மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது...
சினிமாவிலே நிறைய சாதிச்சாச்சு.
திரும்ப திரும்ப, அதேயே, எத்தனை நாளைக்கு பண்றது.
சினிமாவிலே வேலை செய்றது, இப்ப பர்டனா இருக்கு.
நாம பண்ற வேலை, Funஆ இருக்கனும்.
வேற ஏதாவது பண்ணனும் என்று நினைக்கிறேன்.
எனக்கு, சேலன்ஜ் பிடிக்கும்.
ரொம்ப சேலன்ஜ் உள்ள காரியம்மா பண்ணனும் என்று நினைக்கிறேன்.
அரசியலா என்று நீங்கள் கேக்கலாம்.
இருக்கலாம்.
ஆண்டவன் விருப்பம் அதுதான்னா, அரசியலா இருக்கலாம்.
சினிமாவிலே, நிறைய இளைய தலைமுறைகள் வந்துட்டாங்க.
வந்து நல்லா பெர்பார்மன்ஸ் பண்றாங்க.
எத்தனை நாள், நான் ஆடுறது. நானும், உங்களை மாதிரி
அங்கே உக்காந்து, இளைய தலைமுறையின் திறமையை பார்த்து
ரசிக்க ஆசை.
ரஜினியின் ஆட்சி...
ரஜினி அரசியலில் வரணுமா?
இருப்பவர்கள் பத்தாது என்று,
ரஜினியும், தினம் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து,
தோளில் ஒரு கலர் துண்டு போட்டு,
கட்சி ஆரம்பித்து,
உறுப்பினர்களை சேர்த்து,
வட்டம், மாவட்டம் என கட்சி நிர்வாகிகளை நியமித்து,
ஊருக்கு ஊர், தெருக்கு தெரு, கொடிக்கம்பம் நட்டு,
எதிர்க்கட்சிகளை திட்டி, மேடை போட்டு பேசி,
கண்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து,
முதலில் சில தொகுதிகளில் ஜெயித்து,
பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்து,
ஆளுங்கட்சி விழுந்தவுடன், அடுத்த தேர்தலில் ஆட்சி பிடித்து,
... வேண்டாம் அப்பா அரசியல், என்று ஓடிவிடுவார் ரஜினி.
அவர் செயல் வீரர்.
அரசியல் செய்வது, ரஜினியின் நோக்கம் அல்ல.
மக்களுக்கு, நல்ல ஆட்சி தருவதுதான், ரஜினியின் நோக்கம்.
ஒரு பத்து வருடம், ரெண்டு டெர்ம், தமிழ்நாட்டு முதலமைச்சர்.
அடுத்த பத்து வருடம், ரெண்டு டெர்ம், இந்தியாவின் பிரதமர்.
இருபது வருட ப்ளான்.
இப்ப இருக்கிற மக்கள் செல்வாக்கை வைத்து, தமிழ்நாட்டு முதலமைச்சராவது.
தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து சாதிப்பதைப் வைத்து,
இந்திய அளவில், மக்களின் நன் மதிப்பை பெற்று,
பத்து ஆண்டு கழித்து, பாரதப் பிரதமாராவது.
ரஜினிக்கு போதுமா, சேலன்ஜ்.
ரஜினி, அடுத்த முதலமைச்சராக ஆவதற்க்கு, தேவை என்ன?
கட்சியா? கூட்டமா, கூட்டணியா? இல்லை.
ரஜினி, அடுத்த முதலமைச்சராவதற்க்கு தேவை,
234 M.L.A க்கள்.
ஆக, ரஜினி முதல்வராவதற்க்கு, 234 சட்டசபை உறுப்பினர்கள்
இருந்தால் போதும்.
234 சட்டசபை உறுப்பினர்களுக்காக
பல லட்சம் உறுப்பினர்களை சேர்த்து, கட்சி ஆரம்பித்து,
அந்த லட்சம் பேர்களை, எப்படி சமாளிக்கிறது.
ஆக, ரஜினியின் டீமில் தேவையான ஆட்கள், 234 சட்டசபை உறுப்பினர்கள்,
சில சிந்தனையாளர்கள், பப்ளிசிடி ஆட்கள்...
ஆக வேண்டியது 300 பேர்.
ஒரு 300 பேரை வைத்து, ரஜினி டீம் அமைக்க வேண்டும்.
அந்த 300 பேரை தேர்ந்தெடுப்பதில்தான்,
ரஜினியின் வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படும்.
300 பேரில், ஒவ்வொரு துறைக்கும், இரண்டு பேர் அமைச்சராக,
ஒருவர் கல்வி அமைச்சர், மற்றவர் துணை கல்வி அமைச்சர் என்று
தேர்வு செய்ய வேண்டும்.
அமைச்சர் போக, மீதி அனைவரும், சட்டசபை உறுப்பினர்கள்.
எந்த பதவியும் கிடையாது.
டீம் தேர்வு செய்தவுடன், 300 பேருக்கும், நல்ல பயிற்சி.
இந்திய வரலாறு,
உலக வரலாறு,
இந்திய சுதந்திரப் போராட்டம்,
மக்களாட்சி மலர்ந்த கதை,
மேனஜ்மேண்ட்,
பொது நிர்வாகம்,
பேச்சு திறமை...
ரஜினி, டீவியில், இவர்கள் எல்லாம் என் வேட்ப்பாளர்கள்.
இவர்களூக்கு நீங்கள் போடும் ஓட்டு, நீங்கள் எனக்கு போடும் ஓட்டு.
நான் ஊர் ஊராக வந்து, உங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
ரோடுகளில், மக்கள் கூட்டத்தை கூட்டி, போக்குவரத்துக்கு
இடையூரு செய்ய விரும்பவில்லை.
உங்களுக்கு, ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்க,
எனக்கு ஒரு சந்தர்ப்பம் அளியுங்கள்.
234 பேரும் வெற்றி.
ரஜினி முதல்வராக பதவி ஏற்ப்பு.
இது புது டெக்னிக் இல்லை.
பிள்ளையார், அந்தக்காலத்திலேயே செய்து வெற்றி பெற்றுவிட்டார்.
திருவிளையாடலில், அம்மை அப்பனை சுத்திவந்து பழத்தை பெற்று கொண்டார்.
...
கதை நல்லா இருக்கு.
ஆரம்பத்திலே...
வீர சிவாஜி வேடத்தில் ரஜினி, ஆங்கிலேயரை எதிர்த்து...
அப்புறம், மராட்டிய மண்ணில் இருந்து...தன்ஞாவூர்க்கு லிங்க் பண்ணி,
அந்த வம்சத்தில் வந்த சிறுவனை காண்பித்து...
பிறகு ஒரு இளைஞன், பெங்களூரில் பஸ்ஸ’ல் கண்டக்டராகி...
சென்னை வந்து, பாலச்சந்தர் சாருகிட்டே...
இன்னைக்கு முதல்வராயிட்ட மாதிரி...
அடுத்த ரஜினி படத்தின் கதை என்று ஒதுக்கி விடவேண்டாம்.
இது சினிமா கதை அல்ல.
இன்று எழுதப்பட்ட, நாளைய தமிழகத்தின் வரலாறு.
S.பாலச்சந்திரன்.
balachandran@muthamil.com
Courtesy : www.muthamil.com