27.7.07

அடுத்து என்ன?

சிங்க நடைப் போட்டு சிகரத்தில் ஏறு...

சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு..













1999ல் படையப்பா படத்துல்ல கேட்ட வரிகள்


இப்போ சிங்க நடைப் போட்டாச்சி





















சிகரத்தில்லயும் ஏறியாச்சி






















வானத்தையும் தொட்டாச்சு...
















அடுத்து என்னத் தலைவா?

24.7.07

நிமிர்ந்த ஏணிகள் நிறைந்த வாழ்க்கைப் பாதை.!

Photo Sharing and Video Hosting at Photobucket

"ரஜினி" என்ற ஒரு மனிதன் கடந்துவந்த பாதையில் பின்நோக்கிப் பயணித்து, அந்த மனிதன் இன்று இங்கு நிற்க, அன்று அவருக்கு உதவியவர்கள் முதலாக அவரது முழு முயற்சிகள் வரை புள்ளி விபரமாக ஜெ.ராம்கி தொகுத்தெழுதி கிழக்கு பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது ‘ரஜினி: சப்தமா? சகாப்தமா?’ எனும் புத்தகம்.


பொதுவாக சுயசரிதை புத்தகங்கள், பிறர்சரிதை புத்தகங்கள் எல்லாம் வாழ்ந்து முடித்தவர்களின் அல்லது வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் இருப்பவர்களின் வாழ்க்கைப் பாதை பிறருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், சம்பந்தப் பட்டவர்களைப் பற்றிப் பிறர் உயர்வாக நினைக்க வேண்டும் என்ற சிந்தனையிலும் சரிதையில் பல இடங்களில் ‘வார்த்தைகளால் வாசகனை நெக்குருகச் செய்யும்’ வித்தையைக் கையாண்டிருப்பதையும், குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளுக்காக எண்ணற்ற பக்கங்களைச் செலவு செய்திருப்பதையும் காணமுடியும். மகாத்மா காந்தியின் ‘சத்தியசோதனை’ நூலும் இதற்கு விதிவிலக்கு அல்ல.


இந்நூலின் சிறப்புகளாக மூன்று விஷயங்களைக் கூறலாம். ஒன்று: ரஜினியின் வாழ்க்கையை நடிப்பு-ஆன்மீகம்-அரசியல் என்ற முப்பெரும் பிரிவுகளாகப் பிரித்து அவற்றில் ரஜினியின் இடம் பற்றியும், அந்த மூன்றையும் ரஜினி தனக்குள் வைத்திருந்த இடம் பற்றியும் விளக்கிக் கூறுவது. இரண்டு: ரஜினியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் 10 அத்தியாயங்களாகப் பிரித்து, அவற்றிற்குத் தலைப்பாக ரஜினி நடித்த திரைப்படங்களின் தலைப்புகளைப் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்துச் சூட்டியுள்ளமை. மூன்று: தன்னைப் பற்றி ரஜினி கூறிய கருத்துக்களும், ரஜினியைப் பற்றிப் பிறர் கூறிய கருத்துக்களும் சுருக்கமாகவும், நூலின் தேவைக்கேற்ப சரியான இடத்திலும் கொடுத்திருப்பது.


எதிர்பாராமல் தனக்குக் கிடைக்கும் பெரும் புகழையும், பெருஞ்செல்வத்தையும் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் ஓர் எளிய மனிதனின் மனநிலைத் தடுமாற்றத்திற்கு ‘ரஜினியின் வாழ்க்கை’ ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது. மனத்தடுமாற்றத்திலிருந்து தன்னை மீட்டுக்கொள்ளவே ரஜினி ஆன்மீகத்தைப் பற்றிக் கொண்டார். குழப்பமான மனநிலையில் ரஜினி எடுத்த ஒரு தெளிவான முடிவு அது. ‘தமிழக அரசியல் எனும் ஒரு பெரும் விபத்திலிருந்து’ அவரைக் காப்பாற்றியதும் அதுவே தான்.


ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எவ்விதமான மறைவுகளுமின்றி வெளிப் படையாகவே இந்நூலில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றன. ரஜினி, ‘தனது இமேஜை தானே முறியடிப்பவர்’ என்பதால், அவரைப் பற்றிய இத்தகவல்கள் அவரது இமேஜை ஒரு போதும் பாதித்துவிடாது. ரஜினியின் அரசியல் ஈடுபாடுபற்றிக் கூறும்போது காங்கிரஸ் கட்சியினரின் வழக்கமான சோம்பேறித் தனத்தைச் சுட்டிக்காட்டுவதிலும், ரஜினி சந்தித்துவந்த ஆன்மிகப் பெரியோர்களை வரிசைப்படுத்துவதிலும் நூலாசிரியரின் துணிவும், திறமையும் மிளிர்கின்றன.


இப்புத்தகத்தில் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளும், ஊடுபாவாக ரஜினியைப் பற்றிக் கூர்மையான விமர்சனங்களும் கலந்திருப்பதனால் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பொது வாசகர்களும் உற்சாகமாகப் படிக்கக் கூடியவகையில் உள்ளது. ‘சந்திரமுகி’ திரைப்படத்தினைப் பார்த்த பிறகும், இந்நூலைப் படித்த பிறகும் ரஜினி என்ற மனிதர் கடந்து வந்த பாதைகளில் அவருக்காக எண்ணற்ற ஏணிகள் நிமிர்ந்தபடியே இருந்துள்ளன என்பதனைப் புரிந்துகொள்ள முடிகின்றது. நடுநிலையோடு ஒரு நடிகரைப் பற்றித் தமிழில் எழுதப்பட்ட நூல் இது.

நன்றி!

http://www.keetru.com/puthiyakaatru/aug05/rajini.html

http://tamil.cinesouth.com/specials/cslibrary/rajini.shtml

22.7.07

பெரியார் - ரஜினி - ரசிகர்கள்..?!

Photo Sharing and Video Hosting at Photobucket


தலைவர் கண்டு ரசித்தது பெரியார்!

கிடைத்தது, தமிழினத்தலைவரின் நன்றி நவிலல் கவிதை..!

ஆனால் ரசிகர்களுக்கோ ஏமாற்றம் .!?

திரையரங்கை விட்டுச்சென்ற திரைப்படத்தை

திரும்ப பார்ப்பது எப்படி என்று..?!

18.7.07

ரஜினி ரசிகர்களின் கண் தானம்

சிவாஜி படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கண் தான நிகழ்ச்சிக்கு ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
ரஜினிகாந்த் ரசிகர்களுக்கான, விசேஷ இணையதளமான

http://www.rajinifans.com/

இந்த கண்தான முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

மும்பை, வடாலா பகுதியில் உள்ள ஜ்யோத் கண் மருத்துவமனை மற்றும் கண் பாதுகாப்பு மருத்துவமனையுடன் இணைந்து இணையதள கண்தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண் தானம் செய்ய விரும்பும் ரஜினி ரசிகர்கள் மற்றும் பிறர் பின்வரும் இணைய தளத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். கண்தானம் செய்ய விரும்புவோர் செல்ல வேண்டிய இணையதளம்.

http://www.rajinifans.com/

http://thatstamil.oneindia.in/specials/cinema/heroes/rajini_070718.html?err=2

17.7.07

ஆபிஸ் ரூம் - தி பாலிடிக்ஸ்




எங்க வேலையை நாங்க பாத்துக்குறோம்

மக்கள் உங்களை நம்பி கொடுத்த 'ஆபிஸ் ரூம்' ல்ல உக்காந்து ஒழுங்கா மக்களுக்கு நல்லது செய்ங்க....

இல்லன்னா வாங்க நம்ம 'ஆபிஸ் ரூம்' போலாம்...

15.7.07

வரவேற்க புன்னகையுடன்...!

Photo Sharing and Video Hosting at Photobucket

முப்பதாவது நாளில் தமிழ் மக்கள் வெள்ளத்தில் முழ்கிக்கிடக்கும் திரையரங்குகள்.!

ரஜினியின் சிவாஜி - இந்த பெயரை கேட்டநாள் முதல் தூக்கம் கெட்டவர்கள் பலர்...!
துக்கம் அடைந்த சிலரும் கதறினார்கள் ஆரம்பத்தில் புறக்கணியுங்கள் என்று, ஆனால் கணிக்க தவறினார்கள்
தமிழ் மக்கள் மனத்தை..!
வரும் முன்பே விமரிசித்தவர்கள், சிவாஜியை காண வந்து, காத்திருக்கிறார்கள் திரையரங்குகளிலும், இணையத்திலும்..!
திருட்டுத்தனமாக, பார்க்க வேண்டாம்! எங்கள் தலைவனை!
வாருங்கள், திரையரங்கிற்கு, எங்கள் நண்பர்கள் காத்திருப்பார்கள் உங்களை வரவேற்க புன்னகையுடன்...!

Photo Sharing and Video Hosting at Photobucket


இதுதான் நாங்கள் கற்ற வேதம் எம் தலைவனிடமிருந்து -

அமைதி காப்பது.!

அன்பால் அரவணைப்பது..!!

12.7.07

மறுபடியும்...!

Photo Sharing and Video Hosting at Photobucket

படம் வெளியாகும் முன்பே பலரின் விமர்சன பார்வையில் காண(கண்)பட்ட உங்களின் முதல் படம்!

அமைதி வழி என்றுமே அன்பின் வழி என்பதை ரசிகர்களுக்கு சொல்லிக்கொடுத்த உங்களின் படத்திற்கோ எவ்வளவோ கடுமையான விமர்சனங்கள் -அமைதியாக நீங்கள் - அது போலவே உங்களின் ரசிகர்கள்!

விமரிசித்து விமரிசித்து போராடி தோற்றார்கள் எதிராளிகள் - ரசிகர்கள் காத்த அமைதியால்..!

நீங்கள் சொன்னபின்னர்தான் தமிழ் வார்த்தைக்கே வலிமை கூடியது, அனைவரும் "அதிர"செய்தார்கள் - சொன்னார்கள்.

வெவ்வேறு இடங்களுக்கு பிரிந்தவர்கள் ஒன்று கூடினார்கள் - ஐரோப்பிய நாடுகளில்..

வெவ்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள் ஒன்று கூடினார்கள் - வளைகுடா நாடுகளில்..

வெவ்வேறு தலைமுறைகள் மகிழ்ச்சி பரிமாறின,அனைத்து இடங்களிலும்..!

உள்ளங்களை பிணைத்த,

உலக தமிழர்களை இணைத்து,

தமிழ் உள்ளங்களை இணைக்கும் சக்தி கொண்டவன் நீ என்பதை உணர்த்தினாய், உலகுக்கு மறுபடியும்...!
Photo Sharing and Video Hosting at Photobucket

10.7.07

பத்த வச்சிட்டீயே பரட்டை



SIVAJI SETS BOX OFFICE ON FIRE !!!!!
-With sincere thanks to media reports on Sivaji BO collections