பாரதிராஜாவின் பாதி முகத்தை பார்த்திருக்கீங்களா?
ஜாதிக் கட்சிகளுக்கு மக்கள் எப்பவோ சைரன் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க! சினிமாவுல ஜாதி, மத, இன, மொழி பேதமெல்லாம் வேணாம்னு சொன்ன பெரிசுங்களோட நிஜ முகத்தை கிழிக்கிறார் நம்ம கொஸப்பேட்டை குப்புசாமி!
ராசா ராசா ராசா பாரதிராசா
பேச ஆரம்பிச்சாலே "என் இனிய தமிழ்மக்களே"ன்னு கொரலு வுடுற பாரதிராசா திடீர்ன்னு "நான் கள்ளச்சாதிப் பய"ன்னு கொரலு வுட்டுக்கீறாரு. பத்து நாளைக்கு முன்னே பாரதிராசாவுக்கும், தமிளுக்குச் சோறுபோடுற வைரமுத்துவுக்கும் மருதையில நடந்த பாராட்டு விளாவுல தான் இந்தச் சவுண்டு.
மொதல்ல பேச வந்த பயாஸ்கோப்புக்கு கத எளுதுற ரத்னகொமாரு "இந்தப் பெர்ய மன்ஸங்கோ இம்மா பெர்ய லெவல்லக்கீறாங்கன்னா அதுக்கு நம்ம கள்ளருங்க தான்பா மெயின் ரீசனு"ன்னு கொரலு வுட்டுக்கீறாரு. தமிளுக்கே சோறு போடுற மீசக்கார வைரமுத்து இதுல எதோ மேட்டர்கீதுபா நம்ம நைசா மாட்டாம எஸ்கேப் ஆவணும்ன்னு "இது சாதிக்காரங்க வெளா இல்லபா, இனவிளா"ன்னு அஜீஸ் பண்ணிட்டாரு.
அப்பாலிக்கா பேசவந்த பாரதிராசா கரீட்ட "பல்லி கயினித்தொட்டில குதிக்கிற" மேரி குதிச்சிட்டாரு. "நா கள்ளச்சாதி தான்பா, எனக்கு சாதிப்பயங்கோ தான்பா வோணும்"ன்னு கொரலு வுட்டுக்கீறாரு.
கொரலு வுட்ட அண்ணாத்தே சினிமால மட்டும் தான் சாதி வாணாம் மதம் வாணாம்ன்னு க்ளாஸ் எடுக்கிறாப்ல மொதல் மருவாதியும், அலைகள் ஓய்வதில்லேயும், வேதம் புச்சுன்னும் எடுப்பாராம், ஆனா மன்ஸுக்குள்ள சாதி என்னிக்கும் சேர் போட்டு குந்திக்கின்னு கீதாம். சோக்கா கீதுபா நாயம். இவுரு சாதிக்காரங்கோன்னு சொல்றவங்கோ மட்டும் தான் இவரு படத்த பாத்தாங்களா, இவரு சாதியால தான் இவருக்கு அவார்டுல்லாம் குட்த்தாங்களா. எந்தூரு நாயம்னே தெர்லபா.
இந்த மேட்டர பட்ச்சப்போ இதுக்கு இன்னா ரீசனு இருக்கும்ன்னு குப்ஸாமி குந்திகின்னு ரோசனப் பண்ணான். இந்த மன்ஸன் நெய்வேலில வந்து அம்மாவுக்கு சோப்பு போடறதுக்காக சவுண்டு வுட்ட பார்ட்டி, இப்போ புச்சா "நா கள்ளச்சாதிடா"ன்னு சவுண்டு வுட்றாருன்னா ரீசனில்லாமலா இர்க்கும். கீதுபா கீது.
இன்னும் ரெண்டு வர்சத்துல இஸ்டேட்டு எலிக்ஸன் வர்து. நம்ம லெவலுக்கு பார்லிமெண்டுல்லாம் வேலிக்காவாதுன்னு பாரதிராசாவுக்கு தெர்யும். அத்தோட அம்மா வேற எல்லாரையும் புச்சு புச்சா புட்ச்சு எலிக்ஸன்ல நிக்க வெக்கிறாங்கோ. பாத்தாரு நம்ம பாரதிராசா, இப்போவே நம்ம பின்னால ஒரு சாதிக்கார கூட்டமே பிகிலடிக்க ரெடியாக்கீதுன்னு அம்மா காதுல போட்டு வெச்சா இஸ்டேட்டு எலிக்ஸன்ல அம்மா நம்மள கண்டுக்குவாங்கோன்னு ஒரு நெனப்புல ஓவரா சவுண்டு வுட்டுக்கீறாரு.
நயினா பாரதிராசா, நீயி நெய்வேலில "அம்மா தன்னோட சொந்த செலவுல எங்களுக்கு பஸ்ஸு குட்த்தாங்கோ, வழி செலவுக்கு பிஸ்கோத்து குட்த்தாங்கோ"ன்னு போட்டுவுட்டப்போவே அம்மா உன்னிய நம்பி ஒண்ணும் செய்யக்கூடாதுன்னு டிசைடு பண்ணிட்டாங்கோ. இப்போ நீ இன்னா சவுண்டு வுட்டாலும் சீட்டும் கெடிக்காது, ஒண்ணும் கெடிக்காது. நல்லதா நாலு படத்த குட்த்தோமா, புள்ளிய நடிகனாக்காம எதுனா ஒரு கடையகன்னிய வச்சி பாத்துக்கச் சொன்னோமான்னு இர்பா, அத்தான் உனுக்கும் நல்லது, தமிள்நாட்டுக்கும் நல்லது.
ரஜினி - வெற்றிகரமான சினிமா நடிகராக தொடங்கி ஆன்மீகம், அரசியல் என சகல தளங்களிலும் விரவி இன்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வதை யாரும் மறுக்க முடியாது. கணிணி மயமாகிவிட்ட இவ்வுலகில் ரஜினியின் மீது அன்பு கொண்டிருக்கும் அனைவரையும் இணையத்தின் வாயிலாக இணைக்க விழைந்துள்ளோம். www.rajinifans.com - ரஜினியை பற்றிய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவும், ரஜினி சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்கவும், எதிர் வினைகளை பதிவு செய்யவும் அன்புடன் அழைக்கிறோம்.
29.4.04
28.4.04
வுடு ஜூட்!
நம்ம 'நக்கல்' நாராயணனுக்கு கொலஸ்ட்ரால் கொஞ்சம் ஜாஸ்தி! எல்லாம் மே பத்தாம் தேதி வரைக்கும்தான். அதுக்கப்புறம் ஆசாமியோட அட்ரஸ் தேடினாலும்... கிடைக்காது!
இன்னிக்கு நக்கல் நாராயணனிடம் மாட்டியவர் பாமக தலைவர் ஜி.கே. மணி!
வாயில்லாத மக்களின் குரலை ஒலித்து வந்தது மட்டுமன்றி, அவர்களுக்காகப் பல்வேறு போராட்டங்களையும் நடத்திச் சிறை சென்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸக்கும், பாமகவுக்கும் வன்முறைச் சாயம்பூசி களங்கப்படுத்தும் முயற்சி முடுக்கி விடப்பட்டு வந்திருக்கிறது.
வாயில்லாத மக்களா? ஆனாலும் 'அந்த' ஜாதி ஆட்களை ரொம்பத்தான் கம்மியா சொல்லிட்டார்! மரத்தை வெட்டிப் போட்டு சாலை மறியல் பண்ணி தமிழ்நாட்டை கலக்கினபோது அரெஸ்ட் ஆனதுக்கப்புறம் வேற எந்த சந்தர்ப்பத்திலும் அய்யா ஜெயிலுக்கெல்லாம் போன மாதிரி தெரியலையே!
"பாபா' படம் தோல்வி அடைந்ததற்கும் பாமகவுக்கும் என்ன சம்பந்தம்? இதற்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்?
சமூக நீதிக்கும் டாக்டர் அய்யாவுக்கும் உள்ள சம்பந்தம்தான்! ஹி...ஹி.....பலு¡னில் ஊசி குத்துறதா நினைச்சுக்கிட்டு உங்க கண்ணுலேயே குத்திக்கிட்டீங்க! பூம்புகாரில் அரை மப்பில் அடிச்சு வுட்ட மேட்டர் இப்படி பத்தி எரியும்னு யார் கண்டா?
67 கோடி பேர் வாக்களிக்கும், உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்துகிற பொறுப்பிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர், 5 நிமிஷம் நேரம் ஒதுக்கி அவரைச் சந்தித்திருக்கிறார் என்பதைத் தவிர புகாரில் சத்து ஏதுமில்லை.
சத்தோ, குத்தோ... வெறும் ·பார்மாலீட்ஸ¥க்கே இப்படி ·பீவரில் கிடந்த மாதிரி ஆயிட்டீங்களே!
காவிரி நீருக்காக நெய்வேலியில் போராட்டம் நடத்தினால் கர்நாடகத்தில் தமிழர்களைச் சும்மா விடுவார்களா என்று குதர்க்கம் பேசியது அகிம்சா வழியா?
ரஜினி சொன்னால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல கர்நாடக மக்களும் கேட்பாங்கன்னு ஓவர் நம்பிக்கையில விசிலடிச்சான் குஞ்சான்ஸையும் ஓவர்டேக் பண்ணிட்டீங்க சபாஷ்!
இதையெல்லாம் ஆறரை கோடி தமிழ் மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.
அதிருக்கட்டும், மொதல்ல ஆறு தொகுதிகளில் இருக்குறவங்களுக்கு தெரிஞ்சாத்தான் கட்சியை காப்பாத்த முடியும்!
ராமதாஸக்கு எதிராக ஆபாசமான, அருவருப்பான சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் யார்? அதைக் கண்டு கொள்ளாமலும் கண்டிக்காமலும் இருந்தவர்கள் யார்?
பாவம் கலைஞர்... கிளைமாக்ஸ் நேரத்துல போகிற போக்கில் யார் யாரோ பன்ச் குடுக்குறாங்களேன்னு கன்னத்துல கை வெச்சிருப்பார்!
விருதுநகர் மாநாட்டுக்குச் சென்றபோது ராமதாஸக்குக் கருப்புக் கொடி காட்டக் கட்டளையிட்டவர்கள் யார்? என்பதையெல்லாம் தமிழக மக்கள் நிச்சயம் எண்ணிப் பார்ப்பார்கள்.
அட ஆமா, மதுரை மேட்டரில் விருதுநகரை எல்லோரும் வுட்டுட்டாங்களே! அங்கே கூட தொரத்தி தொரத்தி அடிச்ச பெருமை அய்யாவுக்குதானே!
ஜனநாயகத்திலும் அறவழியிலும் நம்பிக்கை வைத்துள்ள கட்சி பாமக. மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள கட்சி.
(எங்க ஜாதி) மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள கட்சின்னு சொல்லுங்கோ...கை தட்டுறோம்!
எனவே, அடிப்படையற்ற கற்பனையான சந்தேகங்களைக் கிளப்பி வீண்பழி சுமத்துவதன் மூலம் மக்களைத் திசைதிருப்பிவிட முடியாது. பாமகவின் வெற்றியைத் தடுக்கவும் முடியாது.
மணி அய்யா, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு சில்லுண்டிகளெல்லாம் அசெம்பளி எலெக்ஷனில் ஆப்பு வெச்சிரலாம்னு முடிவு பண்ணிடப் போறாங்க... ஜாக்கிரதை!

வைகோ வாய்ஸ்!
கேள்வி: ரஜினி பா.ம.க., மோதல் பற்றி...
பதில்: ரஜினி அழகாக சொல்லி இருக்கிறார். நான் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
கே: ரஜினிக்கும், பாம.க.,வுக்கும் உள்ள மோதல் பற்றி தான் கேட்கிறோம்.
ப: எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்றுள்ளார். எதிர்ப்பும் இல்லை. ஆதரவும் இல்லை. இப்போது... நடுநிலை.
கே: ரஜினி ஏற்கனவே பா.ஜ.,வுக்கு ஆதரவு என சொல்லி இருக்கிறாரே.
ப: இன்று பத்திரிகைகளில் வந்த செய்தியை படித்து சொல்கிறேன். எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றால், பா.ஜ.,வுக்கும் இல்லை. அ.தி.மு.க.,வுக்கும் இல்லை என்று தான் அர்த்தம். உங்களைப் போன்ற நிருபர்கள் புதுடில்லியில் ரஜினியை சுற்றி வளைத்து கேள்வி கேட்ட போது, இப்பதிலை தெளிவாக சொல்லி இருக்கிறார்.
கே: அதே ரஜினி பா.ம.க., மீது தேர்தல் கமிஷனில் புகார் கூறியுள்ளாரே?
ப: அது வேறு. எங்களை (ரசிகர்களை) அடிச்சிட்டாங்கன்னு புகார் சொல்லும் சம்பவம் வேறு. அதைப்பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்பது, பா.ம.க.,வை எதிர்க்கும் அ.தி.மு.க.,விற்கும், பா.ஜ.,விற்கும் ஆதரவில்லை என்று சொன்னதன் மூலம் ரஜினி, இத்தேர்தலில் முதலில் சொன்ன கருத்தை மாற்றி நடுநிலைக்கு வந்துள்ளார். யாருக்கும் ஆதரவில்லையென கிளியராக சொல்லி இருக்கிறார். இதோடு, பிரச்னை முடிந்தது.
கே: பா.ம.க., போட்டியிடும் ஆறு தொகுதிகளில் அக்கட்சியை வீழ்த்த ரஜினி தனது ரசிகர்களை அனுப்பி இருக்கிறாரே?
ப: முதலில் சொன்ன ஆறு தொகுதி பற்றி, நேற்று புதுடில்லியில் சொல்லவில்லை. முதலில் சொன்ன கருத்தை மாற்றி, யாருக்கும் ஆதரவில்லைன்னு சொல்லிட்டாரு. அது முடிஞ்சு போச்சு. அதை கிளற முடியாது.
கே: சென்னையில் நேற்றிரவு நடந்த பிரஸ் மீட்டில்...
ப: அனைத்து பத்திரிகையிலும் செய்தி வந்துள்ளது. நான் பத்திரிகையில் படித்த வகையில், என் சிற்றறிவுக்கு எட்டிய அர்த்தம் இதுதான்.
கே: ரஜினி முடிவை பற்றி உங்கள் கருத்து.
ப: ஒவ்வொருவரின் முடிவிற்கும் நான் எப்படி கருத்து சொல்ல முடியும்.
கே: தேவைப்பட்டால் பிரசாரத்திற்கு வந்தாலும், வருவேன் என்று ரஜினி சொல்லி இருக்கிறாரே?
ப: ஏற்கனவே கருத்து சொல்லி விட்டேன். எப்படியாவது பதில் வாங்க வேண்டுமென நினைக்கிறீர்கள். அவர் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார். தற்போதுள்ள நிலையை உணர்ந்து கருத்து கூறியிருக்கிறார். வன்முறைக்கும், ஊழலுக்கும் எதிராக ஓட்டு போட சொன்னது ஜெ.,வை தான். இதை சொல்லி விட்டு ரிஷிகேஷ் சென்று விட்டார். இப்போது, ஒருவரையும் ஆதரிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டார். இதோடு பிரச்னை முடிந்து விட்டது.
கே: அப்போ, ரஜினி பழைய ஸ்டேண்டுக்கே திரும்பி வந்துட்டாரா?
ப: நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்!
நன்றி - தினமலர்

12.4.04
ரியாக்ஷன் ரவுண்ட் அப்
உச்சி வெய்யில் மண்டையை பொளந்து கட்டிக்கிட்டிருந்த நேரத்தில் பிரஸ் மீட் முடிஞ்சதும் நமக்கு அந்த விபரீதமான யோசனை ஸ்ட்ரைக்கானது. ரஜினியின் ஸ்டேட்மெண்ட்டுக்கு ரியாக்ஷன் எப்படியிருக்கும்? ஒரு ரவுண்ட் போய் பார்த்துட்டு வந்தா என்னா? சோ, ஒரு ஜாலி கற்பனை ரவுண்ட் அப்! (அப்ப நிஜமாவே போய் பார்க்கலியான்னு கேட்குறவங்களுக்கு.... என்னை ஒழிச்சுக்கட்டணும்னு முடிவே பண்ணிட்டீங்களா?!)
மொதல்ல நேரா லாயிட்ஸ் ரோடு அதிமுக ஆபிஸ். எதோ இழவு வூட்டுக்கு வந்த மாதிரி கப்சிப். ரஜினி அறிக்கை பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டதும் மிரண்டு போய் ஓடப் பார்த்தாங்க. அவங்க தர்மசங்கடத்தை புரிஞ்சுகிட்டு நேரா வண்டியை போயஸ் கார்டன் ஜெயா டிவி ஆபிஸ் பக்கம் விட்டோம். மதுரை தாக்குதல் சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் ரஜினி தெரிவித்த நன்றியை மட்டும் எடிட் செய்து கொண்டிருந்தார்கள். என்னது...மத்த விஷயத்தையெல்லாம் வுட்டுட்டு ரஜினி சர்ட்டிபிகேட் கொடுத்ததை மட்டும் எடுத்துட்டிருக்கிங்களே.. அம்மாவுக்கு தெரிஞ்சா ருத்ரதாண்டவம் ஆடமாட்டாங்களான்னு எடுத்து வுட்டதும் கலவரமாகிப் போனவங்களை கண்டுக்காம நேரா அறிவாலாயம்!
உள்ளே நுழையும்போதே எதிர்பார்த்த மேட்டருதானேன்னு கரைவேஷ்டிங்க பேசிட்டிருந்தபோதே ரீயாக்ஷன் தெரிஞ்சு போச்சு. நடுராத்திரியில் போலீஸ் கதவை உடைச்சு அவசர அவசரமா கலைஞரை அழைச்சுட்டு போனதுக்கே அவ்வளவா ரீயாக்ஷன் காட்டாத ஆளுங்களாச்சே! அறிவாலயத்தை தாண்டி அப்படியே சன் டிவி ஸ்டுடியோவில் நுழைஞ்சா....முதல்நாள் சேலத்து மீட்டிங்கில் நதிநீர் இணைப்பு பத்தி பேசினதை காலைல எட்டு மணி நியூஸில் கவர் பண்ணாம போயிட்டோமேன்னு நொந்து நுடூல்ஸாய் நின்னுட்டிருந்தவங்களை ஒருத்தர் தேற்றிக் கொண்டிருந்தார். பரவாயில்லை.. இப்ப ஒண்ணும் கெட்டுப் போயிடலை. நதிநீர் பத்தி கலைஞர் பேசின கிளிப்பிங்ஸை போடுங்கப்பான்னு அட்வைஸ¥ம் கொடுத்தார். அப்ப இன்னும் ஒரு மாசத்துக்கு ரஜினி நடிச்ச படம் போடமாட்டீங்களான்னு கேட்க நினைச்சோம்! கூடவே வந்த நண்பர்தான் சன் டிவி வேற; சன் டிவியில் வரும் நியூஸ் வேறன்னு சொல்லி வயித்துல பெப்சி வார்த்தார்!
அங்கேயிருந்து நேரா கமலாலயம், காவி கோஷ்டிகள் மத்தியில் சந்தோஷம் இருந்தாலும் அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. உள்ளே நுழைந்ததும் அம்மா ஆட்களான்னு சந்தேகமா கேட்டாங்க. இல்லேன்னு சொன்னதும்தான் நிம்மதியா முகத்திலே சிரிப்பே வந்துச்சு. நமக்கும் பழைய ஞாபகம் வந்துடுச்சு. 98ம் வருஷம் கோவைக்கு பிரச்சாரம் பண்ண வந்த அத்வானி ரஜினி பேச்சு எடுபடாதுன்னு சொன்னாரே இப்ப என்ன சொல்வாருன்னு அப்பாவியா கேட்டோம். அது அத்வானியின் கருத்து; வாஜ்பாயியின் கருத்து அல்ல என்று ஒரு அதிரடி பதில். அட நம்மூர் பாலிடிக்ஸில் காவி கோஷ்டிகளும் தேறிட்டாங்கப்பா!
வண்டியை நேரா புரசைவாக்கம் பக்கமிருக்கும் ப.சிதம்பரம் கட்சி பக்கம் விட்டோம். ஆபிஸில் யாருமில்லை. ஹி...ஹி எல்லோரும் பிரச்சாரத்துக்கு சிவகங்கை போயிருக்காங்களாம்! ஒரு எம்.பி சீட்டில் நின்னதற்காக ஒரு கூட்டணியையே நியாயப்படுத்தி பேச வேண்டிய நிலையிலிருக்கும் ப.சியின் மீது மனசில் அனுதாப அலை வந்து அடித்தது. ஸார், ஜெயிச்சு டில்லிக்கு போய்ட்டா ரெண்டு வருஷத்துக்குள் வரப்போகும் சட்டசபை எலெக்ஷனுக்கு யார் வேலை பார்க்கிறது?!
அங்கேயிருந்து நேரா தாயகம். ரஜினிதான் எங்களை நண்பர்கள்னு சொல்லிட்டாரே! அப்படின்னா என்ன அர்த்தம்? எங்களுடைய எதிரிகள் அவருக்கும் எதிரிகள்தானே... இதே டைப்பில் ஏகப்பட்ட வியாக்கியானங்கள். 'அண்ணே எதுக்குண்ணே இதெல்லாம்? நாப்பது தொகுதியை பார்க்காம உங்க நாலு தொகுதியை மட்டும் பார்த்து கரையேற வழியை பார்க்கலாமே'ன்னு நாம தைரியமா சொன்னதும் உள்ளேயிருந்து வந்த 'எவன்டா அவன்' குரலுக்கு ரீயாக்ஷன் காட்டி எஸ்கேப்பானோம்!
எக்மோர் பிரிட்ஜை தாண்டி நுங்கம்பாக்கம் வந்து விஜய் டிவி ஆபிஸ¤க்குள் நுழைஞ்சா கோபிநாத் கவலையா உட்கார்ந்திருந்தார். என்ன ஸார்.. நேரடி ஒளிபரப்பு காட்டி அசத்தினீங்க? இப்போ அசந்து போய் உட்கார்ந்திருக்கீங்களேன்னு கேட்டோம். ரசிக கண்மணிகள், 'யோவ்.......எங்களை வுட்டுட்டியே'ன்னு கேட்டதில் மிரண்டு போய்ட்டாராம். சரி வுடுங்க... ரஜினி அறிக்கை பத்தி ஷோக்கா கலக்கும் ஷாலினி என்ன சொன்னாங்கன்னு ஒரு வழிசலான கேள்வியை எடுத்துவுட்டதும் துரத்தி வுட்டுட்டார்!
ஷாலினி பத்தின நினைப்பால் ஜிவ்வானதும்தான் அந்த மடத்தனமான காரியத்தை செஞ்சேன். நண்பரை போத்தீஸ் பக்கம் டிராப் பண்ணிவிட்டு டி.நகரிலிருக்கும் பாமக தேர்தல் ஆபிஸில் ஆஜரானேன். ரஜினி அறிக்கை பத்தி கேட்டதும், ஏன் தம்பி வெட்டியா பேசணும்னு வெட்டி விடறதிலேயே குறியாய் இருந்தார் ஒரு கரை வேட்டி. 'பேசியாச்சு'ன்னு சின்ன அய்யா சொல்லியும் பத்திரிக்கைகாரனுங்க சும்மா இருக்காம பத்த வெச்சுட்டானுங்களேன்னு ஒரு சேம் சைடு கோல் போட்டதும் பார்ட்டி அம்பேல். எலெக்ஷன் முடியட்டும்....இலை வெட்டி, வேர் வெட்டி, விறகு வெட்டின்னு வெட்டியா சுத்திட்டிருக்கவனுங்களை கூப்பிட்டு வந்து ஒரு கை பார்க்குறோம்னு கர்ஜித்தது அந்த கிருதா மீசை! அந்த நேரம் பார்த்தா என் ·பிரெண்டு (நிஜமான எதிரி!) 'செல்'லடிக்குணும்?! ரிங் டோனில் வந்த ரஜினி பாட்டை கேட்டு டென்ஷனாகி, என் செல் போனை உடைச்சு, தடுத்த என்னோட காலையும் உடைச்சு... அது ஒரு சோக கதை வாத்யாரே!
- ராயப்பேட்டை ஆஸ்பிடலிலிருந்து ஜெ. ரஜினி ராம்கி

9.4.04
யாருக்கும் வெட்கமில்லை!
மதுரை அட்டாக்கில் சம்பந்தப்பட்ட ராமதாஸையும் மற்ற பாமகவினரையும் அரெஸ்ட் பண்ணி, வன்னியர்கள் ஜாஸ்தியாக இருக்கும் பகுதிகளில் மண்ணை கவ்வி ஜகா வாங்க அம்மாவுக்கு தில் கிடையாது!
(ராமதாஸ¥க்கு எதிரான?!) மதுரை தாக்குதலை கண்டித்து பாமகவை தனிமைப்படுத்தி ஓட்டுக்களை இழக்க பெரிய அய்யாவும் தயாரில்லை!
பாமகவை எதிர்ப்பதையே முழுநேர வேலையாக வைத்திருக்கும் சிறுத்தை பொடியனுக்கு எலெக்ஷன் நேரத்தில் ஏகப்பட்ட பணக் கஷ்டம், மனக் கஷ்டம்!
ஏகப்பட்ட செலவு செஞ்சு வாங்கியிருக்கும் சீட்டை யார் தயவிலாவது ஜெயிச்சாகணுமேன்னு கதர் வேஷ்டிகளுக்கு கவலை!
ஜெயிச்சு வந்தப்புறம் மெஜாரிட்டி கிடைக்காம திணறும்போது கூப்பிட்டா ஓடி வர பாமகவை விட தோதான ஆள் வேற கிடையாதுங்கிற நினைப்பு காவி கோஷ்டிக்கு!
இனிமே தமிழ்நாட்டுல தலைகீழா நின்னாலும் மூன்றாவது அணிக்கு சான்ஸ் இல்லேன்னு முடிவு கட்டி நாட்டோட வரவு செலவு கணக்கு பார்க்க அப்ளிகேஷன் போடலாம்னு 'டெல்லி சலோ' சொல்லும் சிவகங்கை சின்ன தம்பி ஒரு பக்கம்!
பூம்புகார் கூட்டத்தில் அய்யா பரேடு நடத்தினது மனசில் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து தொலைந்தாலும் எதுக்கு வீண் பிரச்சினைன்னு ஜுட் பத்திரிக்கையுலகத்து பிதாமகன்கள்!
இனிமே மஞ்சள் கோஷ்டியை பார்த்தா நம்ம மக்களெல்லாம் பஞ்சா பறந்துடுவாங்க...! டியர் பிரதர்ஸ், என் பெயரை போட்டு கொடுத்துடாதீங்கோ! ஏற்கனவே வெட்டியா அலையும் என்னை வெட்டிடுவானுங்கோ!
இப்போதைக்கு ஜூட்!
- ஜெ. ரஜினி ராம்கி

5.4.04
ஏமாத்திப்புட்டீகளே அய்யா... கலைஞர் அய்யா!
மதுரையில் டாக்டர் ராமதாஸ¥க்கு எதிராக நடைபெற்ற வன்முறையை (?) கண்டித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்ய போகிறதாம் திமுக தலைமையிலான ஜனநாயக முன்னேற்ற கூட்டணிக்கட்சிகள். கருப்புக்கொடி காட்டியவர்கள் ரஜினி ரசிகர்களே இல்லையாம்! ஆளுங்கட்சி அரேன்ஜ் பண்ணியவர்களாம். டாக்டரின் கண்டுபிடிப்பு இது! ரஜினி ரசிகர்களை விட கணிசமான ஜாதி ஓட்டுகளை கைவசம் வைத்திருக்கும் பாமகதான் முக்கியம் என்று முடிவெடுத்துவிட்டார் தென்னிந்தியாவின் மூத்த அரசியல்வாதியும் அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்டவருமான கருணாநிதி.... ஸாரி கலைஞர்!
பாபா படம் வெளியான போது நடந்த பிரச்சினைகளின் போது திமுகவுடன் பாமக நெருக்கம் காட்டாத பட்சத்திலும் கலைஞரால் வாய் திறக்க முடியவில்லை. பாஜகவை வெறுப்பேத்த பாபாஜியின் ஆயிரம் வருஷத்து பிறப்பை கிண்டலடித்தார்... அவலை நினைத்து உரலை இடிக்கிற மாதிரி! குறைந்த பட்சம் இரு தரப்புக்கும் மீடியேட்டராக செயல்படக்கூட கலைஞருக்கு நேரமுமில்லை மனசுமில்லை!
கூட்டணியில் பாமக இணைந்ததும் விழுப்புரத்தில் ரஜினி பற்றி ராமதாஸ் உதிர்த்த முத்துக்களை கண்டிக்க மனசில்லை. கூட்டணியை விட்டு கோவிச்சுக்கிட்டு போய்ட்டா என்னாவறது என்கிற நியாயமான கவலை அவருக்கு.
பாண்டிச்சேரி கூட்டத்தில் ரஜினி ரசிகர்கள் வெளிப்படையான எதிர்ப்பு நிலை எடுத்த பிறகாவது இரு தரப்பையும் தொடர்பு கொண்டிருக்கலாம் கலைஞர். அதனால் தனக்கு பாதிப்பு வராது என்று நினைத்தாரோ என்னவோ?!
குறைந்த பட்சம் மதுரையில் ரசிகர்கள் தாக்கப்பட்டபோதாவது ப.சிதம்பரம் மாதிரி வழ வழ கொழ கொழ பாணியில் ஒரு அறிக்கை கொடுத்து (அது கலைஞருக்கு அல்வா சாப்பிடற மாதிரி!) வெள்ளைக்கொடி அசைத்து விஷயத்தை சிக்கலாக்காமல் இருந்திருக்கலாம். கூட்டணிக் கட்சிகளை மெனக்கெட்டு கூட்டி தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க தீர்மானம் போட்டு ரஜினி ரசிகர்களின் உணர்வுகளை அசிங்கப்படுத்தி ஜாதி அரசியலுக்கு ஒட்டு போட்டிருக்கிறார் கலைஞர். ஜாதீயத்தோடு கூட்டணி போட்டு 2001ல் கலைஞர் பட்ட பாட்டை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
எது எப்படியோ,
நீலச் சாயம் வெளுத்துப் போச்சு...டும், டும், டும்!
ராசா வேஷம் கலைஞ்சுப் போச்சு...டும், டும், டும்!
நரி காட்டை விட்டே ஓடிப் போச்சு...டும், டும், டும்!
மக்கள் சொல்வார்கள்...நிச்சயமாக!

Subscribe to:
Posts (Atom)