9.2.04

ரஜினி ரசி கர்களின் எதிர்ப்பை பா.ம.க.,வினர் எவ்வாறு தேர்தலில் சமாளிக்கப் போகின்றனர்?

ஏண்டா வாயைக் கொடுத்தோம் என சங்கடப்பட்டுக் கொண்டுள் ளாராம் ராமதாஸ்! பா.ம.க.,வை மட்டுமல்ல... அதன் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையுமே வீழ்த்த கங்கணம் கட்டிக் கொண் டுள்ளனர் ரஜினி ரசிகர்கள். பா.ம.க.,வுக்காக ரஜினி வாய்ஸ் கொடுத்தால் தான் பிழைக்க முடி யும்!

Courtesy : Andhumani


தாங்கள் போட்ட கிடுக்கிப் பிடியில் சினிமாக்காரர்கள் சிக்கி, விழி பிதுங்குவதைப் பார்த்து சிலிர்த்துக் கொண்டனர் டாக்டர் ராமதாசும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும். இப்போது இவர்கள் வீசிய எதிர்ப்புக் கணை, பூமராங் மாதிரி அவர்களையே தாக்க திரும்பியுள்ளது. அதாவது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராமதாஸை அரவணைத்துக் கொள்ளும் கூட்டணிக்கு எதிராக வேலை செய்யும்படி ரஜினி தரப்பும், கி.சாமி கைகோர்க்கும் கூட்டணிக்கு எதிரான வேலைகளைத் துவங்கும்படி கமல் தரப்பும் தங்கள் ரசிகர் மன்றங்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளதாக செய்தி பரவியுள்ளது. குறிப்பாக, மேற்படி டாக்டர்களின் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்படும் தொகுதியில் உள்ள ரசிகர்களுக்கு இந்த ரகசிய உத்தரவு கடுமையாக பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாக பேசிக் கொள்கின்றனர். அட! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது சரியாகத்தான் இருக்கிறது.


தன்னை இளமையாகக் காட்டிக் கொண்டு, "சாயா... சாயா...' டைப் பாட்டுக்கு ஆட்டம் போடுவது இனி எடுபடுமா? என்று ஒரு சர்வே மாதிரி, தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் கேட்டு வருகிறார் ரஜினி. இந்தியில் அமிதாப் பண்ணுவது மாதிரி, தன் ரியல் தோற்றமான நரைமுடி தாடியுடன் கம்பீரமான கேரக்டர் செய்தால் எப்படி இருக்கும்? என்று ஆலோசனை செய்து வருகிறார் ரஜினி. புதுப்படத்தில் ரஜினி தோற்றம் எப்படி? செயற்கையான இளமையா? இயற்கையான முதுமையா? என்று ஒரு பட்டிமன்றமே நடத்தி வருகிறது ரஜினி வட்டாரம்.

Courtesy : Dinamalar Vaaramalar

No comments: