8.9.08

எந்திரன் - தி ரோபோ!


ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ‘எந்திரன்‘ படத்தின் படப்பிடிப்பு பெரு நாட்டில் நடக்க இருக்கிறது.

'சிவாஜி' படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்கும் படத்துக்கு ‘எந்திரன்’ என்று பெயரி டப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு 8-ம் தேதி பெரு நாட்டில் தொடங்குகிறது. இங்குள்ள புராதான மலையான மச்சு பிச்சுவில் பாடல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதற்காக வியாழக்கிழமை ரஜினி, ஷங்கர் உட்பட படக்குழுவினர் பெரு நாட்டுக்குப் புறப்பட்டு சென்றனர்.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் அரங்கம் நிர்மாணிக்கிறார். மனிஷ் மல்ஹோத்ரா உடை அலங்காரம் செய்கிறார்.

ஹாலிவுட் படங்களான 'மென் இன் பிளாக்', 'பேட்மேன் ரிட்டர்ன்ஸ்' படங்களில் பணியாற்றிய மேரி இ.வாக் எந்திர மனிதனுக்கான உடைகளை உருவாக்குகிறார். பிரபல ஸ்டுடியோவான ஸ்டான் வின்ஸ்டனில், அனிமேஷன் பணிகள் நடக்க உள்ளது.

'ஹைடன் டிராகன்', 'மேட்ரிக்ஸ்' போன்ற படங்களுக்கு சண்டை காட்சி அமைத்த யென் ஊ பிங் ஸ்டண்ட் காட்சிகள் அமைக்கிறார். சர்வதேச புகழ்பெற்ற 3 தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றும் முதல் இந்திய படம் 'எந்திரன்' என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெஷல் எபக்ட்ஸ் பணிகளை ஹாலிவுட் கம்பெனிகளான ஐஎல்எம். திபெத், கேப் இஎப்எக்ஸ் மற்றும் ஹாங்காங் நிறுவனம் சென்ட்ரோ மற்றும் மென்ஃபோன்ட் ஆகியவை மேற் கொள்கின்றன. விஷ§வல் எபக்ட்ஸ் மற்றும் அனிமேஷன் பணிகளில் இந்திய தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.

>>>>>>>>>

எந்திரன் - தி ரோபோ!

இனி கோலாகல கொண்டாட்டங்கள் தொடங்கட்டும்!


ரஜினியை நேசிக்கும் ரசிகர்களுக்கும்,

அந்த செய்திகளினை சொல்லி சுவாசிக்கும் சில்லறை மனிதர்களுக்கும்!