22.12.05

பெங்களூரில் பிறந்தநாள்சூப்பர் ஸ்டாரின் 56வது பிறந்தநாள் ww.rajinifans.com சார்பில் எளிய முறையில் பெங்களூரில் கொண்டாடப்பட்டது. கோத்தனூர் தீனா சேவா ஆதரவற்றோர் இல்லத்தில் கூடிய இணைய நண்பர்கள், சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை காப்பகத்தில் உள்ள ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட மூன்று வயதுக்குட்பட்ட 27 ஆதரவற்ற குழந்தைகளுடன் சில மணி நேரங்கள் தங்கியிருந்து கொண்டாடினார்கள். பிறந்தநாள் கேக்கை வெட்டிய குழந்தைகள், சூப்பர் ஸ்டாரின் நலனுக்காக நடைபெற்ற பிரார்த்தனையிலும் கலந்து கொண்டார்கள். காப்பகத்தில் தங்கியிருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பெங்களூர் சிறப்புத் தொடர்பாளர் ராஜா, தீபா வேணுகோபால், இளவரசன், ரஜினி சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர். விழாவிற்கான பொருளுதவிகளை அருண்குமார், தீபா, பிரவீண் மற்றும் பாஸ்கர் ஆகியோர் செய்திருந்தனர். மஞ்சு குமார், முருகன், குண சேகரன், மோகன், சுந்தரமூர்த்தி, தீபக், பிரவீண், ஜெயந்தி, கோபிநாத், கண்ணன், விஜயராஜா, சதீஷ், ஷாம், அஷோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டு குழந்தைகளின் சந்தோஷத்தில் பங்குகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

- ராம்கி

2 comments:

Anonymous said...

VELLAI VETTEE ATTA THAYEE THEEPANNUKKUU ORUU PERAYASONAM ILLATHA VEETEE PASAGAL

PONKADA POEESS ATHILA KULAITHEELA VEELUUINKADA SUMMA POOMA DEVEIKKUU PARAMA IRRUKATHEEINKA

Raja Ramadass said...

நன்றி ராம்கி, பெங்களூரில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவிற்கு வந்ததற்கும் அழகான பதிவு எழுதியதற்கும்.

மொத்தம் 60 குழந்தைகள் கொண்ட ஆசிரமம். உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
Deena-Seva Charitable Trust
DinaNilaya
Kothanur PO
Bangalore-77
Ph No.080-28465948