9.4.04

யாருக்கும் வெட்கமில்லை!

மதுரை அட்டாக்கில் சம்பந்தப்பட்ட ராமதாஸையும் மற்ற பாமகவினரையும் அரெஸ்ட் பண்ணி, வன்னியர்கள் ஜாஸ்தியாக இருக்கும் பகுதிகளில் மண்ணை கவ்வி ஜகா வாங்க அம்மாவுக்கு தில் கிடையாது!

(ராமதாஸ¥க்கு எதிரான?!) மதுரை தாக்குதலை கண்டித்து பாமகவை தனிமைப்படுத்தி ஓட்டுக்களை இழக்க பெரிய அய்யாவும் தயாரில்லை!

பாமகவை எதிர்ப்பதையே முழுநேர வேலையாக வைத்திருக்கும் சிறுத்தை பொடியனுக்கு எலெக்ஷன் நேரத்தில் ஏகப்பட்ட பணக் கஷ்டம், மனக் கஷ்டம்!

ஏகப்பட்ட செலவு செஞ்சு வாங்கியிருக்கும் சீட்டை யார் தயவிலாவது ஜெயிச்சாகணுமேன்னு கதர் வேஷ்டிகளுக்கு கவலை!

ஜெயிச்சு வந்தப்புறம் மெஜாரிட்டி கிடைக்காம திணறும்போது கூப்பிட்டா ஓடி வர பாமகவை விட தோதான ஆள் வேற கிடையாதுங்கிற நினைப்பு காவி கோஷ்டிக்கு!

இனிமே தமிழ்நாட்டுல தலைகீழா நின்னாலும் மூன்றாவது அணிக்கு சான்ஸ் இல்லேன்னு முடிவு கட்டி நாட்டோட வரவு செலவு கணக்கு பார்க்க அப்ளிகேஷன் போடலாம்னு 'டெல்லி சலோ' சொல்லும் சிவகங்கை சின்ன தம்பி ஒரு பக்கம்!

பூம்புகார் கூட்டத்தில் அய்யா பரேடு நடத்தினது மனசில் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து தொலைந்தாலும் எதுக்கு வீண் பிரச்சினைன்னு ஜுட் பத்திரிக்கையுலகத்து பிதாமகன்கள்!

இனிமே மஞ்சள் கோஷ்டியை பார்த்தா நம்ம மக்களெல்லாம் பஞ்சா பறந்துடுவாங்க...! டியர் பிரதர்ஸ், என் பெயரை போட்டு கொடுத்துடாதீங்கோ! ஏற்கனவே வெட்டியா அலையும் என்னை வெட்டிடுவானுங்கோ!

இப்போதைக்கு ஜூட்!

- ஜெ. ரஜினி ராம்கி

No comments: