26.7.05

சுப்ரமணியை அடிக்கணும்

ஒரு பத்து வருஷமாக நடந்து வரும் விஷயம். எல்லா டிவியும் மாசாமாசம் இந்தப் படத்தை காட்டியே ஆகணுங்கிற அக்ரிமெண்ட் இருக்குது போலிருக்கு. இந்த வாரமும் அ·தே. எங்கெங்கு காணினும் 'ராஜாதிராஜா'டா! ஒரு காமெடி படத்துக்கு டயலாக் எழுதுவது ரொம்ப கஷ்டமான விஷயம். சிரிக்க வைக்க தெரியணும். இல்லாட்டி கடிக்கவாது தெரியணும். ஜனகராஜ் பேசுவதெல்லாம் வடைகறி, ரிக்ஷா ரொம்ப சர்வ சாதாரண வசனங்கள்தான். அவ்வப்போது பல்டியடிக்கிறார், வசனத்திலும்தான். நடுநடுவே பட்லர் இங்கிலீஷ். Nonsense of the Stupid of the Idiot. அர்த்தம் யாருக்கு வேணும்? வசனம் எழுதியவர் ·புல் பார்மில் இருந்திருக்கவேண்டும். அதே படத்தில் இன்னொரு காட்சி.

'மாமா, இதை கையில் கட்டிக்கிட்டா யாரை வேணும்னாலும் அடிக்கலாம்'

'காங்கேயன்?'

'ம்...'

'சுப்ரமணி?'

'யாரு அது?'

'பக்கத்து வூட்டு நாய்'

'ஐயோ, மாமா யாரை வேணும்னாலும் அடிக்கலாம்'

'மொதல்ல அந்த சுப்ரமணியை அடிக்கணும்'

Courtesy : www.tamiloviam.com

1 comment:

Aarokkiyam said...

சமய துறவிகளை அடிக்கக் கூடாது. காஞ்சி பெரியவர் சுப்பிரமணி :-)))))((((-:யைத்தானே சொல்கிறீர்கள்????