9.2.04

ஜாதிக்கட்சி தலைவர்களின் சமுக பிரக்ஞை!

சினிமாவில் வில்லன் கதாநாயகன் ஆவதும் கதாநாயகன் ஆவதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் வில்லன் காமெடியனாவது அரசியல் வாழ்க்கையில் மட்டும்தான் பார்க்கமுடியும். சினிமா தமிழ்க் கலாசாரத்தை சீரழிக்கிறதுன்னு போர்க்கொடி து¡க்கியவர்களெல்லாம் எந்தக் கூட்டணியிலும் சேர முடியாமல் அரசியல் அனாதைகளாகிவிட்டனர். 'பாபா' பட வெளியீட்டு நேரத்தில் படப்பெட்டியை முந்திரி காட்டுக்கு கடத்திட்டு போகமளவுக்கு வெறிபிடித்து தியேட்டர்களையெல்லாம் துவம்சம் பண்ணியவர்கள் இன்று தமிழ் கலாசாரத்தை காப்பதற்காகத்தான் செய்தோம்னு சொல்றது செம ஜோக். தேர்தல் முடிந்ததும் இவர்கள் இன்னோரு வேடம் போடக்கூடும் தங்களது சமுகத்தை சேர்ந்த இளைஞர்களெல்லாம் நடிகர்களின் பின்னால் அலைவதை பொறுக்க முடியாத ஜாதிக் கட்சித்தலைவர்களின் செயல்களை சில அறிவு ஜீவிகளும் ஆதரிப்பதுதான் புரியவில்லை. இன்று ஜாதி, மத வேற்றுமை பாராட்டாத ஒரே இடம் என்று சொன்னால் அது நடிகர்களுக்கான ரசிகர் மன்றங்கள் மட்டும்தான். எல்லோருக்கும் சம உரிமை கொடுத்து எவ்வித பாகுபாடும் இல்லாமல் இரண்டரை மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார வைக்க சினிமாவால் மட்டும்தான் முடியும். கொடியேற்றுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற விடலைகளின் ஆர்வக் கோளாறுகளை அமைதி வழியில் மட்டுமே திருத்த முடியும். நடிகர்களுக்கு ஒரு படம் தோல்வியுற்றால் இன்னொரு படம். ஓரே வருடத்தில் ஜந்து படங்களை கூட கொடுத்து இழந்த பணத்தையும் புகழையும் மீட்டுவிட முடியும். ஆனால் ஜந்து ஆண்டுக்கொருமுறை வரும் தேர்தலை தவறவிடும் அரசியல் கட்சியால் தாக்குப்பிடிக்க முடியாது. ஆடும் வரை ஆடிவிட்டு தேர்தல் நேரத்தில் மிரண்டு போய் ரசிகர்களை கூல் பண்ணுவது தேவைதானா?

- ஜெ. ரஜினி ராம்கி

No comments: