8.9.04

மரியாதை குறையாமல் இருந்தாலே எங்களுக்கு போதும்

வணக்கம்

பல கோடி மக்களை தங்களுடைய கண்ணிலிருந்து வரும் காந்தம் தங்களை பற்றி நான் தெரிந்துகொள்ள ஆரம்பித்தது 1995 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த பொழுது தான்,அதாவது முத்து படம் வெளியான நேரத்தில்; ஏனென்றால் அந்த நேரத்தில் தான், அரசியல் வல்லுனர்களின் கண் உங்கள் மேல் திரும்பியது.அதுவரை மற்ற நடிகர்களை போல் தான் தங்கள் படங்களையும் பார்த்திருக்கிறேன்.அதன் பிறகு தங்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.தங்களின் ஆரம்ப கால திரைப்பட வாழ்க்கையை பற்றி சிலர் கூறினார்கள்.தவறு செய்வது மனித இயல்பு, செய்த தவறையே திரும்ப திரும்ப செய்பவன் மிருகம், அதை திருத்தி கொண்டு வாழ்பவன் தான் மனிதன்.அந்த வகையில் நீங்கள் ஒரு மாமனிதர் என்பதை அறிந்தேன். ஆனால் நான் தங்களின் ஆரம்ப கால கட்ட திரைப்பட வாழ்க்கையை பற்றி கவலைபடவில்லை.ஏனென்றால் முன்பு நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதை விட இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள் என்பதை தான் அறிய விரும்பினேன். “நதி மூலமும் ரிசி மூலமும் பார்க்க கூடாது” என்பார்கள் நான் உங்களை ரிசியாகவே பார்க்கிறேன்.

தங்களுடைய அடுத்த திரைப்படம்; எப்போது வரும் எப்போது வரும் (ஜக்குபாய்) என்று இப்போதும் ஆவலுடன் காத்திருப்போர் கோடிக்கணக்கானோர்.1995 ஆம் ஆண்டு முத்து படம் வெளியான நேரத்தில் நம் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி பலருக்கு எழுந்தது. அந்த கேள்விக்கு பெரும்பாலானோர் அளித்த பதில் சூப்பர் ஸ்டார்(இதே வாய்ப்பு முன்பு ஒரு முறை மக்கள் திலகத்துக்கு கிடைத்தது. அதை அவர் தக்க வைத்து கொண்டார்). ஆனால் தங்களின் அறிக்கை பல கோடிக்கணக்கான ரசிகர்களையும், மக்களையும் ஏமாற்றம் அடைய செய்தது. “அரசியல் ஒரு சாக்கடை” புது கட்சி ஆரம்பித்தால் புது இரத்தம் பாய்ச்ச முடியாது, அதே பழைய ஊழல் நிறைந்த ஆட்சி தான் நடத்த முடியும.; ஆதலால் புது கட்சி ஆரம்பிக்க விரும்பவில்லை என்று தாங்கள் அன்று அறிக்கை விடுத்தீர்கள். நீங்கள் அன்று அவ்வாறு அறிக்கை விடுத்ததற்கு காரணம் இருந்தது, ஏனென்றால் அன்றைய அரசியல் வாதிகளில் பலர் நீங்கள் புது கட்சி ஆரம்பித்தால் பஸ்சில் சீட் பிடிக்க துண்டு போடுவதை போல் தங்கள் கட்சியில் தாவுவதற்கும் தயாராக இருந்தார்கள்.

அன்றைய சூழ்நிலையில் தாங்கள் புது கட்சி ஆரம்பிக்காதது எங்களுக்கு சிறு வருத்தமே இருந்தாலும், ஒரு வேளை நீங்கள் புது கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்று(நிச்சயமாக வெற்றி பெற்றிருப்பீர்கள்)முதல்வர் ஆகியிருப்பீர்கள். நீங்கள் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது.உங்களது கட்சியில் உள்ள ஏதாவது அமைச்சர்கள் தவறு செய்தால் அது நிச்சயமாக உங்களை பாதித்திருக்கும். யார் ஆட்சி நடத்தினா என்ன யார் வந்தாலும் “அதே பழைய குருடி கதவை திற” என்ற நிலைமை தான் என்று மக்கள் உங்களை தவறாக பேசி இருக்க கூடும். நீங்கள் முதல்வர் ஆகாவிட்டாலும் பரவாயில்லை உங்களை பற்றி மக்கள் வைத்திருக்கும் அந்த மரியாதை குறையாமல் இருந்தாலே எங்களுக்கு போதும்.இருந்தாலும் ஒரு வேளை உங்களால் தமிழகத்தை பொன்வளமாக மாற்றுவதற்குரிய வாய்ப்பு 1996 ஆம் ஆண்டு கிடைத்தும் அதை நழுவ விட்டீர்களோ என்ற தாகமும் உள்ளது.
இப்படிக்கு உங்கள் ரசிகன்
மணிமுத்தாறு ப.ராதாகிருஷ்ணன்.

2 comments:

Badri said...

Dear friend: You need to remove "justify" from the template html code

div align="justify"

align=justify does not work well with Unicode Tamil in Firefox browsers (or other Mozilla family browsers).

As a simple working model, you could use 'div align="left"' or if you have smart html folks to help rework the template appropriately.

Nattu said...

Good to know that you are reading our blog regularly mr.badri.