25.2.04

பழசுதான்...இருந்தாலும் எப்பவும் புதுசு!

இன்று சமுதாயத்தில் வன்முறை அதிகமாய் இருக்கிறதே! இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
இன்றைக்கு இருக்கக்கூடிய தலைவர்கள் அதாவது அரசியல்வாதிகள். அடுத்தது மதத் தலைவர்கள். முன்றாவது காரணம் சினிமா. சமுதாயத்தில் நிலவி வரும் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் இவற்றால் கணடப்படும் இளைஞர்களை இன்றைக்கு உள்ள அரசியல்வாதிகள் 'எக்ஸபிளாயிட்' பண்ணுகிறார்கள். ஆகவே அவர்கள் வன்முறைக்கு போகிறார்கள். இது நம் நாட்டில் மட்டும்தான் என்று இல்லை. உலகம் முழுவதும் வன்முறை தலைவிரித்தாட இவைதான் காரணம்.

சினிமாவும் ஒர காரணம் என்று சொன்னீர்கள். ரஜினியின் படங்களில் வன்முறை அதிகமாகவே உண்டு. ஆக, வன்முறை கூடாது என்று சொல்லும் ரஜினிகாந்த் மறைமுகமாக சமுதாயத்தின் வன்முறைக்கு காரணமாகிவிடுகிறாரே?
முன்பே சொன்னேன். சினிமா என் தொழில். வாழ்க்கையின் ஒரு பகுதி. எனவே நான் என்னுடைய உணர்ச்சிகளை, கொள்கைகளை சொல்ல, அடுத்தவர்களின் சினிமாவை பயன்படுத்துவது நியாயமில்லையே! நான் நினைப்பதை செயல்படுத்தணும்னா துறவியாகி, இமாலயத்துக்குத் தான் போயாகணும். படங்களில் வன்முறை இருப்பது உண்மைதான். ஆனால் அநியாயத்துக்காக வன்முறையில் ஈடுபடுவதில்லையே! வன்முறையில் முடிவில் நடப்பது நல்லதுதானே!

- ரஜினிகாந்த் - 15.1.1989 கல்கியில் வெளியான பேட்டியிலிருந்து......

No comments: