21.5.04

ரஜினி வாய்ஸ் தந்த மாஸ்!

எலெக்ஷன் ரிசல்ட் நான் எதிர்பார்த்த மாதிரி இருந்ததோ இல்லையோ எலெக்ஷனுக்கப்புறம் வந்த ரஜினி வாய்ஸ் பத்தின அலசல் கரெக்டாதான் இருந்தது. ரஜினி வாய்ஸ் தெளிவா இல்லை, ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை, அதிமுகவுக்கு ஆதரவான நிலை என்று ஏகப்பட்ட காரணங்களை எல்லோரும் அடுக்கினார்கள்.

ரஜினி வாய்ஸ் தெளிவா இல்லைன்னு யாரும் எலெக்ஷனுக்கு முந்தியே சொல்லலைங்கிறதை இங்கே சொல்லியே ஆகணும். தன்னுடைய நிலையை மெஜாரிட்டி மக்கள் ஏத்துக்க மாட்டாங்கங்கிறது ரஜினிக்கே நல்லாவே தெரிஞ்சதாலதான் உறுதியா தன்னுடைய நிலையை எடுத்துச் சொல்லலைங்கிறதுதான் நிஜம். திமுக தலைமையிலான கூட்டணியே பெரும்பான்மையான இடங்களை பிடிக்கும் என்பது எல்லோரும் எதிர்ப்பார்த்த விஷயம்தான். எதிர்பார்க்காதது அதிமுக தலைமையிலான கூட்டணி ஒரு இடங்களை கூட பிடிக்காது என்பதுதான்.

ரஜினி எந்த நிலையிலும் அதிமுகவுக்கு ஆதரவாக தனது கருத்தை சொல்லவேயில்லை. மீடியா சந்திப்பில் கூட சர்வ ஜாக்கிரதையாக பாஜக பத்தி பேசினாரேயொழிய அதிமுக பத்தி எதுவும் சொல்லவில்லை. டில்லியில் தேர்தல் கமிஷன் ஆபிஸ் வாசலில் பத்திரிக்கையாளரிடம் பேசும்போது கூட அதிமுகவுக்கு தனது ஆதரவு இல்லையென்றுதான் குறிப்பிட்டார். சென்னைக்கு வந்த வாஜ்பாயை ரஜினி சந்திக்கப் போனதால் அம்மா ஏர்போர்ட் வரவேற்பை புறக்கணித்தது எல்லோருக்கும் தெரியும். வாக்களித்துவிட்டு வெளியே வந்த ரஜினியிடமிருந்து ரொம்ப கஷ்டப்பட்டு ரிப்போர்ட்டர்கள் வாங்கிய பதிலை ஏதோ ரஜினியே கூப்பிட்டு சொன்ன மாதிரி நியூஸ் போட்டது மீடியாவின் கைங்கர்யம்.

தண்ணீர் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை; அது அரசியல் பிரச்சினை அல்ல. இன்றும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் அரசியல் தலையீடின்றி மைசூர் பகுதி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். எந்த அரசியல்வாதியும் காவிரி பிரச்சினையில் தலையிட வேண்டாம் என்பதுதான் பெரும்பாலான விவசாயிகளின் கருத்து. நதிநீர் இணைப்பை ரஜினி கையிலெடுக்கிறார் என்பதற்காகவே அத்திட்டத்தை பற்றிய கடுமையான விமர்சனங்கள் தமிழகத்தில் உலா வரும் என்பது இரண்டு வருடங்களுக்கு முன்பே எதிர்பார்த்த சங்கதிதான். நதிநீர் இணைப்பை வலியுறுத்தி காவிரி டெல்டா பகுதிகளில் ரஜினி சுற்றுப்பயணம் செய்திருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், தமிழக அரசியலில் ரஜினியின் இடத்தை புரிந்து கொள்ளவில்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ரஜினி முழுநேர அரசியல்வாதியோ அல்லது வெறும் பிரபலமான சினிமா நடிகர் மட்டும் தான் என்றோ சொல்லிவிட முடியாது. அரசியல் ஆர்வமில்லாத ரஜினி, தன்னால் முடிந்த அளவு சூழலுக்கு ஏற்ற மாதிரி தன்னுடைய கருத்தை தெரிவிக்கிறார். இப்போதைக்கு ரஜினியால் முடிந்தது அவ்வளவுதான். எம்.ஜி.ஆர் ஸ்டைல் அரசியலை மக்கள் எதிர்பார்க்கலாம். அரசியல் பார்வையாளர்களும் எதிர்பார்க்கலாமா?

என்.டி.ஏ கூட்டணி நதிநீர் கொள்கையை முன்வைக்கிறது என்பதற்காகவே அதற்கு எதிரான ஒரு கொள்கை முடிவை தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி எடுத்தது. நதிநீர் இணைப்பு என்பது நீண்டகால திட்டம். தேசத்தின் நீர் ஆதாரங்களை பெருக்கும் பல்வேறு திட்டங்களில் நதிநீர் இணைப்பும் ஒரு திட்டம். கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிப்பது என்பது இன்னொரு திட்டம். இது சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வல்லது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் , நதி நீர் இணைப்பு காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் பாசன நீர் பிரச்சினையை தீர்க்கவல்லது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அரசியல்வாதிகளுக்கு மக்கள்தான் புரிய வைக்கவேண்டும்.

பாமக தலைவர்கள் பற்றி ரஜினியோ, ரஜினி ரசிகர்களோ தரக்குறைவாக பேசியது இல்லை. எம்.ஜி. ஆரில் ஆரம்பித்து எல்லா ஆக்ஷன் ஹ¥ரோக்களும் பக்கத்து நாட்டு தீவிரவாதிகளில் ஆரம்பித்து ஜாதிக் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் என எல்லோரையும் பக்கா வில்லனாக்கி பக்கம் பக்கமாக வசனம் பேசி நடிக்கும் போது அரசியல்வாதிகளை பற்றிய நாகரீகமான விமர்சனங்களையே ரஜினி தனது படங்களில் முன்வைத்தார். தனிப்பட்ட எந்த நபரையும் ஆதரித்தோ, எதிர்த்தோ ரஜினி சினிமாவிலோ அல்லது நிஜ வாழ்க்கையிலோ செயல்பட்டு ரசிகர்களை தவறாக பாதைக்கு அழைத்துச் சென்றதில்லை.

இந்த தேர்தலில் ரஜினி ஒரு நிலை எடுத்தே ஆகணும்னு ரசிகர்கள் எதிர்பார்த்தாங்களோ இல்லையோ வம்பானந்தாக்களும் கழுகார்களும் ரொம்பவே எதிர்பார்த்தாங்க. எலெக்ஷனுக்கு முந்தியும் அதற்கு அப்புறமும் மதுரை அட்டாக் பத்தி யாரும் வாய் திறக்கவேயில்லை. உண்மையில் மதுரையில் அட்டாக் நடந்திராவிட்டால் வோட்டுப் போடுவதற்கு மட்டும்தான் ரஜினி சென்னை திரும்பியிருப்பார்.

ரஜினி ரசிகர்களை வெளிப்படையாக முட்டாள் என்று சொல்ல பாமக நிறுவனருக்கு இருக்கும் தைரியம் ஒரு தனி ரகம். ஜனநாயக முறையில் செயல்படும் மன்றங்களை கலைக்கும் அதிகாரத்தை யார் இவருக்கு கொடுத்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் விமர்சிக்க மீடியாவுக்கு நேரமில்லை. தேர்தலுக்கு முன்பும் இப்போதும் தொடரும் மிரட்டல்கள் பற்றி ரசிகர்கள் கவலைப்படாததற்கு காரணம் ரசிகர்களிடம் ரஜினி நெருக்கமாக வந்திருப்பதுதான். ரஜினி ரசிகர்கள் பெற்றிருக்கும் உண்மையான வெற்றி இதுதான்.

தனது பாமக எதிர்ப்பு நிலைக்கு சுயநலமே காரணம் என்று சொல்லிவிடுவார்களே என்பதற்காகவே ரஜினி தனது கருத்தை மட்டுமே தெரிவித்தார். மக்களையோ தனது ரசிகர்களையோ தன்னுடைய பேச்சை கேட்டாக வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். பாமகவை எதிர்க்கும் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி தான் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட தன்னுடைய ஒப்புதலை தெரிவித்ததாகவும் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர் ஸ்டைலில் தோள் மீது கை போட்டே எதிரியை அழித்துவிடலாம் என்கிற அரசியல் தந்திரத்தை அப்ளை பண்ணும் அளவுக்கு யாரும் இங்கே அரசியலில் தேறவில்லை!

ரஜினி எந்தக் கூட்டணிக்கும் தனது ஆதரவில்லை என்று சொன்னதை தேசிய அளவிலான மீடியாக்கள் மட்டுமே செய்தியாக்கியின. உள்ளூர் பத்திரிக்கைகளோ வேறு மாதிரியாக எழுதி வைத்ததை சொல்லத் தேவையில்லை. சன், ஜெயா, ராஜ் டிவிக்கள் ரஜினியின் அறிக்கையிலிருந்து தேவையானதை மட்டும் எடிட் செய்து கொண்டதை தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

ரஜினியின் அரசியல் தலையீட்டிற்கு காரணம் பழிவாங்கும் தன்மை என்று கொச்சைப்படுத்துபவர்களுக்கு ஒரு வார்த்தை. நள்ளிரவு கைது விஷயத்துக்கு பிரச்சாரத்தில் ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது? ராதிகா செல்வி ஏன் எலெக்ஷனில் நின்று எம்பி ஆனார்? வைகோ வாஜ்பாய் அரசுக்கு தனது ஆதரவை விலக்கிக் கொண்டது ஏன்? திருமாவளவனால் ஏன் திமுக கூட்டணிக்கு ஆதரவை தரமுடியவில்லை? நக்கீரன், ஹிந்து, கல்கி, இந்தியா டுடே பத்திரிக்கைகள் ஏன் அதிமுகவுக்கு எதிரான நிலை எடுத்தன? இதற்கான உண்மையான பதில்கள் கிடைக்குமா?

எல்லாவற்றிற்கும் மேலாக, மதுரை தாக்குதலை கண்டித்து எந்தக் கட்சியும் ஒரு சின்ன வருத்தத்தை கூட தெரிவிக்கவில்லை. (ப. சிதம்பரம் உட்பட) ஒரு நடுநிலையான பத்திரிக்கை ஒரு படி மேலே போய் இவர்கள் ஏன் போய் கருப்புக் கொடி காட்டவேண்டும் என்று எழுதி வைத்தது. தமிழ்நாட்டில் கருப்புக் கொடி காட்டுவது அதிகப்பிரசங்கித்தனம் என்கிற தனது கருத்தை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டால் சந்தோஷப்படுவோம்.

ரஜினி வாய்ஸ் வலுவிழந்து போய்விட்டது என்று நினைக்கும் அரசியல்கட்சிகளுக்கும் மீடியாக்காரர்களுக்கும் கடைசியாக சில பணிவான கோரிக்கைகள்.

1. நதிநீர் இணைப்போ, கடல்நீரிலிருந்து குடிநீர் திட்டமோ, வீராணம் திட்டமோ தமிழகத்தின் தண்ணீர் தேவையை சமாளிப்பதற்கு ஏதாவது செய்ய முடியுமா?

2. மத்தியிலும், கர்நாடகத்திலும் தேவ கெளடா உதவியுடன் ஆட்சியமைக்கும் காங்கிஸை காவிரி நதி நீர் பிரச்சினையில் தமிழகத்தின் கூட்டணி கட்சிகள் ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட முயற்சியெடுக்குமாறு கேட்டுக் கொள்ளுமா?

3. மதவாதத்தை தேர்தலில் ஒழித்துக் கட்டிய கட்சிகளால் வரும் தேர்தலில் ஜாதீயத்தையும் ஒழிக்க முடியுமா?

4. எலெக்ஷன் நேரத்தில் ரஜினி மற்றும் ரஜினி ரசிகர்களின் அரசியல் நிலைப்பாடு பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையை பார்க்கமுடியுமா?

ரஜினியை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுப்பது அநாகரீகமான விஷயம். 'விமர்சனங்களை வரவேற்கிறோம்' என்கிற பதில் எங்களிடமிருந்து எப்போதும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ரஜினியை பாராட்டி புகழ்ந்து எழுதுவதையும், பேசுவதையும் நிறுத்திக் கொள்ளலாமே என்கிற எங்களது கோரிக்கைக்கு உங்களால் செவி சாய்க்க முடியுமா?

அன்புடன் ஜெ. ரஜினி ராம்கி.

13.5.04

'தேறியவர்கள்' லிஸ்ட்!

தமிழகத்தில் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர்களின் பட்டியல்

செங்கல்பட்டு ஏ.கே.மூர்த்தி -

பாண்டிச்சேரி ராமதாஸ் -

திண்டிவனம் தன்ராஜ் -

சிதம்பரம் பொன்னுசாமி -

அரக்கோணம் வேலு -

தர்மபுரி செந்தில் -

பெரிகுளம் ஆருண் -

சந்தோஷமான சமாச்சாரம் - அசெம்பளி தேர்தலுக்கு அதிக நாட்கள் இல்லையாம்!
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!


******************************************************************
தமிழகத் தேர்தலில் சில புள்ளி விவரங்கள்
* தமிழகத்தின் 39 தொகுதிகளில் மூன்று தவிர மீதி அனைத்திலும் வெற்றி பெற்றவர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். [ஒரு லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள்: பெரியகுளம், சிதம்பரம், திண்டிவனம்]

* மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் பெரியகுளத்தில் காங்கிரசின் ஆரூண் ரஷீத் (பெற்ற வாக்குகள்: 3,46,851). தோற்றவர் அதிமுகவின் TTV தினகரன் (3,25,696). வாக்குகள் வித்தியாசம் 21,155.

* மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் வட சென்னையில் திமுகவின் C.குப்புசாமி (5,70,122). தோற்றவர் பாஜகவின் சுகுமாரன் நம்பியார் (3,16,583). வித்தியாசம் 2,53,539. வட சென்னை தொகுதிதான் தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டது (20,00,866). மொத்தம் பதிவான வாக்குகள் 9,15,865. தென் சென்னையில் பதிவான வாக்குகள் இதைவிட சற்று அதிகம் 9,34,548. தென் சென்னை வாக்காளர் எண்ணிக்கை 19,49,904.

* பதிவான வாக்குகளிளேயே மிக அதிக சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர் காங்கிரசின் கார்வேந்தன். தொகுதி பழனி. மொத்த வாக்குகள் 10,88,931. பதிவான வாக்குகள் 6,95,442. கார்வேந்தன் பெற்ற வாக்குகள் 4,48,900. சதவிகிதம் 64.55%.

* பதிவான வாக்குகளிலேயே மிகக் குறைந்த சதவிகித வாக்குகளைப் பெற்று வென்றவர் பாமகவின் பொன்னுசாமி, சிதம்பரத்திலிருந்து. மொத்த வாக்குகள் 11,25,487, பதிவான வாக்குகள் 7,43,410, பொன்னுசாமி பெற்ற வாக்குகள் 3,43,424 (46.20%). ரஜினி எஃபெக்ட்? ஆனால் இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் மூன்றாம் இடத்தைத்தான் பெற்றார். இரண்டாம் இடத்தைப் பெற்றது விடுதலை சிறுத்தைகளின் திருமாவளவன் (2,55,773). பாஜகவின் 'தடா' பெரியசாமி பெற்ற வாக்குகள் 1,13,974 மட்டுமே.

* ரஜினி எஃபெக்ட்: பாமக போட்டியிட்ட இடங்களில் வெற்றிக்கான வாக்கு வித்தியாசங்கள்: செங்கல்பட்டு 1,48,724 (19.6%); அரக்கோணம் 1,02,196 (13.1%); திண்டிவனம் 91,164 (12.5%); சிதம்பரம் 87,651 (11.8%); தர்மபுரி 2,16,090 (30.4%); பாண்டிச்சேரி 69,181 (14.3%).

பிராக்கெட்டில் கொடுத்திருப்பது பதிவான வாக்குகளில் இந்த வித்தியாசம் எத்தனை சதவிகிதம் என்பது.

சிதம்பரத்தில் கடுமையான போட்டி இருந்துள்ளது. இதற்குக் காரணம் திருமாவளவன் களத்தில் இருந்தது, மற்றும் மூன்று முக்கியமான போட்டியாளர்கள் இருந்தது. திண்டிவனத்தில் ஒருவேளை ரஜினி எஃபெக்ட் கொஞ்சம் இருந்திருக்க வேண்டும். பாண்டிச்சேரி வாக்கு வித்தியாசம் ஒரு லட்சத்துக்கும் கீழ் இருந்தாலும் அந்தத் தொகுதி சிறியது - மொத்த வாக்குகள் 6,36,667, பதிவான வாக்குகள் 4,83,816.

Courtesy : http://thoughtsintamil.blogspot.com

7.5.04

சத்தியுடன் ஒரு சந்திப்பு!

இரண்டு நாட்களாக சென்னையில் தொடர்ந்த மழை, தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த நேரம். வானம், கருமையான மேகக்கூட்டங்களுடன் இடி மின்னலுக்கு தயாராய்... பா.ம.க போட்டியிடும் தொகுதிகளைப் போல்!

போன மாதம் ரஜினி அறிக்கையின் மூலம் பரபரப்பு காட்டிய அதே ராகவேந்திரா திருமண மண்டபம்.... அரசியல் பரபரப்பு ஏதுமின்றி அமைதியாய்! வியாழக்கிழமை இருள் சாயும் நேரம். முன்கூட்டியே அனுமதி வாங்கியிருந்ததால் உள்ளே அழைத்துப்போய் உட்கார வைத்து, காத்திருக்க சொன்னார்கள். கூடவே உள்ளுர், வெளியூரிலிருந்து உதவி தேடி வந்த ரசிகர்களும் தளபதியின் வருகைக்காக காத்திருந்தார்கள்.

அரை மணி நேர காத்திருப்புக்கு பின்பு புயலென வந்தார் அந்த தளபதி! தமிழ்நாட்டின் மிகப்பெரிய இளைஞர் படையை பொறுப்போடு கட்டிக் காக்கும் ரஜினியின் பி.ஆர்.ஓ! பேச்சு, நடை, பார்வை என்று எல்லாவற்றிலும் அறுபது சதவிகித ரஜினியை ஞாபகப்படுத்தினார். எத்தனையோ முறை சந்திருந்தாலும் இந்த முறை ஏதோ 'சம்திங் ஸ்பெஷல்' சந்திப்பு என்றே மனப்பட்சி சொன்னது.

தேர்தல் வேலைகளில் ஒன்றிப்போயிருந்த களைப்பு கண்களில் தெரிந்தாலும் எல்லோரையும் தனித்தனியாக வரவேற்க தவறவில்லை. நம்மை கொஞ்சம் நேரம் காத்திருக்கச் சொன்னவர், விருகம்பாக்கத்திலிருந்து உதவி கேட்டு வந்திருந்த பெண்மணியிடம் ஏற்கனவே கொடுத்திருந்த எலெக்ட்ரிக் ஹ¥ட்டர் என்னாச்சு என்றார். எலெக்ட்ரிக் பில் ஏகத்துக்கும் வருவதாக சொன்ன பெண்மணியிடம் குடும்பத்தின் பொருளாதார நிலைமை பற்றி கேட்டறிந்தவர். உதவியாளர்களை கூப்பிட்டு ஆபிஸில் வைத்திருந்த சாதாரண ஹ¥ட்டரை எடுத்து வந்து கொடுக்கச் சொன்னார். போட்டோ வேண்டாமே...ப்ளீஸ் என்று மறுத்தவரிடம் கெஞ்சி நமது வலைத்தளத்துக்காக பயன்படுத்த வேண்டி போட்டோ எடுத்துக் கொண்டோம்.



தன்னால் கண்களை மூட முடியவில்லை என்று மருத்துவ உதவி கேட்டு வந்த ரசிகரின் உடல்நிலையை வாஞ்சையுடன் விசாரித்தவர், அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை மற்றும் அவரது பொருளாதார நிலைமை பற்றி கேட்டுவிட்டு மறுநாள் வந்து டெஸ்ட்டிங் செய்து கொள்வதற்கான தொகையை வாங்கிச் செல்லுமாறு பணித்ததும், இமைகள் மூடாத அந்த கண்களிலிருந்து கரைபுரண்டு வந்த கண்ணீரை நம்மால் கவனிக்க முடிந்தது.

நாம் வந்திருந்த நோக்கத்தை சொன்னவுடன் வெகுவாக பாராட்டியவர் www.rajinifans.com பற்றி மற்ற விபரங்களையும் கவனமுடன் கேட்டுக் கொண்டார். தனக்கு கம்யூட்டர் பற்றிய அறிவு இல்லை என்று தன்னடக்கமாய் மறுத்தாலும் ஒரு Non-Profit ஆக எப்படியரு வலைத்தளத்தை தொடர்ந்து நடத்துகிறீர்கள் என்று ஆச்சர்யப்பட்டு தட்டிக் கொடுத்து பாராட்டினார். ரஜினி ரசிகர்களின் தேவையை கவனிக்கவே தான் இருப்பதாக சொன்னவர், நமது வலைத்தள அன்பர்கள் கொடுத்த தொகையை பல்வேறு பொதுக்காரியங்களுக்கு பயன்படுத்தலாமே என்று ஆலோசனையும் கொடுத்தார். ரசிகர்களுக்கு செய்வதை விட எப்போதும் சமூகத்தில் ஒதுக்கப்பட்டுவரும் ஏழை எளிய மக்களுக்கு சிறு சிறு உதவிகளாக செய்வது மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்றார்.

பத்து ரூபாய் பெறுமானமுள்ள அலுமினியத் தட்டு கூட இல்லாமல் மதிய உணவுக்காக தடுமாறும் கிராமப்புற குழந்தைகளுக்கும் தர்மாஸ்பத்திரியில் குறைவான படுக்கை வசதிகளுடன் நெருக்கியடித்து படுத்திருக்கும் ஏழை நோயாளிகளும் பயன்பெறும்படி நல்ல காரியத்துக்காக இத்தொகையை செலவிட வேண்டுமாறு கேட்டுக்கொண்டவர், அப்படியரு நல்ல காரியங்களை www.rajinifans.com நடத்தும் பட்சத்தில் விழாவில் கலந்து கொண்டு தானே முன்னின்று உதவிகள் வழங்கிட நிச்சயம் வருவேன் என்றும் உறுதியளித்தார்.

'ஜக்குபாய்' படம் பற்றிய பொய்யான செய்திகள் மீடியாவில் உலா வருவதை தடுத்து அதிகாரபூர்வமான செய்திகளை ரசிகர்களுக்கு வழங்க நமது வலைத்தளத்திற்கு அங்கீகாரம் தரவேண்டும் என்கிற நமது கோரிக்கை¨யும் தேர்தல் முடிந்ததும் தீவிரமாக பரிசீலிப்பதாக சொன்னார். படித்துவிட்டு நல்ல வேலையிலிருக்கும் ரசிகர்கள் தாங்கள் படித்த படிப்பை பயன்படுத்தி ரஜினிக்காக இப்படியரு சிரத்தையெடுத்து செய்திருக்கும் வேலையில் தான் மிகவும் பெருமைப்படுவதாக சொன்னவர், நமக்கென நேரமெடுத்து சில ஆலோசனைகளையும் சொன்னார்.

'தளபதி' சத்தியநாராயணா, ஒரு சினிமா நடிகரின் ரசிகர் மன்ற தலைவர் என்கிற இமேஜையெல்லாம் உடைத்துவிட்டு இன்று நம்பிக்கை தரும் தலைவராக 'மன்னனாக' உருவெடுத்திருக்கிறார் என்பதுதான் நிஜம். அரசியல் அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்கும் மனப்பக்குவமும் அனுபவ முதிர்ச்சியும் மனிதரிடம் ஏராளமாக இருக்கிறது. அவரால், வட சென்னையிலிருந்து வீட்டுக் கூரைக்காக உதவி வேண்டி வரும் வயோதிகரிடமும் முகம் கொடுத்து பேச முடிகிறது; சேலம் பக்கத்திலிருந்து கோயில் திருப்பணிக்காக உதவி கேட்டு வருபவராலும் அணுக முடிகிறது; ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்தல் நேரத்தில் பலமான அரசியல் கட்சியையும் எதிர்த்து வேலை செய்ய முடிகிறது. சூப்பர் ஸ்டாரின் மீது அன்பு வைத்திருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களை நல்வழிப்படுத்தும் இமாலாய பொறுப்பை அநாயாசமாக சுமக்கிறார் அவர்.

அடிக்கிற அரசியல் அனலில் தமிழகமே அரண்டுபோய் கிடந்தாலும் அரைமணி நேரப் பேச்சில் அரை நொடி கூட அரசியல் நெடி அடிக்காமல் பார்த்துக்கொண்டார். காவிரி பாசன பகுதி விவசாயிகளுக்காக 'விகடன்' கிராமங்களை தத்தெடுத்த திட்டத்தை பாராட்டியவர், அதில் www.rajinifans.com பங்கேற்றதையும் விரிவாக கேட்டு தெரிந்து கொண்டார். இலவச கணிணி வகுப்புகள் நடத்தி வருவதை பற்றி கேட்டவர், சந்தோஷத்தின் உச்சிக்கே போய் வந்திருந்த ரசிகர்களிடம் நம்மை 'Helping Hands' என்று பெருமையுடன் அறிமுகப்படுத்தி வைத்தார். லேட்டஸ்ட் தகவல் தொழில்நுட்ப டெக்னாலஜி பற்றி படித்தவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதைவிட ஏழ்மையின் காரணமாக படிக்கும் வசதி கிடைக்காதவர்களுக்கும் எழைக் குழந்தைகளுக்கும் இலவச கம்ப்யூட்டர் கல்வி கிடைக்குமாறு செய்தால் தான் இன்னும் சந்தோஷப்படுவதாக சொன்னார். தேர்தல் முடிந்ததும் இன்னொரு நாள் தானே கூப்பிடுவதாகச் சொல்லி நமது செல்போன் நம்பரையும் வாங்கி வைத்துக் கொண்டவர், நல்ல காரியங்கள் செய்யும்போது எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு சொல்லி வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார்.

வெளியே வரும்போது வானம் இருட்டியிருந்தது. மழை தனது தூறலை ஆரம்பித்திருந்தது. போக வேண்டிய பாதை எது என்பது பற்றிய தெளிவு வந்ததால் மனசுக்குள் சந்தோஷக் கீற்று ஜொலிக்க ஆரம்பித்திருந்தது!

அன்புடன் ஜெ. ரஜினி ராம்கி.

6.5.04

தளபதியின் கட்டளை!

புதுச்சேரி: பா.ஜ.,விடமோ, அ.தி.மு.க.,விடமோ எந்த உதவியையும் எதிர்பார்க்காமல் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும், அதற்கான செலவினங்களை தலைமை மன்றம் ஏற்றுக் கொள்ளும் என்று சத்தியநாராயணா அறிவித்துள்ளார்.
பா.ம.க., போட்டியிடும் 6 தொகுதிகளைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு விடுத்திருந்தார். அதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு புதுச்சேரி, திண்டிவனம், சிதம்பரம், தர்மபுரி, செங்கல்பட்டு, வந்தவாசி ஆகிய 6 தொகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ரஜினி மன்ற முக்கிய நிர்வாகிகள் சென்னைக்குப் புறப்பட்டனர்.

அவர்களிடம் தலைமை ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா பேசினார். அதில் பா.ம.க., போட்டியிடும் 6 தொகுதிகளில் ரசிகர்கள் தேர்தல் பணியில் இறங்க வேண்டும். ஆதரவு கட்சியான பா.ஜ.,விடமோ, அ.தி.மு.க.,விடமோ தேர்தலுக்காக எந்தவித பணமோ, வாகன வசதியோ பெறக்கூடாது. அதேநேரத்தில் வாகனங்களில் செல்லும் போது அமைதியான முறையில் ஒலிபெருக்கிகளைக் கட்டிக் கொண்டு செல்லாமல் அந்தந்தப் பகுதி ரஜினி ரசிகர்களை மட்டும் சந்தித்து ஆதரவு திரட்டினாலே போதும். வேறு எந்தவிதமான வெளிப்படையான பிரசாரத்திலும் ஈடுபடக்கூடாது.

ஏதாவது பிரச்னை ஏற்படுவதாக இருந்தால் அவற்றை பெரிது படுத்தாமல் ஒதுங்கிக் கொள்ளுங்கள். மீறி பிரச்னை ஏற்பட்டால் உடனே தலைமைக்குத் தெரியப்படுங்கள். நம்முடைய ரசிகர்மன்ற ஓட்டுக்கள் விழுந்தாலே நாம் பா.ம.க.,வை எளிதில் வீழ்த்தி விட முடியும் என்று அறிவுறுத்தினார்.

இதற்கு பின்னர் ரஜினியை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று புதுச்சேரி, திண்டிவனம், சிதம்பரம் தொகுதி ரசிகர்கள் திடீர் போர்க்கொடி துõக்கியதையடுத்து நேற்று முன்தினம் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு மதியம் 12 மணிக்கு வந்தவர் ஒவ்வொருவரிடம் அளவலாவினார். மேலும் தனித்தனியாக போட்டோவும் எடுத்துக் கொண்டனர். இதற்கான செலவையும் தலைமை நிலையம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதையடுத்து மாலை 3.30 மணிக்கு தான் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு வண்டி வீதம் தரப்பட்டுள்ளன. இதில் ஏற்படக்கூடிய அனைத்து செலவினங்களுக்கும் தலைமை மன்றம் பணம் கொடுக்க முடிவு செய்துள்ளது.அதற்கான கணக்கை அந்தந்த மாவட்ட தலைவரிடம் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவைமட்டுமின்றி ரஜினியின் மனம் திறந்த பேட்டி ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு அதற்கு "புறப்படடா... தம்பி புறப்படடா!' என்ற பெயர் சூட்டப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 3 ஆயிரம் கேசட்டுகள் வீதம் கொடுக்கப்பட்டுள்ளன.

அவற்றைப் பெற்றுக் கொண்ட பொறுப்பாளர்கள் தற்போது வாகனங்களில் சென்று விநியோகித்து வருகின்றனர். இவைமட்டுமின்றி சென்னைக்கு சென்ற அனைவருக்கும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் வந்த வாகனங்களுக்கான வாடகையும் அங்கேயே கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினமலர்

3.5.04

பழி வாங்கும் உணர்ச்சி?!

தன்னை அரெஸ்ட் பண்ணி ரெண்டு நாள் உள்ளே வெச்ச கருணாநிதியை மிட் நைட்டில் வூடு பூந்து அரெஸ்ட் பண்ணிய ஜெயலலிதாவிடம் இல்லாத சங்கதி...

எம்.ஜி.ஆரை ஓரங்கட்ட மு.க.முத்துவை முன்னுக்கு கொண்டு வர நினைச்சதிலிருந்து கணக்கு கேட்டதற்காக கட்சியை விட்டு கட்டம் கட்டிய தமிழ்நாட்டு சாணக்கியர் கருணாநிதியிடம் இல்லாத சங்கதி...

ஈவி'கேஸ்' மட்டும் ஒன் மேன் ஷோ நடத்தி நம்மளை கவுத்துடவாரோன்னு பயந்து டெல்லியிலே கேம்ப் அடிச்சு தனக்கு கூஜா தூக்குன கதர் வேஷ்டிக்கு மட்டும் சீட் வாங்கி கொடுத்த வாசனைப் பாக்கு வாரிசு வாசனுக்கு தெரியாத சங்கதி...

தலித் எழில் ம¨லையில ஆரம்பிச்சு பு.தா பிரதர்ஸ் வரைக்கும் கேள்வி கேட்டவங்களையெல்லாம் மரத்தை வெட்டி சாய்க்கிற மாதிரி கட்சியில வெச்சுக்கிட்டே கட்டம் கட்டி கடாசின சமூக நீதி சமத்துப்பிள்ளை ராமதாஸ¥க்கு பழக்கமே இல்லாத விஷயம்...

ஒரு வருஷமாய் வெயிட் பண்ணியும் ஆக்ஷன் ஓண்ணமேயில்லைன்னு தெரிஞ்சதும் தம்பின்னு வந்த குரலை கேட்டு சிவாஜியா மாறி கம்பியை மட்டுமல்லாம கூட்டணியை விட்டும் வெளியே வந்த வைகோவுக்கு தெரியாத விஷயம்...

காவி கட்சிக்கு தலித் தலைவரு எதுக்குன்னு வேட்டு வெச்ச பிரம்மச்சாரி பிராமண பார்ட்டிக்கு தெரியவே தெரியாத சங்கதி...

பாட்டாளி மரம்வெட்டும் கட்சி எந்தக்கூட்டணியிலிருந்தாலும் அந்தக் கூட்டணி இருக்கும் திசைக்கே ஒரு கும்பிடு போட்டு ஓடி வந்து தனியா நின்னு கத்தி, கபடாவெல்லாம் வெச்சுக்கிட்டு தலித் உரிமைக்காக பாடுபடும் திருமாவளவனிடமும் இல்லாத சங்கதி...

உள்ளே புடிச்சு போட்டதால் தமிழ் உணர்வை வளர்க்க முடியாம போயிடுச்சேன்னு புலம்பி ஜாமீன்ல வுட்டதும் நேரா கோபாலபுரத்துக்கு பஸ் புடிச்ச நெடுமாறன் & கோவிடம் இல்லாத விஷயம்...

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்தான் சொல்லி டகால்டி வேலை பார்த்து ரசிகனுங்க பாக்கெட்டுல கைவெச்ச மீசைக்காரருக்கு தெரியாத விஷயம்...

டெல்லியிலிருந்து வந்து போல்டா எழுதி மப்பில் இருந்த மரம் வெட்டிகளிடம் வாங்கி கட்டிக்கொண்ட பத்திரிக்கையாளினியை வூட்டுக்கு அனுப்பிட்டு டுடேவுக்கு ஏத்த மாதிரி மேட்டரையே மாத்திக் காட்டும் அந்த நேஷனல் பத்திரிக்கை வாத்தியாரிடம் இல்லாத விஷயம்...

வெட்டிக்கதை பேச ஒரு இடத்தை வெச்சுக்கிட்டு பிரகஸ்பதி மாதிரி பேசுற ஆளுங்களை கவுக்குறதுக்காகவே வேற பேரு வெச்சுக்கிட்டு வேலை மெனக்கெட்டு இலக்கியம் படைக்கிற இலக்கியவாதிகளிடம் இல்லாதது...

என்ன பேசுறோம்னு எதிராளிக்கு புரியவே கூடாதுன்னு தீர்மானம் பண்ணி வெச்சுக்கிட்டு தொழில் போட்டியாளர் சறுக்கி விழும்போது மெனக்கெட்டு ப்ரஸை கூப்பிட்டு பேட்டி குடுக்கிற வோர்ல்டு ஹ¥ரோவிடம் இல்லாத விஷயம்...


ஆனால்,


பாபா படத்தின் தோல்விக்கு மட்டுமல்லாமல் படம் வெளிவருவதற்கு முன்பிலிருந்தே ஆரோக்கியமான(?) விமர்சனங்களை முன்வைத்தது மட்டுமல்ல இன்று வரை ஆ·ப் த ரெக்கார்டாக சமூக (?) விழிப்புணர்வுடன் பேசும் (வட)தமிழ்நாட்டு மக்களின் இனக்காவலர் டாக்டர் அய்யாவை ஒரு சாதாரண நடிகர்(?) போட்டியிடும் தொகுதிகளிலெல்லாம் எதிர்ப்பதாக கூறுவது.....நிச்சயமாக பழி வாங்கும் உணர்ச்சிதான்!

anbudan, J. Rajni Ramki