3.11.04

ஒரு விளக்கம்

'ரசிகனின் குரல்', ரஜினி ரசிகர்களின் எண்ணங்களையும் அதற்கான எதிர்வினைகளையும் பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு இடம் மட்டுமே. www.rajinifans.com யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டு செய்திகளை வெளியிடுவதில்லை. எந்தவொரு தனிநபர் மீதோ அல்லது ஊடகத்தின் மீதோ ரஜினியின் ரசிகர்களுக்கு கோபமோ, வருத்தமோ இல்லை. ரஜினியைப் பற்றி தவறான செய்திகளையே தொடர்ந்து வெளியிட்டு வரும் சில பத்திரிக்கைகளை பற்றிய ரஜினி ரசிகர்களின் ஆதங்கத்தை மட்டுமே இங்கே வெளியிடுகிறோம். அவை யாவும் சம்பந்தப்பட்டவர்களின் சொந்தக் கருத்துக்களே. இனம், மொழி, மதம், ஜாதி ரீதியிலான பாகுபாடில்லாத குழுவாக ரஜினி ரசிகர்கள் செயல்பட்டு வருவதை www.rajinifans.com தொடர்ந்து உறுதி செய்கிறது.

ரஜினியை பற்றி மீடியாவில் வரும் செய்திகள் யாவும் யாகூ குழுமத்தில் விவாதிக்கப்படுகிறது. உறுதி செய்யப்பட்ட தகவல்களை மட்டுமே www.rajinifans.com இணையத்தளத்தில் வெளியிட்டு வருகிறோம். ரஜினி ரசிகர்கள் என்கிற வட்டத்தை தாண்டி ரஜினி என்கிற தனிநபரை பற்றிய அனைவரின் கருத்துக்களையும் நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

www.rajinifans.com ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்கிறது. கிண்டல், கேலி, ஏளனப்பேச்சுக்களை அல்ல!

ஜெ. ரஜினி ராம்கி
for www.rajinifans.com

3 comments:

மாயவரத்தான்... said...

* "இங்கே வெளியாகும் கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களின் சொந்தக்கருத்துகள்"

ஆனால் 'சந்திரமுகிக்காக...' என்ற தலைப்பின் கீழ் வெளியானதில் கடைசியில் 'on behalf of rajinifans.com' என்று இருக்கிறது. இது 'சிகரெட் குடிப்பது உடல் நல்த்துக்கு கேடானது' என்று அச்சிட்டு சிகரெட்டை விற்பது போலிருக்கிறது என்று கண்டிப்பாக நான் கூற மாட்டேன்.

* "rajinifans.com ஆக்கப்பூர்வமான விமரிசனங்களை வரவேற்கிறது. கிண்டல், கேலி, ஏளனப் பேச்சுக்களை அல்ல"

ஆனால் பத்திரிகைகளில் விமரிசனம் வந்தால் சம்பந்தப்பட்ட பத்திரிகையை கண்டபடிக்கு நாங்கள் விமரிசிப்போம் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று நான் கட்டாயம் குற்றம் சாட்ட மாட்டேன்.

* இனம்,மதம்,ஜாதி ரீதியிலான பாகுபாடில்லாத குழுவாக rajinifans.com செயல்பட்டு வருகிறது.

Very Good...'சந்திரமுகி...' தலைப்பின்கீழ் எனது கருத்தை வெளியிட்டதற்கு 'பெயர் வெளியிட துணிவில்லாமல்' anonymous என்ற முகமூடியில் நண்பரொருவர் ஜாதி பற்றி எழுப்பியுள்ள கருத்தை பார்க்கவும். (அது ரஜினி ரசிகரே அல்ல! என்று உட்டாலக்கடி எல்லாம் விட வேண்டாம்!) என்றெல்லாம் நான் பதிலுக்கு மடக்க மாட்டேன்.

* "யாருக்காகவும் சமாதானம் பேசுவது, தூது போவதெல்லாம் (மேல்மருவத்தூர்) பீடத்துக்குப் பிடிக்காத விஷயங்கள்' என்று ஜூ.வி. கட்டுரையின் இறுதியில் வெளியிட்டிருப்பதையெல்லாம் வசதியாக மறைத்து (மறந்து!?!) விட்டு எப்படி வேண்டுமானாலும் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதலாமா என்று கேள்வியெல்லாம் கேட்க மாட்டேன்.


* ரஜினியை எப்போதும் புகழ்ந்து எழுத மாட்டோம் என்று முடிவு எடுக்க வேண்டுமா என்று பத்திரிகைகளை கேட்கிறீர்களே?! பத்திரிகைகளில் எந்த விதமான செய்திகளும் வராமல், தராமல் படம் எடுத்து வெளியிட்டு விட முடியும் என்று முடிவு எடுக்க முடியுமா என்று பதிலுக்கு பைத்தியக்காரத்தனமாக கேட்க மாட்டேன் கவலை வேண்டாம்.

ராம்கி said...

Thanks Mayavarathaan. We will try to take care while posting the messages in near future. Hope you would extend your good support to us. Thank you.

Raja Ramadass said...

மாயவரத்தான் அவர்களே. உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி. ரஜினி ரசிகர்களின் கருத்துகளை தான் இங்கு பதிவு செய்கிறோம். அதில் எழுதியவரின் பெயரையும் பதிவு செய்கிறோம். அது அவருடைய தனிப்பட கருத்து.
Anonyms கருத்து தருபவர்கள் கோழைகள்,அவர்களுடைய கருத்துகளை எடுத்துக் கொள்ளுவது நம்க்கு அழகல்ல.
பத்திரிக்கைகள் ஒருவரைப் பற்றி தவறான செய்திகளை பரப்பும்போது எங்களுடைய உணர்வுகளை காட்டுவது தவறா?

விகடனில் காமெடி கிளப் என்று போட்டு ரஜினியை விமர்சிக்கிறீர்கள்.மக்களும் நகைச்சுவைக்கு தான் எடுத்து கொள்ளுவார்கள். நாங்களும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டது எடுத்துக் கொண்டு அதற்கு எல்லாம் நாஙகள் விமர்சிப்பதில்லை.ஆனால் ஜூ.விகடனில் கொடுக்கப்பட்டது செய்தி.அது தவறு என்ற காரணத்தால் தான் விமர்சிக்கிறோம். தவறான செய்தியை படித்து விட்டு அமைதியாக இருக்க சொல்கிறீர்களா.

'சிகரெட் குடிப்பது உடல் நல்த்துக்கு கேடானது' என்று அச்சிட்டு சிகரெட்டை விற்பது போலிருக்கிறது என்பது போல பீடதுக்கு சமாதாணம் செய்யும் பழக்கம் இல்லை என கடைசி 2 வரியில் போட்டுவிட்டு சந்திரமுகிக்காக சமாதாண படலம் என தலைப்பும் போட்டு பக்கம் பகமாக பொய் எழுதுவது மட்டும் நியாயமா.
R.Raja