20.10.04

அழிக்கப்பட்டான் அரக்கன்!

தமிழக அதிரடிபடையின் அதிரடி முயற்சியில் அரக்கன் வீரப்பன் அழிக்கப்பட்டான். வீரப்பனை சுட்டுக்கொன்ற அதிரடிப்படை வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவன் காட்டுக்குள் நடத்தி வந்த தர்பார் முடிவுக்கு வந்தது.

இவன் செய்த கொலைகள், கொள்ளைகள் கணக்கில் அடஙகாதவை. ஆனால் இப்படி பட்ட கொலைகாரனை தன் ஜாதியை (மரம் வெட்டுர ஜாதியா?) சேர்ந்தவன் என்ற காரணத்திற்காக வீரத்தமிழன் என்றார் Dr. ராமதாஸ். நக்கிரன் கோவாலு வீரப்பனின் கொ.ப.செ. அளவுக்கு புகழ்ந்து தள்ளினார். சன் டீவி இதிலும் தன் வேலையை காமித்து வீரப்பனையும் ஜெயலலிதாவை திட்ட வைத்து சாதனை புரிந்தது.

கொள்ளையனயும், கொலைகாரனையும் வீரனாக சித்தரித்தவர்களுக்கு மத்தியில் ரஜினி காந்த் அவர்கள் வீரப்பனை அழிக்கப்பட வேண்டிய அரக்கன் என்றார். வீரப்பனை வீரத்த்தமிழனாக சித்தரித்து வைத்திருந்த ராமதாஸால் இதை பொறுக்க முடியவில்லை. (இதனால் பாபா படத்திற்கு பிரச்சனைகளை ஏற்படுத்தியும் அதன் மூலம் ரஜினியால் வன்முறையின் ராஜா என் வாங்கி கட்டிக் கொண்டது யாவரும் அறிந்ததே).

ரஜினி சொன்னது போல் வீரப்பன் என்ற அரக்கன் அழிக்கப்பட்டான். இப்படி பட்ட கொலைகாரர்களை கைது செய்து அவனுக்கும் VIP போல் பாதுகாப்பு கொடுப்பதை விட அழிப்பதே மேல். குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பயமாக, பாடமாக அமையட்டும்

அவன் உயிரோடு இருக்கும் போது அவனை வீரனாகாவும், நல்லவனாகவும், தியாகியாகவும் சித்தரித்தவர்கள் இன்று அவன் கொல்லப்பட்ட பிறகு அழித்தது சரி என்றும்,கொலைகாரன் என்றும் ஒப்புக் கொண்டு அறிக்கை விடுகின்றனார். நல்ல வேளை எந்த கட்சியும் அரைக்கம்பத்தில் கொடியை பறக்க விட்டு அனுதாபம் தெரிவிக்க வில்லை.

என்ன வீரப்பனை கைது செய்து இருந்தால் இந்த ஆட்சியில் கருனாநிதியை பற்றியும் அடுத்து கருனாநிதி ஆட்சியைப் பிடித்தால் ஜெயலலிதாவை பற்றியும் அவன் அறிக்கை விடும் காமெடியை பார்த்திருக்கலாம். MLA அல்லது MP தேர்தலில் வேட்பாளாராகி ஓட்டு கேட்க வரும் காட்சியையும் பார்க்க முடியாமல் போய்விட்டது.

Raja Ramadass
http://parattai.blogspot.com/

4 comments:

donotspam said...

why repeat the same post twice?

kirukan said...

//நக்கிரன் கோவாலு வீரப்பனின் கொ.ப.செ. அளவுக்கு புகழ்ந்து தள்ளினார்.....//

நீங்க இந்தப் பதிவில என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க..

Raja Ramadass said...

இன்று வீரப்பனை கொன்ற பிறகு எல்லாரும் வீரப்பன் அழித்தது சரி என அறிக்கை விடுகிறார்கள். ஆனால் முன்பே அழிக்கப்பட வேண்டியவன் அரக்கன் என்று கூறியவர் ரஜினி.

கோபாலு பார்த்த வேலை துட்டுக்காக.
ராமதாஸ் பார்த்த வேலை ஓட்டுக்காக.
நாங்க பாக்குற வேலை எதுக்குனு ஆண்டவனுக்கு தெரியும்.

Anonymous said...

Good this idiot was killed or else our star would have been kidnapped. Look at the news
http://www.dinakaran.com/daily/2004/Oct/25/flash/flasnews13.html