16.2.04

ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி

பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றக் கூட்டத்தைக் கூட்டி அவர்களை ஒரே இடத்தில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

இத் தகவலை அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற தலைவர் சத்தியநாராயணா தெரிவித்தார். ஊட்டி சுதந்திர நினைவு திடலில் நீலகிரி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் வெள்ளி விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய சத்தியநாராயணா,

ரசிகர்கள் மக்களுக்கு செய்யும் நற்பணிகளை ரஜினியிடம் தெரிவித்தேன். மகிழ்ச்சி அடைந்தார். ஆரம்பத்தில் இருந்தே இதுபோல் உதவிகள் செய்து வந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்றார்.

இப்போதிருக்கும் சூழ்நிலையில், ரஜினியின் புகழைப் பலப்படுத்த வேண்டும். வளர்ச்சியில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரசிகர்கள் ரஜினியைச் சந்தித்து பல காலம் ஆகிவிட்டது. விரைவில் ரஜினியை ரசிகர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

மக்களவைத் தேர்தல் வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியைத் தோற்கடித்தே தீர்வது என்று ரஜினி ரசிகர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து வரும் நிலையில், ரசிகர்களை ரஜினி சந்திப்பது பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸூக்குப் போட்டியாக வீர வன்னியர் பேரவையை நடத்தி வரும் ஜெகத்ரட்சனுக்கு சமீபத்தில் ரஜினி வாழ்த்துச் செய்தி அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

Courtesy : Thats Tamil.com

No comments: