12.12.07

இது ஆண்டவன் கட்டளை...!

ரஜினி, நீங்க ரொம்ப பெரிசா ஜெயிச்சிருக்கீங்க, இப்போ திரும்பிப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோணுது? உங்க வெற்றிக்கு என்ன காரணம்? ஆண்டவன் அருளா, திறமையா, அதிர்ஷ்டமா, இல்லே உழைப்பா?'னு கேட்ட பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் கேள்விக்கான தலைவரின் பதிலில்,

சத்தியமா ஆண்டவன் அனுக்கிரகம்தான்! அவன் கருணை இல்லாமல் நான் வளர்ந்திருக்க முடியாது. ஆனா, எங்கேயோ பெங்களூரில் ஒரு பஸ் கண்டக்டரா இருந்த சிவாஜிராவ், இங்கே மெட்ராஸில் ஒவ்வொரு ஸ்டுடியோவா ஏறி வாசல் கதவைத் தட்டினான் பாருங்க, அது அவனோட முயற்சி!

அப்படிக் கிடைச்ச வாய்ப்பை நிரூபிக்கணும்னு முடிஞ்சதெல்லாம் செஞ்சு போராடினான் பாருங்க, அது அவனோட உழைப்பு. நாம நிச்சயம் ஒரு நாள் ஜெயிப்போம்னு கனவு கண்டானே... அது அவனோட நம்பிக்கை. அதோட, ஜனங்களைத் தன்னாலயும் என்டர்டெயின் பண்ண முடியும்னு கெடந்து பல்டி அடிச்சான் பாருங்க, அது அவனோட திறமை. அதுக்கு இந்த மக்களோட அன்பு கிடைச்சதே, அது அவன் செஞ்ச பாக்யம்!'னு சொன்னேன். அதானே உண்மை!

ஒரு விதை வளர்ந்து செடியாக நல்ல மண்ணு, தண்ணி, காத்து, வெளிச்சம் இப்பிடி என்னென்னவோ வேணும். எல்லாமே கிடைச்சாலும்கூட, முக்கியமா அந்த விதைக்குள்ள இருக்குமே ஒரு உயிர்... அந்த உயிருக்கு தன்னால் முட்டி மோதி முளைக்க முடியும்கிற நம்பிக்கை வேணும். நம்பிக்கை தானேப்பா எல்லாம்!''

No comments: