
சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி திரைப்படத்திற்கான ஆடியோ கேஸட் மற்றும் ஆடியோ சிடிக்கள் வரும் மார்ச் மாதம் ஐந்தாம் தேதி வெளியிடப்பட இருக்கின்றன. மார்ச் எட்டாம்தேதிக்குள் உலகெங்கும் இவை கிடைக்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக சிவாஜி புரொடக்ஷன் தெரிவித்திருக்கிறது. சந்திரமுகி திரைப்படம் திட்டமிட்டபடி உலகெங்கும் தமிழ் வருடப்பிறப்பு (ஏப்ரல் 14) வெளியிடப்பட இருக்கிறது. வெளிநாடுகளில் எந்தெந்த இடங்களில் திரையிடப்படுகிறது என்பதை பற்றிய அனைத்து விபரங்களும் மார்ச் முதல்வாரத்தில் எங்களது இணையத்தளத்தில் வெளியாகும்.
இந்நிலையில் பல்வேறு இணையத்தளங்களை நிர்வகித்து வரும் அன்பர்கள் சந்திரமுகி படத்தின் ஆடியோ மற்றும் வீடியோ தொகுப்புகளை தங்களது இணையத்தளங்களை வெளியிடவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மீறி வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனுமதியின்றி சந்திரமுகி ஆடியோ மற்றும் வீடியோக்களை விநியோகிக்கும் இணையத்தளங்கள் பற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு இணையத்தில் சஞ்சரிக்கும் அன்பர்களை கேட்டுக்கொள்கிறோம். சம்பந்தப்பட்ட அன்பர்களின் பெயர் மற்றும் இதர விபரங்கள் எங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை.
தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் - Rajinifans@Rajinifans.com
தொலைபேசி எண்கள் - 98404 99887 & 94444 53694
தங்களை பற்றிய முழு விபரங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் அன்பர்களுக்கு தகுந்த சன்மானமும் வழங்கப்படும். விபரங்களும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும். இணைய நண்பர்கள் எங்களுடன் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2005 - The year of Chandramukhi- Creative Team, www.rajinifans.com