7.1.05

ஆன்மீகம்











ஆன்மீகம்னா எனக்கு தெரிஞ்சு நம்பிக்கைன்னு அர்த்தம் சொல்லிடலாம். தெய்வ நம்பிக்கையோ அல்லது நம்மை மீறின ஒரு சக்தி இருக்குதுன்னு உணர்ந்து அது மேலே வைக்கிற நம்பிக்கைதான் ஆன்மீகம். தனக்கு நிறைய வேணுங்கிறதுக்காக கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கிற மாதிரி நினைச்சு பூஜை பண்றவங்க என்னைப் பொறுத்தவரைக்கும் நாஸ்திகர்கள்தான். வீட்லே பெரியவங்க செஞ்சாங்க, அதனாலே நாமும் செய்வோம்னு நினைச்சு பூஜையெல்லாம் செய்றவங்களும் ஆன்மீகத்துல இருக்காங்கன்னு சொல்ல முடியாது. ஒரு மிகப் பெரிய சக்தி எல்லாத்தையும் நடத்தி வைக்கிறதுங்கிறதை உணர்ந்து, அந்த சக்தி மேலே நம்பிக்கை வைக்கிறதுதான் ஆன்மீகம்னு நான் நினைக்கிறேன். ஆன்மீகத்தை பத்தி தெரிஞ்சுக்கறது வேற. அதைக் கடைப்பிடிக்கிறது வேற. To realise it one has to practice it அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்க அந்த சாஸ்திரத்துலே இப்படி இருக்குது அப்படி இருக்குதுன்னு பேசிக்கிட்டு, எதையும் கடைப்பிடிக்காம இருக்குறவங்க நடமாடும் லைப்ரரி மாதிரி. சொன்னது எதையும் கடைப்பிடிக்காதவங்களை ஆன்மீகவாதின்னு சொல்ல முடியாது. எல்லாத்தையும் கடைப்பிடிக்கணும். அதுக்கு முயற்சி தேவை. என்னைப் பொறுத்தவரையில் நான் முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன். அவ்வளவுதான்!

- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கல்கி வார இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து...

2 comments:

Anonymous said...

பாவிகள் பெருகி விட்டத்தனால் அப்பாவிகளும் ஏழைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உங்கள் தலைவர் கூறிய்யுள்ளார், நீங்கள் பாவியா ? அப்பாவியா

Anonymous said...

நாங்கள் மட்டுமல்ல உலகத்தில் மனிதனாக பிறந்த எல்லோருமே பாவிகள்தான். ஆன்மீகத்தை பத்தி அவர் சொல்லியிருப்பது 1989ல். போட்டோ மட்டும்தான் லேட்டஸ்ட். அவர் எப்போ சொன்னாலும் எந்த காலத்துக்கும் பொருத்தம்தான்.