24.11.04

நெல்லை ரஜினி ரசிகர்களின் திருமண வாழ்த்துக்கள் !




திரு. ரஜினிகாந்த் அவர்களின் தவபுதல்வி செல்வி ஜஸ்வர்யாக்கும் ,திரு.கஸ்தூரிராஜா தவபுதல்வன் தனுஸ் கும் 18.11.2004 வியாழன் அன்று நடைபெற்ற திருமணமும் ,திருமண தம்பதிகளும் சிறப்புற ,திருமணம் வாழ்வில் வெற்றிபெற வேண்டி நெல்லை மாவட்ட ரஜினி நற்பனி மன்ற்ம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகி திரு,தாயப்பன் தலைமை தாங்கினார்.மாவட்ட நிர்வாகி எம்.கணேசன் முன்னிலை வகித்தார். ஸிபா மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.இசக்கிமுத்து வற்வேற்று பேசினார்.உடன் ஸிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம்.முகமது ஸாபின் மற்றும் தள்வாய் ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டி பேசினர். முன்னதாக ரஜினி ரசிகர் மன்றதினர் கே.பகவதீஸ்வரன்,எஸ்.குமார்,எஸ்.சாந்தகுமார்,பி,ராஜா,ஆர்.முத்துகிருட்டிணன்,எஸ்.கோவிந்தா,ஏ.ராஜ்குமார் மற்றும் என்.ராஜேஸ் ஆகியோர் ரத்ததானம் செய்தனர்

22.11.04

மாறவே மாறாத கலர்!





'கலைஞர்ஜி, எனக்கு எப்பவும் வொயிட் அண்ட் வொயிட்தான் கரெக்டா இருக்கும்..'

'ஆனால், என்னால திண்டிவனத்து மஞ்ச துண்டை கழட்டி வுடவே முடியாதப்பா..!'



- ஜெ. ரஜினி ராம்கி

10.11.04

ரஜினி - தீபாவளி பரிசு

நடிகர் ரஜினிகாந்த் ஸ்ரீராகவேந்திரா அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார்.

ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் தீபாவளி இனாமும் அவர் வழங்கி வந்தார்.

இனாம் வாங்க வருபவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்பட்டதால் இந்த வருடம் முதல் தீபாவளி இனாம் பணமாக கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது. மாறாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 52 ஆதர வற்ற இல்லங்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டன.

அந்த இல்லங்களில் உள்ள 4000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது.

மேற்கு மாம்பலம் காக்கும் கரங்கள், சிறுவர் இல்லம், ஆழ்வார் பேட்டை `தி ஆஸ்ரம்', கபாலீஸ்வரர் கோவில் தேவஸ்தானம், கருணை இல்லம், தக்கர்பாபு, திருவான்மிïர் காக்கும் கரங்கள், பாலபவன் ஆஸ்ரமம், அன்பு இல்லம், நல்மணம், பாலவிகார், கில்டு ஆப் சர்வீஸ், டான்பாஸ்கோ அன்பு இல்லம், வள்ளுவர் குருகுலம், ஆனந்த் ஆசிரமம், சேவாமந்திர் உள்பட 52 ஆதரவற்ற இல்ல குழந்தைகளும், ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து இருந்தனர்.

அவர்களுக்கு வழங்க பரிசு பொருட்கள் பொட்டலம் பொட்டலமாக மண்டபத்துக்குள் இறக்கி வைக்கப்பட்டு இருந்தன.

ரஜினிகாந்த் சார்பில் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்திய நாராயணா இந்த பரிசு பொருட்களை குழந்தைகளுக்கு வழங்கினார்.

தீபாவளி பட்டாசுகள், இனிப்பு, காரவகைகள், உடை கள் போன்றவைகள் வழங்கப்பட்டன. மதிய உணவும் வழங் கப்பட்டது.

மொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

மக்கள் தொடர்பாளர் நிகில், ராகவேந்திரா மண்டப நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

3.11.04

ஒரு விளக்கம்

'ரசிகனின் குரல்', ரஜினி ரசிகர்களின் எண்ணங்களையும் அதற்கான எதிர்வினைகளையும் பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு இடம் மட்டுமே. www.rajinifans.com யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டு செய்திகளை வெளியிடுவதில்லை. எந்தவொரு தனிநபர் மீதோ அல்லது ஊடகத்தின் மீதோ ரஜினியின் ரசிகர்களுக்கு கோபமோ, வருத்தமோ இல்லை. ரஜினியைப் பற்றி தவறான செய்திகளையே தொடர்ந்து வெளியிட்டு வரும் சில பத்திரிக்கைகளை பற்றிய ரஜினி ரசிகர்களின் ஆதங்கத்தை மட்டுமே இங்கே வெளியிடுகிறோம். அவை யாவும் சம்பந்தப்பட்டவர்களின் சொந்தக் கருத்துக்களே. இனம், மொழி, மதம், ஜாதி ரீதியிலான பாகுபாடில்லாத குழுவாக ரஜினி ரசிகர்கள் செயல்பட்டு வருவதை www.rajinifans.com தொடர்ந்து உறுதி செய்கிறது.

ரஜினியை பற்றி மீடியாவில் வரும் செய்திகள் யாவும் யாகூ குழுமத்தில் விவாதிக்கப்படுகிறது. உறுதி செய்யப்பட்ட தகவல்களை மட்டுமே www.rajinifans.com இணையத்தளத்தில் வெளியிட்டு வருகிறோம். ரஜினி ரசிகர்கள் என்கிற வட்டத்தை தாண்டி ரஜினி என்கிற தனிநபரை பற்றிய அனைவரின் கருத்துக்களையும் நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

www.rajinifans.com ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்கிறது. கிண்டல், கேலி, ஏளனப்பேச்சுக்களை அல்ல!

ஜெ. ரஜினி ராம்கி
for www.rajinifans.com

2.11.04

கொள்கையோடு வாழும் ரசிகர்கள்

தமிழகத்தில் திரு.ரஜினிகாந்தின் கொள்கையோடு வாழும் கோடிகணக்கான ரசிகர்களின் கனிசமானவர்கள் நெல்லை மாவட்டதில் வசிக்கிறார்கள்.ரஜினிரசிகர்கள் டம்பரக்காரர்கள்,உதவும் மனப்பான்மை இல்லாதவர்கள் என்றெல்லாம் பதிரிக்கைகளில் எழுதுகிறார்கள்.சில பத்திரிக்கைகள்,வார இதழ்களும் கூட எழுதி கொண்டுதான் இருக்கிறார்கள்,ரஜினி கண்ணத்தில் கை வைத்தாற்போல் இருக்கும் போட்டோவை இதழ்களின் முகப்பில் அச்சிட்டு அதிக லாபம் ஈட்டவர்கள் என்பதை மற்ந்து விட்டார்கள் போலும்...

நெல்லை மாவட்டம் வசுதேவ நல்லூர் பகுதி ரஜினிகாந் ரசிகர் நற்பனி மன்றதின் சார்பில் கடையநல்லூரில் இருக்கும் (மனைகாவலா துவக்கபள்ளி)க்கு ரஜினிரசிகர்மன்ற்ம் சார்பில்,பள்ளி தலைமையாசிரியை தலைமையில் ,ரஜினிகாந்த நற்பனி மன்றதலைவர் ஜி.ராமர் அவர்கள் பள்ளிக்கு சுவர் கடிகாரம் வழங்கினார்.இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை சீதாலட்சுமி மற்றும் ஆசிரியை கலா,கற்பகவல்லி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.மன்ற்நிர்வாகிகளும் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தனர்.

அதேபோல் மேலப்பாலையம் இந்து நடு நிலைப்பள்ளி நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந் நற்பனி மன்ற நிர்வாகிகள் ஜி,ராமர் மற்றும் கடையநல்லூர் சக்திவேல்,சந்திரன்,மணிகண்டன்,கண்ணன்,ஆறுமுகசாமி,செல்லப்பா அனைவரும் கலந்துகொண்டு
பள்ளி தலைமை ஆசிரியை சிவனான சுந்தரி முன்னிலையில் சுவர் கடிகாரம் மற்றும் எழுபது பேனா க்கள் வழங்கப்பட்டன.விழாவின் முடிவில் ஆசிரியரியை ,ஆசிரியர்கள் நன்றி தெரிவிதனர்.

ரஜினியை போல் உதவும் எண்ணம் கொண்ட ரசிகர்களை வாழ்த்துவோம்.
பிற நடிகர்களின் ரசிகர்களை போல் நூறு ரூபாய் கொடுத்தாலும் சும்மா போஸ் கொடுப்பதை போல் கொடுப்பவர்கள் அல்ல ரஜினி ரசிகர்கள்.

அப்படி ரஜினி ரசிகர்கள் கொடுதாலும் அதை முதல் பக்கதில் போட்டு லாபம் தேடுவதற்குதான் ,
ரஜினி ரசிகர்கள் உதவுவதில்லை என்று உலருகிறார்கள்

நெல்லை பாபா
தென்காசி,
மேலப் பாட்டாக்குறிச்சி

1.11.04

சந்திரமுகிக்காக சமாதான படலம்-விகடன்

எந்த செய்தியையும் எப்படியும் மற்றி எழுத முடியும் என எங்களால் மட்டுமே(விகடன்) முடியும் என நிருபிக்க சந்திரமுகிக்காக சமாதான படலம் தயாரித்துள்ளீர்கள். ரஜினி எதை செய்தாலும் குற்றம் காண முயற்ச்சித்து தோற்கிறீர்கள். ரஜினியின் ஆண்மீக ஈடுபாடு அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்க அதையும் அரசியல் ஆக்கப் பார்க்கிறீர்கள்.

ரஜினி எதிர்க்கும் போது கூட சமமான பலம் உள்ள எதிரியை தான் எதிர்த்து பழக்கம். 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதாவை எதிர்க்கும் போது ஜெயலலிதா அவர்கள் தமிழக முதல்வர். ஒரு முதல்வரையே எதிர்த்த துணிச்சல் உள்ளவர் ஒரு ஜாதிக்கட்சி தலைவருக்கு பயப்படுவாரா. அப்படி பயந்திருந்தால் ரஜினி இந்த தேர்தல் சமயத்தில் ராமதாஸ் அவர்களை வன்முறையின் ராஜா என் கூறியிருப்பாரா.

தேர்தல் சமயத்தில் ராமதாஸ் மகன் அன்புமணி ரஜினியின் மக்கள் செல்வாக்கை கண்டு பயந்து ரஜினியுடன் பேசியாச்சு சுபம் என்று கூறியதை மறந்து விட்டீர்களா? ரஜினிக்கு எதிரியிடம் எதிர்த்து நின்று ஜெயித்து தான் பழக்கம் .இப்படி அரசியல்வாதிகளை போல் காலில் விழும் பழக்கம் இல்லை. ரஜினி எதிர்க்கும் அளவுக்கும் இன்னும் ராமாதாஸ் வளரவில்லை.

ரஜினி பணத்திற்க்காக படம் எடுப்பவர் அல்ல. கோடிக்கணக்கான ரசிகர்களின் வேண்டுகோளுக்காக எடுக்கப்பட்ட படம். அதை பிரச்சனை வந்தால் காப்பாற்றும் சக்தி ரஜினிக்கும், அவரது ரசிகர்களுக்கும் உண்டு. ரஜினி படத்திற்கு பிரச்சனை வரலாம் என்று தெரிந்து தான் வினியோகஸ்தர்கள் சிவாஜி புரடக்சனில் காத்து கிடக்கிறார்கள். காரணம் மற்ற நடிகர்களைபோல் பிரச்சனை வந்தால் ஓடி ஒழிவதை போல் இல்லாமல் பிரச்சனைகளை வெற்றி கொள்ளும் சக்தி ரஜினிக்கு உண்டு என்று அறிந்ததால்.

ரஜினி படத்தை ஒரு ஏரியாவிற்கு 2 நிமிடம் என்ற கணக்கில் 20 நிமிடத்தில் விற்று விடுமளவுக்கு வினியோகஸ்தர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று ராம்குமார் அவர்கள் பேட்டி கொடுத்ததை படிக்க மறந்து விட்டீர்களா.

பங்காரு அடிகளார் பஞ்சாயத்து பண்ணும் சாமியார் என்ற அர்த்தத்தில் இதை எழுதினீர்களா அல்லது எதை எழுதினாலும் ரஜினி பதில் அறிக்கை கொடுத்து நம் பத்திரிக்கையை பரபரபாக்க மாட்டேன்கிறார் என்ற ஆதங்கத்தில் எழுதினீர்களா என்று தெரியவில்லை. எந்த அர்த்ததில் எழுதினாலும் தனி நபர் விமர்சனம் செய்வது தரமான விகடனுக்கு கரும்புள்ளி தான்.

Raja Ramadass
On Behalf of www.Rajinifans.com

வாழ்க ரஜினி! வாழ்க மணமக்கள்!

சூப்பர் ஸ்டார் வீட்டு திருமணம் பற்றி பலவிதமான செய்திகள் எல்லா நாளிதழ்களிலும் வருவதை கண்டுக்கொண்டிருக்கிறோம். நம்மில் சிலருக்கு இதனால் கருத்து வேறுபாடுகளும் இங்கு நிலவியது. நானும் முதலில் இந்த திருமண செய்தியை அறிந்ததும் சந்தோசமடைந்தேன். சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நாம் ஆராய்ந்து பேசுவதிலிருந்தே நாமும் சூப்பர் குடும்பத்தின் ஒரு அங்கத்தினர் என்ற உணர்வு நம்மிடம் தோன்றுகிறது. சூப்பர் ஸ்டாருக்கோ அல்லது அவரின் குடும்பத்தினருக்கோ எந்த களங்கமும் வந்துவிடக்கூடாது என என்னும் பல ரசிகர்களின் உணர்வுகள் இங்கே காண முடியும். பத்திரிக்களில் வெளிவந்த செய்தி கண்டு நாம் வேதனையடைந்ததற்கு காரணம் இது நம் தலைவரையும் பாதித்திருக்கும் என்பதால்தான். இதைப் போன்ற பலவிதமான செய்திகள் சூப்பர் ஸ்டாரை பாதிக்கிறதோ இல்லையோ நம்மை வெகுவாய் பாதிக்கிறது. தன் மகளின் திருமணத்தை நிச்சயமாய் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் இருந்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. தன் மகளின் காதலன் வயதில் இளையவன் என்பதை எந்த தகப்பனால் தான் ஏற்றுக்கொள்ள முடியும்? வயது வித்தியாசம் மாறி நடந்த திருமணங்களை நாம் உதாரணம் காட்ட முடியும். ஆனால் இதில் சில முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கிறது. ஒரு வேளை ரஜினி ஒரு சாதாரண சிவாஜிராவாக இருந்திருந்து இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் இத் திருமணத்தை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார் என்பது என் கருத்து. பத்திரிக்கைகளாலும், தொலைக்காட்சிகளாலும் தன் புகழுக்கு ஏற்படும் இக் களங்கத்த்தை போக்கவே மனப்பூர்வமான சம்மதம் தெரிவித்துவிட்டார். சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையில் நாம் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம். சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யா அவர்கள் இந்த காதலை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, பத்திரிக்கைகளில் இதைப்போன்ற செய்தி வருவதற்கு வழியில்லாமல் செய்திருந்தால் எல்லோர் மனதிலும் எந்த நெருடலும் இருந்திருக்காது. குடும்பத்திற்காக எதையும் தியாகம் செய்யலாம், ஆம் காதலையும் கூட. காதலின் உண்மை வெற்றி தியாகம் செய்வதால் மட்டுமே. நாடே நல்ல மனிதன் என மதிக்கும் தம் தந்தையின் நற் பெயரும், புகழும் முக்கியம் என நினைத்திருந்தால் இதைப்போன்ற சம்பவங்களை அவரால் தவிர்த்திருக்க முடியும். இந்த நிகழ்வுகளால் என்றோ ஒரு நாள் நம் தலைவன் மனதில் சிறிய வலி ஏற்பட்டிருக்க கூடும் என்பதில் அச்சமில்லை. அந்த சிறிய வலி என்னுள்ளும் இன்று ஏற்பட்டதால் இந்த கடித்தை எழுதியிருக்கிறேன். பிழையிருந்தால் மன்னிக்கவும்.

வாழ்க ரஜினி! வாழ்க மணமக்கள்!

உண்மை ரசிகன்

ரவிசங்கர்