சென்னை மாவட்ட நிர்வாகிகளின் கருத்து-களைப் பற்றி, ரஜினி தரப்பு என்ன சொல்-கிற-தென்று அறிய, அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணாவை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் சந்தித்தோம். முதலில் பேட்டிக்கு மறுத்தவர், பிறகு அமைதி-யானார். பிறகு நமது கேள்விகளுக்குப் பதில் கூற ஆரம்பித்தார்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர் மன்றங்-களெல்லாம் பா.ம.க. எதிர்ப்புநிலை எடுத்திருக்கிறார்களே... இதற்குத் தலைமையிடமிருந்து ஆதரவு இருக்கிறதா?
‘‘ரசிகர்கள் பா.ம.க.வை எதிர்ப்பதற்காகத் தலைமை-யிடமிருந்து எந்த உத்தரவும் கொடுக்கப்படவில்லை. நாங்கள் அவர்களை அமைதியாக இருங்கள் என்று தடுத்தாலும், அதைக் கேட்கின்ற மனநிலையில் அவர்கள் இல்லை. காரணம், தலைவரின் படம் ரிலீஸான போது, பா.ம.க.வினர் செய்த பிரச்னை காரணமாகவே அவர்கள் அனைவரும் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். இந்த நிலையையும், இதன் பின்விளைவுகளையும் நான் தலைவர் ரஜினியிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.’’
இந்தத் தேர்தலில் யாருக்காவது ஆதரவு என்ற நிலை எடுப்பீர்களா?
‘‘இதுகுறித்து முடிவுசெய்ய வேண்டியவர் ரஜினிதானே தவிர, நானில்லை. இருந்தாலும் தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன. அதுபற்றி இப்போது பேச வேண்டியதில்லையே.’’
உங்கள் ரசிகர்களை 96_ம் ஆண்டு தேர்தல் மூலம் அரசியல்-வாதி-களாக்கிவிட்டு, இப்போது அமைதியாக இருந்தால் எப்படி?
‘‘அந்தத் தேர்தலில் ரசிகர்களை அரசியலுக்கு அழைத்தது தலைவர்தானே தவிர, நானில்லை. இனிமேலும் ரசிகர்களை அரசியலுக்குப் பயன்படுத்த வேண்டுமானால் அதை முடிவு செய்பவர் ரஜினிதான். நான் அவரின் கருத்துக்களை ரசிகர்களுக்கும், ரசிகர்களின் எண்ணங்களை அவருக்கும் எடுத்துச் சொல்கிறேன், அவ்வளவுதான்.’’
சுமார் இருபதாண்டுகளுக்கும் மேலாக ரசிகர் மன்றங்-களை நடத்திவரும் உங்கள் ஆதரவாளர்கள், தங்களுக்கு இன்னும் சரியான அரசியல் அங்கீகாரம் கிடைக்க-வில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார்களே?
‘‘இருபது வருடங்களுக்கு முன் ரசிகர் மன்றங்களைத் தொடங்கியவர்கள், ‘இருபது வருடங்கள் கழித்து ரஜினி அரசியலுக்கு வருவார்’ என்ற எதிர்பார்ப்புடன் மன்றங்-களை ஆரம்பிக்கவில்லை. தலைவரின் நடிப்பு மட்டு-மின்றி அவரின் மனிதாபிமானம், நல்ல கேரக்டர் ஆகிய அனைத்திலும் கவரப்பட்டு ஒன்று சேர்ந்-திருக்கும் கூட்டமிது. ரஜினிக்கும், ரஜினி ரசிகர்-களுக்கு-மிடையே உள்ள உறவு, ஒரு அரசியல் தலைவனுக்கும், தொண்டனுக்குமிடையே உள்ள சாதாரண உறவல்ல. அதையும் தாண்டி மிகவும் உன்னதமானது.’’
ரசிகர்கள் தங்களின் சொந்தப் பணத்தை லட்சக் கணக்கில் செலவழித்து பல்வேறு நற்பணிகளைச் செய்து வருகின்றனர். கேட்டால் ‘சிலர் குடிக்கும், பெண்-ணுக்கும், சூதாட்டத்திற்கும் அடிமையாகி பணத்தைச் செலவழிப்-பார்கள். நாங்கள் ரஜினிக்கு அடிமையாகிவிட்-டோம்’ என்கிறார்கள். இவர்களுக்கு நீங்கள் என்ன சொல்-கிறீர்கள்?‘‘கெட்ட விஷயங்களுக்கு அடிமையாகி சமுதாயத்தைக் கெடுப்பதைவிட, நல்ல விஷயங்களுக்கு அடிமையாவது நல்லதுதானே. இதன்மூலம் அவர்களின் பெற்றோருக்கு நல்ல மகன் கிடைத்திருக்கிறான். மனைவிக்கு நல்ல கணவனும், குழந்தைகளுக்கு நல்ல தந்தையும் கிடைத்திருக்கிறான். எல்லாவற்றையும்விட, ரஜினி மூலம் நாட்டுக்கு நல்ல குடிமகன்கள் கிடைத்திருப்பது பெருமைக்-குரிய விஷயம்-தானே!’’
‘‘உங்களிடமிருந்து அரசியல் உத்தரவை எதிர்பார்க்கும் உங்கள் ரசிகர்களுக்கு...?’’‘‘ரசிகர்கள் மிகவும் வேகமானவர்கள். அதே வேகத்தில் நானும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், அது லட்சோப லட்ச இளைஞர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும். எனவே, அவர்களை அமைதியாகவும், நேர்மையாகவும் வழி நடத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கிருக்கிறது. எனவே, அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது.’’
ரசிகர்கள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்-களே...?‘‘தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் மகிழ்ச்சி; எனக்கும் மகிழ்ச்சி. அதேநேரம் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறும் எங்கள் மன்றத்தினரை நான் அழைத்து ஒரு வார்த்தை சொன்னால் போதும், அமைதியாகப் போய்-விடுவார்கள்.’’ சென்னையில் ரசிகர் மன்றம் சார்பில் வாழப்-பாடி ராமமூர்த்தியின் சிலை வைக்க இருப்ப-தாகவும், அதை ரஜினி மூலம் திறக்க இருப்பதாகவும் ரசிகர் மன்றத்தலைவர்கள் கூறுகின்றனரே!
‘‘இப்போதுதான் கூறியுள்ளனர். அதையும் தலை-வரிடம் எடுத்துச்சொல்லி அவர் என்ன சொல்கிறாரோ அதையும் மன்றத்தினரிடம் கூறுவேன்.’’
Courtesy : Kumudam Reporter
Complete Story - http://www.kumudam.com/reporter/mainpage.php
No comments:
Post a Comment