22.6.04

நடக்கும் என்பார் நடக்காது ?!

தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் - ஏ. வைத்தியநாதன்


ஏ. வைத்தியநாதன் (1931) சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்புப் பேராசிரியராக விளங்குகிறார். அமெரிக்க கார்னெல் பல்கலைக்கழகத்தில் பிஎச். டி. பட்டம் பெற்றவர். உலக வங்கயில் பணியாற்றியதோடு, மையத் திட்டக்குழுவிலும் உறுப்பினராகச் செயல்பட்டிருக்கிறார். நீர் மேலாண்மையில் உலக அளவில் மதிகப்படும் அறிஞர்.

நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து நடைமுறை சார்ந்த விசாரணை

நதிகள் இணைப்புத் திட்டம் என்பது புதிதல்ல. விஸ்வேஸ்வரய்யாதான் கங்கை -காவிரி இணைப்பைப் பற்றி முதýல் பேசியதாகச் சொல்வார்கள். கே. எல். ராவ் மத்திய அமைச்சராக இருந்தபோது இந்தத் திட்டத்தைப் பரிந்துரைத்திருக்கிறார். அதன் பிறகு தாஸ்தூர் நாட்டின் பெரிய நதிகளை இணைக்கும் மாலைக் கால்வாய்த் (எஹழ்ப்ஹய்க் இஹய்ங்ப்) திட்டத்தை முன்வைத்தார். சில நதிகளில் தண்ணீர் அபரிமிதமாகப் பாய்கிறது; அது வீணாகக் கடýல் கலப்பதற்கு பதில் தென்பக்கமாகத் திருப்பிவிட்டால் நீர்வரத்து குறைவாக இருக்கும் நதிகளும் அந்நதிகள் பாயும் பகுதிகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட திட்டம் இது. இதற்குத் தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் நிறைய விமர் சனங்கள் வந்தன. வழியில் உள்ள மலை, மடு, ஆகியவற்றையெல்லாம் தாண்டி வர வேண்டும் என்றால் அதில் நிறையப் பிரச்சினைகள் உள்ளன; செலவும் அதிகம் ஆகும் என்று விமர்சனம் வந்தது. திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

அடுத்தடுத்துப் பஞ்சம் வந்தபோது மறுபடியும் இது பற்றிய பேச்சு எழுந்தது. அரசாங்கம் தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்கியது. இந்த ஆணையம் முப்பது ஆண்டுகளாக ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறது.

இப்போது செயல்படுத்தவிருப்பதாகச் சொல்லப்படும் திட்டமே இந்த ஆய்விýருந்து உருவானதுதான் என்றும் சொல்கிறார்கள். சமீபகாலம் வரை நதிகள் இணைப்புத் திட்டத்தை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் வழக்கறிஞர் ரஞ்சித்குமார் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தான் இவ்விஷயத்தில் தீவிரமான கவனத்தை எழுப்பியது. எல்லோருக்கும் குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும்; அது மக்களின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நாட்டின் பெரிய நதிகளை இணைக்கும் திட்டம் ஒன்றை உருவாக்கி, 2015இற்குள் முடிக்குமாறு மத்திய அரசுக்கு அது உத்தரவிட்டது. அரசு நீதிமன்ற உத்தரவின்படி செயல் படும் என்று அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அறிவித்தார். சுரேஷ் பிரபுவின் தலைமையில் இதற்காகச் சிறப்புப் பணிக்குழு ஒன்றை உருவாக்கினார்.

இந்திய நதிகளை இணைப்பது என்று சொல்லும்போது கங்கை - காவிரி இணைப்பு என்ற கருத்துதான் மேலெழும்பி வருகிறது. ஆனால் பங்களாதேஷ், பூட்டான், சீனா, நேபாளம் முதலான நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளாமல் கங்கை, பிரம்மபுத்திரா நதிகளில் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. கங்கை, பிரம்மபுத்திராவில் கைவைப்பது சர்வதேச விவகாரம். எனவே மகாநதியிýருந்து தொடங்கித் தெற்கே உள்ள நதிகளை இணைப்பது பற்றித்தான் தீவிரமாகப் பேசி வருகிறார்கள். தேசிய நதிகள் இணைப்பு என்பது நடைமுறையில் தென்னிந்திய நதிகள் இணைப்புதான்.

இந்தத் திட்டத்திற்குத் தேவையான ஆய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது இதன் அடிப்படையான கோளாறுகளில் ஒன்று. சமீபகாலம்வரை மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்றுதான் கூறிவந்தார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவு வந்ததும் திட்டம் தொடங்கப்பட்டுவிடும் என்று அறிவித்துவிட்டார்கள். அதற்குள் ஆய்வை எப்படி முடித்தார்கள் என்று தெரியவில்லை.

மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது நதிகளிýருந்து எக்கச்சக்கமான அளவு தண்ணீர் வீணாகக் கடýல் கலக்கிறது என்றும் இந்தத் தண்ணீரைப் பற்றாக்குறை நிலவும் இடங்களுக்குத் திருப்பிவிட்டால் எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கும் என்றும் பரவலான ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்தத் திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. இத்திட்டம் தேசிய ஒருமைப் பாட்டை வளர்க்கவும் நாட்டின் இயற்கையான நீர்வளத்தை அனைவரும் நியாயமாகப் பங்கிட்டுக்கொள்ளவும் வழிவகுக்கும் என்றும் நம்பப்படுகிறது. இவையெல்லாமே மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட அனுமானங்கள். நதிகளை இணைப்பதன் மூலம் பாசனம் பெருகுமா அல்லது மக்களிடையே தகராறுகள் அதிகரிக்குமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது பற்றிப் பரிசீýக்கும் முன்பு இது நடைமுறை சாத்தியமானதுதானா விரும்பத்தக்கதுதானா தாக்குப் பிடிக்குமா என்பன போன்ற முக்கியமான கேள்விகளுக்குப் பதில் கண்டாக வேண்டும்.

தண்ணீரை ஒரு நதியிýருந்து இன்னொரு நதிக்குள் கொண்டு வர முடியுமா என்ற கேள்வி இருக்கட்டும். அப்படியே கொண்டுவந்தாலும் அதை எப்படிச் சேமித்துவைக்க முடியும்? சேமித்துவைக்க வேண்டுமென்றால் பெரிய பெரிய நீர்த்தேக்கங்களைக் கட்ட வேண்டும். நிலநடுக்கம் ஏற்பட்டால் என்ன செய்வது? 8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் வந்தால்கூடப் பெருத்த அழிவு ஏற்படும். வருமா என்று கேட்டால், கட்டாயம் வரும்; ஆனால் எப்போது வரும் என்று சொல்ல முடியாது என்கிறார்கள். நிலநடுக்கம் வந்து அவ்வளவு பெரிய அணை உடைந்தால் என்ன ஆகும்? இதைச் சமாளிக்கத் தொழில்நுட்பம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். பாதுகாப்பான உயரத்தில் அணை கட்ட வேண்டும் என்கிறார்கள். சரி, இதையெல்லாம் எந்த அளவு நம்ப முடியும்? இதற்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகும்? இதுபற்றியெல்லாம் ஆராய்ந்து பார்த்தார்களா?

இரண்டு மூன்று விஷயங்களை முதýலேயே தெரிந்துகொள்ள வேண்டும். ஒன்று இது அரசின் ஐந்தாண்டுத் திட்டத்தில் இல்லவேயில்லை. சிறப்புப் பணிக்குழுவை நியமித்து இவ்வளவு பெரிய திட்டத் தைச் செய் என்று சொன்னால் எப்படிச் செய்ய முடியும்? இதில் எவ்வளவு கட்டங்கள் உள்ளன? எவ்வளவு பெரிய திட்டம்? சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் ஒப்புக்கொள்ள வேண்டாமா? இதற்கான செயல் திட்டம் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா? கிணற்றிலோ அணையிலோ தேக்கி வைத்துத்தான் குடிநீர் வழங்க முடியும். மொத்த நீரில் 5 சதவீதம்தான் வீட்டு உபயோகத்திற்கானது. பாசனத்திற்கு 80 சதவீதமும் தொழில்துறைக்கு 15 சதவீதமும் செலவாகப்போகிறது. குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இவ்வளவு நீரை அங்கேயிருந்து ஏன் கொண்டு வர வேண்டும்?

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பார்க் கலாம். அரசு வெளியிட்டிருக்கும் வரைபடத்தைப் பார்த்தால், மகாநதியிýருந்து கோதாவரி, கோதாவரியிýருந்து கிருஷ்ணா, அதிýருந்து பெண்ணாறு, பெண்ணாற்றிýருந்து பாலாறு இப்படி வருகிறது தண்ணீர். நான் முதýலேயே சொன்னபடி கங்கை -காவிரி இணைப்பெல்லாம் ஐதீகம் மாதிரிதான். மிகச் சிறிய அளவில் கங்கையிýருந்தும் பிரம்மபுத்திராவிýருந்தும் மகாநதிக்குத் தண்ணீர் வருவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. மற்றபடி இப்போதைய திட்டம் தென்னக நதிகள் தொடர்பானதுதான். சில நதிப்படுகைகளில் உபரி நீர் இருக்கிறது; அதைப் பற்றாக்குறை நிலவும் பகுதிகளுக்குத் திருப்பிவிட்டால் நெருக்கடி தீர்ந்துவிடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் இந்த யோசனை முன்வைக்கப்படுகிறது. உபரி நீரை எந்த அடிப்படையில் யார் தீர்மானிப்பது? வெள்ளப்பெருக்கின்போது இருக்கும் நீரின் அளவை உபரியை அளப்பதற்கான அளவுகோலாகக் கொள்வது தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். வெள்ளம் வரும் பகுதிகள் உபரி நீர் கொண்டவை என்ற கருத்தும் தவறு. மழைக் காலத்தில் வெள்ளம் பெருக்கெடுக்கும் பகுதிகள் கோடைக்காலத்தில் நீரின்றித் தவிக்கக்கூடும். உபரிநீர் குறித்த தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம் போன்ற மத்திய அமைப்புகளின் மதிப்பீட்டினை மாநில அரசுகள் வன்மையாக மறுக்கின்றன. நான் மத்தியத் திட்டக்குழுவில் இருந்தபோது பார்த்திருக்கிறேன். தங்களுக்கு உபரி நீர் இருப்பதாக எந்த மாநிலமும் ஒப்புக்கொள்ளாது.

முதýல் ஒவ்வொரு நதிப்படுகையிலும் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். நிலத்தடி நீர், மேற்பரப்பில் ஓடும் நீர் ஆகிய இரண்டு விதமான இருப்புகளில் ஒவ்வொரு ஆறுக்கும் நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர் எவ்வளவு என்பதைக் கணக்கிட ஒரு வழிமுறை இருக்கிறது. அப்பகுதியில் பொழியும் சராசரி மழை, நதிகளில் சென்று கலக்கும் மழையின் அளவு, வெள்ளமாக வழிந்தோடும் நீரின் அளவு ஆகியவற்றையெல்லாம் கணக்கிட்டு, மொத்தம் எவ்வளவு உபரி இருக்கிறது என்று கணக்கிடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் மழை ஒரே மாதிரி இருப்பதில்லை. எனவே, சராசரியாக எவ்வளவு நீர் வருகிறது என்று கணக்கிடப்படும். இதில் இரண்டாண்டுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் கணக்கைச் சராசரி (ம்ங்ஹய்) மழை அளவு என்றும் நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் எந்த அளவு நீர் கட்டாயம் கிடைக்கும் என்ற அடிப்படையில் போடும் கணக்கை "75 சதவீதம் நம்பக்கூடிய' அளவு என்றும் (75% க்ங்ல்ங்ய்க்ஹக்ஷண்ப்ண்ற்ஹ்) சொல்வார்கள். இரண்டாண்டுச் சராசரியைவிட, "75 சதவீதம் நம்பக்கூடிய' அளவு குறைவாக இருக்கும். உபரியைக் கணக்கிடும்போது குறிப்பிட்ட ஓர் ஆண்டின் மழைப் பொழிவையோ இரண்டாண்டுகளுக்கான சராசரி மழைப் பொழிவையோ கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், "75 சதவீதம் நம்பக்கூடிய' அளவைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். ஏனென்றால், இந்த ஆண்டு பெய்யும் மழை அடுத்தடுத்த ஆண்டுகளில் பெய்யாமல் போகலாம். எனவே ஒரு குறிப்பிட்ட நதிப்படுகையில் நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் குறைந்தபட்சம் எதிர்பார்க்கக்கூடிய மழை அளவின் அடிப்படையில் உபரி நீரைக் கணக்கிட வேண்டும். இப்படிப் பார்க்கும்போது "உபரி' நீர் அளவு மிகவும் குறைந்துவிடும். ஆனால் அரசின் திட்டமே இதை மிகையாக மதிப்பிடுகிறது.

ஐந்து படுகைகளிலும் சேர்த்து மொத்தம் 65 பில்ýயன் கன அடி நீர் அனுப்பப்படும் என்று ஆணையம் மதிப்பிட்டுள்ளது. வழியில் வீணாகும் நீரைக் கழித்துவிட்டால் (2.7 பில்ýயன்) சுமார் 62 பில்ýயன் மிஞ்சும். இதில் பெரும் அளவிலான நீர் ஒரு படுகையிýருந்து அடுத்த படுகைக்கு அனுப்பப்படுகிறது. இதில் பெரும்பகுதி (20 பில்ýயன்) நீர் செல்லும் வழியில் நடக்கும் பாசனத்திற்காகச் செலவாகும். இதில் ஒரு பகுதி மகாநதி, கோதாவரி நதிப்படுகைகளுக்கு இடையிலான கால்வாய்களை ஒட்டியிருக்கும் பகுதிகளுக்கும் கோதாவரி - கிருஷ்ணா நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளுக்கும் பலன் தரும். இதெல்லாம் போக 16-17 பில்ýயன் கனஅடி நீர் மீதியுள்ள மூன்று நதிகளுக்குக் கிடைக்கும். தற்போது இங்குக் கிடைக்கும் அளவைவிட இது 25 சதவீதம் அதிகம். வழியில் பயன்படுத்தப்படும் நீர் சமமாகப் பிரிக்கப்படுகிறது என்று அனுமானித்துக்கொண்டால் கிருஷ்ணாவில் 2 சதவீதமும் பெண்ணாற்றில் இப்போது உள்ளதைப் போல இரண்டு மடங்கும் காவிரியில் 25 சதவீதமும் நீர் இருப்பு அதிகரிக்கும்.

அனுப்பப்படும் நீரின் மொத்த அளவு என்பது பொருளற்ற ஒரு தொடர். ஒவ்வொரு நதியிýருந்தும் அதற்கு அடுத்த நதிக்கு எவ்வளவு நீர், எப்போது, எவ்வளவு காலத்திற்குள் அனுப்பப்படுகிறது; நீரைப் பெறும் பகுதிகளின் பாசனத் தேவையை அது பூர்த்திசெய்கிறதா என்பதையெல்லாம் துல்ýயமாகக் கணக்கிட வேண்டும். எல்லாப் படுகைகளிலும் ஒரே சீரான அளவு விவசாயம் நடப்பதாக அரசு தரும் அட்டவணை கூறுகிறது. வழியில் 3 முதல் 10 சதவீதம்வரை வீணாகும் என்றும், 110 -250 நாள்களுக்குள் தண்ணீர் அனுப்பப்பட்டுவிடும் என்றும் அது கூறுகிறது. கால்வாய்களின் நீளம் 170 முதல் 930 கி. மீவரை இருக்கும். இத்தனை தூரம் பயணம் செய்யும் நிலையில் ஆணையம் கூறுவதைவிட அதிகமாகவே நீர் வீணாகும். கால்வாய்கள் செல்லும் வழியில் பாசனம் அதிகரிக்க வழி இருக்கிறது என்றாலும் "உபரி' நீர் கொண்ட நதிப் பகுதிகளின் பாசனம் அதிகரிக்க வழியில்லை. எந்தப் பகுதிகளுக்குப் பாசனம் அதிகரிக்க வேண்டும் என்பது அரசியல் சார்ந்த பிரச்சினையாக உருவெடுக்கும்.

இத்திட்டத்தின் நோக்கமே நீர்ப் பற்றாக் குறை நிலவும் இடங்களில் நீர்வரத்தைப் பெருக்கி அதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதுதான். ஆனால் ஆணையம் தரும் மதிப்பீடுகளையே ஆராய்ந்து பார்த்தால்கூட நீர்வரத்து பெரிதாக ஒன்றும் அதிகரித்துவிடாது என்பது தெரிகிறது.

இதற்கான பணத்தை எங்கிருந்து திரட்டுவது என்பது ஒரு முக்கியமான கேள்வி. சந்தையிýருந்து திரட்டலாம் என்பது கவைக்குதவாத பேச்சு. அரசு கடனைத் திரும்பத் தரும் என்ற உத்தரவாதம் இல்லாமல் யாரும் கடன் தரமாட்டார்கள். இதனால் பயன் பெறும் மக்களிடமிருந்தும் பணத்தை வாங்க முடியாது.

உபரி நீரை எப்படி மற்ற இடங்களுக்குக் கொண்டு செல்வது என்பது மற்றொரு பிரச்சினை. கடற்கரையை ஒட்டியே மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா ஆகிய நதிகளுக்குக் கொண்டு செல்வதாகத் திட்டம். அதன் பிறகு பெண்ணாற்றுக்குச் செல்ல மேல்நோக்கிச் செலுத்த வேண்டும். இங்கே ஒரு கேள்வி. எல்லா நதிகளிலும் எப்போது வெள்ளம் பெருக்கெடுக்கிறது? இந்தப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை ஒரே சமயத்தில்தான் பெய்யும். ஆகஸ்ட் -அக்டோபர் காலகட்டத்தில் தென்னக நதிகளில் மழையின் காரணமாக அதிக நீர்ப்பெருக்கும் வெள்ளமும் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் நீர்த் தேக்கங்கள் நிரம்பியிருக்கும். மகாநதி, கோதாவரியில் உபரியாகப் பாயும் நீரைத் தெற்கே கொண்டுவரலாம் என்றால் இந்த நதிகளில் நீர்வரத்து உபரியாக இருக்கும் சமயத்தில் மற்ற நதிகளும் நிறைந்திருக்கும். அப்படியென்றால், நீரை எடுத்துவந்து எங்கே விடுவது? வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் நீரைத் தேக்கிவைத்து வறண்ட காலத்தில் பயன்படுத்த வேண்டும் என்றால் கூடுதல் நீர்த்தேக்கங்கள் வேண்டும். நீர்த்தேக்கங்களைக் கட்டாமல் நீரைக் கொண்டுவந்தால் பேரழிவுதான் ஏற்படும். நீர்த்தேக்கங்கள் கட்டுவதானால் அதற்கான இடம், அங்குள்ள மக்களை இடம்பெயரச் செய்தல், காடுகளை அழித்தல் என்று சங்கிýத் தொடராகப் பல பிரச்சினைகள் உருவாகும். இதையெல்லாம் எப்படிச் செய்வது, பின்விளைவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற கேள்விகளையெல்லாம் இத்திட்டம் எழுப்பவே இல்லை.

சரி, வடக்கிýருந்து தெற்கு நோக்கித் தண்ணீரைத் திருப்பி விடுவதாக வைத்துக்கொள்வோம். பெண்ணாற்றிýருந்து காவிரிக்கு 9 பில்ýயன் கனஅடி நீர் வரும் என்பது திட்டம். இந்தத் தண்ணீர் வரும் வழியில் இருக்கும் விவசாயிகளும் தொழிலதிபர்களும் சும்மா இருப்பார்களா? வழிநெடுகிலும் திருடு போகும் நீர் போக எவ்வளவு மிஞ்சும்? கண்டலேறுக்கு வர வேண்டிய தண்ணீர் ராயலசீமாவில் பயன்படுவது நமக்குத் தெரியும். பஞ்ச காலத்தில் இதுபோன்ற செயல்கள் அதிகரிக்கும். அதற்கு என்ன செய்யப் போகிறார்கள்? அதிகம் நீர் தேவைப்படும் பணப் பயிர்களை வரும் வழியில் விவசாயிகள் விளைவித்தால் கூடுதலாக நீர் வீணாகும். இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது "உபரி' என்பது எவ்வளவு குறைவு நீர் என்பது தெரியும்.

தண்ணீரின் தேவையைக் கணக்கிடும்போது, பாசனம், தொழில் துறை, வீட்டு உபயோகம் ஆகியவற்றுக்கான தேவைகளைக் கணக்கிட வேண்டும். இதில் பாசனம் தவிர மற்ற இரு வழிகளிலும் செலவாகும் நீரின் பெரும்பகுதி நமக்குத் திரும்பக் கிடைக்கும். ஆனால் இதைச் சுத்திகரிக்காமல் பயன்படுத்த முடியாது. இந்த மூன்றில் பாசனத்திற்கான தேவையே அதிகம். ஓர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் விளையும் பயிர்கள் எவ்வளவு, அதற்குத் தேவையான தண்ணீர் எவ்வளவு என்பதன் அடிப்படையில் "நிகரப் பாசனத் தேவை' கணக்கிடப்படுகிறது. ஆனால் இதைத் துல்ýயமாகக் கணக்கிட முடியாது என்பதே உண்மை. எங்கெல்லாம் நிலத்தடி நீர் (கிணறு, குட்டை போன்றவை) அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ அங்கு வீணாகும் தண்ணீர் மிகவும் குறைவு. கால்வாய் மூலம் வரும் தண்ணீரில் வீணாகும் அளவு அதிகம். ஆக, எதை வைத்து "நிகரப் பாசனத் தேவை'யைக் கணக்கிடுவது?

இப்போது நடைமுறையில் உள்ள வழிகளில் நிறையத் தண்ணீர் வீணாகிறது. இது எல்லோருக்கும் தெரியும். இதைக் குறைப்பதற்கான வழிமுறைகளை ஏன் ஆராய்வதில்லை? பாசனத் திறனை அதிகரிக்க அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது?

நீருக்கான தேவை வேகமாக அதிகரித்துவருகிறது. ஆனால் நதிகளை இணைப்பது இதற்கான தீர்வாக இருக்க முடியாது. நாடு தழுவிய, மையப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்திற்காக இத்தனை லட்சம் கோடி செலவு செய்யும் விபரீத முயற்சிக்குப் பதிலாக நாடு முழுவதும் ஆங்காங்கே மழை நீர்ச் சேகரிப்பு, ஏரி, குளம் போன்ற மரபு சார்ந்த நீர்ப்பிடிப்பு முறைகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றில் ஈடுபடலாம். மிகக் குறைந்த செலவில் அதிகப் பலன்களைப் பெறலாம். உண்மையில் தண்ணீர்ப் பற்றாக்குறை பெரிய பிரச்சினை அல்ல. இருக்கும் நீரை ஒழுங்காக நிர்வகிக்காமல் இருப்பதுதான் பிரச்சினை. தஞ்சையில் போன ஆண்டில் போதிய மழை இல்லாமல் வறட்சி நிலவியது. ஆனால் பாசனம் அதிகரித்தது. இது எப்படி நடந்தது? கைவசம் உள்ள நீரைத் திறமையாகப் பயன்படுத்தத் தெரிந்துகொண்டாலே பிரச்சினையைச் சமாளிக்கமுடியும்.

எந்த நதி எந்த நதியோடு, எந்த வழியில் இணைக்கப்படும் என்பதை அரசின் வரைபடம் காட்டுகிறது. ஆனால் வெவ்வேறு இணைப்புக் கால்வாய்களில் எந்த அளவு தண்ணீர் எடுத்துச் செல்லப்படும், எந்த இடங்கள் அதனால் பயனுறும் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. இந்த வரைபடத்தின்படி பார்த்தால் உபரி நீர்ப்பெருக்கு கங்கை, பிரம்மபுத்திரா, மகாநதி ஆகிய ஆறுகளின் வழியே சென்று வங்கக் கடýல் கலப்பதற்குப் பதிலாகக் கிருஷ்ணா, கோதாவரி, பெண்ணாறு ஆகிய ஆறுகளின் வழியே சென்று வங்கக் கடýல் தஞ்சமடையும். இதுதான் இந்த மாபெரும் திட்டம் ஏற்படுத்தக்கூடிய பலன்!

இந்தத் திட்டத்தால் மக்களுக்கும் இயற்கைக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றிய அலட்சியம் அரசுத் தரப்பில் நிலவுகிறது. "வளர்ச்சி'யின் தவிர்க்க இயலாத பின்விளைவுகளாக இவற்றைப் பார்க்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இடம்பெயர வைக்கப்படும் மக்கள் நடத்தப்படும் விதம், தண்ணீரைத் தவறாகப் பயன்படுத்துவதால் நிலத்திற்கு ஏற்படும் சீரழிவு, நீர்நிலைகளில் ஏற்படும் மாசுபாடு ஆகியவற்றை அவ்வளவு சுலபமாக அலட்சியப்படுத்தி விட முடியாது. பின்விளைவுகளைப் பற்றிய போதிய புரிதலோ அக்கறையோ இல்லாமல் பெருமளவு நீரைக் கொண்டுவருவதன் தீயவிளைவுகளுக்கான உதாரணமாக இராஜஸ்தானின் இந்திரா காந்தி கால்வாய் அனுபவம் இருக்கிறது.

இந்தத் திட்டம் சாத்தியம்தானா என்பதற்கான பூர்வாங்க ஆய்வுகள்கூட இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. தவிர, மக்களை இடம்பெயரச் செய்வது, காடுகளையும் ஊர்களையும் மூழ்கடிப்பது, சுற்றுச் சூழýல் ஏற்படக்கூடிய தாக்கங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்படவில்லை. இதையெல்லாம் நதிகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்து வதற்கான சிறப்புப் பணிக் குழுவின் தலைவர் சுரேஷ் பிரபுவே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட அனைவரது கவலைகளும் திருப்திகரமான விதத்தில் கவனிக்கப்பட்ட பிறகே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்த விரிவான ஆய்வின் அடிப்படையில் இந்தத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான குழுக்களும் பல்வேறு நிபுணர்களும் இந்த ஆய்வையும் திட்டங்களையும் பரிசீலனை செய்து அங்கீகரித்திருப்பதாக இந்த ஆணையம் கூறிக்கொள்கிறது. பரிசீலனை செய்தவர்கள் யார், எந்த ஆய்வு முறையியலை அவர்கள் பின்பற்றினார்கள், அவர்களது முடிவுகள் என்ன என்பதெல்லாம் பரம ரகசியமாகப் பாது காக்கப்படுகின்றன. பல தனியார் அமைப்புகளும் வல்லுநகர்களும் பல முறை கோரியும் இது தொடர்பான ஆவணங்கள் பொதுவில் முன்வைக்கப்படவில்லை. சிறப்புப் பணிக்குழு, தனது இணையதளத்தில் எல்லாத் தகவல்களும் ஆவணங்களும் கிடைக்கும் என்கிறது. ஆனால் கிடைப்பதெல்லாம் பொத்தாம் பொதுவான தகவல்கள் மட்டுமே.

சர்தார் சரோவர், பக்ரா நங்கல் ஆகிய அணைக் கட்டுத் திட்டங்களை வடிவமைப்பதற்கு முன் பல ஆண்டுக்கால விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. அப்படியும் அவற்றில் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் முளைக்கின்றன. தேசிய நதி இணைப்புத் திட்டம் போன்ற மிகச் சிக்கலான திட்டத்தை வடிவமைப்பதற்கான ஆய்வுகளும் முன் தயாரிப்புகளும் அதைவிடப் பல மடங்கு மேற்கொள்ளப்பட வேண்டும். இப்போது செய்யப்பட்டிருக்கும் ஆய்வுகள், மிக மிகக் குறைவான அளவிலேயே உள்ளன. போதிய ஆய்வுகளும் முன் தயாரிப்புகளும் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன என்று அரசு சொல்லுமேயானால், இத்திட்டம் தொடர்பான ஆவணங்களை முழுமையாக அது வெளியிட வேண்டும். அனைத்துத் தகவல்களும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

இத்திட்டத்தின் அடிப்படைக் கருத்தியல், வழி முறை, சுற்றுச்சூழல், பொருளாதாரம், அதன் பலாபலன்கள் குறித்த மதிப்பீடுகள் ஆகிய அனைத்தும் சுயேச்சையான நிபுணர் குழுவினரால் மிகக் கவனமாகவும் விரிவாகவும் விருப்பு வெறுப்பற்ற நிலையிலும் ஆய்வு செய்யப்பட வேண்டும். திட்டம் குறித்த வெளிப்படையான விவாதம் நடைபெற வேண்டும். திட்டத்தின் அனைத்து அம்சங்களும் நிபுணத்துவம் வாய்ந்த அமைப்புகளால் ஆய்வு செய்யப்பட்ட பிறகே செயல்படுத்தப்படும் என்று சுரேஷ் பிரபு உறுதியளித்துள்ளார். இதுவரவேற்கத்தக்க வாக்குறுதிதான். ஆனால் இந்த ஆய்வின் வரையறைகள், வழிமுறைகள் ஆகியவற்றைத் தெளிவுபடுத்தி, ஆய்வு முறையாக மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கும்வரை இந்த வாக்குறுதி எந்த நம்பகத்தன்மையும் பெற முடியாது.

வளம் பெருக்கும் நீர்வழிச் சாலைகள்
அரசு அறிவித்துள்ள திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

தேசிய நெடுஞ்சாலைகள் நாட்டின் ஒரு பகுதியை இன்னொரு பகுதியுடன் இணைப்பதுபோல தேசிய நீர்வழிச் சாலைகள் தேசத்தின் அனைத்து நதிகளையும் இணைக்கும். இதற்காக 1500 கி.மீ. நீளமுள்ள தேசிய நீர்வழிச்சாலை உருவாக்கப்படும். இது 1500 கி.மீ. நீளமுள்ள நீர்த் தேக்கமாகச் செயல்படும். இதன் மூலம் பாசனப் பகுதிகள் கணிசமாக அதிகரிக்கும். எப்போது வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நாட்டின் எந்தப் பகுதியிலும் பாசனத்திற்கோ குடிநீருக்கோ பற்றாக்குறை இருக்கவே இருக்காது.

வெள்ளப் பெருக்கெடுத்துக் கடýல் சென்று கலக்கும் தண்ணீர்தான் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இமய மலைப் பகுதிகளில் இந்த நீர்வழிச் சாலை 500 மீட்டர் உயரம் கொண்டதாகவும் மத்திய நீர் வழிச் சாலை 300 மீட்டர் உயரம் கொண்டதாகவும் தென்னக நீர்வழிச்சாலை 10 மீட்டர் உயரம் கொண்டதாகவும் இருக்கும். இதன் மூலம் அபரிமிதமான மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும். கங்கையிýருந்து காவிரிக்கும் காவிரியிýருந்து கங்கைக்கும் நீர் செல்ல முடியும். பிரம்மபுத்திராவில் நீர் அதிகமாகவும் கங்கையில் குறைவாகவும் இருக்கும்போது பிரம்மபுத்திராவிýருந்து கங்கைக்கு நீர் செல்ல முடியும். கங்கையிýருந்து யமுனையிலும் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது பிரம்மபுத்திராவுக்கு நீர் போகும். வெள்ள நீரானது நீர்வழிச் சாலைகளில் சேமித்து வைக்கப்பட்டு ஆண்டு முழுவதும் கிடைப் பதற்கான ஏற்பாடு செய்யப்படும். இதன் இதர சிறப்பம்சங்கள்:

250 மில்ýயன் வேலைவாய்ப்புகள்.
வெள்ளம் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்.
வறட்சிப் பகுதிகளில் பாசனத்திற்கும் குடிப்பதற்கும் நீர் கிடைக்கும்
வெள்ளத்தின் பேரழிவுகளை இது கட்டுப்படுத்தும்.
நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஆண்டு முழுவதும் நீர்த் தட்டுப்பாடே இருக்காது.
விவசாய உற்பத்தி 2050இல் நமக்குத் தேவையான அளவுக்கு அதிகரிக்கும்.
நிலத்தடி நீர் அதிகரிக்கும்
தேசிய நீர்வழிச் சாலையின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வசூýக்கப்படும்.
நீர் வழிச் சாலைகளை ஒட்டி, மாசுபாடற்ற புனல் மின்நிலையங்களின் மூலம் ஆண்டுக்கு 60,000 மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்படும்.

(ஆதாரம்: "இரண்டாவது விடுதலை' என்ற பெயரில் தேசிய நீர்வழி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்ட பிரசுரம்.)


Courtesy : Kalachuvadu - June 2004
(The views expressed here are personal and need not necessarily reflect the entire views of www.rajinifans.com)

No comments: