31.8.04

ரஜினி மனசாட்சி வென்றிருக்கின்றது!

சூப்பர் ஸ்டார் எதனால் அதிமுக-விற்கு வாக்களித்தார் என்பது பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்திவிட்டது. இவர் வாக்களித்தது சரியா, இல்லையா என பட்டிமன்றம் கூட ஆரம்பித்துவிடும் போலிருக்கிறது. மீண்டும் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பற்ற முடியாது என சொன்ன சூப்பர் ஸ்டார் இப்போது எதனால் அதிமுக-விற்கு வாக்களித்தார்? உண்மையாக சொல்ல வேண்டுமெனில் ரஜினி வழி, தனி வழி தான். இப்போது நாட்டு நடப்பை பார்க்கும்போது ஆளும் கட்சிக்கு எதிராகவே மக்கள் வாக்களிக்கிறார்கள். ஐந்து வருடம் ஒரு கட்சிக்கு, அடுத்த ஐந்து வருடம் வேறு கட்சிக்கு என மக்கள் மாறி வாக்களிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் தமிழக மக்கள் வாக்களித்தது பிரதமரை தேர்ந்தெடுக்க அல்ல என்பது மட்டும் புரிந்தது. காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு இருந்தால் தமிழக மக்கள் நிச்சயம் பாஜக-விற்கு பரிசாய் தந்த பெரிய தோல்வியை காங்கிரசுக்கும் தந்திருப்பார்கள். பாரளுமன்ற தேர்தலில் மக்கள் மாநில அரசை, மாநில கட்சிகளை கருத்தில் கொண்டு வாக்களிக்கும் முறை மாற வேண்டும். அதிமுக அரசின் மேல் இருந்த அதிருப்தியை மக்கள் சட்டசபை தேர்தலில் காட்டுவதை விட்டு, பாரளுமன்ற தேர்தலில் காட்டியது வருந்த வேண்டிய ஒன்று.பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அதிமுக-வையும், திமுக-வையும் கருத்தில் கொண்டு வாக்களிக்கும் முறையிலிருந்து மக்கள் மாறுபட வேண்டும். திமுக செய்வது எல்லாம் சரியே என ஆதரிப்பவர் சூப்பர் ஸ்டார் இல்லை. இந்த தேர்தலை பொறுத்தவரை வாஜ்பாயா, சோனியாவா என முடிவு செய்த தேர்தல். இதை கருத்தில் கொண்டே சூப்பர் ஸ்டார் பாஜக கூட்டணியான அதிமுக-விற்கு வாக்களிக்க நேர்ந்தது. திமுக திடீரென மதவாத கட்சி பாஜக என குற்றம் சாட்டி உறவை முறித்துக்கொண்டு, இங்கே ஜாதிக்கட்சியான பாமக-வுடன் உறவை வலுப்படுத்தியது ரஜினிக்கு மட்டும் அல்ல, ரஜினி ரசிகர்களுக்கும் திமுக-வின் மேல் வெறுப்பை காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திமுக-விற்கு ஆதரவாக 96 தேர்தலில் கடுமையாய் உழைத்த ரஜினி ரசிகர்களின் உழைப்பை கலைஞர் அவர்கள் மறந்து போனாலும், சூப்பர் ஸ்டார் கலைஞரை பற்றி தவறாய் கருத்து கூறாதது அவரது பெருந்தன்மையை காட்டியது. அரசிலில் சூப்பர் ஸ்டார் ஈடுபட்டாலும் அரசியல்வாதிகள் போல் இல்லாமல் ஒரு நல்ல மனிதனாய் திகழ்கிறார். நதி நீர் இணைப்பு பற்றி எப்போதோ பேச்சு எழுந்து இருக்கலாம் ஆனால் சமீப காலமாக இந்தியா முழுதும் இதைப்பற்றி பேச காரணமாய் இருந்தவர் சூப்பர் ஸ்டார். கனவிலும் நடக்காத விசயத்தை சூப்பர் ஸ்டார் பேசுவதாக பாமக குறை கூறியது. இன்று எல்லா அரசியல் தலைவர்களும் நதி நீர் இணைப்பு பற்றி பேசினால்தான் ஓட்டு விழும் என நினைத்து இதைப்பற்றி பேசாத நாள் இல்லை. இந்தியாவில் வறுமை ஒழிய வேண்டும், நதிகள் இணைய வேண்டும் என்கின்ற சூப்பர் ஸ்டாரின் ஆசையை நிறைவேற்றுவதாக வாஜ்பாய் அவர்கள் சொன்னதும் அவர் பாஜக கூட்டணியான அதிமுக-விற்கு வாக்களிக்க ஒரு காரணமாக அமைந்தது. அதிமுக-விற்கு வாக்களித்தேன் என சூப்பர் ஸ்டார் வெளிப்படையாய் சொன்ன போது அவரின் துணிச்சலையும், சொல்வதைத்தான் செய்வேன் செய்வதைத்தான் சொல்வேன் எனும் அவரின் வார்த்தையின் அர்த்தத்தையும் உணர்த்தியது. சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பாமக-வினரால் தாக்கப்பட்டதுதான் அவரின் மனதை அதிகமாய் பாதிப்படையச் செய்து அவர் மனம் திறப்பதற்கு வழிக்காட்டாக அமைந்தது. பாமக-வின் வன்முறை, திமுக-வின் நன்றியின்மை, வாஜ்பாய் தந்த உறுதிமொழி இவ்வாறான காரணங்களால் மட்டுமே அவர் அதிமுக-விற்கு வாக்களிக்க நேர்ந்தது. அவரின் அந்த ஓட்டு அவர் உயிருக்கு உயிராய் மதிக்கும் ரசிகர்களுக்காகவும், தண்ணீருக்காக கண்ணீர் சிந்தும் விவசாயிகளுக்காகவும், உயிரை விலை பேசிக்கொண்டிருக்கும் வன்முறைக்கு எதிராகவும் அளித்த லட்சிய ஓட்டு. அவர் வாக்களித்த கட்சி தோற்றுப் போயிருக்கலாம் ஆனால் அவர் மனசாட்சி வென்றிருக்கின்றது.
மா. இரவிசங்கர்
on behalf of www.rajinifans.com

1 comment:

Anonymous said...

dai madaya

vera polappu Illaya
Avanukku than vera Naathi Illa(Rajinikku).

unmaiyana

Tamilan