14.6.07

நாளை இந்த வேளை பார்த்து...!


நம்ம தலைவரும் ஷங்கரும் சேர்ந்து எப்ப படம் பண்ணுவாங்க..? எப்ப படம் பண்ணுவாங்க அப்படின்னு கடந்த பத்து வருடங்களாக் நாம எதிர் பார்த்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு கூட்டணி - சூப்பர் கூட்டணி (ரஜினி,ஷங்கர்,ஏ.ஆர்.ரகுமான் & ஏ.வி.எம் - உருவாகி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, பெரும்பாலான இந்திய நகரங்கள் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் சிவாஜியின்
நாளைய தி(தரிசனத்)னத்திற்காக காத்திருக்கின்ற ரசிகர்கள்
இவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்ற எங்களின் தங்கத்தலைவன் தரிசன நாளை முதல் வெள்ளிதிரைகளில்

சும்மா அதிர போகுதுல்ல..!

3 comments:

நாமக்கல் சிபி said...

//சும்மா அதிர போகுதுல்ல..! //

ரீப்பீட்டேய்!

Anonymous said...

//ரஜினி சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்கவும், எதிர் வினைகளை பதிவு செய்யவும் அன்புடன் அழைக்கிறோம்.//

தங்களது வலைப்பதிவின் முகப்பிலேயே இத்துணை அன்போடு அழைத்திருப்பதால், நானும் அன்போடு எனது எதிர்வினையை பதிவு செய்ய எண்ணுகிறேன்.

எனது குரல் போன்றே ஒலித்திருக்கிறதாக நான் கருதும் தினாவின் கட்டுரையை இங்கே பதிவு செய்கிறேன். நீங்களும் அன்போடு எதிர்வினை தருவீர்கள் என்றும் நம்புகிறேன். கொஞ்சம் நீளம்தான், மன்னித்துக் கொள்ளுங்கள்.

நன்றி அசுரன்.


ஒரு திரைப்படம் வெற்றி பெற எது முக்கியம்?

நல்ல கதை?... ... ..ஊகும்

நல்ல திரைக்கதை?.. ... .. ஊகும்

திறமையான இயக்குநர்?... .. ஊகும்

கதாபாத்திரத்தை உணர்ந்த நடிகர்கள்?... ஊகும்

தொழில்நுட்பக் கலைஞர்கள்?...... ...... ஊகும்.

முதலிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி!

நடிக்கும் சிவாஜிக்கு உண்டு. ஏ.வி.எம். தயாரிக்க, ஷங்கர் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரஜினி நடிக்கும் படம் இது என்பதை நேற்றுப் பிறந்த குழந்தைகளும் நாளைக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளும்கூட தெளிவாகச் சொல்லிவிடும்.

சிவாஜியைப் பற்றி அதை விடவும் கூடுதலான தகவல்களையும் சொல்லக் கூடும். ஏனென்றால் சிவாஜி படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ஓர் ஆண்டுக்கு மேலாகியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிவாஜி என்ற படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பது சன் டி.வி.க்குத் தலைப்புச் செய்தி. தினத்தந்தியில் தினம் ஒரு சிவாஜி தகவல் இடம்பெறாமல் இருந்ததில்லை. நாளிதழ்கள், வார இதழ்கள், புலனாய்வு இதழ்கள் என எதைப் புரட்டினாலும் சிவாஜி பற்றி ஆதரவாகவோ எதிராகவோ எழுதப்படும் செய்திகளுக்குத் தனி இடம் தரப்பட்டிருக்கும்

படம் பற்றிய அறிவிப்பு வெளியான சில நாட்களில் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் அதிமுக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டார். ‘சிவாஜி என்ற தலைப்பை வைப்பதற்காக நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டோம். அவர்களும் பெருந்தன்மையுடன் ஒப்புதல் அளித்துவிட்டார்கள். அந்தப் பெயரையே டைட்டிலாக வைத்துப் படம் எடுக்கிறோம்" என்பதுதான்

சிவாஜி என்று பெயர் வைத்ததால் நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தின் அனுமதியை வாங்கினார்களாம். ரஜினி ஏற்கனவே பாட்சா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதற்காக அல்-உமா பாட்சாவிடம் அனுமதி வாங்கினாரா? முத்து என்ற படத்தில் நடித்தார். அதற்காக மு.க.முத்துவிடமோ, மதுரை முத்து குடும்பத்தாரிடமோ, முத்துராமன் மகன் கார்த்திக்கிடமோ அனுமதி வாங்கினாரா? அவையெல்லாம் எங்கள் தயாரிப்பு அல்ல என்று ஏ.வி.எம். நிறுவனம் சொல்லக்கூடும். ஏ.வி.எம் நிறுவனத்திலேயே வசந்தி என்ற பெயரில் படம் தயாரித்து வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் எத்தனையோ வசந்திகள் இருக்கிறார்கள். எந்த ஒரு வசந்தியிடமாவது ஏ.வி.எம். இப்படி அனுமதி கேட்டிருக்குமா?!


அப்படியே அனுமதி கேட்பது என்றால் யாரிடம் கேட்டிருக்க வேண்டும்?!

வி.சி. கணேசனாக இருந்த நடிகர் திலகத்திற்குச் சிவாஜி கணேசனாகப் பெயர் சூட்டியவர் தந்தை பெரியார். அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லை. அவருடைய இயக்கத்திற்கும் உடைமைகளுக்கும் உரிமையுடைய திராவிடர் கழகம் இருக்கிறது. அவருடைய கொள்கைகளை முழங்கும் பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. ஏ.வி.எம்.மின் நிலைப்பாட்டின்படி பார்த்தால் இவர்களிடமல்லவா அனுமதி கேட்டிருக்க வேண்டும்?


போக் சாலையில் உள்ள அன்னை இல்லத்திற்குச் சென்று அனுமதி கேட்டவர்கள் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குமல்லவா சென்று அதே அனுமதியைக் கோரியிருக்க வேண்டும்?

சச்சிதானந்தன் அதிகமாகக் குடித்திருந்தார். அதனால்தான் அவர் மரணமடைந்தார் என்று செய்திகள் வெளியிடப்பட்டன.

தன்னை நம்பிப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவக் கூடியவர் என்ற நல்ல பெயர் ரஜினிக்கு உண்டு. அவர்கள் நட்டமடைய விடமாட்டார் என்பதும் ரஜினிக்கு இருக்கும் குணாம்சம்.


தயாரிப்பாளர் என்ற `எஜமானுக்கு' இலாபம் ஈட்டித் தரக்கூடிய நல்ல `வேலைக்காரனாக' இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் தொழிலான திரைத்துறையில் அந்தப் பணத்தின் மதிப்பை உணர்ந்து மிகப்பிரபலம் வாய்ந்த ஒரு நடிகர் செயல்படுகிறார் என்பதை யாரும் வரவேற்காமல் இருக்க முடியாது.

தன் படத்திற்காக ஆண்டுக்கணக்கில் தவமிருக்கும் தீவிர ரசிகர்களையும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரது படத்தை எதிர்பார்த்திருக்கும் சிவாஜி படத்தை 150 பிரிண்ட்டுகள் போட்டு வெளியிட்டு, அனைத்து திரையரங்குகளிலும் அவை ஒரு நாளுக்கு 4 காட்சிகள் என 100 நாட்களுக்கும் தொடர்ச்சியாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினாலும்கூட 40 கோடி ரூபாய்தான் கிடைக்கும். தமிழகத்தில் உள்ள திரையரங்கங்களையும் அதன் கட்டணங்களையும் கணக்கிட்டுப் பார்த்தால் இவ்வளவு தான் வசூலாக முடியும்.

Arasu Balraj said...

பின்னூட்டத்தை 'அன்போடு' வெளியிட்டமைக்கு நன்றி. ஆனால் சுட்டிகள் தவறியிருக்கின்றன. மேலும், பின்னூட்ட நீளத்தை தாண்டியிருப்பதால், ஒரு வேளை பின்பாதி கட்டுரை தவறிப் போயிருக்கிறது போலும். எனவே, அந்த 'எதிர்வினையை' முழுமையாகப் படிக்கவும், அதற்கு பதிலளிக்கவும் இங்கே(http://poar-parai.blogspot.com/2007/06/blog-post_13.html) பதிலளிக்க அதே 'அன்போடு' வேண்டுகிறேன்.