17.12.04

‘பாபா’ ஆராய்ச்சி

‘லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாகதான் வருவேன்’ என்று ரஜினி தன்னைப்பற்றி கூறினாலும், அவர் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் லேட்டஸ்டாகதான் இருக்கின்றன.

லயோலா கல்லூரியின் ‘விஷ¨வல் கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்ட்’டின் ‘Factors influencing Film viewing' என்ற ஆராய்ச்சியும் அப்படிதான். ரஜினியின் ‘பாபா’ படத்தை அடிப்படையாக வைத்து இந்த ஆராய்ச்சியை செய்து முடித்திருக்கிறார்கள். பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் நாற்பது விஷ¨வல் கம்யூனிகேஷன் மாணவர்கள் அடங்கிய குழு பாபா படம் பற்றிய விஷயங்கள், ரஜினியின் அரசியல் பிரவேசம், ஆன்மிக வாழ்க்கை என எல்லாவற்றையும் சர்வே செய்திருக்கிறார்கள். இதற்கென சென்னையில் எல்லா பகுதிகளையும் கவர் செய்யும்விதமாக பாபா திரையிடப்பட்டிருக்கும் ஐந்து திரையரங்குகளில் இந்த சர்வேயை செய்திருக்கிறார்கள். பாபா படம் பார்த்த இரண்டாயிரத்து ஐநூறு பேர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி பற்றிய கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவர்கள், மாணவிகள் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார்கள்.

‘‘விஷ¨வல் கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்ட் என்பதால் நாங்க பல ரிசர்ச் பண்றோம். அந்த வகையிலதான்ஆராய்ச்சியை பண்ணியிருக்கிறோம். இந்த நேரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பாபா படத்தை ஆராய்ச்சி செய்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம்’’ என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியரும், ஆராய்ச்சி குழு தலைவருமான ராஜநாயகம்.

கல்லூரி மாணவர்கள், மாணவிகள் என்பதால் கருத்தரங்கில் ரஜினி ஸ்டைலில் இளமைத்துள்ளல் அதிகமாகவே இருந்தது. சாம்பிளுக்கு, ‘அசந்தால் பேசுறது இவங்க பாலிஸி. அசராமல் பேசுறது என் பாலிஸி’ என்று ஒரு இளைஞர். பெண்களைப் பார்த்து சொல்ல செம அப்ளாஸ். இளைய தலைமுறை கலகலப்பாக இருந்தாலும் ரஜினி பற்றிய ஆய்வு என்பதால் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றதை உணர்ந்துகொள்ள முடிந்தது.

ஓ.கே. பாபா படம் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் என்னதான் சொல்கின்றன? பாபா படம் பார்க்கும்போது ஆடியன்ஸின் செய்கைகளை கூர்ந்து கவனித்தபோது பல புதிய விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன. ரஜினி என்ற சூப்பர்ஸ்டார் செய்யும் எந்த விஷயங்களும் நம்பமுடியாதவைகளாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மக்களிடம் சின்னச்சின்ன மாற்றங்கள். ஒரு பாட்டில் சாராயத்தை ஒரே மூச்சில் ரஜினி குடிப்பதைப் பற்றி மந்திரி மகனுடன் மோதும் வாலிபால் சண்டைக்காட்சியில் உள்ள அதிகப்படியான கிராஃபிக்ஸ் என சில காட்சிகளை சூப்பர் ஸ்டாரே செய்தாலும் அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளாமல் தங்களது கருத்துகளை ஆடியன்ஸ் முணுமுணுத்திருக்கிறார்கள். ரஜினி விஷயத்தில் ஏற்பட்டிராத புதுமாற்றம் இது.

இது ஒரு பக்கமிருந்தாலும் ரஜினியின் மவுசு இன்னும் குறையவில்லை. உதாரணமாக பாபா படத்தில் ரஜினி நடிக்கமாலிருந்தால் இந்த படத்தை நீங்கள் பார்க்க வந்திருப்பீர்களா என்று ஆடியன்ஸிடம் கேட்டபோது அறுபத்தைந்து சதவீதம் பேர் ‘இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். வெறும் பன்னிரெண்டு சதவீதத்தினர் மட்டுமே ரஜினி நடிக்காவிட்டாலும் பாபா படம் பார்த்திருப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.

‘பாபா’ படம் பற்றிய ஆராய்ச்சிதான் என்றாலும், ரஜினி என்பதால் அவருடைய பல பரிமாணங்களைப் பற்றி கேள்விகளும், அதுசம்பந்தமாக ரசிகர்கள், பொதுமக்களின் எண்ணங்களும், கருத்துகளையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

‘பாபா நன்றாக ஓடினால் இதுதான் கடைசிப் படம்’ என்று ரஜினி சொன்னதால், அவருடைய சினிமா வாழ்க்கை பற்றி ரசிகர்கள் தங்களது கருத்துகளை இந்த ஆராய்ச்சியின் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள். ரஜினி தொடர்ந்து நடிக்க வேண்டுமென்பதே எண்பத்தொரு சதவீத பேரின் கருத்து. ஆசை, இந்த மெஜாரிட்டியில் எழுபத்திநான்கு சதவீதம் ரஜினி நடிகராக தொடரவேண்டும் என்கிறார்கள். மீதமுள்ள ஏழு சதவீதம் நடிகராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஸ்டோரி டைரக்டராக சினிமா வாழ்க்கையை தொடரவேண்டுமென விரும்புகிறார்கள்.

ரஜினி தொடர்ந்து சினிமாவில் நடித்தாலும், அவரை ரசிகர்கள் பழைய ரஜினியை அதாவது பாடஷா போலவோ அல்லது படையப்பா போன்றோ திரையில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. முக்கியமாக இது ரஜினியின் கவனத்திற்கு ரஜினியை ‘பாட்ஷா’ போன்ற ரோலில் நடிக்க வற்புறுத்தும் ரசிகர்கள் மட்டும் அறுபத்தொரு சதவீதத்தினர் இருக்கிறார்கள். படையப்பா போன்ற ரோலை விரும்பினாலும் அவர்கள் பதினைந்து சதவீதம் மட்டும்தான்.

இப்படி தங்களது சூப்பர்ஸ்டாரை ‘பாட்ஷா’ போல பார்க் விரும்பும் கூட்டம் அதிகமாக இருந்தாலும், ரஜினி டி.வி.க்கு வருவதை ஆதரிக்கும் கூட்டமும் இருக்கிறது. இருபத்தாறு சதவீதத்தினர் ரஜினி டிவிக்கு வந்தால் ரஜினி என்ன செய்ய முடியும்? என்று கேள்வி எழலால் _ அதற்கும் பதினாறு சதவீதத்தினர் ஒரு ஐடியாவை தங்களது கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது அமிதாப்பச்சனைபோல ஏதாவது ஒரு நிகழ்ச்சியை வழங்கலாம் என்பதுதான் அவர்களின் ஐடியா.

அடிக்கடி இமயமலைக்கு போகும் ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் இன்னும் தொடர்ந்தாலும், ரஜினியின் பிரவேசத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேநேரம் ரஜினியின் ஆன்மிகவாதி இமேஜிக்கு அதிக வரவேற்பில்லை. வெறும் இரண்டு சதவீதத்தினர் மட்டுமே ரஜினி நடிப்பதை விட்டு ஆன்மிகப் பாதையில் செல்வதை விரும்புவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.

ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்புகிறவர்களில் நாற்பத்தொரு சதவீதத்தினர் அவர் தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்குள் வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். பத்தொன்பது சதவீதத்தினர் தொடர்ந்து நடித்தபடியே ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு தரலாம் என்றும் பன்னிரெண்டு சதவீதத்தினர் ஏதாவது கட்சியிலும் சேரலாம் என்கிறார்கள். மொத்தத்தில் ரஜினி தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதை ஐம்பத்தைந்து சதவீத ரசிகர்கள் ஆதரிக்கின்றனர். இதையே பொதுமக்களில் முப்பத்தொன்பது சதவீத பேர் ஆதரிக்கிறார்கள்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய விஷயத்தில் மிகவும் சுவாரஸ்யமானது. பாபா படம் மூலம் அவருக்கு ஆதரவு அதிகரித்ததுதான். பாபா படம் பார்த்தபின்பு மேலும் ஆறு சதவீத பேர் ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரித்து இருக்கிறார்கள். இப்படி பல விஷயங்களில் பாபா படம் முக்கியமான ரோல் எடுத்து கொண்டாலும், படம் பார்த்த ரஜினி ரசிகர்களில் நாற்பத்தேழு சதவீத ரசிகர்களை மட்டுமே திருப்தியடைய செய்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பாபா’ ரஜினி பற்றிய எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுடன் வெளியாயிருக்கு ஆவரேஜ் படம். அதுவும் ரஜினி ‘காந்தம்’ ஈர்ப்பதால் மட்டுமே.

ரஜினி இதுவரை நூற்றைம்பது படங்களில் நடித்திருந்தாலும், ஒன்பது படங்கள் மட்டும் அதிகமுறை விரும்பிப் பார்த்த படங்களாக வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முதலிடம் பாட்ஷாவுக்கும் இப்படம் மிகவும் அதிகமுறை, மிக விருப்பமுடன் பார்க்கப்பட்ட படமாக தெரியவந்திருக்கிறது. இது தவிர தளபதி, தனிக்காட்டு ராஜா, ராஜாதிராஜா, நல்லவனுக்கு நல்லவன், ஆறிலிருந்து அறுபதுவரை, படிக்காதவன், அண்ணாமலை, முள்ளும்மலரும் போன்ற படங்கள்தான் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன.

ரிபிட் ஆடியன்ஸ் வரகாரணம்

ரஜினிக்காக _ 49%
நண்பர்களுக்காக _ 26%
படத்திற்காக _ 20%

பாபா படம் பற்றிய கருத்து

திருப்தி _ 33%
டைம்பாஸ் _ 41%
(மெஜாரிட்டி)
திருப்தி இல்லை _ 26%

பாபா படம் எந்த வகை

ஆன்மிக, மேஜிக்கல் படம் _ 55%
அரசியல் படம் _ 27%
மீதியுள்ளவர்கள் குழந்தைகளுக்கான படம் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

பாபா இமேஜ் ரஜினிக்கு ஓ.கே.

ரஜினி ரசிகர்கள் _ 47%
பொதுமக்கள் _ 32%

Courtesy : Kumudam Cinema

3 comments:

Raja said...

லயோலா கல்லுரி மாணவர்களின் அலசல் அசத்தல். இது தான் ரஜினி என கூற வைத்து விட்டது. ரவிக்குமார் சொன்னது போல் பாபா படம் லாபத்தில் நஷ்டம் அவ்வளவு தான்.

இது எல்லாம் ராமதாஸ்க்கு தெரிந்தால் கல்லூரியில் தம் அடிக்கிறார்கள் என காரணம் சொல்லி கல்லூரியில் வன்முறையை உருவாக்கப் போகிறார் வன்முறை ராஜா.

பொதுமககள் அதரவு ரஜினிக்கு எப்பொதும் உண்டு என்பதில் எப்பொழுதும் சந்தேகம் இல்லை.

Anonymous said...

//பாபா படம் பார்த்த இரண்டாயிரத்து ஐநூறு பேர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள்//

It means they have surveyed EVERY ONE who seen this movie! Amazing.

ROSAVASANTH said...

பிழைக்க இப்படி எல்லாம் கூட வழி இருக்கா?