10.9.07

ரஜினியிடம் பாடம் கற்க வேண்டிய அமிதாப்!

'ஆக்' தந்த அவஸ்தைகளை நேரடியாக அனுபவித்த ஒரு கோபக்கார இளைஞனின் கடிதம்.

அமிதாப்ஜி அவர்களுக்கு,

உங்களின் எத்தனையோ படங்களை தமிழில் நடித்த ரஜினிகாந்த் இன்று இந்தியாவின் சூப்பர் ஸ்டார். ரஜினி நடித்த படங்களில் 90 சதவீதம் வெற்றிப்படங்கள். தன்னை நம்பி வரும் ரசிகர்களை அவர் ஏமாற்றியதே இல்லை. அவரிடமிருந்தும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதற்காகத்தான் இந்த கடிதம். (Appreciate if somebody could translate to Big B!)

1. பணம் கொட்டி படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் காத்திருந்தாலும் இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறைதான் ரஜினியின் படம். ரஜினி மாதத்திற்குகொரு படம் நடித்து பாங்க் பேலன்ஸை ஏற்றி, ரசிகர்களை இம்சிப்பதில்லை.

2. தான் நடித்த படத்திலிருந்து ஒரு சின்ன காட்சியைக்கூட ரஜினி இமிடேட் செய்ததில்லை. அடுத்தவர்கள் யாராவது செய்தால் கோபப்பட்டதுமில்லை.

3. ஏதாவது ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டுமென்பதற்காக முக்கியத்துவம் இல்லாத கேரக்டரில் நடித்ததில்லை. கூட்டத்தோடு கூட்டமாக வந்து நடிப்பதற்கென்றே நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள்.

4. அடுத்தடுத்து ஒரே மாதிரியான கதையில் ரஜினி நடித்ததில்லை. ஏ கிளாஸ், பி கிளாஸ், சி கிளாஸ் என்றெல்லாம் ரசிகர்களை தரம் பிரித்து வைத்து அதற்கேற்றபடி படம் நடித்ததில்லை.

Fore more suggestions... http://rajinifans.com/news/detailView.asp?title=414

No comments: