ரஜினி - வெற்றிகரமான சினிமா நடிகராக தொடங்கி ஆன்மீகம், அரசியல் என சகல தளங்களிலும் விரவி இன்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வதை யாரும் மறுக்க முடியாது. கணிணி மயமாகிவிட்ட இவ்வுலகில் ரஜினியின் மீது அன்பு கொண்டிருக்கும் அனைவரையும் இணையத்தின் வாயிலாக இணைக்க விழைந்துள்ளோம். www.rajinifans.com - ரஜினியை பற்றிய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவும், ரஜினி சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்கவும், எதிர் வினைகளை பதிவு செய்யவும் அன்புடன் அழைக்கிறோம்.
29.8.06
சந்திரமுகி - 500
Chandramukhi - The Most Successful Film of Tamil Cinema
'கஷ்டம் - சுகம், பாவம் - புண்ணியம், நல்லது - கெட்டது... என்று பல வகையான அனுபவங்களையும் கொண்டதுதான் இயற்கையின் போக்கு. வாழ்க்கையில் கஷ்டத்தையும் ஓரளவாவது அனுபவித்தால்தான், சுகத்தின் பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும். ஒரு ஏர் கண்டிஷன் ருமில் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் அதன் அருமை தெரியாது. கொஞ்ச நேரம் வெயிலில் இருந்து விட்டு அதன் பிறகு ஏ.சிக்கு போனால்தான் அதன் அருமை நன்றாக தெரியும்,
மனிதர்களின் இந்த இயல்பை அறிந்த ஆண்டவன், கஷ்டம், சுகம் இரண்டையுமே வாழ்க்கையில் சேர்த்தே வைத்திருக்கிறான். சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால் அவன் இறைவனையோ, இயற்கையையோ புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.
வாழ்க்கையில் எதுவும் நிரந்தமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இன்பம் கிடைக்கும்போது, அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால் நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம். அதுபோல், கஷ்டம் வரும்போது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால், அந்த கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் நொறுங்கி விட மாட்டோம். வாழ்க்கையில் இரண்டும் கலந்துதான் இருக்கும். அதுதான் நல்லதும் கூட'
- ரஜினிகாந்த், துக்ளக் - 28.2.1996
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment