2.2.06

This Month That Year - வைகோவுக்கு ரஜினி போன்

"நீங்க ஜெயில விட்டு வீட்டுக்கு வந்ததில ரொம்ப சந்தோஷங்க. ஜெயிலில் நீங்க ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க. உங்க ஹெல்த்தைப் பத்தி எனக்குக் கவலையா இருந்தது. நீங்க நல்ல உடல் நலத்தோட இருக்கணுங்க. எல்லா வகையிலும் நீங்க சிறப்புப் பெறணும். இரண்டு நாளுக்கு முன்பே உங்களுடன் பேச நினைத்து போனில் தொடர்பு கொண்டேன். நீங்கள் கோர்ட்டுக்கு போயிருப்பதாக சொன்னாங்க,'' என்று சொல்ல, அதற்கு வைகோ, ""ரொம்ப நன்றிங்க, நீங்க வாழ்த்துச் சொன்னது மிகவும் மகிழ்ச்சியா இருக்கிறது. உங்க ஹெல்த் நல்லாயிருக்கா?,'' என்று கேட்டார். ரஜினி அதற்கு, "நான் நல்லாயிருக்கேன்,'' என்று பதில் தெரிவித்தார்.

அடுத்து வைகோ பேசும் போது, ""ஏராளமான ரசிகர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய ஆதரவை நீங்கள் உங்களுக்காக எக்ஸ்ப்ளாய்ட் பண்ணிக் கொள்ளவில்லை. அதுதான் பெரிய விஷயம். உங்கள் படம் வரவில்லையேங்கிற ஏக்கத்துல உங்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள். "பாட்ஷா, அண்ணாமலை, முத்து மற்றும் படையப்பாவை விட இன்னும் சிறந்த படங்களை நீங்கள் கொடுக்க முடியும். ஜப்பானில் உங்கள் படங்கள் அரங்கம் நிறைந்து ஓடுவதாக கேள்விப்பட்டேன். இந்தப் பெருமை இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்கவில்லை. உங்கள் அலைகள் ஓய்வதில்லை என்பதை நீங்கள் நிரூபிக்க முடியும். உங்களிடம் அப்படிப்பட்ட திறமை இருக்கிறது. நீங்கள் கண்டிப்பாக வருடத்துக்கு ஒரு படம் தரவேண்டும்,'' என்று கூறினார்.

இதற்கு ரஜினி, ""ரொம்ப தாங்ஸ் சார். புதிய படத்தைப் பற்றித் தான் நான் சீரியஸ்சா பிளான் பண்ணிக்கிட்டிருக்கேன். சீக்கிரத்தில் ஒரு நல்ல படத்தை கொடுக்கப் போகிறேன்,'' என்றார்.

பொடா வழக்கில் கைது செய்யப்பட்ட வைகோ 577 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அவர் சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிற்கு தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த், நேற்று முன்தினம் இரவு தொலைபேசி மூலம் வைகோவிற்கு வாழ்த்து சொன்னார். நலம் விசாரித்தார். ரஜினி வைகோ தொலைபேசி பேச்சு குறித்த விவரம் ம.தி.மு.க., அலுவலகத்தின் செய்திக் குறிப்பு மூலம் பத்திரிகைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Courtesy : Dinamalar, dated 12.2.2004

1 comment:

Raja said...

அது தான் ரஜினி ஸ்டைல். அப்ப வைகோவுக்கு ஆதரவு கொடுக்கலாமா