15.12.07

ரஜினி - வேண்டாம் அரசியல்..!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் 57ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது ரஜினி ரசிகர்கள் வைத்திருந்த பேனர்களில் அவர் எதிர்கால முதல்வராக வரவேண்டும் என்ற ஆசை அதிகரித்திருந்தது. ஆனால் ரஜினிகாந்த் ரசிகர்மன்றத் தலைவர் சத்யநாராயணா அவருக்கு அரசியலுக்கு வரும் எண்ணமோ விருப்பமோ இல்லை, அரசியலுக்கு வரமாட்டார், எனவே இரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாற்றமடைய வேண்டாம் எனக் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ரசிகர் மன்றத்தின் வளர்ச்சியிலும், ரஜினியின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு தீவிரமாக செயல்பட்டு வரும் ரசிகர்களின் உணர்வுகளை ரஜினி நன்றாகவே புரிந்து வைத்துள்ளார், மதிப்பு வைத்திருக்கிறார்.

ஆனால் நமது சூப்பர் ஸ்டாரின் விருப்பம் அரசியல் அல்ல. நமது எண்ணங்களை அவர் மீது திணிக்க முடியாது.

பிற நடிகர்களின் அரசியல் கட்சிகளையும், வளர்ச்சியையும், சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். பிற நடிகர்களின் வளர்ச்சியைப் பார்த்து நாம் பொறாமைப்படுவதில் அர்த்தம் இல்லை.

நமது சூப்பர் ஸ்டாரிடம் அரசியல் எண்ணம் இல்லை. எனவே சூப்பர் ஸ்டார் அரசியலில் ஈடுபடுவார் என ரசிகர்கள் எதிர்பாரப்பது சரியாக இருக்காது.

மேலும் அரசியலில் நுழைந்தால் தேவையில்லாத மன அழுத்தங்களையும் சந்திக்க வேண்டி வரும், இதையல்லாம் கருத்தில் கொண்டே இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்ற கருத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார் சத்யநாராயணன்.

நன்றி! http://www.indiaglitz.com/channels/tamil/article/35303.html

No comments: