20.2.06

இன்னொரு ஜோடி இப்போதைக்கு இல்லை

சில வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம்.

தமிழ்த் திரையுலகில் ஒவ்வொருக் காலக் கட்டத்திலும் ஏதாவது இரு நடிகர்கள் நன்குப் பேசப் படுவார்கள்.

பி. யூ. சின்னப்பா மற்றும் தியாகராஜ பாகவதர்.

முன்னவர் பின்னவரை விட அதிகத் திறமை வாய்ந்த நடிகர். இருந்தாலும் பின்னவருக்கு அதிக முகராசி (charisma?).

அடுத்த இருவர் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜியார். அதே மேலே கூறப்பட்ட முன்னவர் பின்னவர் குணதிசயங்கள்.

இப்போது கமல் மற்றும் ரஜினி.

ஒரு சிறு மாற்றம். ரஜினிக்கும் நடிப்புத் திறமை உண்டு- கமல் அளவுக்கு இல்லாவிட்டாலும்.

சிவாஜியின் விஷயத்தில் எம்ஜியார் மாதிரித் தன்னை நல்லவனாகக் காண்பித்துக் கொள்ளச் செய்த முயற்சிகள் அனேகமாகச் சொதப்பலாயின. உதாரணம்: உத்தமன். ஆ கலே லக் ஜாவில் சஷி கபூர் மாதிரி லைட்டாக வர இயலவில்லை. ரொம்ப பொறுமையைச் சோதித்தார். சிவாஜி தன் இயல்பிலிருந்துக் கொண்டு நடித்தப் படங்கள் இன்றும் பேசப்படுகின்றன.

அதே மாதிரி கமலும் ரஜினியைப் போல் ஸ்டைல் காண்பிக்க முயன்றால் தன் அடையாளத்தை இழப்பது நிச்சயம். அவ்வாறு செய்ய அவர் முயற்சிப்பதில்லை என்பது மனத்துக்கு ஆறுதலைத் தருகிறது.

இந்த இரட்டையர் ஜோடி எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்டு இருப்பதில்லை. 1977-ல் எம்ஜியார் நடிப்பிலிருந்து ஓய்வுப் பெற்றப் பின்புதான் கமல் ரஜினி ஜோடி வந்தது. இருவருமே இன்னும் களத்தில் இருப்பதால் இன்னொரு ஜோடி இப்போதைக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

அன்புடன்,

டோண்டு
http://dondu.blogspot.com/2004_12_12_dondu_archive.html

No comments: