10.2.04

சாது மிரண்டால்!

ஆர்.எழுமலை கவுண்டர், திருக்கோயிலுõர், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: வன்னிய சமுதாயமே ராமதாஸ் பின்னால் செல்வதாக இப்பகுதியில் ஒரு வாசகர் எழுதி இருந்தார். அவரின் அறியாமையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

நான் ஒரு ரஜினி ரசிகன். ராமதாசின் சொந்த மாவட்டத்தில் உள்ள திருக்கோயிலுõர் என்னும் ஊரில், ஏறத்தாழ 200க்கும் மேலான வன்னியர்கள், ரஜினியின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். அவரின் சொந்த மாவட்டத்திலேயே பல லட்சம் வன்னியர்கள் ரஜினியின் ரசிகர்களாக உள்ளனர் என்றால், பிற மாவட்டத்தில் எத்தனை லட்சம் ரஜினி ரசிகர்கள் இருப்பர் என்று சிந்தித்து பாருங்கள்.

"சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பதை ராமதாஸ் உணர வேண்டும்.

Courtesy : Ithu Ungal Idam, Dinamalar dated today

No comments: