28.4.04

வைகோ வாய்ஸ்!

கேள்வி: ரஜினி பா.ம.க., மோதல் பற்றி...

பதில்: ரஜினி அழகாக சொல்லி இருக்கிறார். நான் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

கே: ரஜினிக்கும், பாம.க.,வுக்கும் உள்ள மோதல் பற்றி தான் கேட்கிறோம்.

ப: எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்றுள்ளார். எதிர்ப்பும் இல்லை. ஆதரவும் இல்லை. இப்போது... நடுநிலை.

கே: ரஜினி ஏற்கனவே பா.ஜ.,வுக்கு ஆதரவு என சொல்லி இருக்கிறாரே.

ப: இன்று பத்திரிகைகளில் வந்த செய்தியை படித்து சொல்கிறேன். எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றால், பா.ஜ.,வுக்கும் இல்லை. அ.தி.மு.க.,வுக்கும் இல்லை என்று தான் அர்த்தம். உங்களைப் போன்ற நிருபர்கள் புதுடில்லியில் ரஜினியை சுற்றி வளைத்து கேள்வி கேட்ட போது, இப்பதிலை தெளிவாக சொல்லி இருக்கிறார்.

கே: அதே ரஜினி பா.ம.க., மீது தேர்தல் கமிஷனில் புகார் கூறியுள்ளாரே?

ப: அது வேறு. எங்களை (ரசிகர்களை) அடிச்சிட்டாங்கன்னு புகார் சொல்லும் சம்பவம் வேறு. அதைப்பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்பது, பா.ம.க.,வை எதிர்க்கும் அ.தி.மு.க.,விற்கும், பா.ஜ.,விற்கும் ஆதரவில்லை என்று சொன்னதன் மூலம் ரஜினி, இத்தேர்தலில் முதலில் சொன்ன கருத்தை மாற்றி நடுநிலைக்கு வந்துள்ளார். யாருக்கும் ஆதரவில்லையென கிளியராக சொல்லி இருக்கிறார். இதோடு, பிரச்னை முடிந்தது.

கே: பா.ம.க., போட்டியிடும் ஆறு தொகுதிகளில் அக்கட்சியை வீழ்த்த ரஜினி தனது ரசிகர்களை அனுப்பி இருக்கிறாரே?

ப: முதலில் சொன்ன ஆறு தொகுதி பற்றி, நேற்று புதுடில்லியில் சொல்லவில்லை. முதலில் சொன்ன கருத்தை மாற்றி, யாருக்கும் ஆதரவில்லைன்னு சொல்லிட்டாரு. அது முடிஞ்சு போச்சு. அதை கிளற முடியாது.

கே: சென்னையில் நேற்றிரவு நடந்த பிரஸ் மீட்டில்...

ப: அனைத்து பத்திரிகையிலும் செய்தி வந்துள்ளது. நான் பத்திரிகையில் படித்த வகையில், என் சிற்றறிவுக்கு எட்டிய அர்த்தம் இதுதான்.

கே: ரஜினி முடிவை பற்றி உங்கள் கருத்து.

ப: ஒவ்வொருவரின் முடிவிற்கும் நான் எப்படி கருத்து சொல்ல முடியும்.

கே: தேவைப்பட்டால் பிரசாரத்திற்கு வந்தாலும், வருவேன் என்று ரஜினி சொல்லி இருக்கிறாரே?

ப: ஏற்கனவே கருத்து சொல்லி விட்டேன். எப்படியாவது பதில் வாங்க வேண்டுமென நினைக்கிறீர்கள். அவர் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார். தற்போதுள்ள நிலையை உணர்ந்து கருத்து கூறியிருக்கிறார். வன்முறைக்கும், ஊழலுக்கும் எதிராக ஓட்டு போட சொன்னது ஜெ.,வை தான். இதை சொல்லி விட்டு ரிஷிகேஷ் சென்று விட்டார். இப்போது, ஒருவரையும் ஆதரிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டார். இதோடு பிரச்னை முடிந்து விட்டது.

கே: அப்போ, ரஜினி பழைய ஸ்டேண்டுக்கே திரும்பி வந்துட்டாரா?

ப: நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்!

நன்றி - தினமலர்

No comments: