10.4.08

உண்ணாவிரத போராட்டம் பாரதிராஜாவின் விளக்கம் :)


தமிழ் திரையுலகம் நடத்திய போராட்டம் பற்றி பாராதிராஜா கருத்து கூறியிருக்கிறார்.

தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையே?

உண்மைதான். உணர்வை காட்ட வேண்டும் என்பதற்காக எல்லாரும் ஒன்றுபட்டு நெய்வேலி போனோம். ஆனால் மறுநாள் ஒரு உண்ணாவிரதம் தனிப்பட்ட முறையில் நடந்ததே? அது ஏன் நடத்தப்பட்டது என்று பத்திரிகைகள் கூட கேட்கவில்லை. அப்படி தனியாக நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதற்கு இவர்கள் பதில் கூறட்டும். பிறகு இந்த உண்ணாவிரதத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று என்னை கேட்கட்டும்.

உண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசியதற்கு பாராட்டு தெரிவித்தீர்களாமே?

டி.வி யில் பார்த்துக் கொண்டிருந்தேன். சத்யராஜ் பேச்சை கேட்டதும் கைதட்டினேன். உடனே போன் செய்து சில கருத்துக்களுக்காக பாராட்டினேன். அதே நேரத்தில் அவர் கூறிய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன். விமர்சனம் என்பது முறையாக இருக்க வேண்டும். சக தோழன் மேல் எச்சிலை காறி துப்பிவிடக் கூடாது. சொன்ன கருத்து நியாயமாக இருந்தாலும், அதை நாகரீகமாக சொல்லியிருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. ரஜினி அவருக்கு தோன்றியதை பேசியிருக்கிறார்.'

நெய்வேலியில் போராட்டம் வேண்டாம்; சென்னையில் எப்படிப்பட்ட போராட்டம் வேண்டுமானாலும் நடத்தலாம். முதல் ஆளாய் நிற்கிறேன் என்று ரஜினி சொன்னதை பாரதி ராஜா கேட்கவில்லை. நெய்வேலிக்கு சினிமாவுலகத்தை அழைத்துக்கொண்டு போய் தானும் அவமானப்பட்டு மற்றவர்களையும் அவமானப்பட வைத்தார் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் இந்த முறை தமிழ் சினிமா பாரதிராஜாவை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி அவருக்கு தோன்றியதை பேசியிருக்கிறார் என்று சொன்னால் மற்றவர்களெல்லாம் டயலாக் ஸ்கிரிப்ட் எழுதி வைத்துக்கொண்டு ரிகர்சல் பார்த்துவிட்டு பேசியிருக்கிறார்களா என்று புன்னகையோடு கேள்விக்கணை தொடுக்கிறது ரசிகர்கள் வட்டாரம்.

No comments: