31.8.08

விகடன் கணிப்பு

விகடனின் கருத்துக்கணிப்ப நாம் நேற்று சொன்னபடியே எதிர்பார்த்தபடி வந்திருக்கிறது.

எதிர்பாராத விஷயம் , பத்திரிக்கைகள்தான் பிரச்னைக்கே காரணம் என்று உண்மையைச் சொல்லி அவர்களே சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொண்டதுதான்.

இனி என்ன பிராயச்சித்தம் போகிறார்கள் என்பதை அவர்களே சொல்வார்கள் என்று எதிர்பார்ப்போமாக.

விகடனின் கருத்துக்கணிப்பை இங்கே சுருக்கி தருகிறோம். நீங்களே படித்துககொள்ளுங்கள்

1.குசேலன் படத்துக்காக கர்நாடகாவிடம் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டது..

சொந்த லாபத்துக்காக - 44.85%
தயாரிப்பாளருக்காகவும் கர்நாடகவாழ் ரசிகர்களுக்காகவும் - 55.14%

2.குசேலன் படத்துக்காக மன்னிப்பு கேட்டதில் ரஜினியின் இமேஜ்...

சரிந்துவிட்டது - 38.02%
மாற்றமில்லை - 61.89%

6.ரஜினியைத் தமிழர், கன்னடர் என்று ஒரு தரப்பினர் மாநில ரீதியாக விமர்சனம் செய்வதற்குக் காரணம்...

ரஜினியின் நடவடிக்கைகள்தான் - 46.86%
வளர்ச்சியின் மீதுதானபொறாமை மற்றும் உள்நோக்கம் தான் - 53.13%

7.ரஜினி ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள அபிமானமும் செயல்பாடுகளும்....

யாரையும் பாதிக்காத சொந்த விஷயம் அதனால் நாட்டுக்கு நன்மையும் கூட 64.21 %
சமூகத்தைப் பாதிக்கும் தவறானமுன்னுதாரணம் - 35.78%

ரஜினியை இதுவரையில் சாமர்த்தியமாகப் பயன்படுத்தி அதிக பலன் அடைந்தவர்கள்...

ரசிகர் மன்றத்தினர் - 7.04%
மற்றவர்கள் - 92.94%

பின்குறிப்பு மற்றவர்களில் பத்திரிக்கைகளும் உள்ளடக்கம். மச்சான்,, விகடன் ரொம்ப நல்லவன்டான்னு ரசிகர்களிடமிருந்து அனுதாப அலை வருமென்று நினைத்திருந்தால் வெரி ஸாரி!

அவர்கள் போட்ட கணக்குதான் வேறு மாதிரியான கணக்காக மாறியிருக்கிறது. ஒத்த ஆப்ஷன்களை கூட்டுவதால் வரும் ரிச்ல்ட் நிச்சயம் பிரமிக்க வைக்கிறது... ரஜினி படத்தோடு வந்திருக்கும் அட்டைப்பட கேப்ஷன்போல.

No comments: