11.12.06

அன்புடன் அழைக்கிறோம்!



சூப்பர் ஸ்டாரின் 56வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக www.rajinifans.com இணையத்தளம் நடத்தும் அன்னதான நிகழ்ச்சி, ஆதரவற்றோர் மற்றும் பார்வையற்றோர்களுக்கான ஸ்ரீரமண மகரிஷி அகாடமி, பெங்களூரில் வரும் 12ஆம் தேதி காலை நடைபெறும். நிகழ்ச்சிக்கு பெங்களூர் வட்டார நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்.

Dec 12 - Tuesday - 7.30 AM to 8. 00 AM - (250 Students)

Place : Shree Ramana Maharishi Academy for the Blind
C.A, 1-B, 3 rd Cross, 3rd Phase,
JP Nagar, Bangalore 560 078.

Contact : Raja @ 9886796356

10.11.06

ரஜினி யார்?

ரஜினியார் - ஒரு மெகா தொடர்.



மனசாட்சியைப் பூட்டி வைத்திருக்கும் ஒரு மனிதரின் கதை.


ரஜினி என்கிற நடிகரை பற்றியல்ல.

ரஜினி என்கிற மனிதரை பற்றி...


வெகு விரைவில்....

31.10.06

சந்திரமுகி - 560




கத்திக் கத்தி சண்டை வாய் வலிக்கப் போட்டா
காத்தோட போகும் அது தேவையில்லை
கட்சிக் கட்டி ஆடும் ஆட்டமிங்கே வேண்டாம்
புத்தி கெட்டுப் போகாதே நீயும் வீணா.
உன்னோட வாழ்க்கை உன் கையில் இருக்கு!

பதவி இருந்தா பத்து பேரு;
பணத்துக்காக நூறு பேரு.
காசுக்குதான் மதிப்பு இருக்கு
மனுஷனுக்கு எங்கே இருக்கு?
நமக்கு கட்சியும் வேணாம்; ஒரு கொடியும் வேணாம்!

19.10.06

இன்னொரு தீபாவளி!

சந்திரமுகி - 555








மேகம் மறைத்தாலும்
காகம் கரைந்தாலும்
ஆகாயம்தான் அழுக்காக
ஆகாதுன்னு சொல்லு!

4.10.06

என் ஜன்னலின் வழியே: ரஜினி

தமிழ் நாட்டில் இரண்டே வகை மனிதர்கள் தான் இருக்கிறார்கள்.

ஒன்று ரஜினியை விரும்புபவர்கள் ;
இரண்டு ரஜினியை வெறுப்பவர்கள்; புறக்கணிப்பவர்கள் என்று யாரும் இருக்க முடியாது !.

இதுவரை யாருக்கும் அமைந்திராத அளவுக்கு ரசிகர்வட்டாரம் ரஜினிக்கு ய்த்துள்ளது.கையை சுழற்றி சல்யூட் அடிக்கும் இரண்டு வயது குழந்தை முதல் 22வது முறை ளிபரப்பினாலும் 'பாட்ஷா'வையும் 'அண்ணாமலை'யும் வாய்பிளந்து பார்க்கும் தாய்மார்கள் வரை ரஜினியின் தாக்கம் இருக்கதான் செய்கிறது. வருடத்திற்கு 2 படங்கள்வீதம் வரும் சமகால 'இளசு'களை ஓவர்டேக் செய்து அனைத்து ரசிகர்களின் இதைய
சிம்மாசனத்திலும் அமர்கிறார் ரஜினி.

ஒரு கேளிக்கையாளன் எப்போது நட்சத்திரம் ஆகிறார் ?
ஒரு நட்சத்திரம் எப்போது ஒரு தலைவன் ஆகிறான் ?
ஒரு தலைவன் எப்போது சகாப்த்தமாகிறான் ?


http://hariharaputhran.blogspot.com/2006/09/blog-post_25.html

28.9.06

முடிவல்ல.. ஆரம்பம்!

26.12.2004. அந்த கருப்பு ஞாயிற்றுக்கிழமையை யாரால் மறக்கமுடியும். சுனாமி பாதிப்பு பற்றிய செய்திகள் வர ஆரம்பித்த நேரம். ஜப்பானின் ஓசாகா நகரத்திலிருந்து போன். சுனாமி பற்றியும் மீட்பு நடவடிக்கைகள் பற்றியும் தூய தமிழில் விசாரித்தவர்கள், கடைசியாக சொன்ன செய்தி இதுதான். 'பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக ஓசாகா நகர ரஜினி ரசிகர்கள் சார்பாக 35,000 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அவசியம் பெற்றுக்கொள்ளவும்'


www.rajinifans.com - It's only because of Super Star

ரஜினி ·பேன்ஸ் கிரியேட்டிவ் டீம் நிஜமாகவே ஆச்சர்யத்தில் உறைந்து போனது. நதி நீர் இணைப்புக்காக சூப்பர் ஸ்டர் ஒரு கோடி ரூபாய் வழங்கும்போது ரஜினி ·பேன்ஸ் சார்பில் ஒரு லட்சம் வழங்கப்படும் என்கிற நோக்கத்தோடுதான் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. நன்கு பழகிய நண்பர்களிடமிருந்தே நல்ல விஷயங்களுக்காக நிதி பெறமுடியாத காலத்தில் இணையத்தின் மூலம் அறிமுகமான முகம் தெரியாத நண்பர்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் திரட்டிவிட முடியுமென்பது அசட்டு நம்பிக்கையாகத்தான் இருந்தது. ஆனால், சுனாமி தாக்குதலுக்கு பின்னர் வந்து குவிந்த உதவிகளால் எங்கள் அவநம்பிக்கை தரைமட்டமானது.


December 2003 - www.rajinifans.com Creative Team with Shajahan

சுனாமி மீட்பு நடவடிக்கை நம்முடைய பங்கும் இருக்கவேண்டும் என்பதே ஆரம்ப கட்ட எதிர்பார்ப்பு. முதலமைச்சர் நிவாரண நிதிக்காக 21 லட்ச ரூபாயை சூப்பர் ஸ்டாரே நேரில் தலைமைச்செயலகத்துக்கு சென்று முதல்வரிடம் வழங்கியது பெரிய திருப்பு முனை. அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரை திசையெங்கிலிருந்தும் வந்த நிதிகளை (Total Contributions - Rs. 1,09,596/-) பெற்றுக்கொண்டு ஓப்புகை அனுப்பி வைப்பதே அடுத்து வந்த இரண்டு வாரங்களுக்கு முக்கிய வேலையாகிப்போனது. Contributors List


26.1.2005. ரஜினியையும் ரஜினியின் ரசிகர்களையும் நம்பி உதவிக்கு ஓடி வந்து தங்களால் இயன்ற தொகையை அனுப்பி வைத்த நண்பர்களின் நம்பிக்கைக்கு தகுந்த மரியாதை அளிக்க களத்தில் இறங்கினோம். மாடரேட்டர் நடராஜ் தலைமையிலான சென்னை நண்பர்களின் டீம், பட்டினப்பாக்கத்தில் ஆரம்பித்து மகாபலிபுரம் வரையிலான சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிலைமையை நேரில் பார்க்கச் சென்றது. எங்களுக்கு கிடைத்த முதல் அறிக்கையில் ஒரு தெளிவான செய்தி இருந்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு தேவைக்கும் அதிகமான உதவிகள் கிடைத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான். First Report


December 2004 - Moderators with Thalapathi

நாகை மாவட்டத்து கடலோர கிராமங்களில் சுனாமி மீட்பு பணிகளில் இருந்த மாடரேட்டர் ராம்கியும் சுனாமி பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தேவையான உதவிகள் கிடைப்பதாக தெரிவித்தார். கிடைத்த நிதியை மற்ற அமைப்புகள் போல அரசாங்கத்திடம் சேர்த்துவிட்டு சுலபமான விஷயம்தான். களத்தில் இறங்கி வேலை செய்ய ரஜினி ரசிகர்கள் இருக்கும்போது அதற்கான அவசியமுமில்லை என்று உலகெங்கும் இருந்த நண்பர்கள் உற்சாகப்படுத்தினார்கள். ஷாஜகான், நடராஜ், ராம்கி, தர்மா, தீபா, வாசு, தினகர், செந்தில் உள்ளிட்ட நண்பர்கள் உதவிக்கு வந்தார்கள். கிரியேட்டிவ் டீம் உறுப்பினர்களும் ரஜினி ·பேன்ஸ் குழுமத்தின் சீனியர் நண்பர்களும் விவாதித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் நீண்ட கால கல்வித்தேவையை நிறைவு செய்யும் வகையில் ஒரு புதிய ஏற்பாடு செய்யலாம் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு அது குறித்து கருத்து கேட்டு தலைமை ரஜினி மன்றத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. Evaluation

'நம்ம சார்பா ஸாரே 21 லட்சம் கொடுத்துட்டாங்க... சுனாமி வேலைகளும் திருப்தியா நடக்கிறதா செய்தி வருது. இந்த நேரத்துல இவ்வளவு பெரிய தொகையை பசங்க படிப்புக்காக செலவு பண்றதுதான் சரியா இருக்கும். நல்ல முடிவுதான் எடுத்திருக்கீங்க! ஸார் கிட்ட சொன்னா சந்தோஷப்படுவார். பொறுமையா உட்கார்ந்து சரியா திட்டமிட்டு பணியை நல்ல படியா முடிச்சுட்டு சொல்லுங்க' என்று உற்சாகப்படுத்தினார் சத்தியநாராயணா. கூடவே திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களையும் விரிவாக சொல்ல ஆரம்பித்தார். அரசுப் பள்ளிகளை தேர்ந்தெடுப்பதிலும் அதில் படிக்கும் தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதிலும் உதவ வேண்டும் என்ற எங்களது வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டார்.

கிடுகிடுவென்று லிஸ்ட் தயாரானது. சென்னையிலிருக்கும் பெரும்பாலான பள்ளிகளுக்கு கணிசமான உதவிகள் கிடைப்பதால் ஆரம்ப கட்டத்திலேயே நீக்கிவிட்டோம். மரக்காணம், மகாபலிபுரம் பகுதிகளை சேர்ந்த அரசுப்பள்ளிகளை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். பள்ளிகளை தரம் வாரியாக பிரித்து சம்பந்தப்பட்ட பகுதிகளின் ரஜினி மன்ற பிரதிநிதிகளிடம் விவரங்கள் கேட்டுப் பெறப்பட்டன. பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு தானே கடிதம் எழுதி ஒவ்வொரு வகுப்பிலும் 70 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர்களின் பட்டியலை தயார் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார் சத்தியநாராயணா.


April 2005 - Chandramukhi Celebrations

தகவல்களை சேகரிப்பதும் அதை சரி பார்ப்பதும் அவ்வளவு எளிதான வேலையாக இருக்கவில்லை. ஏகப்பட்ட தடங்கலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கூடவே ஏகப்பட்ட விசாரணைகளும். கேட்டவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதிலேயே பாதி நேரம் போனது. சந்திரமுகி வெளியாகி நூறு நாட்களை கடக்கும் வரை சுனாமி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்துவதாக முடிவு செய்யப்பட்டது. திரும்பவும் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளை பட்டியலெடுக்கும் வேலை ஆரம்பமானது. ஒரு சில பள்ளிகளிலிருந்து சரியான ஒத்துழைப்பு வராத காரணத்தால் உற்சாகம் குறைந்தாலும் சுனாமி ஒராண்டு நிறைவுக்குள் பணியை முடிக்கவேண்டுமே என்கிற முனைப்பே முன்னெடுத்துச் சென்றது.


December 2005 - Auditor Dharma with Thalapathi

26.12.2005. சத்திய நாராயணா தலைமையில் ரஜினி ·பேன்ஸ் சென்னை நண்பர்கள் சுனாமி தாக்குதலில் குழந்தைகளை இழந்த குடும்பத்தினரை சந்தித்தார்கள். கராத்தே வகுப்புக்கு மெரீனா பீச்சுக்கு போன பிள்ளையை சுனாமியால் பறிகொடுத்து விட்டு இன்னும் சோகத்தின் சுவடோடு இருக்கும் இரண்டு குடும்பங்களுக்கும் ரஜினி ·பேன்ஸ் சார்பில் உதவி வழங்கப்பட்டது. Tsunami - First Year


December 2005 - Ramki with Thalapathi

மாணவர்கள் பட்டியலை பெறுவதில் இருக்கும் சிக்கல்களையும் அதனால் ஏற்படும் தாமதம் பற்றியும் சென்னை நண்பர்கள் குழு விவாதித்தது. சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த ரஜினி ·பேன்ஸ் ஆடிட்டர் தர்மா சொன்ன ஆலோசனைகளும் பயனளித்தது. திரும்பவும் உதவிக்கு வந்தார் தளபதி சத்தியநாராயணா. சம்பந்தப்பட்ட பகுதிகளிலிருக்கும் ரஜினி ரசிகர்களும் களத்தில் இறங்கினார்கள். 40 பேர் கொண்ட பட்டியலில் இருந்த பெயர்களை சத்தியநாராயணா தலைமையிலான டீம் சரிபார்க்க ஆரம்பித்தது.

6.1.2006. மாணவர்களின் ஜாதகம் தவிர மற்ற விபரங்களெல்லாம் கிடைத்துவிட்டன. அவ்வப்போது ரஜினி ரசிகர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சத்தியநாராயணா பணியை விரைவுபடுத்தியதால் ஒரே மாதத்தில் அனைத்து விபரங்களும் கையில் கிடைத்துவிட்டன.அடுத்து ஆரம்பமானது ரஜினி ·பேன்ஸ் நண்பர்களின் இரண்டாவது பயணம். சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் போய் மாணவர்களிடம் கலந்து பேசி அவர்களின் தேவைகளை கேட்டோம். Action Plan


January 2006 - Thalapthi & Natraj in Mahabalipuram School

பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர்களின் குடும்ப சூழ்நிலை குறித்தும், என்ன மாதிரியான உதவிகள் தேவை என்கிற விபரத்தை கேட்டுப்பெற்றோம். 120 பேர் கொண்டு மாணவ மாணவியர்களின் பட்டியல் தயாரானது. நடராஜ், செந்தில் போன்ற சென்னை நண்பர்கள் பட்டியலை இறுதி செய்தார்கள். விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு உதவி செய்யலாமே என்கிற தளபதி சத்தியநாராயணாவின் ஆலோசனையை ஒப்புக்கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்டதும் உதவிகள் வழங்க ஒரு நாள் குறிக்கப்பட்டது.


July 2006 - Thalapathi with Mahabalipuram fans

10.7.2006. காலையில் சென்னையிலிருந்து கிளம்பி மகாபலிபுரம் போய் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிவிட்டு அங்கிருந்த மரக்காணத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி. மதிய சாப்பாட்டையும் ஒத்திப்போட்டுவிட்டு மாலை வரை தங்கிருந்து பணியை நிறைவாக முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பும்போது இருட்டிவிட்டது. மகாபலிபுரத்தில் பிளாஷ் வெளிச்சத்தில் பரிசுப்பெருட்களை அடுக்கி வைத்து கொடுத்ததை தளபதி சத்தியநாராயணா ரசிக்கவில்லை. மரக்காணம் பள்ளியில் ஒரு சின்ன வகுப்பறையில் பரிசுப்பொருட்களை அடுக்கி வைத்துவிட்டு மாணவர்களை அழைத்து வந்து அவர்களையே எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டோம்.


July 2006 - Kadapakkam School students

ஸ்கூல் யூனி·பார்ம் இரண்டு செட், பெரிய பேக், நான்கு பேனா, பதினைந்து நோட்டு, ஜாமிண்ட்ரி பாக்ஸ், தோல் செருப்பு. 1500 மதிப்பிலான ஒவ்வொறு செட்டையும் தேடி அலைந்து வெவ்வேறு இடங்களில் வாங்க உதவியாக இருந்தது சம்பந்தப்பட்ட பகுதி மன்றத்து நண்பர்கள்தான். சென்னையில் துணி வாங்கி, டெய்லரை பள்ளிக்கு அழைத்து வந்து அளவெடுத்து தைக்கச் சொல்லிவிட்டு, செருப்புக்கடைக்காரரை அழைத்து மாணவர்களின் கால் அளவுக்கு ஏற்றபடி செருப்புகளை ஏற்பாடு செய்து கொடுத்ததில் ஆரம்பித்து எந்தவித ஈகோவும் பார்க்காமல் நோட்டு புத்தகங்களை தலைமீது தூக்கி வந்து அடுக்கி வைப்பது வரை படு உற்சாகமாக களப்பணி செய்த மகபாலிபுர ரஜினி ரசிகர்களை பாராட்ட வார்த்தைகளில்லை. ஒன்றரை வருஷமாக உலகெங்கிலும் இருக்கும் ரசிகர்களை ஒருங்கிணைத்து நிறைவுடன் பணியை முடித்து வந்தது ரஜினி என்கிற ஒற்றை வார்த்தைதான்.




July 2006 - Senthil with Thalpathi

தளபதி சத்தியநாராயணா தலைமையிலான டீம் சென்னையிலிருந்து கிளம்பும்போது மணி காலை 6.30. மகாபலிபுரம் பெருமாள் கோயில் பக்கத்திலிருக்கும் அந்த அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்று சேரவும் பிரேயர் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. பிரேயர் ஹாலில் பரிசுப்பொருட்கள் தயாராக இருந்தன. மாணவ, மாணவியர் தலைமையாசிரியர் பட்டியலை படிக்க ஆரம்பித்ததும் ரஜினி ·பேன்ஸ் கிரியேட்டிவ் டீம் நண்பர்கள் கொடுக்க ஆரம்பிக்க, மாணவர்கள் வரிசையில் நின்று உதவிகளை பெற்றுக்கொண்டார்கள். பிரேயருக்கு பின்னர் தளபதி சத்தியநாராயணா சொன்ன விஷயம்தான் முக்கியம்.



'இதெல்லாம் ரஜினி ஸார் கொடுத்தது கிடையாது. உங்களை போலவே ஸ்கூல்ல நல்லா படிச்சுட்டு அமெரிக்கா, சிங்கப்பூர் போய் நல்ல வேலையிலிருக்கிற நண்பர்களெல்லாம் ஒண்ணா சேர்ந்து தங்களுக்கு வர்ற வருமானத்திலேர்ந்து ஒரு சின்ன தொகையை சேர்த்து வைத்து உங்களுக்காக கொடுத்திருக்காங்க. இதையெல்லாம் வாங்கி உங்ககிட்டே சேர்க்கிறதோட என்னோட வேலை முடிஞ்சு போச்சு. இதுல எங்களுக்கு எந்த கஷ்டமுமில்லை. ஆனா, அடுத்த வருஷமும் இதெல்லாம் வேணும்னா நல்ல மார்க் வாங்கினாத்தான் உண்டு. என்ன உதவி வேணும்னாலும் உங்க ஸ்கூல் ஹெச்எம் கிட்ட சொல்லுங்க. படிக்கிறதுக்காக எது வேணும்னு கேட்டாலும் நிச்சயம் செஞ்சு தருவோம்'



நன்றி சொல்ல வந்தது ஒரு பத்தாங்கிளாஸ் படிக்கும் மாணவன். 'இதெல்லாம் பார்க்கும்போது எங்களுக்கு சந்தோஷமா இருக்கு. வேலை தேடி வெளிநாட்டுக்கு போறவங்க நம்ம நாட்டை மறந்துடுவாங்கன்னுதான் நாங்க நினைச்சுட்டிருந்தோம். நாங்க நினைச்சது தப்புதான். இதைப் பார்க்கும்போது நாங்களும் நல்லா படிச்சு, நல்ல வேலைக்கு போய் இதே மாதிரி நிறைய உதவி செய்யணும்னு ஆசைப்படறோம்!'

சபாஷ்டா கண்ணா! இதைத்தான் நாங்க எதிர்பார்த்தோம்'. வாய் விட்டுச் சொல்லி வாழ்த்திவிட்டு வெளியே வந்தோம். அடுத்த வருஷத்துக்கு இப்பவே ஆரம்பிச்சு குக்கிராமத்தில் இருக்கும் ஸ்கூலுக்குப் போய் இதை விட கஷ்டப்படற மாணவர்களுக்கு செஞ்சாகணும் என்கிற கவலையோடு பேசிக்கொண்டே வந்தார் சத்தியநாராயணா. ஓன்றரை வருஷமாக கூடவே இருந்து ஏகப்பட்ட பிஸியான வேலைகளுக்கு நடுவேயும் பணியை செவ்வனே செய்து கொடுத்த சத்தியநாராயணாவை பற்றி வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதற்கான அனுமதியும் கிடையாது. சம்பந்தப்பட்ட நண்பர்களின் உணர்வில் நிறைந்துவிட்ட விஷயம் அது.



இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய. செய்யப்பட வேண்டிய பணிகளும் நிறைய. ரஜினி ·பேன்ஸை பொறுத்தவரை இது இன்னொரு கமா. நிச்சயம் புல் ஸ்டாப் இல்லை!

29.8.06

சந்திரமுகி - 500



Chandramukhi - The Most Successful Film of Tamil Cinema

'கஷ்டம் - சுகம், பாவம் - புண்ணியம், நல்லது - கெட்டது... என்று பல வகையான அனுபவங்களையும் கொண்டதுதான் இயற்கையின் போக்கு. வாழ்க்கையில் கஷ்டத்தையும் ஓரளவாவது அனுபவித்தால்தான், சுகத்தின் பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும். ஒரு ஏர் கண்டிஷன் ருமில் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் அதன் அருமை தெரியாது. கொஞ்ச நேரம் வெயிலில் இருந்து விட்டு அதன் பிறகு ஏ.சிக்கு போனால்தான் அதன் அருமை நன்றாக தெரியும்,

மனிதர்களின் இந்த இயல்பை அறிந்த ஆண்டவன், கஷ்டம், சுகம் இரண்டையுமே வாழ்க்கையில் சேர்த்தே வைத்திருக்கிறான். சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால் அவன் இறைவனையோ, இயற்கையையோ புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

வாழ்க்கையில் எதுவும் நிரந்தமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இன்பம் கிடைக்கும்போது, அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால் நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம். அதுபோல், கஷ்டம் வரும்போது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால், அந்த கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் நொறுங்கி விட மாட்டோம். வாழ்க்கையில் இரண்டும் கலந்துதான் இருக்கும். அதுதான் நல்லதும் கூட'

- ரஜினிகாந்த், துக்ளக் - 28.2.1996

2.8.06

சந்திரமுகி - 475




Q: ரஜினி தமிழரா?

A: ரஜினி தமிழரோ இல்லையோ, அவர் தேவர் அல்ல. மனிதர். யார் தமிழர் என்கிற கேள்விகள் எல்லாம் தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் உள்ள அன்பினால் எழுப்பப்படுவதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் படங்களை தயாரித்து நஷ்டமடைந்த பி.ஆர். பந்தலு தமிழரா? தெலுங்கரா? ரஜினியை வைத்து படம் தயாரித்து பணம் சேர்த்துக்கொண்டவர்கள் தமிழர்களா? மராட்டியர்களா?

- மனிதன் பதில்கள், செப்டம்பர் 1997

23.6.06

இனி நாங்கள் இந்தியர்கள்!



இவன் திரையின் கதவடைத்து
இமயம் நோக்கி
நடந்தபோதெல்லாம்
இமையின் கதவுடைத்து
இதயங்கள் அழுதன.

இவனோடு
உரசிக் கொண்டால்
அரசுகளும் தீப்பிடிக்கும்.
ஆனாலும்
இவனுக்கோ
ஆன்மீகப் பூ பிடிக்கும்

அரசியல் இருக்கை
தலைநகரத்தில்
இவனுக்காய்
தயாராகையில்
இமயமலை இடுக்குகளில்
கிழிந்த உடையில் நடந்தவன் இவன்.

கடவுளா? உலகமா ?
எனும் கேள்வி எழுகையில்
கடவுளே உலகமடா
என்றவன் இவன்.

இவன்
ஓய்வெடுக்க உறங்கினால்
சாய்ந்து விட்டான் என்பார்கள்,
அமைதியாய் இருந்துவிட்டால்
பயந்து விட்டான் என்பார்கள்,
எப்படியோ
இவனைப் பற்றிப் பேசாமல்
இருந்ததில்லை தமிழ்நாடு.

இவன் தமிழனில்லை
என்று
தகராறுகள் எழுகையில்,
இனி நாங்கள்
இந்தியர்கள் என்றனர் தமிழர்கள்.

Courtesy : xavi.wordpress.com

16.6.06

சந்திரமுகி - 450



You Will Never Be Without Me - Sri Swami Satchidananda

The soul never dies, and the body also never dies, it just changes its name and form. So you are always that undying soul. So what should we do? Accept the changes. The problem comes only when we deny the changes. Can we always be young? No. Nature’s way is that nothing is permanent, all is constantly changing. If there is one quality of nature, it is that it is ever-changing. But what changes? There is One that is never-changing. So the One is permanent, the changes are impermanent. Realize the Permanent, enjoy the impermanent. Realize the never-changing, enjoy the ever-changing. Both are necessary.

When I leave my body I will continue to guide you from a higher level. When you are in the Guru's physical presence you may think that the guidance is coming form the physical side. No, spiritual help need not depend on the physical body.

The Guru-disciple relationship never ends. It's always there. Whether the Guru leaves the body, or the disciple dies. That relationship is eternal, and Guru and diciple can never be separated.

Remember you will never be without me, never! The body may go, but I am always with you. Always!

14.6.06

சூப்பர் ஸ்டாரை பார்த்த போது...



எப்படியாவது பக்கத்தில் பார்த்து விட வேண்டும் என்று வேகமாக கீழே இறங்கிணேன்..ஆனால் யாரையும் வெளியே விடாமல் ரஜினி மற்றும் மற்றவர்களை முதலில் வெளியே அனுமதித்தனர்.. இரண்டு அடி தொலைவில் ரஜினியை பார்த்தேன்..சிறிது நேரம் கழித்து மற்றவர்களை வெளியில் செல்ல அனுமதித்தனர்.. ரஜினியின் கார் பக்கத்திலேயே இருந்தது.. அம்பாஸ்சிடர்.. TMU 6009 என நினைக்கிறேன்... அவர்கள் ஏறிக்கொண்டு கண்ணாடியை எற்றி விட்டுக்கொண்டு கிளம்பினார்கள்..

நான் நம்பரை ஞாபகம் வைத்துக் கொண்டு வேக வேகமாக தூரத்தில் நிறுத்தி இருந்த என்னுடைய பைக்கை எடுக்க ஓடினேன்.. எடுப்பதற்க்குள் நிறைய நேரம் ஆகி விட்டது... சரி.. பரவாயில்லை..அதான் இவ்ளோ பக்கத்தில் பார்த்தோமே என்று நினைத்துக்கொண்டு வண்டியை எடுத்துக் கொன்டு வேகமாக (எப்போதும் போல்) சென்றேன்.. அப்போது சிறிது தூரத்தில் ஒரு அம்பாஸ்சிடர் ரைட் டர்ன் சிக்னல் போட்டுக்கொண்டு நிற்பது தெரிந்தது...

To continue... http://manathinoosai.blogspot.com/2006/06/blog-post.html

28.5.06

An Appeal

www.rajinifans.com condemn for publishing the exclusive stills taken at Shivaji Shooting spot. www.rajinifans.com is neither directly or indirectly involved on this issue. As directed by AVM Production Team, we request our friends to remove the stills from their blog immediately. Hope all of our friends can understand our position.

Thanks in Advance.

Admin Team, www.rajinifans.com

9.5.06

மனசாட்சியின் மெளனம்



"மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறது" - கலைஞர் மு. கருணாநிதி.

All the Best!

5.5.06

வாழ்த்துக்கள்!



அமையப்போகும் புது சட்டமன்றத்தில் எல்லா கட்சிகளும் பிரதிநிதித்துவம் பெற்று ஜாதி, மத,மொழி பேதமற்ற நல் அரசு அமைய உதவி செய்ய வாழ்த்துகிறோம்.

வலிமையான பாரதம்; வளமான தமிழகம் அமையட்டும்!

1.5.06

எப்பவும் நீ ராஜா!

காத்து இருப்பது எத்தனை பேரோ...

உன்னிடம் தோற்பதற்கு...


Who is Tamil Nadu's biggest Icon?

Kamal Hassan 19%
Vishwanathan Anand 18%
APJ Abdul Kalam 17%
Rajnikanth 27%
Dr Shantha 19%



Courtesy : http://www.ibnlive.com/

24.4.06

Flashback - மறக்க முடியாத முகங்கள் - மருத்துவர் ராமதாசு



"எனக்கு தெரிந்து எந்த ரஜினி ரசிகரோ, மன்றமோ பாமகவுக்கு எதிராக போஸ்டரோ, எதிர்ப்போ காட்டவில்லை."

"என்னை பொறுத்தவரை, ரஜினி நல்ல நடிகர். பழைய விசயங்களை மறந்துவிட்டேன்."

"நீங்கள் குறிப்பிடும் காலகட்டத்தில் 'மக்களுக்கு நல்ல விசயங்களை கற்று தரவும் நமது கலாச்சாரங்களை கட்டிக் காக்கவும் தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் சினிமாக்ள் பயன்படவேண்டும்' என்ற விசயங்களை முன்வைத்துதான் கருத்துக்களை வெளியிட்டேன். எந்த நடிகருக்கும் அவரது தொழிலுக்கு இடைஞ்சல் வரும் வகையில் எனது விமர்சனங்கள் ஒரு போதும் இருந்ததில்லை"

- ஜூனியர் விகடனுக்கு கொடுத்த பேட்டியில் மருத்துவர் நெம்பர் ஒன்.



"பா.ம.க., உயர்மட்ட தலைவர்கள் ரஜினி தரப்பில் பேசியாச்சு. பிரச்னையை பேசி தீர்த்துவிட்டோம்"

- குமுதம் ரிப்போர்டருக்கு கொடுத்த பேட்டியில் மருத்துவர் நெம்பர் டூ

21.4.06

Flashback - மறக்க முடியாத முகங்கள் - கலைஞர் மு. கருணாநிதி




அன்று


பாபா படப்பெட்டியை பாமகவினர் கடத்திச் சென்றபோது வாய் திறக்க மறுத்தவர்...

மதுரையில் தாக்கப்பட்ட ரஜினியின் ரசிகர்களை ஆளுங்கட்சியின் ரவுடிகள் என்று வர்ணித்தவர்

தன்னை யாராலும் அடிக்க முடியாது என்று கோவையில் சவால் விட்டவர்

ஆறு தொகுதிகளிலும் பாமகவை எதிர்த்து களமிறங்கிய ரஜினி ரசிகர்களை கிண்டலடித்தவர்



இன்று


சந்திரமுகிக்கு வாழ்த்துச் சொல்ல காத்திருக்கிறார்...

எலெக்ஷன் வந்து எட்டிப்பார்ப்பதால்!

20.4.06

FlashBack - மறக்க முடியாத முகங்கள் - ஜெ. ஜெயலலிதா



அன்று


குண்டு கலாசாரம் பற்றி குறைப்பட்ட ரசிகர்கள் மீது குண்டர்களை ஏவிவிட்டவர்

பாபா படப்பெட்டியை மரம் வெட்டிகள் கடத்தி சென்றபோது முந்திரிகாட்டுக்கு காவல் நின்றவர்

காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் மனசாட்சியை தனிமைப்படுத்த நினைத்தவர்களோடு துணை நின்றவர்

ஆறு தொகுதிகளில் அதிமுகவுக்கு கிடைத்த அதிகமான வாக்குகளை பற்றி கருத்து எதுவும் சொல்லாதவர்


இன்று


வீரப்பனால் கிடைத்த

'தைரியலட்சுமி' பாராட்டை

தக்க வைத்துக்கொள்ள போராடுகிறார்...

எலெக்ஷன் வந்து எட்டிப்பார்ப்பதால்!

http://rajinifans.blogspot.com/2005/02/blog-post_23.html

12.4.06

வருந்துகிறோம்

Image hosting by Photobucket


கன்னடத்து கண்மணியை இழந்து தவிக்கும் கன்னடத்து சகோதரர்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

சந்திரமுகி - 365



வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம்
வாடா நைனா
வாழ்வு யார் பக்கம்?
அது நல்லவர் பக்கம்.

அட
ஆடியில் செய்தவன்
ஆவணி வந்ததும்
அனுபவிப்பானடா
அவன் தேடிய வினையே
வீட்டுக்கு வரலாம்
பின்னால் பாரடா!

நமக்கும் இதுதான் அவதாரம்
உன்பேரையும் என்பேரையும்
ஊரார் சொன்னால்
சந்திரனும் இந்திரனும்
நெருங்கிட வேணாமா?

வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம்...

4.4.06

Flash Back - வுடு ஜூட்!

இன்னிக்கு நக்கல் நாராயணனிடம் மாட்டியவர் பாமக தலைவர் ஜி.கே. மணி!

வாயில்லாத மக்களின் குரலை ஒலித்து வந்தது மட்டுமன்றி, அவர்களுக்காகப் பல்வேறு போராட்டங்களையும் நடத்திச் சிறை சென்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸக்கும், பாமகவுக்கும் வன்முறைச் சாயம்பூசி களங்கப்படுத்தும் முயற்சி முடுக்கி விடப்பட்டு வந்திருக்கிறது.

வாயில்லாத மக்களா? ஆனாலும் 'அந்த' ஜாதி ஆட்களை ரொம்பத்தான் கம்மியா சொல்லிட்டார்! மரத்தை வெட்டிப் போட்டு சாலை மறியல் பண்ணி தமிழ்நாட்டை கலக்கினபோது அரெஸ்ட் ஆனதுக்கப்புறம் வேற எந்த சந்தர்ப்பத்திலும் அய்யா ஜெயிலுக்கெல்லாம் போன மாதிரி தெரியலையே!

"பாபா' படம் தோல்வி அடைந்ததற்கும் பாமகவுக்கும் என்ன சம்பந்தம்? இதற்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்?

சமூக நீதிக்கும் டாக்டர் அய்யாவுக்கும் உள்ள சம்பந்தம்தான்! ஹி...ஹி.....பலு¡னில் ஊசி குத்துறதா நினைச்சுக்கிட்டு உங்க கண்ணுலேயே குத்திக்கிட்டீங்க! பூம்புகாரில் அரை மப்பில் அடிச்சு வுட்ட மேட்டர் இப்படி பத்தி எரியும்னு யார் கண்டா?

67 கோடி பேர் வாக்களிக்கும், உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்துகிற பொறுப்பிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர், 5 நிமிஷம் நேரம் ஒதுக்கி அவரைச் சந்தித்திருக்கிறார் என்பதைத் தவிர புகாரில் சத்து ஏதுமில்லை.

சத்தோ, குத்தோ... வெறும் ·பார்மாலீட்ஸ¥க்கே இப்படி ·பீவரில் கிடந்த மாதிரி ஆயிட்டீங்களே!

காவிரி நீருக்காக நெய்வேலியில் போராட்டம் நடத்தினால் கர்நாடகத்தில் தமிழர்களைச் சும்மா விடுவார்களா என்று குதர்க்கம் பேசியது அகிம்சா வழியா?

ரஜினி சொன்னால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல கர்நாடக மக்களும் கேட்பாங்கன்னு ஓவர் நம்பிக்கையில விசிலடிச்சான் குஞ்சான்ஸையும் ஓவர்டேக் பண்ணிட்டீங்க சபாஷ்!

இதையெல்லாம் ஆறரை கோடி தமிழ் மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.

அதிருக்கட்டும், மொதல்ல ஆறு தொகுதிகளில் இருக்குறவங்களுக்கு தெரிஞ்சாத்தான் கட்சியை காப்பாத்த முடியும்!

ராமதாஸக்கு எதிராக ஆபாசமான, அருவருப்பான சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் யார்? அதைக் கண்டு கொள்ளாமலும் கண்டிக்காமலும் இருந்தவர்கள் யார்?

பாவம் கலைஞர்... கிளைமாக்ஸ் நேரத்துல போகிற போக்கில் யார் யாரோ பன்ச் குடுக்குறாங்களேன்னு கன்னத்துல கை வெச்சிருப்பார்!

விருதுநகர் மாநாட்டுக்குச் சென்றபோது ராமதாஸக்குக் கருப்புக் கொடி காட்டக் கட்டளையிட்டவர்கள் யார்? என்பதையெல்லாம் தமிழக மக்கள் நிச்சயம் எண்ணிப் பார்ப்பார்கள்.

அட ஆமா, மதுரை மேட்டரில் விருதுநகரை எல்லோரும் வுட்டுட்டாங்களே! அங்கே கூட தொரத்தி தொரத்தி அடிச்ச பெருமை அய்யாவுக்குதானே!

ஜனநாயகத்திலும் அறவழியிலும் நம்பிக்கை வைத்துள்ள கட்சி பாமக. மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள கட்சி.

(எங்க ஜாதி) மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள கட்சின்னு சொல்லுங்கோ...கை தட்டுறோம்!

எனவே, அடிப்படையற்ற கற்பனையான சந்தேகங்களைக் கிளப்பி வீண்பழி சுமத்துவதன் மூலம் மக்களைத் திசைதிருப்பிவிட முடியாது. பாமகவின் வெற்றியைத் தடுக்கவும் முடியாது.

மணி அய்யா, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு சில்லுண்டிகளெல்லாம் அசெம்பளி எலெக்ஷனில் ஆப்பு வெச்சிரலாம்னு முடிவு பண்ணிடப் போறாங்க... ஜாக்கிரதை!

Courtesy :- http://rajinifans.blogspot.com/2004/04/blog-post_28.html

24.3.06

எப்பவும் நீ ராஜா!



காத்து இருப்பது எத்தனை பேரோ...

உன்னிடம் தோற்பதற்கு...

21.3.06

இதுவும் டெஸ்ட்தான்!

எந்த கட்சிக்கு ஓட்டு போடறதுங்கிறது அப்புறம் இருக்கட்டும். எப்படி போடறதுங்கிறதை பாருங்க மொதல்ல...

http://eroll.tn.nic.in/

ஓட்டு இருக்கான்னு செக் பண்ணியாச்சா?



All the Best!

20.3.06

உன் வாழ்க்கை உன் கையில்!

“Since the election is round the corner, you all will see different kind of posters involving Thalaivar. As Ramki mentioned in one of his mails, do not give any importance to such things. I can understand the feelings of fans living in Tamil Nadu.. What is most important to a true Rajini fan is maintain calm and patience and not become emotional seeing any kind of wordings about Thalaivar.

Who ever is part of this poster wars are selfish than rajini fans. i.e their selfish motives are primary interest for them than being rajinifan. We all should understand onething. People like us come out openly as Rajini fans through channels like ours or formal fans associations... However we are not the only factors for the superstardom of Thalaivar. So, even all the fans associations are dissolved Rajni will still be the superstar.. Even we hear news about disolving few associations, do not give importane to such news. I would say it is another opportunity for Thalaivar and Thalapathy to identify the 'Karuppu Adugal' in the Fans Associations...

It is critical time for true rajini fans in Tamil Nadu.. Since Thalaivar has made his views very clearly, please do vote for the candidates you think will do good for your constituency (irrespective of party). Let Rajini fans be real rational voters this time. We should come out of party loyalty and see who will work for welfare of the constituency/people. Which ever party has nominated good people should win the majority..

PLEASE DO CASTE YOUR VOTE .... BEFORE THAT CONFIRM YOUR NAME IN THE VOTER LIST...I understand you can check this in internet. Those who know the website links may send it to our group”

Anbudan Thinakar



“Rajini is not like other actors. Yes, he has less contact with his fans but he doesn't use his fans for his personnel thing. He only want them to success in life first and wacth his movies. The distance between him and his fans doesn't mean he forgets them or don't love them. Finally, most of believe in God, If God appear to our there won't be any value for him. The distance between God and us gives us how great God is and how valuable he is to the human. I'm not telling Rajini is God but the same concept applies here.”

N. Kumar




“I left the theatre with indescribable joy and proud that emerged from my heart. I glanced up to take good look at the gigantic cut-out of `Super Star Rajini' that has been dominated the front of theatre. I knew that this cut-out was here to stay for long. I was eight years old then, I was a frantic fan of Rajini Sir as much as now at my early thirties. I have same feeling as `joy and proud' as then when I watch old Rajini sir's movies even in video today. I personally believe that his `debt' to the thousands of fans has been settle-downed equally and squarely before we leave the theatre each and every time. As manipulative and irresponsible journalists
mentioned in their articles if we all feel he abandoned his die hard fans without venturing into politics, I would say that it is a ludicrous argument. If he is not so good at making us laugh, cry,
wonder, proud, or even smile during those `precious' three hours, we would not make him as a king of the box-office. Rajini Sir has been entertaining us for long and some of us may think it is time to pull the horns of `politics' bull. But I like to say one thing; even if, he decides to leave the film industry today, he will leave a colossal legacy that cannot be touch by any actor who would succeed him.

I am a Sri Lankan Tamil who has been living in Canada for last eight years. I noticed that a huge shifting of Ceylon Tamils' preference toward younger actors. As much as Sri Lankan Tamils' concern, they are looking for great entertainment and then come greater concern of us, liberation of our homeland. We all prefer that the person comes to power in Tamil Nadu must support our struggle. Unfortunately, most of Sri Lankan Tamils think that `Rajini Sir' does not care about us. So, that means I do not want him to succeed in politics? Hell...No! But I think that he is mature enough to openly comment what he thinks it is right rather than keeping tight lips. Since, he does not often comment about `our course', unfortunately, people come to the wrong conclusion.

As much as I adore super star, I also have a special place in my heart for Tamil Nadu's people whose socio-economical successes will lift our morale. I do not think that `educated' and `well
established' people only should enter into politics in India rather than a Mr. Q. John. I think that people start to see the Western countries' economical success was the result of educated
politicians' miracle work. But it rather emerges from a barbaric custom that reluctantly persuades a materialistic life-style. I think India is a unique country that has full of vibrant cultures and customs those go back to thousands of years. Peoples live here with coats of ethic and moral that whose leader should posses those values. I think that `Rajini Sir' possesses those wonderful qualities. With thousands of die-hard fans and good moral stand, Rajini Sir has the all the qualities that necessary to lead into the political life. Further more, I expect a political vacuum within five years in Tamil Nadu. So...what we can do until Rajini Sir decide to enter into politics. Pray the God that gives him all the energy to make couple of movies before he leaves the scene with a BANG”

Sritharn

17.3.06

ஒதுங்கு...ஒதுங்கு!



Courtesy - Dinakaran


உன்னோட வாழ்க்கை உன் கையில் இருக்கு
அடுத்தவன் கெடுத்தா அது நிக்கதாப்பா!

கஷ்டபட்டு உழைச்சு முன்னேற பாரு
இஷ்டப்பட்டு எல்லோரும் பின்னால் வருவார்!

பதவி இருந்தா பத்து பேரு
பணத்துக்காக நூறு பேரு

எனக்கு கட்சியும் வேண்டாம்!
ஒரு கொடியும் வேண்டாம்!

16.3.06

இறுதி வரை...




என் இருதயத்தில் துடிதுடிப்பாய் இருப்பவனும் நீதான்
என்ணம் போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான்

என் இறுதி வரை...
கூட வரும்...
கூட்டணியும் நீதான்!

வாழ வைத்த தெய்வங்களான ரசிகர்களுக்கு நன்றி!

Silence please!



"ரசிகர் மன்றங்களை தொடங்கியவர்கள், 'இருபது வருடங்கள் கழித்து ரஜினி அரசியலுக்கு வருவார்' என்ற எதிர்பார்ப்புடன் மன்றங்களை ஆரம்பிக்கவில்லை. தலைவரின் நடிப்பு மட்டுமின்றி அவரின் மனிதாபிமானம், நல்ல கேரக்டர் ஆகிய அனைத்திலும் கவரப்பட்டு ஒன்று சேர்ந்திருக்கும் கூட்டமிது. ரஜினிக்கும், ரஜினி ரசிகர்களுக்குமிடையே உள்ள உறவு, ஒரு அரசியல் தலைவனுக்கும், தொண்டனுக்குமிடையே உள்ள சாதாரண உறவல்ல. அதையும் தாண்டி மிகவும் உன்னதமானது. ரசிகர்கள் மிகவும் வேகமானவர்கள். அதே வேகத்தில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், அது லட்சோபலட்ச இளைஞர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும். எனவே, அவர்களை அமைதியாகவும், நேர்மையாகவும் வழி நடத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கிருக்கிறது."

- சத்யநாராயணா, அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர்.

Courtesy :- Kumudam Reporter, dated 12.2.04

15.3.06

டாப் - 4



4. பாபா

'உழைப்பாளி'யிலேருந்து 'பணக்காரன்' வரைக்கும் எல்லாமும் ஓடியிருக்கும்போது இது ஏன் தோத்துப்போனதுங்கிறதுக்கு இன்னிக்கு வரைக்கும் உருப்படியான பதில் கிடைக்காதது ஒரு ஆச்சரியம். 'அருணாச்சல'த்தோடு வந்திருக்கவேண்டிய படம் ரொம்ப லேட்டா வந்ததுதான் பிரச்சினையோ? ஆன்மீகம்னா ஏதோ பெரிய விஷயம்; அதுக்கெல்லாம் ரொம்ப கஷ்டப்படணும்னு சொல்லி ஓதுங்கிறவங்கதான் ஜாஸ்தி. இப்படியும் ஆன்மீகத்தை நடைமுறை வாழ்க்கையில கொண்டுவரலாம்னு ஒரு அருமையான விஷயத்தை சொல்ல வந்த படம். எந்தப் படத்திலும் இல்லாமல் இந்தப்படத்தில்தான் ரஜினி நிறைய விஷயங்களை ரசிகர்களுக்கு சொல்லி ரொம்பவும் மெனக்கெட்டிருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிஞ்சது!



3. தில்லு முல்லு

ஓரு ஆக்ஷன் ஹீரோவை நம்பி தம்மாத்துண்டு மீசையை வெச்சுக்கிட்டு ஆள்மாறாட்டம் காமெடியை இந்தியிலிருந்து இறக்குமதி பண்ணி வயிறு குலுங்க சிரிக்க வைத்த கே.பியின் வித்தியாசமான படம்! விசுவின் வசனமும் ரஜினியின் நடிப்பும் கே.பியை ஓரங்கட்டியதை சொல்லியே ஆகவேண்டும். சைலண்டாக எழுந்திரிச்சு கண்ணாடியின் முன்னாடி நின்னு உனக்கு இது தேவையான்னு கேட்டு தலையணையில் முட்டிக் கொண்டு ரஜினி காட்டும் டென்ஷன் படு நேச்சுரல்...இன்னிக்கும்!



2. பாட்ஷா

ரஜினி என்கிற தனிப்பட்ட நடிகரின் செல்வாக்கை உச்சிக்கு உயர்த்திய படம். ரஜினி ரசிகர்களின் ஓட்டுமொத்த ஒரே சாய்ஸ். 'ஹம்' அளவிற்கு பண்ணினாலே பெரிய விஷயம்னு நினைச்சிட்டிருந்தவனின் புருவத்தை உயர வைத்தது மட்டுமல்லாமல் எப்போது பார்த்தாலும் பூஸ்ட் குடிச்ச எபெக்டை தரும் ஒரே படம். ரசிகர்களை தாண்டி மக்களையும் எனர்ஜிடிக்கா உணர வைத்து இளைய தலைமுறை நடிகர்களுக்கு பெரிய இன்ஸ்பிரஷேனாக இன்னும் இருக்கும் படம்.



1. முள்ளும் மலரும்

புரட்சிகரமான கதையமைப்போ, இழுவையான காட்சிகளோ இல்லாத தமிழின் முழுமையான யதார்த்த சினிமாவாக இதைச் சொல்லலாம். சண்டைக் காட்சியிலிருந்து சோகக் காட்சி வரை எதையும் மிகைப்படுத்தாமல் எப்போது பார்த்தாலும் உறுத்தாத ஒளியமைப்பு நம்முடைய பேரனையும் நிச்சயம் ரசிக்க வைக்கும். மகேந்திரன், ரஜினிகாந்த், இளையராஜா, பாலுமகேந்திரா, ஷோபா என பல பெரிய கைகளின் திறமைக்கு முழு தீனி போட்ட படம். இதைப் பத்தி அதிகமாக எழுதவேண்டிய அவசியமேயில்லை. படத்தை ஓட வைத்ததற்கு எம்ஜிஆரிலிருந்து கமல் வரை எல்லோருக்கும் நன்றி சொல்லியாகவேண்டும்!

Courtesy - ராம்கி - http://rajniramki.blogspot.com/2004/06/10.html

14.3.06

சந்திரமுகி - 340





ஆண்டவா...

அடுத்தவரை வாழ வைக்கும்
எனது முயற்சிகள்
வெற்றி பெறட்டும்!

அடுத்தவரை வீழ வைக்கும்
எனது முயற்சிகள்
தோல்வியுறட்டும்!

1.3.06

பூச்செண்டு








அரசியல் கணக்குகளில்
அடமானமாகி விடாமல்
புனிதத்தை தக்க வைத்த
பூச்செண்டின் காலம்
இன்றும் தொடருகிறது!

26.2.06

வெள்ளிவிழா வாழ்த்துக்கள்!



26.2.1981 - 26.2.2006

வெள்ளிவிழா காணும் எங்கள் தங்கங்களுக்கு இன்று திருமண நாள்.

வெற்றிப்பயணம் என்றும் தொடர எங்கள் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.