்கி எரிய வேண்டாம் இல்லையா? கொஞ்சமாவது Social responsibility வேணும்.... ரசிகர் மன்றத்தில் இருந்தால் செலவு தானே தவிர ஒரு காலணா பெயராது. பேனர் வெக்கிறேன் கட் அவுட் தோரணம் பிறந்த நாள் செலவு தலைவருக்கு பேரன் பொறந்த செலவு அப்படின்னு செலவு தானே தவிர சம்பாதிப்பது என்பது எல்லாம் வழியே இல்லை..."


"ஏம்பா இப்டி கூவுரே... உன்கிட்ட என்ன Social responsibility இருக்கு அதை மொதல்ல சொல்லு... எதுவா இருந்தாலும் செலவு பண்ணாக்கூடாது...ஏதாவது தேறுதான்னு பார்க்கணும்னு சொன்னியே.. அது பன்ச்! ஏதாவது கட்சி கிட்சில கீறியாப்பா?"

நன்றி! நன்றி!!

13.4.07

சந்திரமுகி - 730

மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா?

3.4.07

Sivaji Audio





திருட்டு ஆடியோவோ ஒரிஜினலோ யாரும் கேட்காம இருக்க முடியாது! :-)


கேட்டுட்டு உங்க கருத்தையும் இங்கே மறக்காம சொல்லிடுங்க!

28.3.07

வந்துட்டோம்ல!




தமிழ்ப் புத்தாண்டு இந்த வருஷம் ஒரு மாசம் தள்ளிப்போவுதாம்!

25.1.07

எத்தனை கோடி இன்பம்

யொஷிகோ, யசுதா போன்ற ஒரு சிலருக்குத்தான் தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டின் மீது ஆர்வம் இருக்கும் என்று எண்ணியிருந்ததை மாற்றியமைத்தவர்கள் ஓஸகா ரஜினி ரசிகர் மன்றத்திலிருக்கும் 400 பேர்.


http://www.varalaaru.com/Default.asp?articleid=446


Courtesy : www.varalaaru.com