22.12.05

பெங்களூரில் பிறந்தநாள்



சூப்பர் ஸ்டாரின் 56வது பிறந்தநாள் ww.rajinifans.com சார்பில் எளிய முறையில் பெங்களூரில் கொண்டாடப்பட்டது. கோத்தனூர் தீனா சேவா ஆதரவற்றோர் இல்லத்தில் கூடிய இணைய நண்பர்கள், சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை காப்பகத்தில் உள்ள ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட மூன்று வயதுக்குட்பட்ட 27 ஆதரவற்ற குழந்தைகளுடன் சில மணி நேரங்கள் தங்கியிருந்து கொண்டாடினார்கள். பிறந்தநாள் கேக்கை வெட்டிய குழந்தைகள், சூப்பர் ஸ்டாரின் நலனுக்காக நடைபெற்ற பிரார்த்தனையிலும் கலந்து கொண்டார்கள். காப்பகத்தில் தங்கியிருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பெங்களூர் சிறப்புத் தொடர்பாளர் ராஜா, தீபா வேணுகோபால், இளவரசன், ரஜினி சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர். விழாவிற்கான பொருளுதவிகளை அருண்குமார், தீபா, பிரவீண் மற்றும் பாஸ்கர் ஆகியோர் செய்திருந்தனர். மஞ்சு குமார், முருகன், குண சேகரன், மோகன், சுந்தரமூர்த்தி, தீபக், பிரவீண், ஜெயந்தி, கோபிநாத், கண்ணன், விஜயராஜா, சதீஷ், ஷாம், அஷோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டு குழந்தைகளின் சந்தோஷத்தில் பங்குகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

- ராம்கி

16.12.05

Rajini's Birthday Celebration at IIMB Bangalore Campus

11 December it was!

The eve of Rajinikanth's Birthday!

The celebrations for Superstar's Birthday started in the campus. Sambhar Mafia, the official thamizh junta of IIMB, celebrated this Thiruvizha (festival) with such grandeur! The mess was decorated with huge posters of Rajini. Charts with collage of loads and loads of Rajini photos adorned the walls! From 7:00 pm, all superhit songs of Rajini were played in the mess. Thus, the environment was all set for a huge celebration!The junta was also ready with drums and whistles (none of us knew how to whistle without the whistle!!!)

Posters and collage in mess

Life-size banner, posters, special sweets, birthday-cake, Crackers, poosani kaai, karpooram - all the stuff required for a full-fledged celebration - u name it, we had it! We screened the superhit movie Padayappa on big screen which ended at 11:55 pm on 11th Dec. Not only the Thamizhs, but lots of non-thamizh people also to join us to watch the movie and take part in the celebrations!


The 'enthu' crowd just before the movie... That's "yours truly" in the extreme right!

The movie ended at 11:55... Bursting of crackers started immediately - all over the hostel blocks! And at 12 Midnite, one of my friends, Manoj, who dressed up as SuperStar, did some typical Rajini styles! Then our own "superstar" Manoj cut the cake...

Manoj, the IIMB Superstar, performing the famous cooling-glass trick!

Then it was the time to "drishti suththi-fy" for Superstar! Our student-president, Sathya, did the honours by showing the camphor-lit poosani kaai in front of the life-size banner of superstar...When Sathya finally broke the " poosani kaai" the entire hostel was filled with chants of "thalaivar...vaazhga"!!! The next thing on our schedule was distribution of sweets to everyone in the hostel - door delivery - which was completed by 1:30 am!

President Sathya with the Poosani Kaai

It was a whole new experience as none of us have seen or been a part of anything like this before!

13.12.05

ரஜினி - 56



"இந்த உலகமே நாடகம். நாமெல்லாம் நடிகர்கள். அலைகள் வந்து வந்து போகும். ஆனா, கடல் மட்டும் மாறாம அப்படியே இருக்கும். நடிகர்கள் மாறிட்டே இருப்பாங்க. நாடகம் நடந்துக்கிட்டே இருக்கும். ஆண்டவன் நமக்கு கொடுத்த பாத்திரங்களை அவனுக்கு பிடிச்ச மாதிரி செஞ்சாத்தான் நமக்கு அவன்கிட்ட இடம் கிடைக்கும்" - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடும்
எங்களின் இதய தெய்வத்தை
வாழ்த்தி வணங்குகிறோம்!

12.12.05

தலைவருக்குப் பொறந்த நாள்ப்பா....

அவன் கன்னடத்தான்,,,அவன் தமிழன் இல்லை... அட போங்கய்யா...

தமிழ் தமிழ்ன்னு பேசித் திரிஞ்சவங்களூம் சரி.. திரியரவங்களும் சரி.. முக்காடு போட்டுட்டு எத்தனை சேட்டு கிட்டே எவ்வளவு தடவைக் கூட்டணிப் பேசி எத்தனை மேடைப் போட்டு நம்மளை அடமானம் வச்சிருப்பாய்ங்க....

அவன் நடிகன்... அட சாமீகளா... நீங்க நடிக்காத நடிப்பா... எம்புட்டு கெட்டப் போடுறீய... கலர் கலராத் துண்டை மாத்துறிய... தேர்தலுக்குத் தேர்தல் குரூப்பை மாத்துறிய...அவர் படம் பிடிக்கல்லன்னாக் கூட இடைவேளையிலெ எந்திரிச்சு வந்துறலாம்... உங்க ஆட்சி பிடிக்கல்லன்னா என்னத்தச் செய்ய??

அய்யா.. மத்தியிலே மவுசு வேணும்னா ... தேசியம் பேசுறிய... மாநிலத்திலே மக்கா.... பிரிசசு பேசுதிய?தமிழா!!! உனக்குச் சொன்னாக் கோபம் வரும்... இருந்தும் சொல்லுதென்....

பாரதின்னு ஒரு மகாகவி.. அவன் இருக்க வரைக்கும் அவனை மதிக்க உனக்கு மனசு வர்றல்ல..அவன் போன பிறவு அவனை மிதிச்ச யானையோட விட்டய தேடித் துவேஷம் காட்டுதே... ஏம்லே அப்படி??

தமிழா.. வாழ்த்துவோம்லே... வந்தவரோ...இங்கேயே இருந்தவரோ....அவர் ஒசந்து இருக்காருலே... அவரைப் போலே வாழ்க்கையை ஜெயிக்கணும்னு நெனை...தப்பில்ல...

அட மனசுக்கு வாழ்த்த்ச் சொல்லிக் கொடு... உனக்கு வாழ்க்கை அள்ளிக் கொடுக்கும்...தலைவா HAPPY BIRTHDAY TO U