சமீப நாட்களாக தமிழ்மணம் திரட்டி தரும் பதிவுகளும் அவற்றில் வெளியாகியிருந்த பின்னூட்டங்களும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. குறைந்த பட்ச நாகரீகத்தைக் கூட மறந்து இன்று உலகமே புகழும் சூப்பர் ஸ்டாரையும் அவரை நெஞ்சில் வைத்து ரசிக்கும் ரசிகர்களையும் ஒருமையில் வசை பாடி வந்த பதிவுகளால் மனதளவில் காயப்பட்டிருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
எந்தவொரு காலகட்டத்திலும், எந்தவொரு நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் எத்தகைய விமர்சனத்தையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் நாங்கள் படித்திருக்கும் பாடம். ரஜினியும் சரி ரசிகர்களும் சரி வீண் வம்புக்கும் சண்டைக்கும் அலைந்ததில்லை. அவசியமான நேரத்தில் கூட வார்த்தை அம்புகளை எய்து யாரையும் காயப்படுத்தியதாக சரித்திரமில்லை. புயலுக்கு பின்னர் அமைதி வரும் என்று காத்திருந்து வெறுத்துப் போனதால் எங்களுக்கும் வேறு வழியில்லை. பழிக்குப் பழி என்று தமிழ் மணத்தை மேலும் சாக்கடையாக்கிவிடவும் விருப்பமில்லை.
ரஜினி என்னும் தனிநபர் மீதான வெறுப்பினால் வந்த அரிப்பை தமிழ் மணம் போன்ற பொதுவிடங்களில் அநாகரீகமான முறைகளில் தேய்த்து சுகித்துக்கொள்ள நினைக்கும் ஈனப்பிறவிகளையும், சர்ச்சைக்குரிய பதிவுகளை கையாள முடியாத தமிழ்மணத்தின் இயலாமை¨யும் கண்டித்து இன்றிலிருந்து தமிழ்மண திரட்டியிலிருந்து எங்களை விடுவித்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறோம்.
கடந்த நான்கு ஆண்டுகளாக எங்களது பதிவிற்கு வந்த ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் வழங்கிய அனைத்து இணைய நண்பர்களுக்கும், உதவியாக இருந்த தமிழ் மணம் குடும்பத்தாருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.
பிரிவோம்! என்றாவது சந்திப்போம்!
22 comments:
//ரஜினி என்னும் தனிநபர் மீதான வெறுப்பினால்//
தலைவர் மீது இருந்த வெறுப்பு அல்ல, அது தலைவரின் வெற்றியை கண்டு வந்த பயம் கலந்த வெறுப்பு.
பண்னி கூட்டமாகதான் வரும் என்று சொன்னதில் அதிர்ந்து போனவர்களின் வெறுப்பு அது.
எல்லோருக்கும் நல்லதை செய்யலாம் என்ற கருத்திற்கு உடன்பாடில்லாத சுயநலவாதிகளின் வெறுப்பு அது.
//இன்றிலிருந்து தமிழ்மண திரட்டியிலிருந்து எங்களை விடுவித்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறோம். //
நல்ல முடிவு. போக போக பல நல்லவர்கள்் விலகிகொண்டிருப்பதால் தமிழ்மணம் - காய்ந்த நார் போல மணமில்லாமல் ஆகிவிட்டது
Although I am not a Rajini fan, I welcome your decision of quitting TamilManam.
Regards
Sa.Thirumalai
//ரஜினியும் சரி ரசிகர்களும் சரி வீண் வம்புக்கும் சண்டைக்கும் அலைந்ததில்லை//
100 வீதம் உண்மை
நாங்கள் எங்கடை சாமியையே ஒருமையில் விமர்சனம் செய்யும் இனம்..
அதனுடன் ஒப்பிடும்போது ரஜனி எம்மாத்திரம்?
//இன்றிலிருந்து தமிழ்மண திரட்டியிலிருந்து எங்களை விடுவித்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறோம்//
இங்குதான் நீங்கள் மற்றவர்கள் போல்
சறுக்குகிறீர்கள்.
குதிரையா யானையா என்பதை நீங்கள்தான முடிவு செய்யவேண்டும்.
உங்கள் தலைவர் தெளிவாகத்தானிருக்கிறார்.
ரஜினி ஒரு ஆன்மிகவாதி, இந்திய தேசியத்தில் நம்பிக்கை உள்ளவர், எளியவர், வாழ்கையில் வெற்றி அடைந்தவர். இவைகள் போதாதா அவரைப் பழிப்பதற்கு.
நல்ல காரியம் செய்தீர்கள்.
தாண்டி போயிடுங்க. மிதிச்சிட்டீங்கன்னா காலை கழுவிடுங்க. திரும்பி பார்க்காதீங்க. உங்க தரத்தை தாழ்த்திக்காதீங்க. அவ்வளவுதான்.
ஒரு நடிகரை hero worship பண்ணும்போது கிண்டலை எதிர்பார்க்கத்தான் செய்யணும். ஆனா அந்த கிண்டல் தரக்குறைவா போறது தப்பு.
//பழிக்குப் பழி என்று தமிழ் மணத்தை மேலும் சாக்கடையாக்கிவிடவும் விருப்பமில்லை. //
அது கரெக்ட்.
சுவாமி
தமிழ்மணத்தின் அதிகாரப்பூர்வமான கருத்துத் தளத்தில் "சிவாஜி பாஸ் - பட்டையைக் கிளப்புமா?" என்ற பெயரில் சிவாஜி படத்துக்கு ஆதரவான வகையிலேயே விவாதம் தொடங்கப்பட்டதை மறந்துவிட வேண்டாம்!
:(
It Is Better to Leave This Place.
Hi Rajini fan
Being a Rajini fan I can understand your point.
But there were lot of good/Great posts about Rajini and shivaji too.
I do not think it is logical to say that thamizmanam is responsible for nasty posts.
I would request to reconsider your decison
Thanks
Nakkiran
ரசிக மகா ஜனங்களே என் பின்னூட்டம் எங்கேங்க?
//சர்ச்சைக்குரிய பதிவுகளை கையாள முடியாத தமிழ்மணத்தின் இயலாமை¨யும் கண்டித்து இன்றிலிருந்து தமிழ்மண திரட்டியிலிருந்து எங்களை விடுவித்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறோம். //
வலைப்பதிவு என்பது சுதந்திரமாக கருத்துகளை எடுத்துவைக்க ஒரு இடம் , பேசும் பாஷை கொஞ்சம் முன்னே பின்ன இருந்தாலும் சுதந்திரத்தின் விலையாக அதை எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே இதில் தமிழ்மணத்தை குறை சொல்ல ஏதும் இல்லை.இன்னும் சொல்லப் பொனால் இந்த கமெண்ட் மாடரேஷன் எல்லம் எடுக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து, அப்படி என்ன தான் சொல்லி அல்லது திட்டி கிழித்து விடப் போகிறார்கள் அதையும் பார்ப்போமே! அச்சம் தவிர்! இது எல்லாம் வெறும் திரைப்பட ரசிகர்களுக்கு புரிவதில்லை!
அதே சமயத்தில் ஒரு திரட்டியில் இருப்பதும் இல்லாது இருப்பதும் தனி நபர் விருப்பம்,வலைப்பதிவு என்பது திரட்டிகளுக்கு அப்பாலும் உள்ள பரந்து விரிந்த உலகம் என்று நம்பும் வலைபதிவர் நான்.
எனவே,
எங்கிருந்தாலும் வாழ்க!
ஏம்பா!
போறோம் போறோம்னு படம்காட்டிபுட்டு இன்னும் தமிழ்மணத்திலயே குந்திக்கிட்டிருக்கீங்களே?
இப்டித்தான் முன்னமும் கொஞ்சப்பேர் அலப்பரை செய்துகிட்டிருந்தாங்க.
உங்க வலைப்பதிவை நீக்கச் சொல்லி நிர்வாகத்துக்கு அஞ்சல் அனுப்பீட்டீங்களா? இல்லைனா இந்தப் பதிவுதான் அறிவிப்புன்னு நெனைச்சுக்கிட்டிருக்கீங்களா?
நல்ல முடிவு. மேலும் தமிழ்மணத்தை சாக்கடையாக்கிட என்பதில் வரும் அந்த 'மேலும்' வார்த்தைக்கு நிறைய அர்த்தங்கள் உண்டு
வெண்ணிலவை மின்மினிகள் தடுக்க முடியுமான்னு உங்க ரஜினியே பாடியிருக்கிறார். சிவாஜிக்கு எதிராக மரம்வெட்டி ஆட்கள் போட்ட திட்டமெல்லாம் தவிடுபொடியாகிவிட்டது. ரஜினி இப்போது உலக அளவில் பிரபலமாகிவிட்டார். இதற்கெல்லாம் ரஜினி ரசிகர்கள் கவலைப்படலாமா?
தமிழ்மணத்தில் பின்னூட்டம் திரட்டப்பட்டு வருகிறது. அதையும் தவிர்க்கலாமே!
தமிழ் மணத்துக்கு ஒரு மடல் போட்டு உங்கள் பதிவைத் திரட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளவும் இல்லாவிடில் வந்து கொண்டுதான் இருக்கும். அதில் நீங்கள் தொடர்வது ரஜினிக்கு நீங்கள் செய்யும் துரோகமாகி விடும். சீக்கிரம் ஒரு மெயில் போட்டு நிறுத்தச் சொல்லவும்.
லேட்டா எடுத்த சூப்பர் முடிவு.
ஆனால் இப்படி ஒரு பதிவு போட்டு அந்த தளத்துக்கு இலவச விளம்பரம் தந்திருக்க வேண்டுமா? உலகம் முழுதும் உள்ள சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு அந்த இத்துப் போன தளத்தை அறிமுகப் படுத்தி வைத்திருக்க வேண்டுமா?
சிங்கப்பூரில் சிங்கி அடிக்கும் மரம் வெட்டியான் ஒருத்தன் இன்றைக்கு புலம்பியிருக்கிறான் பாருங்கள். அவனது தலைவன் மாதிரியே தனக்குத் தானே ஒரு பில்டப்பு வேறு கொடுத்துக் கொண்டிருக்கிறான் தனது பதிவில்.
//எந்தவொரு காலகட்டத்திலும், எந்தவொரு நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் எத்தகைய விமர்சனத்தையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் நாங்கள் படித்திருக்கும் பாடம். //
Repeatuuu
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நிச்சயமாய் ஏற்றுகொள்ளலாம்... கேலியும் கிண்டலையும் கூட வரவேற்கலாம்... நல்ல அற்புதமான எழுத்துத் திறமை மிக்க பதிவர்கள் கூட ரஜினி மீதும் ரஜினி ரசிகர்கள் மீதும் உரிமையாய் கோப்படுகிறோம் என்று வார்த்தைகளில் கண்ணியம் குறைக்கும் போது.. காயங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாது போகிறது...
வழக்கம் போல் EVERYBODY HAS THEIR OWN REASONS
இந்திய தேசத்திற்கு எதிராகவும், நாட்டின் இறையாண்மைக்கும் எதிராகவும் தேச விரோத சக்திகளால் குறி வைத்து எழுத/திரட்டப் பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்மணம் திரட்டியையும், பூங்கா வலை இதழையும் இந்தியாவில் தடை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்க வேண்டும். விபரமறிந்தவர்கள் எப்படி செய்வது என்பதை விளக்கவும்.
நாதாறிப் பயலுங்க சார் அவனுங்க. சிவாஜி படத்தைப் பத்தி பிபிசி முதல் கொண்டு எல்லாறும் எழுதி, பேசி வர்றாங்க. இந்த திருட்டு வி.சி.டி. தயாரிப்பு கும்பல் தன்னோட வலைஇதழிலே சிவாஜி படம் பத்தி பேத்தலைன்னு யாரு அழுதாங்க? அதை நக்கலடிக்கிற ஒரு பதிவை மட்டும் எடுத்து போட்டிருக்கானுங்க லுச்சா பசங்க.பன்னிங்க.
அமெரிக்க/கனடிய நாட்டு சட்டப்படி ஒரு நாளைக்கு 'எண்ணப்' போறானுங்க சட்ட விரோத செயலுக்காக. அன்னைக்கு இருக்குடி ஆப்பு.
ஜி.ராகவன் என்ற பா**பு, சிவாஜி குறித்து எங்கெல்லாம் வலைப்பதிகிறார்களோ அங்கெல்லாம் தலை காட்டி புலம்பி வருகிறார். அண்ணாத்தே, கமல் ரசிகராம். ஸோ வாட்?!
இன்று கூட ஒரு பதிவில், லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படத்தை ஒப்பிட்டால் ஷங்கரின் சிவாஜி நத்திங் என்று உளறிக் கொட்டியுள்ளார்.
அட, எப்படிய்யா? ரூம் போட்டு உட்கார்ந்து யோசிப்பீங்களோ என்னடா குத்தம் சொல்லலாம்னு?
லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் ஹாலிவுட் படம். அங்கேயுள்ள டெக்னாலஜி, வசதி, வாய்ப்பெல்லாம் நம்மூரிலே கம்பேர் பண்ண முடியுமா? அப்படி பாத்தா ந்ஈ கூடத் தான் கம்ப்யூட்டர் பீல்டிலே இருக்க? பில் கேட்ஸ் மாதிரி ஏன் நீ வரல, வெண்ணை?!
//லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் ஹாலிவுட் படம். அங்கேயுள்ள டெக்னாலஜி, வசதி, வாய்ப்பெல்லாம் நம்மூரிலே கம்பேர் பண்ண முடியுமா? //
ஐயா அனானி. ஒரு கூடை சன்லைட் பாடலுக்கான தொழில்நுட்பம் உலகத்துலேயே முதன்முறையா சிவாஜியிலதான் பண்ணி இருக்காங்க. அந்த சாதனை பத்தி என்ன தெரியும் இவுங்களுக்கு? UK Top 10 வந்த முதல் இந்தியப் படம் சிவாஜி. 165000 பவுண்டுக்கு மேல பின்னி பெடலெடுக்குது வசூலு. யாரும் நஷ்டம் ஆகலையே? அப்புறம் ஏன்யா வயித்தெரிச்சலு?
ஹேய், தலைவர் ரசிகனெல்லாம் சொல்லவே கூடாது, கெளம்பிக்கிட்டேயிருக்கணும்....
Post a Comment