13.12.04

பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

சூப்பர் ஸ்டாரின் 55வது பிறந்தநாளை முன்னிட்டு www.rajinifans.com - ரஜினி ரசிகர்களுக்கான இணையத்தளம் சார்பில் இலவச ரத்ததான முகாம் சென்னையில் நடைபெற்றது. முகாமில் சென்னையை சேர்ந்த 46 ரஜினி ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவர் தளபதி சத்தியநாராயணா ரத்ததான முகாமை பார்வையிட்டு விழாவை நிறைவு செய்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை www.rajinifans.com இணையத்தள நிர்வாகிகளும் ஸ்ரீராமசந்தந்திரா மெடிக்கல் மிஷன் ரத்ததான கிளை அங்கத்தினர்களும் இணைந்து செய்திருந்தனர்.சூப்பர் ஸ்டாரின் 55வது பிறந்த நாளை ஜப்பானிய ரசிகர்களும் நேற்று கொண்டாடினர். ஓசாகா நகரத்தில் குழுமிய ஜப்பானிய ரசிகர்கள் ரஜினிகாந்த் நலம் பெற சர்வமதப் பிரார்த்தனையும் அதைத் தொடர்ந்து கேளிக்கை விருந்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகத்தில் ரஜினி ரசிகர்கள் ரத்ததானம் செய்ததைத் தொடர்ந்து ஜப்பானிலும் ரஜினி ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர்.
1 comment:

மாயவரத்தான்... said...

Nice & good thing by rajinifans.com...Keep it up!!!