15.12.07

ரஜினி - வேண்டாம் அரசியல்..!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் 57ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது ரஜினி ரசிகர்கள் வைத்திருந்த பேனர்களில் அவர் எதிர்கால முதல்வராக வரவேண்டும் என்ற ஆசை அதிகரித்திருந்தது. ஆனால் ரஜினிகாந்த் ரசிகர்மன்றத் தலைவர் சத்யநாராயணா அவருக்கு அரசியலுக்கு வரும் எண்ணமோ விருப்பமோ இல்லை, அரசியலுக்கு வரமாட்டார், எனவே இரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாற்றமடைய வேண்டாம் எனக் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ரசிகர் மன்றத்தின் வளர்ச்சியிலும், ரஜினியின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு தீவிரமாக செயல்பட்டு வரும் ரசிகர்களின் உணர்வுகளை ரஜினி நன்றாகவே புரிந்து வைத்துள்ளார், மதிப்பு வைத்திருக்கிறார்.

ஆனால் நமது சூப்பர் ஸ்டாரின் விருப்பம் அரசியல் அல்ல. நமது எண்ணங்களை அவர் மீது திணிக்க முடியாது.

பிற நடிகர்களின் அரசியல் கட்சிகளையும், வளர்ச்சியையும், சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். பிற நடிகர்களின் வளர்ச்சியைப் பார்த்து நாம் பொறாமைப்படுவதில் அர்த்தம் இல்லை.

நமது சூப்பர் ஸ்டாரிடம் அரசியல் எண்ணம் இல்லை. எனவே சூப்பர் ஸ்டார் அரசியலில் ஈடுபடுவார் என ரசிகர்கள் எதிர்பாரப்பது சரியாக இருக்காது.

மேலும் அரசியலில் நுழைந்தால் தேவையில்லாத மன அழுத்தங்களையும் சந்திக்க வேண்டி வரும், இதையல்லாம் கருத்தில் கொண்டே இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்ற கருத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார் சத்யநாராயணன்.

நன்றி! http://www.indiaglitz.com/channels/tamil/article/35303.html

12.12.07

விண்ணைத்தொடுங்கள்..!



நேர்மை அது மாறாமல்;
தர்மம் அதை மீறாமல்;

சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்;
சத்தியம் உங்களை காத்திருக்கும்.

பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை;
ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை.

வெள்ளை இளஞ்சிட்டுக்கள்;
வெற்றிக்கொடி கட்டுங்கள்;
விண்ணைத்தொடுங்கள்..!

வளமுடன் நலம் வாழ...!


வாழ்க்கையில் நேர்மையுடன்;

போகும் பாதையில் தைரியமுடன்;

செய்யும் செயலில் தூய்மையுடன்;

நட்பில் அன்புடனும்;

குடும்பத்தில் பாசத்துடனும்;

சமூகத்தில் நல் சிந்தனையுடனும்;

மனதால் மகிழ்ச்சியுடனும்;

நீ இருக்கிறாய்.!

எங்களையும் இருக்க செய்திருக்கிறாய்.!

உன் புன்சிரிப்பில் எம் மகிழ்ச்சியை கண்டோம்

வாழ்த்துக்கிறோம் வளமுடன் நலம் வாழ...!

உழைப்பாளி


நடிப்பில் வாழ்பவர், வாழ்வில் இல்லையே நடிப்பு!

உழைப்பால் உயர்ந்து உயரத்திற்கு சென்றவர்!

புகழ்பவர்களை சிரிப்பினில் தவிர்த்தவர்!

தம் கொண்ட மனச்சிறப்பில் புகழ் பெற்றவர்!

ஒரு துளி வியர்வையில் ஒரு பவுன் தங்க காசு பெற்றாலும்

எம் மொழியை பொன்மொழியாய் தமிழர் அல்லாத பலர் அறிய வைத்தவர்!

ஜாதி மதம் கேட்டு யாரும் வந்ததில்லை, யாரும் சேர்ந்ததில்லை எம்முடன்!

உன் மனம் பிடித்து வந்தவர்களால் நிறைந்ததுதான் எங்கள் கூட்டம்!

உம் பிறந்த நாளில் மகிழ்ச்சியுடன் நாங்கள் வாழ்த்துகிறோம்

வாழ்க வளமுடன்!

வாழ்க நலமுடன் !

உயர்ந்த மனிதனாய்...!



‘‘மனசிலிருந்து நான் போன பின்பு, ஆண்டவனிடத்தில் சரண் அடைகிறப்போ பக்தி உண்டாகும்.

உடல் ஒழுக்கம், அற ஒழுக்கம், ஆன்மிக ஒழுக்கம்! இது மூணும்தான் அடிப்படை. மற்றபடி, இந்துவா இருந்தாலும் சரி, முஸ்லிமா இருந்தாலும் சரி, கிறிஸ்தவரா இருந்தாலும் சரி... அவரவர் சமய ஒழுக்கங்களை முறையாக, சத்தியமாகக் கடைப்பிடித்தால்
போதும்!


ஒரு நடிகன்

ஒரு ரசிகன்

இவ்விருவரில்

பின்னவர்தான்

முன்னவரின்

நுரையீரலில்

நுழைந்து புறப்படும் காற்று

நாளங்களில் நாளும் ஒடும் நிணநீர் ஊற்று!



அன்று சிவாஜி

உயர்ந்த மனிதனாக

இன்று

உயர்ந்தான் மனிதன்

'சிவாஜி'யாக


நன்றி:-வாலி

இது ஆண்டவன் கட்டளை...!

ரஜினி, நீங்க ரொம்ப பெரிசா ஜெயிச்சிருக்கீங்க, இப்போ திரும்பிப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோணுது? உங்க வெற்றிக்கு என்ன காரணம்? ஆண்டவன் அருளா, திறமையா, அதிர்ஷ்டமா, இல்லே உழைப்பா?'னு கேட்ட பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் கேள்விக்கான தலைவரின் பதிலில்,

சத்தியமா ஆண்டவன் அனுக்கிரகம்தான்! அவன் கருணை இல்லாமல் நான் வளர்ந்திருக்க முடியாது. ஆனா, எங்கேயோ பெங்களூரில் ஒரு பஸ் கண்டக்டரா இருந்த சிவாஜிராவ், இங்கே மெட்ராஸில் ஒவ்வொரு ஸ்டுடியோவா ஏறி வாசல் கதவைத் தட்டினான் பாருங்க, அது அவனோட முயற்சி!

அப்படிக் கிடைச்ச வாய்ப்பை நிரூபிக்கணும்னு முடிஞ்சதெல்லாம் செஞ்சு போராடினான் பாருங்க, அது அவனோட உழைப்பு. நாம நிச்சயம் ஒரு நாள் ஜெயிப்போம்னு கனவு கண்டானே... அது அவனோட நம்பிக்கை. அதோட, ஜனங்களைத் தன்னாலயும் என்டர்டெயின் பண்ண முடியும்னு கெடந்து பல்டி அடிச்சான் பாருங்க, அது அவனோட திறமை. அதுக்கு இந்த மக்களோட அன்பு கிடைச்சதே, அது அவன் செஞ்ச பாக்யம்!'னு சொன்னேன். அதானே உண்மை!

ஒரு விதை வளர்ந்து செடியாக நல்ல மண்ணு, தண்ணி, காத்து, வெளிச்சம் இப்பிடி என்னென்னவோ வேணும். எல்லாமே கிடைச்சாலும்கூட, முக்கியமா அந்த விதைக்குள்ள இருக்குமே ஒரு உயிர்... அந்த உயிருக்கு தன்னால் முட்டி மோதி முளைக்க முடியும்கிற நம்பிக்கை வேணும். நம்பிக்கை தானேப்பா எல்லாம்!''

11.12.07

கலக்கப்போகும் மன்றத்து ராஜாக்கள்..!


கதிரவன் எழும்பும் நேரம் தொடங்கி ;

கதிரவன் இறங்கும் நேரம் முடிய;

நடக்கப்போகும்,

நற்பணி மன்ற நிகழ்ச்சிகளுக்கும்;

நற்பணிகளுக்கும்,

அதில் கலக்கப்போகும் மன்றத்து ராஜாக்களுக்கும்

வாழ்த்துக்களை சொல்லி ஆரம்பிக்கின்றோம்....!

HAPPY BIRTHDAY SUPER STAR


ஆண்டிப்பட்டி முதல் அட்லாண்டா வரை
சென்னை முதல் சுவிட்சர்லாந்து வரை


உலகத் தமிழர்களின் உற்சாகமே !!!
உழைப்பில் உச்சம் தொட்ட நட்சத்திரமே !!!


இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
ரஜினி ரசிகர்கள் - தமிழ் வலைப் பதிவாளர்கள் வட்டம்.

உன்னடிமையல்லவோ..!


அரும்பொனே மணியேஎன் அன்பே

என் அன்பான அறிவேஎன் அறிவிலூறும்

ஆனந்த வெள்ளமே என்றென்று பாடினேன்

ஆடினேன் நாடி நாடி

விரும்பியே கூவினேன்;

உலறினேன்.!

அலறினேன்.!

விண்மாரி எனஎனிரு கண்மாரி பெய்யவே

வேசற றயர்ந்தேனியான்

இரும்புநேர் நெஞ்சகக் கள்வனா னாலும்உனை

இடைவிட்டு நின்றதுண்டோ

என்றுநீ யன்றுயான் உன்னடிமை யல்லவோ..!

-தாயுமானவர் சுவாமிகள்


பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்.....!

வணங்கி மகிழ்கிறோம்….!!!

6.12.07

நித்தம் 25 இன்று 175

என்னிக்குமே நீ 25........

 


இன்னிக்கு சிவாஜி 175.....

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படத்தின் வெள்ளி விழா நாள் இது....

175-Days.jpg picture by rajinifans
வெற்றி பயணத்தைத் தொடரும் சிவாஜி, தமிழகமெங்கும் தீபாவளி ஒட்டிய மறு வெளியீட்டில் 256 அரங்குகளில் இன்னும் சக்கைப்போடுகிறார்

சிவாஜி படக்குழுவினர்க்கும் மற்றும் தலைவர் ரஜினிகாந்த அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறோம்.

ரஜினி ரசிகர்கள்