21.1.06

முதல் இடம்

சென்ற வருடம் இரண்டாவது இடத்தில் இருந்த ரஜினியை முதல் இடத்தில் உட்கார வைத்திருக்கிறது "சந்திரமுகி". வருடந்தோறும் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்து கணிப்பு நடத்திவருகிறது லயோலா கல்லூரி. இந்தமுறை பேராசிரியர் பாதிரியார் ராஜநாயகம் தலைமையில் 18 பேர் கொண்ட படை புறப்பட்டது. நீலகிரி மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு தலைப்புகளில் கருத்து கணிப்புகளை இவர்கள் நடத்தியுள்ளனர். நேற்று இந்த கணிப்புகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டின் டாப் டென் நடிகர்கள் பட்டியல்...

பட்டியலின் கடைசியில் தொற்றிக்கொண்டிருப்பவர் சரத்குமார். இவருக்கு கிடைத்துள்ள புள்ளிகள் 1.5. ஒன்பதாவது இடம் சூர்யாவுக்கு. மூன்று புள்ளிகளை வென்றுள்ளார் இவர். 'பரமசிவன்' மூலம் ரீ-என்ட்ரி ஆகியிருக்கும் அஜித்துக்கு 3.1 புள்ளிகளுடன் எட்டாவது இடம். இவரை அடுத்து வருவது சீயான். இவருக்கு கிடைத்திருக்கும் புள்ளிகள் 3.2. உலகநாயகனுக்கு உள்ளூரில் ஆறாவது இடமே கிடைத்திருக்கிறது. இவர் சம்பாதித்த புள்ளிகள் 7.5.

இந்த டாப் டென் லிஸ்டின் அதிசயம் எம்.ஜி.ஆர்., சிவாஜி! இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் 13 புள்ளிகளுடன் எம்.ஜி.ஆர். மூன்றாவது இடத்திலும், 9.6 புள்ளிகளுடன் சிவாஜி ஐந்தாவது இடத்திலும் ஜம்மென்று வீற்றிருக்கிறார்கள். இந்த இரு இமயங்களுக்கு நடுவே விஜய். இவருக்கு கிடைத்திருக்கும் புள்ளிகள் 10.

கட்சி துவங்கியிருக்கும் விஜயகாந்துக்கு இரண்டாவது இடம் கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். 13.9 புள்ளிகள் பெற்றிருக்கும் இவரை 18.9 புள்ளிகளுடன் முந்தியிருப்பவர் ரஜினி!



சென்ற வருடம் ஏப்ரல் மாதம் நடத்திய கருத்து கணிப்பில் இரண்டாவது இடத்தில் இருந்தார் ரஜினி. 'சந்திரமுகி' வெற்றியால் லகலகலகவென முதலிடத்துக்கு தாவிவிட்டார் ரஜினி!

1. Super Star Rajinikanth - 18.9
2. Vijayakanth - 13.9
3. M.G.R - 13
4. Vijay - 10
5. Shivaji Ganeshan - 9.6
6. Kamalahaasan - 7.5
7. Vikram - 3.2
8. Ajith Kumar - 3.1
9. Surya - 3
10. Sarathkumar - 1.5

Coutesy : - cinesouth.com

No comments: