9.10.04

அரசியலில் போட்டி

இப்போது, நடக்கும் அரசியல் எண்டெர்டெயின்மெண்டை, மக்கள் தினம்தோறும்
வேடிக்கையாக பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் வரிப்பணத்திலிருந்து, செலவு செய்து, இந்த தேர்தல் கேளிக்கூத்து
நடந்து கொண்டு இருக்கிறது.

நாளைய பிரதமர், நாட்டின் தலைமை யார் என்று யாருக்கும் தெரியாது.

வேடிக்கையான கூட்டணிகள். தேர்தலுக்குப் பிறகு, நடக்கும் வேடிக்கை
இன்னும் சுவராசியமாக இருக்கும்.

ஆக, தற்போது உள்ள அரசியல் அமைப்பு, மிகவும் பழமையானது.
அது, அந்தக்கால சுதந்திரப் போராட்ட தியாகிகளை, மனதில் வைத்து
உருவாக்கப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்பு, கான்ஸ்டிட்யூஷன், கடவுள் நமக்கு அளித்த
பகவத் கீதையோ, பத்துக் கட்டளையோ அல்ல.

ஆக, இந்திய அரசியல் அமைப்பை மாற்றி அமைத்தால், தற்போது நடக்கும்
வேடிக்கை அரசியலை நிறுத்தி விடலாம்.

ஆக, மேடை கோணல்தான். அதனால், நல்லவர்கள் அரசியலில்
இறங்க யோசிக்கிறார்கள். மேடையை சரி செய்ய வேண்டும் என்றால்,
அது டெல்லியில் செய்ய வேண்டிய காரியம்.

எப்போதுமே, தமிழ்நாடு, அரசியலில், டெல்லியைவிட தெளிவாக இருக்கும்.

டெல்லியில், கோமாளிகள் மிக அதிகம்.

ஆக, அரசியல் அமைப்பை மாத்தி அமைப்பது என்பது, இப்போது
நடக்ககூடிய காரியம் அல்ல.

அலை, என்னைக்கு ஓய்வது. நாம் எப்பொழுது குளிப்பது.

கோணல் மேடையிலேயே, எப்படி திறமையாக, நல்ல அரசியலை
நடத்துவது என்று பார்ப்போம்.

கமல், ரஜினி...

இது, மலேசியா ஸ்டார் நைட்டில், ரசிகர்கள் கேட்ட கேள்வி.

ஏன் சார், நீங்க இரண்டு பேரும்,
ஒன்னா சேர்ந்து நடிக்க மாட்டேங்கிறீங்க?

கமல், ரஜினியைப் பார்த்து, "என்ன, சொல்லிடலாமா?"
என்று கேட்டுவிட்டு, சொல்கிறார்.

இங்கேதாங்க அந்த முடிவு எடுத்தோம். இரண்டு பேரும்,
ஒரே படத்தில் சேர்ந்து நடித்தால், இருவரது வளர்சியும் பாதிக்கப்படும்.

இருவரும் தனித்தனியாக படங்கள் செய்தால், ரஜினிக்கும் கமலுக்கும்
ஒரு போட்டி உருவாகும். இருவரும் வளரமுடியும். மக்களுக்கும்
அருசுவை உணவு அருந்தியது போல் இருக்கும்.

என்ன அருமையான, தெளிவான முடிவு.

பீட்டர் டெரக்கர், அதைத்தான் சொல்கிறார். ஒரு
நிறுவனத்துக்குள்ளேயே, போட்டியை வளர்த்து விடுங்கள்.

ஒன்றை ஒன்று அழிக்கும் என்ற பயம் வேண்டாம். இரண்டும்
செழிப்பாக வளரும்.

டொயோட்டா நிறுவனம், லெக்சஸ் நிறுவனமும், ஒரே மரத்தின்
இரு கிளைகள். இரண்டும் செழிப்பாக வளர்கிறது.

கமல், ரஜினிக்கு முன்னால், சிவாஜி, எம்.ஜி.யார் ரசிகர்கள்
இருந்தார்கள். அவர்கள், ஒருத்தர் போஸ்டர்மேல், அடுத்தவர்
சாணி அடித்து, ஆரோக்கியமற்ற ரசிகர் கூட்டத்தை
வளர்த்து விட்டனர்.

கமல் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் நல்ல ஆரோக்கியமான
செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

கமலும், ரஜினியும் அன்று, மலேசியாவில் எடுத்த முடிவை,
இப்பொழுது அரசியலில் எடுத்தால்...

மற்ற அனைத்து அரசியல்வாதிகளும், சினிமாவில் சான்ஸ் கேட்டு
ஓடிவிடுவார்கள்.

ஆபிரகாம் லிங்கன், மக்களின் வசதி கருதி, தன்னை எதிர்த்து
போட்டியிட்டவரை அழைத்துக் கொண்டு, ஒன்றாக பயணம் செய்து,
மக்கள் முன்னிலையில், இருவரும் விவாதம் செய்தார்கள்.

அதுபோல, கமல் ரஜினி, இருவரும் எல்லா தொலைக்காட்சிகளிலும்
தோன்றி, மக்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னால்...

மக்களும், இருவரில் ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால், கமல், தமிழ் சினிமாவை, மற்ற உலகத்திற்க்கு,
எடுத்து செல்லும் நாட்கள், அதிகமில்லை.

அது ஒரு இன்ச் தூரம் தான். கமல், உலக மக்கள், தமிழ் திரைப்படத்தை
பார்த்து, ரசிக்க வைத்து விடுவார்.

ஆக, அவர் திரையில், தன் பணியை தொடரட்டும்.

நம்ம ரஜினி...

Courtesy : www.muthamil.com

No comments: