25.8.04

ஏன் ரஜினிக்கு உலகம் முழுவதும் இப்படி தீவிர ரசிகர்கள்?

மதிப்பிற்குறிய பத்ரி அவர்களுக்கு,

உங்களின் கருத்துக்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டிருக்கிறேன், காரணம் நீங்கள் குறிப்பிட்ட லு}ஸ் ரசிகனில் நானும் ஒருவனாக இருப்பதால். ஏன் எங்களுக்குள் இப்படி ஒரு வெறி? ஏன் ரஜினிக்கு உலகம் முழுவதும் இப்படி தீவிர ரசிகர்கள்? உங்கள் மனதில் இவ்வாறு கேள்விகள் ஓடிக்கொண்டிருப்பது புரிகிறது. நாங்கள் நடிப்புக்காகமட்டும் ரசிகர்கள் இல்லை என்பதுதான் உண்மை. க~;டப்பட்டு தன் உழைப்பால் மேலோங்கி நிற்கும் ஒரு மாமனிதனை பார்க்கிறோம். நடிப்பு என்பது தொழிலில் மட்டுமே, வாழ்க்கையில் இல்லை என்று உணர்த்தும் உத்தமனை பார்க்கிறோம். உழைத்தால் உயரலாம் என்பதற்கு உதாரணமாய் தெரியும் உழைப்பாளியை பார்க்கிறோம். புகழின் உச்சியில் இருந்தாலும் எல்லோரையும் மதிக்க தெரிந்த தலைவனை பார்க்கிறோம். மனித வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் திகழும் ஒரு மாமனிதனின் ரசிகர்கள் உங்கள் கண்ணுக்கு வேறுபாடாய் தெரிவது, உங்களின் கண்ணோட்டத்தின் குற்றத்தை தெளிவுப்படுத்துகின்றது. ஜப்பானியர்கள் தமிழ் கற்றுக்கொண்டுத ஒன்றுதான் சந்தோசம் எனக்கூறிய நீங்கள் அவர்கள் தமிழ் கற்றதன் காரணம் அறியாதிருப்பதுதான் வேதனை.வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கே இன்று தமிழ் எழுத, படிக்க மறந்து போயிருக்கும் இந்நிலையில் ஜப்பானியர்கள் தமிழ் கற்றுக்கொள்ள து}ண்டுதலாய் இருந்த எங்கள் தலைவனை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.தமிழ் கலாச்சாரத்தில் விருந்தோம்பல் என்பது ஒப்பற்ற ஒன்று. ராம்கியின் ஆட்டம், பாட்டம் எல்லாம் வந்தவர்களை குதுகுலப்படுத்திய விருந்தோம்பல்தான். ஆடிப்பாடிய ராம்கியின் சமுதாய சிந்தனைகள் உங்களுக்கு தெரியாததல்ல.உலகின் ஏதோ ஒரு மூலையில் வாழும் இவர்கள் நம் மண்ணை மதிக்கிறார்கள், நம் மண்ணின் மைந்தனை மதிக்கிறார்கள். இதுவல்லவா இந்திய நாட்டிற்கு பெருமை! கலாச்சார சீரழிவுகள் நம்மை அழித்துக்கொண்டிருந்தாலும், நம் கலாச்சாரத்தை இவர்கள் நேசிப்பது வியக்கத்தக்க ஒன்றுதான்! ரஜினி ரசிகர்கள் அன்னப்பறவை போன்றவர்கள். பாலையும், தண்ணீரையும் பிரிக்கத்தெரிந்தவர்கள். ஜாதி, மதம், மொழிகளால் வேறுபாடு இல்லாதவதர்கள்.

ரஜினி படத்தில் என்ன வேண்டும்? ரஜினி போதாதா? ஆனால்; ஒன்று மட்டும் இல்லை. அது ஆபாசம்.

இன்று நல்லவைகள் நம்மால் எட்டுத்திக்கும் செல்கின்றது.இதற்கு சான்று ஜப்பானியர்கள்.

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிப்பாடும், சூப்பர் ஸ்டார் வீட்டு நாய்க்குட்டிக்கும் எல்லோரையும் நேசிக்க தெரியும். இதனால்தான் பத்திரிக்கைகள் எழுதுகின்றன.

நீங்கள் சொல்லப்பட்டிருக்கும் குறைகளில் நிறைய நிறைகளும் ஒளிந்திருக்கின்றது. ரஜினியின் புகழை குற்றம்சாட்டி புகழ்ந்ததற்கு நன்றி. ஆண்டவன் ஒரு நல்ல மனிதனை படைக்கம்போதே, அம்மனிதனை நேசிக்க கோடான கோடி மனிதர்களையும் சேர்த்து படைக்கிறான். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட எங்கள் தலைவருக்கும் இது பொருந்தும்.

நல்ல மனிதனை மதிப்போம்! நல் வழிச்செல்வோம்!

அன்புடன்
இரவிசங்கா
on behalf of www.rajinifans.com

No comments: