31.8.04

காவிரியால் ஒரு விளையாட்டு!

ஆண்டுதோறும் நடைபெறும் அரசியல் விளையாட்டாக காவிரி நீர் பிரச்சனை உருமாறிக்கொண்டிருக்கிறது. தண்ணீருக்காக நடைபெறும் இந்த போராட்டம் செந்நீரால் முடிகிறது. தன்னை மறந்துப்போன மக்களுக்கு அடையாளங்காட்ட நெய்வேலி போராட்டத்தை தேர்ந்தெடுத்தார் பாரதிராஜா. தண்ணீர் இல்லையேல் மின்சாரம் இல்லை என்கின்ற போரட்டத்திற்கு பதிலாக, தண்ணீர் இல்லையேல் தமிழ் திரைப்படம் கர்நாடகத்தில் திரையிடுவதில்லை என போராடியிருக்கலாம். இப்படி போராடினால் இந்த நடிகர்களும், விநியோகஸ்தர்களும் நஷ்டமடைவார்கள் அதை இந்த நடிகர்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இவர்கள் பணம் சேர்ப்பதற்கு கர்நாடகா மக்களும், அங்கிருக்கும் தமிழர்களும் தேவை ஆனால் மின்சாரம் மட்டும் தரமாட்டோம் என எந்த உரிமையில் இவர்கள் போராடினார்கள்? மின்சாரத்தை இவர்கள் நிறுத்துவதாக வைத்துக்கொண்டால் அங்கிருக்கும் தமிழர்களும் அல்லவா பாதிக்கப்படுகிறார்கள்? அந்த தமிழர்களின் வீடுகளும் அல்லவா இருட்டால் பாதிக்கப்பட்டிருக்கும்? பக்கத்து மாநில தமிழர்களையே பாதுகாக்க மறுக்கும் இவர்களின் மனம் எப்படி இலங்கை தமிழர்களை பற்றி வாய் கூசாமல் பேசுகிறது? இப்ப்டி எல்லாம் போராட்டம் நடத்திய விஜயகாந்த்தால் எப்படி வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கவேண்டும் என வீர வசனம் பேச முடிகிறது? இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சரத்குமார் எப்படி முன்னாள் முதல்வர் கிருஷ்ணாவிற்காக கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிந்தது? பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கும், நலிந்த கலைஞர்களுக்கும் ஸ்டார் ஷோ நடத்தி நிதி திரட்ட முன் வந்த விஜயகாந்த், இந்த போராட்டத்திற்கு பதிலாய் அந்த ஒரு நாளில் தமிழக விவசாயிகளுக்காக ஸ்டார் ஷோ நடத்த முன் வந்திருந்தால் சூப்பர் ஸ்டார் முழு மனதோடு மகிழ்ச்சிபொங்க கலந்துகொண்டிருப்பார். சூப்பர் ஸ்டாரின் செல்வாக்கை எப்படியாவது தட்டி பறித்துவிடலாம் என்ற நோக்கோடு இருந்த விஜயகாந்த்திற்கும், பாரதிராஜாவிற்கும் முடிவில் மிஞ்சியது ஏமாற்றமே. கூட்டமாய் இவர்கள் நடத்திய அநீதி போராட்டத்தை காட்டிலும் தனி மனிதனாய் நீதி வேண்டி போராடிய சூப்பர் ஸ்டாரின் போராட்டமே வென்றது. எல்லாவற்றிற்கும் மேலாக முன்னாள் கர்நாடகா முதல்வர் கிருஷ்ணா அவர்கள், ரஜினிகாந்த்தின் அகிம்சை போராட்டத்தால் மழை பொழிய ஆரம்பித்துவிட்டது, இது காவிரி பிரச்சனையை தீர்க்கும் என கூறியது சூப்பர் ஸ்டாரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிகளுள் ஒன்று. உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதித்து அகிம்சையாய் போராடிய நம் தலைவரின் போராட்டம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் மனதில் பீதியை ஏற்படுத்தியது. சூப்பர் ஸ்டாரை எதிர்க்கும் எவரும் வென்றதில்லை என்பது மட்டும் உறுதி. பாமக வென்றதும் கூட கூட்டணி கட்சிகளால்தான். அதிலும் பாமகவின் வாக்குகள் சிதறிக்கப்பட்டுள்ளதை பாமகவே ஒப்புக்கொண்டுள்ளது. சூப்பர் ஸ்டாரை நல்ல மனிதன் என கலைஞரும், ராமதாசும், அன்புமணியும் தேர்தல் பயத்தில் உண்மையாய் ஒப்புக்கொண்டது மறக்க முடியாதது. ரஜினி எனும் சக்தி முழுதாய் வெளிப்படும்போது, மக்களை ஏமாற்றும் அரசியல் தடங்கள் அழிக்கப்படுவது நிச்சயம்.

மா. இரவிசங்கர்
on behalf of www.rajinifans.com

4 comments:

Anonymous said...

i pity the fans.rajni will never come to politics.cauvery issue cannot be solved by him.he thinks
that linking rivers will work but he does not realise that it wont solve any problem rather create new ones

ஜெ. ராம்கி said...

நதிநீர் இணைப்பிற்கும் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கும் சம்பந்தமில்லை என்றுதான் பெரும்பாலான ரசிகர்கள் நினைக்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வந்துதான் நதிநீரையெல்லாம் இணைத்தாகவேண்டும் என்று அப்பாவித்தனமாக எதிர்பார்த்து யாரும் இங்கே இருக்கவில்லை. நதிநீர் இணப்பு கானல் நீராகிப் போனால் அதற்கான பொறுப்பு முழுவதும் அரசியல்வாதிகளையே சாரும். ரஜினியின் அரசியல் பிரவேசம் சேவையின் அடிப்படையில்தான் இருக்குமேயொழிய தனக்கெதிரான சவால்களையோ தனிமனிதரையோ எதிர்த்து நிச்சயமாக இருக்காது என்பதைமட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

Anonymous said...

Can please tell me which Font are you using...I am not able read it....

Voice of Rajinifans said...

Hi,

Kindly pls send me a email to get the font at shadotcom@yahoo.com or buzz me in Yahoo messenger

Shajahan