10.4.08

நியாயத்தின் பக்கத்தில் ரஜினி! - வைகோ

ஒகேனக்கல் விவகாரத்தில் நடிகர் ரஜினியின் நிலைப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

நடிகர் ரஜினிகாந்த் இந்த விஷயத் தில் என்ன நிலை எடுப்பார் என்று ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு கன்னடனும் எதிர்பார்த்திருந்த நேரம்... அவர் தெள்ளத் தெளிவாக நியாயத்தின் பக்கம் நின்றார். எதற்காகவும், யாருக் காவும் அவர் தன் உள்ளத்தில் இருப்பதைப் பூசி மெழுகவில்லை! 'ஒருவன் ரவுடித்தனம்செய்யஅத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தால் அவனை என்ன செய்வோம்? உதைக்க வேணாம் அவனை?' என்று உண்ணாவிரத மேடையில் பேசினார் ரஜினி. வீடு புகுந்து தாக்குபவர்களைத் தற்காப்புக் காக பதிலுக்குத் தாக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டே ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. அதைத்தான் ரஜினி கூறியுள்ளார்.

அவருடைய பேச்சின் எதிரொலியாக ரஜினிக்கு ஏதேனும் ஆபத்தென்றால், வேடிக்கை பார்க்க மாட்டான் மானமுள்ள தமிழன்! இந்த விஷயத்தில் அவருக்கு ஒரு பிரச்னை என்றால் அவருக்காக முதலில் நிற்பது இந்த வைகோவின் இயக்கமாகத்தான் இருக்கும்!

உண்ணாவிரத போராட்டம் பாரதிராஜாவின் விளக்கம் :)


தமிழ் திரையுலகம் நடத்திய போராட்டம் பற்றி பாராதிராஜா கருத்து கூறியிருக்கிறார்.

தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையே?

உண்மைதான். உணர்வை காட்ட வேண்டும் என்பதற்காக எல்லாரும் ஒன்றுபட்டு நெய்வேலி போனோம். ஆனால் மறுநாள் ஒரு உண்ணாவிரதம் தனிப்பட்ட முறையில் நடந்ததே? அது ஏன் நடத்தப்பட்டது என்று பத்திரிகைகள் கூட கேட்கவில்லை. அப்படி தனியாக நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதற்கு இவர்கள் பதில் கூறட்டும். பிறகு இந்த உண்ணாவிரதத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று என்னை கேட்கட்டும்.

உண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசியதற்கு பாராட்டு தெரிவித்தீர்களாமே?

டி.வி யில் பார்த்துக் கொண்டிருந்தேன். சத்யராஜ் பேச்சை கேட்டதும் கைதட்டினேன். உடனே போன் செய்து சில கருத்துக்களுக்காக பாராட்டினேன். அதே நேரத்தில் அவர் கூறிய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன். விமர்சனம் என்பது முறையாக இருக்க வேண்டும். சக தோழன் மேல் எச்சிலை காறி துப்பிவிடக் கூடாது. சொன்ன கருத்து நியாயமாக இருந்தாலும், அதை நாகரீகமாக சொல்லியிருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. ரஜினி அவருக்கு தோன்றியதை பேசியிருக்கிறார்.'

நெய்வேலியில் போராட்டம் வேண்டாம்; சென்னையில் எப்படிப்பட்ட போராட்டம் வேண்டுமானாலும் நடத்தலாம். முதல் ஆளாய் நிற்கிறேன் என்று ரஜினி சொன்னதை பாரதி ராஜா கேட்கவில்லை. நெய்வேலிக்கு சினிமாவுலகத்தை அழைத்துக்கொண்டு போய் தானும் அவமானப்பட்டு மற்றவர்களையும் அவமானப்பட வைத்தார் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் இந்த முறை தமிழ் சினிமா பாரதிராஜாவை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி அவருக்கு தோன்றியதை பேசியிருக்கிறார் என்று சொன்னால் மற்றவர்களெல்லாம் டயலாக் ஸ்கிரிப்ட் எழுதி வைத்துக்கொண்டு ரிகர்சல் பார்த்துவிட்டு பேசியிருக்கிறார்களா என்று புன்னகையோடு கேள்விக்கணை தொடுக்கிறது ரசிகர்கள் வட்டாரம்.

4.4.08

தலைவர் பேச்சு - வீடியோ காட்சி

அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள் - ரஜினி


கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பே ஒகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும் என ஒதுக்கப்பட்டது. தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளத் தமிழகத்தை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்... உதைக்க வேண்டாமா, இதை எதிர்ப்பவர்களை?

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? அரசு, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா...? மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்...? யார் சொன்னால் கேட்பார்கள்...? புரியவில்லை. என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம்? இந்த வட்டாள்... நாராயணகவுடாவை எல்லாம் விடுங்கள். கொஞ்சம் பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம்.

கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் விதத்தில் பேசியிருக்கிறார். இதை அந்தக் கட்சி சும்மா வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

காரணம் அங்கே விரைவில் வரப் போகிற சட்டசபைத் தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள். மக்கள் என்ன முட்டாள்களா.. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதா...? எல்லாவற்றையும் மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் கடவுளுக்குச் சமமானவர்கள் மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. உண்மையாகப் பேச வேண்டும். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்துகொள்ள வேண்டாம்.

மக்களுக்கு ஒரு நாள் நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவ கெளடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா போன்றவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்... அப்புறம் நீங்கள் இருக்க மாட்டீர்கள். அழிந்து போவீர்கள்.

இந்த பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய இந்தப் பிரச்னைக்கு இப்போது தீர்வு காணாவிட்டால், பிறகு கோடாலி கொண்டும் வெட்டித் தீர்வு காண முடியாது. இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது மிகச் சாதாரண மக்கள் தான். இதனால் உண்மையைப் பேசுங்கள், அரசியல் லாபத்துக்காக எதையும் பேசாதீர்கள்.

களமிறங்கிய மன்னன்!


ஆண்டவன் தமிழ் ரசிகர்கள் வடிவத்தில் தமிழ் மக்கள் வடிவத்தில் வந்து என் மேல் அன்பையும்,செல்வத்தையும் பொழிஞ்சு என்னை இவ்வளவு உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்னு நான் நினைக்கிறேன். தமிழ் மக்களுக்கு சோசியல் சர்வீஸ் மாதி என்னால் முடிந்த்தை கண்டிப்பாக செய்வேன்!

- ரஜினிகாந்த்

நன்றி - வண்ணத்திரை