சூப்பர் ஸ்டார் வீட்டு திருமணம் பற்றி பலவிதமான செய்திகள் எல்லா நாளிதழ்களிலும் வருவதை கண்டுக்கொண்டிருக்கிறோம். நம்மில் சிலருக்கு இதனால் கருத்து வேறுபாடுகளும் இங்கு நிலவியது. நானும் முதலில் இந்த திருமண செய்தியை அறிந்ததும் சந்தோசமடைந்தேன். சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நாம் ஆராய்ந்து பேசுவதிலிருந்தே நாமும் சூப்பர் குடும்பத்தின் ஒரு அங்கத்தினர் என்ற உணர்வு நம்மிடம் தோன்றுகிறது. சூப்பர் ஸ்டாருக்கோ அல்லது அவரின் குடும்பத்தினருக்கோ எந்த களங்கமும் வந்துவிடக்கூடாது என என்னும் பல ரசிகர்களின் உணர்வுகள் இங்கே காண முடியும். பத்திரிக்களில் வெளிவந்த செய்தி கண்டு நாம் வேதனையடைந்ததற்கு காரணம் இது நம் தலைவரையும் பாதித்திருக்கும் என்பதால்தான். இதைப் போன்ற பலவிதமான செய்திகள் சூப்பர் ஸ்டாரை பாதிக்கிறதோ இல்லையோ நம்மை வெகுவாய் பாதிக்கிறது. தன் மகளின் திருமணத்தை நிச்சயமாய் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் இருந்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. தன் மகளின் காதலன் வயதில் இளையவன் என்பதை எந்த தகப்பனால் தான் ஏற்றுக்கொள்ள முடியும்? வயது வித்தியாசம் மாறி நடந்த திருமணங்களை நாம் உதாரணம் காட்ட முடியும். ஆனால் இதில் சில முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கிறது. ஒரு வேளை ரஜினி ஒரு சாதாரண சிவாஜிராவாக இருந்திருந்து இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் இத் திருமணத்தை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார் என்பது என் கருத்து. பத்திரிக்கைகளாலும், தொலைக்காட்சிகளாலும் தன் புகழுக்கு ஏற்படும் இக் களங்கத்த்தை போக்கவே மனப்பூர்வமான சம்மதம் தெரிவித்துவிட்டார். சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையில் நாம் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம். சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யா அவர்கள் இந்த காதலை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, பத்திரிக்கைகளில் இதைப்போன்ற செய்தி வருவதற்கு வழியில்லாமல் செய்திருந்தால் எல்லோர் மனதிலும் எந்த நெருடலும் இருந்திருக்காது. குடும்பத்திற்காக எதையும் தியாகம் செய்யலாம், ஆம் காதலையும் கூட. காதலின் உண்மை வெற்றி தியாகம் செய்வதால் மட்டுமே. நாடே நல்ல மனிதன் என மதிக்கும் தம் தந்தையின் நற் பெயரும், புகழும் முக்கியம் என நினைத்திருந்தால் இதைப்போன்ற சம்பவங்களை அவரால் தவிர்த்திருக்க முடியும். இந்த நிகழ்வுகளால் என்றோ ஒரு நாள் நம் தலைவன் மனதில் சிறிய வலி ஏற்பட்டிருக்க கூடும் என்பதில் அச்சமில்லை. அந்த சிறிய வலி என்னுள்ளும் இன்று ஏற்பட்டதால் இந்த கடித்தை எழுதியிருக்கிறேன். பிழையிருந்தால் மன்னிக்கவும்.
வாழ்க ரஜினி! வாழ்க மணமக்கள்!
உண்மை ரசிகன்
ரவிசங்கர்
1 comment:
பத்திரிக்கைகளாலும், தொலைக்காட்சிகளாலும் தன் புகழுக்கு ஏற்படும் இக் களங்கத்த்தை போக்கவே மனப்பூர்வமான சம்மதம் தெரிவித்துவிட்டார்.இதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. ரஜினி நினைத்தால் இந்த திருமனத்தை தடுத்திருக்க முடியும். ரஜினியை மீறி ஐஸ்வர்யா எதுவும் செய்ய மாட்டார். இருந்தாலும் ரஜினி தன் மகளின் திருப்திக்காகாதான் சம்மதம் தெரிவித்திருப்பார். ரஜினி image/ego/status என்ற வட்டத்திற்குள் சிக்கியதில்லை. இந்த திருமனத்திற்கு ரஜினி எந்த மனநிலையில் ஆதரவு தெரிவித்தாரோ அதே மனநிலையில் மனமக்களை வாழ்த்துகிறேன்.
Post a Comment