17.4.07

எங்கேயோ கேட்ட குரல் - 1

"அது என்ன பாட்டுக்கு நடுவுல... வரேன்னா வர வேண்டியது தானே? படத்துல ஏன் இது மாதிரியான உசுப்பி விடும் வசனங்கள், பாடல்கள்.... படத்துக்கு பரபரப்பு ஊட்ட எது வேண்டுமானாலும் செய்யலாமா? படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று தெரிந்தும் ஏன் இது மாதிரியான செய்கைகள். கொஞ்சமாவது அக்கரை வேண்டாம்? எத்தனை பேர் தெய்வமா நினைக்கிறாங்க அவங்களை மனுசனா நினைக்காட்டியும் கிள்ளுக்கீரையா நினைத்து பயன்படுத்தி தூக்கி எரிய வேண்டாம் இல்லையா? கொஞ்சமாவது Social responsibility வேணும்.... ரசிகர் மன்றத்தில் இருந்தால் செலவு தானே தவிர ஒரு காலணா பெயராது. பேனர் வெக்கிறேன் கட் அவுட் தோரணம் பிறந்த நாள் செலவு தலைவருக்கு பேரன் பொறந்த செலவு அப்படின்னு செலவு தானே தவிர சம்பாதிப்பது என்பது எல்லாம் வழியே இல்லை..."


"ஏம்பா இப்டி கூவுரே... உன்கிட்ட என்ன Social responsibility இருக்கு அதை மொதல்ல சொல்லு... எதுவா இருந்தாலும் செலவு பண்ணாக்கூடாது...ஏதாவது தேறுதான்னு பார்க்கணும்னு சொன்னியே.. அது பன்ச்! ஏதாவது கட்சி கிட்சில கீறியாப்பா?"

1 comment:

Anonymous said...

May I know,Who told this?