16.6.07

கத்தாரில் சிவாஜி

Photobucket - Video and Image Hosting


பல நாடுகளிலும் சிவாஜி வெளியிடபோவது பற்றி முன்னமே பல அறிவிப்புகள் வெளியான நிலையில் கத்தார் பற்றிய ஒரு செய்தியும் இல்லாத காரணத்தில் ரசிகர்கள் மனதில் ஒரு சோர்வு வியாழன்
வரைக்கும் இருந்தது ஆனாலும் பல ரசிகர்கள் ஒரு நம்பிக்கையுடன் இருநதனர் அதற்கு காரணம் சென்ற முறை சந்திரமுகி வெளியிடப்பட்டதுதான்.

அந்த நம்பிக்கை பொய்க்காதவகையில் வியாழன் அன்று மாலை திரை அரங்கத்தில் போஸ்டர் ஒட்டி முடிக்கும் போது ஃபார்மாகியிருந்த பெரிய கியூவினை கண்டு அனைவருக்கும் அதிசயமாகத்தான் தெரிந்திருக்கும்.

வெள்ளிக்கிழமை காலை எட்டு மணி முதல் ரசிகர் குவிய ஆரம்பித்தனர் இத்தனைக்கும் இன்று வெள்ளிகிழமையாதலால் மதியம்தான் முதல் காட்சி ஆரம்பிக்கப்பட்டது வியாழன் இரவு பாதி டிக்கெட் விற்பனை முடிந்ததால் காலையிலேயே குவிந்த தமிழ்நாட்டு ரசிகர்களின் கூட்டத்தினை கட்டுப்படுத்த முடியாமல் திரை அரங்கினர் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்
எது எப்படியோ முதல் காட்சி முடிந்து வெளிவந்த ரசிகர்களிடமிருந்து வந்த கோரஸ் கமெண்ட்


கூல்....! (தனனனணா...தனனணா...!)

No comments: