20.2.05

ஒரு வேண்டுகோள்
சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி திரைப்படத்திற்கான ஆடியோ கேஸட் மற்றும் ஆடியோ சிடிக்கள் வரும் மார்ச் மாதம் ஐந்தாம் தேதி வெளியிடப்பட இருக்கின்றன. மார்ச் எட்டாம்தேதிக்குள் உலகெங்கும் இவை கிடைக்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக சிவாஜி புரொடக்ஷன் தெரிவித்திருக்கிறது. சந்திரமுகி திரைப்படம் திட்டமிட்டபடி உலகெங்கும் தமிழ் வருடப்பிறப்பு (ஏப்ரல் 14) வெளியிடப்பட இருக்கிறது. வெளிநாடுகளில் எந்தெந்த இடங்களில் திரையிடப்படுகிறது என்பதை பற்றிய அனைத்து விபரங்களும் மார்ச் முதல்வாரத்தில் எங்களது இணையத்தளத்தில் வெளியாகும்.

இந்நிலையில் பல்வேறு இணையத்தளங்களை நிர்வகித்து வரும் அன்பர்கள் சந்திரமுகி படத்தின் ஆடியோ மற்றும் வீடியோ தொகுப்புகளை தங்களது இணையத்தளங்களை வெளியிடவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மீறி வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அனுமதியின்றி சந்திரமுகி ஆடியோ மற்றும் வீடியோக்களை விநியோகிக்கும் இணையத்தளங்கள் பற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு இணையத்தில் சஞ்சரிக்கும் அன்பர்களை கேட்டுக்கொள்கிறோம். சம்பந்தப்பட்ட அன்பர்களின் பெயர் மற்றும் இதர விபரங்கள் எங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை.

தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் - Rajinifans@Rajinifans.com

தொலைபேசி எண்கள் - 98404 99887 & 94444 53694

தங்களை பற்றிய முழு விபரங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் அன்பர்களுக்கு தகுந்த சன்மானமும் வழங்கப்படும். விபரங்களும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும். இணைய நண்பர்கள் எங்களுடன் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

2005 - The year of Chandramukhi


- Creative Team, www.rajinifans.com

12 comments:

-L-L-D-a-s-u said...
This comment has been removed by a blog administrator.
-L-L-D-a-s-u said...

ஏப்ரல் 1 - நல்ல பொருத்தம் .

ஈழநாதன்(Eelanathan) said...

ஏப்ரல் 1. தமிழ் வருடப்பிறப்பு???

வசந்தன்(Vasanthan) said...

அது முட்டாள்கள் தினமில்லையா?

kirukan said...

ஏப்ரல் 1 - தமிழ் வருடப்பிறப்பு. ரஜினியை நினைத்துக் கொண்டே எழுதியிருப்பார் போல.

www.rajinifans.com said...

Sorry for the error. We have updated the date accordingly.

Regards

Shajahan

Anonymous said...

please dont try to play the role of global police.you just cant do that.even holywood mughals cant stop people sharing materials using p2p.and this will affect rajni fans who want to put up a still or two or a bit from a song in their sites.in anycase the songs will be available in the net however much you try.

Anonymous said...

Aanmai ulla anoynmous mattum perai soolivittu comment adikkalam

- Balamurugan

ராம்கி said...

தவறை சுட்டிக்காட்டிய அதி புத்திசாலிகளுக்கு நன்றி.

இது 'வேண்டுகோள்' மட்டும்தான். வெற்று மிரட்டல், உருட்டலுடன் ரவுடிகள் போல களத்திலிறங்க நாங்கள் மரம்வெட்டி கோஷ்டிகள் அல்ல. அனுமதியின்றி வெளியிடப்படும் சந்திரமுகி ஸ்டில்களால் எந்தப்பிரச்சினையுமில்லை. ஆடியோ, வீடியோ தொகுப்புகளை அத்துமீறி இணையத்தில் கடைபரப்புவர்களை வேண்டாம் என்றுதான் வேண்டுகோள் விடுக்கிறோம். மீறி செய்ய நினைத்தால் சவாலுக்கு நாங்களும் தயார்!

இந்த மன்றம் ரஜினியை பற்றிய அனைத்து விமர்சனங்களையும் அன்போடு வரவேற்கிறது. முகமூடிகள் அணிந்து வந்து கருத்து சொன்னாலும் காது கொடுத்து கேட்போம். எங்களது நிலையை எடுத்துரைப்போம்

KVR said...

//மீறி செய்ய நினைத்தால் சவாலுக்கு நாங்களும் தயார்//

என்ன ராம்கி சார், சவாலெல்லாம் விடுறிங்க. இதென்ன சூப்பர்ஸ்டார் சினிமாவா?

இணையத்திலே கடைபரப்புதல் சகஜம் சார். இதுக்கு சவாலெல்லாம் விட்டு நேரத்தை வீணடிக்காதிங்க.

Anonymous said...

ex cuese me....can you guys pls try to convert tamil article to english...because we...(who dont know to read tamil language) can read it...pls try to make it..,

Mr.Shajahan...pls notice it...

Kesavan
Special Correspondent,Malaysia

Anonymous said...

ராகா.காமில் சந்திரமுகி பாடல் வருகிறதே?