
வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம்
வாடா நைனா
வாழ்வு யார் பக்கம்?
அது நல்லவர் பக்கம்.
அட
ஆடியில் செய்தவன்
ஆவணி வந்ததும்
அனுபவிப்பானடா
அவன் தேடிய வினையே
வீட்டுக்கு வரலாம்
பின்னால் பாரடா!
நமக்கும் இதுதான் அவதாரம்
உன்பேரையும் என்பேரையும்
ஊரார் சொன்னால்
சந்திரனும் இந்திரனும்
நெருங்கிட வேணாமா?
வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம்...
No comments:
Post a Comment