16.6.04

மதுரைக்கார மச்சானுக்கு மடையன் வரையும் மடல்

வணக்கம் மச்சான். நான் கூட பக்கா கிராமத்துலர்ந்து வந்தவன்தான்.. அதாவது சாலிக்கிராமம்!

இப்பல்லாம் எலெக்ஷன்ல நிக்காமலே கெலிச்ச சந்தோஷம் உங்க கிட்ட தெரியுது. அடிக்கடி வாய்விட்டு சிரிக்கிறீங்க! மனுஷன் சந்தோஷமா இருந்தாதான் நல்ல காரியமெல்லாம் செய்ய முடியும்.

அதெப்புடி எலெக்ஷன் நேரத்தை தவிர மத்த நேரமெல்லாம் வாய்ஸ் குடுக்க மறந்துடாம இருக்கீங்க? தெளிவா சொன்னாலும் மீடியா நம்ம வாய்ஸை மிஸ் பண்ணுதேன்னு வருத்தப்படாதீங்க மச்சான்... நாம இருக்கிறதை காமிக்க அதை வுட்டா வேற வழி தெரியிற வரைக்கும் அதையே கண்டினியூ பண்ண வேண்டியதுதான்.

எனக்கு நல்லா தெரியும் மச்சான்...உங்களுக்கு தண்ணி, சிகரெட்னு எந்த கெட்டப் பழக்கமும் இல்லவே இல்லேங்கிறது. அதை வெளிப்படையா சொன்னா உங்க இமேஜ் அப்படியே பூஸ்ட் ஆவுமே.. அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு இந்தப் பழக்கம் இல்லேங்கிறதனால உங்க தம்பிக்களும் அதே மாதிரி இருப்பாங்கல்ல?

அரசியல்னா அது கட்சி அரசியல்தான் உங்களுக்கு இருக்குற தெளிவு யாருக்குமேயில்லை. லஞ்சம் வாங்கிறதும் தப்பு கொடுக்கிறதும் தப்புன்னு டயலாக் பேசறது அசத்தலா இருக்கு. ஆனா, ரசிகர் மன்ற ஷோ நடத்தவும் போஸ்டர் அடிக்க, கட் அவுட் வைக்க நீங்க கொடுக்குற காசு எல்லாத்தையும் லஞ்ச கணக்குல கொண்டு வந்துடப் போறாங்க... கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க மச்சான்!

சினிமாவுல மட்டுமல்லாம மன்ற கூட்டத்திலேயும் ஜாதிக் கட்சி தலைவர்களுக்கு பிரமாதமா பன்ச் வைக்கிறீங்க... அப்படியே கன்டினியூ பண்ணுங்க மச்சான். தமிழ்நாட்டுல பொறந்து ஸ்ட்ராங்கான ஜாதி பேக்ரவுண்டோட இருக்கும் உங்களை எவனாவது எதிர்த்து பேசிட முடியுமா என்ன?

கலைஞரையும் மூப்பனாரையும் ரொம்ப பிடிக்கும்னு அப்பப்ப சொல்லிட்டு வந்ததுக்கு நல்ல நேரம் நெருங்கிடுச்சு. கலைஞரும் மூப்பனாரும் உருவாக்கின கூட்டணிக்கு அப்பவே ஆதரவு கொடுத்தேன்னு சொல்லி கூட்டணி வாரிசா ஆயிட்டீங்கன்னா சப்போர்ட்டுக்கு சப்போர்ட்டும் ஆச்சு.. கூடவே சரத்குமாரை காலி பண்ணின மாதிரியும் ஆச்சு!

விடுதலைப்புலி மேல உங்களுக்கொரு தனிப்பாசம் இருக்குதுங்கிறது தெரிஞ்ச விசயம்தான். ஆனா, வைகோ கிட்ட மட்டும் கொஞ்சம் தூரமா இருந்துடுங்க... ஒரு உறையில ரெண்டு வாள் இருக்கக்கூடாதுன் சொல்வாங்க... நாயக்கர் ஓட்டை மொத்தமா அள்ளிட்டு வரணும்னா வைகோவை ஒரு விஷயமாவே நினைச்சு அரசியல் பண்ணாம இருக்கிறது நல்லது.

அப்படியே சிவப்பு மல்லி ஞாபகத்துல சிவப்பு சட்டை போட்டுக்கிட்டு கிராமத்து பக்கம் போய் வாய்ஸ் கொடுத்தா, சிவப்பு தோழர்களும் உங்களை சப்போர்ட் பண்ணுவாங்க. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போறதையெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கோங்க. கடவுள் நம்பிக்கை இல்லைன்னு நீங்க சொல்லிட்டா மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்கும். வீரமணி வேற வெள்ளை சட்டை போட்ட பெரியார்னு பாராட்டி பட்டம் கொடுக்க ரெடியா இருக்காரு!

அம்மாவை பத்தி எதுவும் பேசாம இருக்குறதுல இப்பவே உங்க அரசியல் சாணக்கியம் தெரிஞ்சுடுச்சு. நிச்சயமா நீங்கதான் அடுத்த கலைஞர்... அய்யய்யோ ரொம்ப நாள் எதிர்க்கட்சித் தலைவராவே இருப்பீங்கங்கிற அர்த்தத்துல சொல்லலை மச்சான்!

இத்தனை வருஷமா நாட்டாமை வேலை பார்த்துட்டு வந்தது இப்ப கை கொடுக்கலேன்னாலும் எதிர்காலத்துல கூட்டணியெல்லாம் சேரும்போது ரொம்ப உதவியா இருக்கும். அதனால நாட்டாமை வேலையை எக்காலத்துலேயும் வுட்டுடாதீங்க!

கடைசியா ஒரு விஷயம்...

படமே இல்லைன்னா தம்பிங்க வேற வேலை பார்க்க போயிடுவாங்க. மன்றத்து வேலையில மட்டுமே அவங்க கவனம் இருக்கணும்னா வருஷத்துக்கு குறைஞ்சது 3 படமாவது குடுத்தாகணும் மச்சான். கூடவே படம் ரீலிசுக்கு முன்னாடி திறந்த ஜீப்புல தெருமுனையுல நின்னு, படத்துல வர்ற டயலாக்கை எடுத்து வுட்டீங்கன்னா... நிச்சயம் நீங்க அடுத்த எம்.ஜி.ஆர்தான்!

எம்.ஜி.ஆருக்கு இருந்த ராமாவரம் தோட்டம் மாதிரி உங்ககிட்ட எதுவும் இருக்காது என்கிற நம்பிக்கையுடன்....

ஜெ. ரஜினி ராம்கி

1 comment:

Anonymous said...

HAI,I AM RAJINI'S FAN FROM THE CHILD HOOD.HERE I SEE ONE LETTER OR COMMENT THAT ABOUT MR.RAJINI.RAJINI NEVER NEED ANY POLITICAL RELATION OR LIGHT TOWARDS HIM.SIR,PLZ DONT CONFUSE HIM.HE WAS IN RIGHT WAY.HE KNOWS EVERYBODY AND EVERYTHING THAT IS RELATED TO HIM.GOD KNOWS WHEN,WHERE THE RAINI SHOULD COME AND MEET HIS CHALLANGE IN FRONT OF HIM.